முன்னோக்கு

அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியம் பெருந்தொற்று நோய்களின்போது உயர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெரும்பாலான மக்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று நோய் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணப்படாத அளவில் ஒரு பேரழிவாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 586,000 க்கும் அதிகமான இறப்புக்கள் எண்ணிக்கையுடன், மில்லியன் கணக்கான குடும்பங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளன: பெற்றோர்கள், வாழ்க்கை துணைகள், உடன்பிறப்புகள் மற்றும் குழந்தைகள் கூட நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோயிலிருந்து உயிர் தப்பியுள்ளனர், அவர்களில் பலர் நீண்டகால விளைவுகளையும் கடுமையான குறைபாட்டையும் எதிர்கொள்கின்றனர்.

நோர்வேஜியன் குரூஸ் லைன் ஹோல்டிங்ஸ் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரியான பிராங்க் டெல் ரியோ, வலது, அவர் நியூயார்க் பங்குச் சந்தை தொடக்க மணியை ஒலிக்கும்போது கைதட்டல்களுடன் இணைகிறார். (AP Photo/Richard Drew)

தொழிற்சாலைகள், பண்ட சாலைகள் மற்றும் எண்ணற்ற பிற பணியிடங்கள் இன்னும் திறந்தே இருப்பதுடன் பணியாற்றுபவர்களுக்கு, வேலை நாளானது மரணத்துடன் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது. வேலையின்மையில் தள்ளப்பட்டு, போதுமான வருமானம் கிடைக்காத மில்லியன் கணக்கானவர்களுக்கு, வறுமை, பசி மற்றும் வீடற்ற நிலைமை என்ற அச்சுறுத்தல் எப்போதும் இல்லாதவகையில் உள்ளது.

ஆனால் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவுக்கு, கடந்த ஆண்டு ஒரு எதிர்பாரா பெரும் குவியலை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் வெளியிடப்பட்ட வருடாந்திர பெருநிறுவன தாக்கல்களின்படி, பெரும் அமெரிக்க நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான (CEOs) ஊதியப் பொதிகள், பெருந்தொற்று நோயின் காலத்தில் அதிகரித்துள்ளன. மற்றும் சில தலைமை நிர்வாகிகள் மற்றவர்களை விட மிகவும் பெரிய கொடுப்பனவுகளைப் பெற்றனர், "சம்பாத்தியம்" வழக்கத்திற்கு மாறாக ஊதிய உச்சமாக சமீபத்தில் முன்னோடியில்லாத அளவாக 100 மில்லியன் டாலர்கள் வரை இருந்தது:

  • ஓக்லஹோமாவை தளமாகக் கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனமான பேய்காம் (Paycom) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷாட் ரிச்சிசன் 211 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சம்பளம் மற்றும் பங்குகளை (options) பெற்றுக் கொண்டார்.
  • சான் பிரான்சிஸ்கோவிலுள்ள சுகாதார கிளினிக்குகளின் சங்கிலித் தொடர் 1லைஃப் ஹெல்த்கேர் (1Life Healthcare) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் டான் ரூபினுக்கு 199 மில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்கப்பட்டது.
  • கடந்த ஆண்டு போட்டியாளரான ஸ்பிரிண்ட் உடன் ஒரு ஒன்றிணைப்பை நிறைவு செய்த செல் (cell) வழங்குநரான T-Mobile இன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜான் லெகெரே 137 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையைப் பெற்றார்.

S&P 500 நிறுவன குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், இதில் பல பெரும் அமெரிக்க நிறுவனங்கள் அடங்கும், நடுத்தர தலைமை நிர்வாகிகள் ஊதியம் ஒப்பீட்டளவில் மிகவும் "சாதாரணமான" தொகையான 13.3 மில்லியன் டாலர்களை 2020 இல் அடைந்தது, இருப்பினும் ஒரு பங்குதாரர் ஆலோசனைக் குழுவான ISS EGG இன்படி, ஒரு அனைத்துக் கால சாதனையும் மற்றும் 11 வது நேரடியான வருடாந்திர அதிகரிப்பாகவும் இருந்தது.

பெருந்தொற்று நோய் காரணமாக கணிசமான இழப்புக்களை சந்தித்த பெருநிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கூட மிகப் பெரும் தொகைகள் ஒப்படைக்கப்பட்டன:

  • லாஸ் வேகாஸை தளமாகக் கொண்ட ஹோட்டல் மற்றும் சூதாட்ட நிறுவனமான எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் (MGM Resorts) இன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேம்ஸ் முர்ரென், கடந்த ஆண்டு வெளியேறியபோது 32 மில்லியன் டாலர்கள் வெளியேறும் ஊதியத் தொகுப்பைப் பெற்றார், நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் இழந்தபோதிலும் இது அவரை 2020 இல் 14 வது அதிக ஊதியம் பெறும் நிர்வாகியாக ஆக்கியது.
  • ஹில்டன் ஹோட்டல் சங்கிலி நிறுவனத்தின் தலைவரான கிறிஸ் நசெட்டாவுக்கு 55.9 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன, இவர் அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டில் 720 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • விண்வெளி உற்பத்தி இராட்சச நிறுவனமான போயிங் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் கால்ஹவுன், நிறுவனம் 12 பில்லியன் டாலர்கள் மிகப்பெரிய இழப்பை அறிவித்தாலும் கூட, 21 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஊதியத்தைப் பெற்றார்.

போயிங், ஹில்டன் மற்றும் நோர்வே குரூஸ் லைன்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் அரசாங்க பிணையெடுப்புக்களை கோரிய அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தன அல்லது பணிவிடுவிப்புச் செய்தன. இறுதியில், போயிங் நிறுவனமானது தனியார் நிதியை திரட்ட முடிந்தது, ஆனால் பெருநிறுவன பங்குப் பத்திர சந்தைக்கு (bond market) பெடரல் ரிசர்வ் (Federal Reserve – அமெரிக்க மத்திய வங்கிகளின் அமைப்பு) நேரடி ஆதரவு மற்றும் அதிதீவிர குறைந்த வட்டி விகிதங்களை பராமரிப்பதன் விளைவாக மட்டுமே இது நடந்தேறியது.

பல சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் "பகிரப்பட்ட தியாகம்" என்ற அற்பமான போலிக்காரணங்களுடன் வெட்டுக்களை மேற்கொண்டன, ஹில்டனின் விடயத்தில் நசெட்டா ஆண்டின் பெரும்பகுதியில் தனது சம்பளத்தை கைவிட்டுவிடுவார் என்று தவறாக அறிவித்தது. எவ்வாறெனினும், நசெட்டா மற்றும் பலரைப் பொறுத்தவரை, நிறுவனப் பங்குகளின் விருதுகளானது இப்போது அவற்றின் அடிப்படை சம்பளத்தை விட நிர்வாக ஊதியங்களானது கணிசமான அளவுகளைக் கொண்டுள்ளது.

உண்மையில், நிர்வாகிகளின் ஊதியத்திற்கும் சராசரி ஊழியரின் ஊதியத்திற்கும் இடையிலான இடைவெளி வியத்தகு முறையில் விரிவடைந்துள்ளது. S&P 500 நிறுவனங்களில், சராசரி ஊழியர் ஊதியம் 17 சதவிகிதம் சரிந்துள்ளது, இதனால் தலைமை நிர்வாக அதிகாரிக்கு-ஊழியர் ஊதிய விகிதம் 182-க்கு-1 இல் இருந்து 227-க்கு-1 ஆக உயர்ந்துள்ளது என்று பைனான்சியல் டைம்ஸ்கூறுகிறது.

பல தசாப்தங்களாக, உயர்மட்டத்தில் செல்வக் குவிப்பு நிகழ்ச்சிப்போக்கானது உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து மேலும் மேலும் பிரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பங்குச் சந்தை ஊகவணிகம் மற்றும் நிதிய தந்திர கையாளுதல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது, இது குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழ் ஒரே மாதிரியாகவே தொடர்கிறது. உண்மையில், பைடென் ஜனாதிபதி பதவிக்காலம் கடந்த 75 ஆண்டுகளில் எந்த நிர்வாகத்திலும் இல்லாதளவிற்கு S&P 500 இன் மிக வேகமான எழுச்சியை மேற்பார்வையிட்டுள்ளார், இவர் ஐசனோவர் பதவிக்காலத்திற்கு (Eisenhower) திரும்பிச் செல்கிறார்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, முடிவற்ற தேக்கநிலை அல்லது ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளின் சரிவானது சமீபத்திய வாரங்களில் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்கள் மீண்டும் எழுச்சியடையும் மனநிலையை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முந்தைய ஊதியங்கள் மற்றும் நலன்களின் குறைப்புக்கள், போதுமான பணியாளர் மட்டங்கள், குறிப்பாக கோவிட்-19 ஐ தீர்ப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை செயற்படுத்துதல் உள்ளிட்ட அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளானது பல மில்லியன் டாலர்கள் ஊதியங்களை அறுவடை செய்த பெருநிறுவன நிர்வாகிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளன:

  •  மாசசூசெட்ஸின் வொர்செஸ்டரிலுள்ள டெனட் ஹெல்த்கேர்-க்கு சொந்தமான செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில், சுமார் 700 செவிலியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தின் இரண்டாவது மாதத்தில் உள்ளனர், பாதுகாப்பான செவிலியர்-நோயாளி பணியாளர் விகிதங்கள் மற்றும் ஆபத்தான பணிச்சுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராடுகின்றனர். டெனட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான ரொனால்ட் ரிட்டன்மேயர் 2020 இல் 16.7 மில்லியன் டாலர்களை அவர் வசூலித்துக்கொண்டார். ரிட்டன்மேயரின் கீழ், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்நிறுவனம், கடந்த ஆண்டு சுமார் 11,000 தொழிலாளர்களை பணிவிடுப்புச் செய்து கிட்டத்தட்ட 399 மில்லியன் டாலர்கள் இலாபத்தை ஈட்டியது.
  • எஃகு நிறுவனமான அல்லேகெனி டெக்னாலஜிஸ் இன்கார்பரேட்டட் (ஏடிஐ) இல், ஐந்து மாநிலங்களிலுள்ள 1,300 எஃகுத் தொழிலாளர்கள் வேலைகள், சுகாதார நலன்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு பெரும் சலுகைகள் வேண்டும் என்ற நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இருப்பினும் ஐக்கிய எஃகுத் தொழிலாளர் சங்கம் (United Steelworkers union) வெளிநடப்புகளை "நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை வேலைநிறுத்தம்" என்று நடத்துவதன் மூலம் எந்த உறுதியான கோரிக்கைகளையும் எழுப்புவதை தவிர்க்க முயன்று வருகிறது, ATI "நன்னம்பிக்கையில்" பேரம் பேசவில்லை என்று கூறுகிறது. ATI தலைமை நிர்வாக அதிகாரியான ராபர்ட் வெதர்பீ 2020 ல் 5.7 மில்லியன் டாலர்கள் ஊதியத்தை பெற்றார், இது முந்தைய ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாகும்.
  • தென்மேற்கு வேர்ஜீனியாவிலுள்ள வோல்வோ டிரக்குகளின் நியூ றிவர் வலே (Volvo Trucks’ New River Valley) ஆலையில், ஏப்ரல் 17 முதல் கிட்டத்தட்ட 3,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வோல்வோ டிரக்ஸ் வட அமெரிக்காவின் சுவீடனை தளமாகக் கொண்ட தாய் நிறுவனமான வோல்வோ ஏபி (Volvo AB) இன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்ட்டின் லண்ட்ஸ்டெட், 2020 இல் சுமார் 5.2 மில்லியன் டாலர்கள் (43,926,000 சுவீடிஷ் குரோனர்கள்) பெற்றுக் கொண்டார், அதே நேரத்தில் அவரது துணைத் தலைவர் ஜோன் குராண்டர் சுமார் 2.5 மில்லியன் டாலர்கள் பெற்றார்
  • அலபாமாவிலுள்ள வாரியர் மெட் கோல் (Warrior Met Coal) நிறுவனத்தில், 1,100 சுரங்கத் தொழிலாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், 2016 இல் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர் அமெரிக்க சங்கத்தால் (United Mine Workers of America union) பேரம் பேசப்பட்ட 6 மணி நேர ஊதியக் குறைப்பு மற்றும் உதவிநலன் சலுகைகளை திரும்பப் பெறவேண்டும் என்று கோரினர். வோரியர் மெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான மூன்றாம் வால்டர் ஜே. ஷெல்லர், 2020 இல் 4.3 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஊதியத்தை பெற்றார், இது முந்தைய ஆண்டை விட 8 சதவீத அதிகரிப்பாகும்.
  • நியூ யோர்க் நகரத்திலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில், சுமார் 3,000 பட்டதாரி மாணவர் தொழிலாளர்கள் ஏற்புடையதான ஊதியம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற நலன்களுக்காக ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவரது பல்கலைக்கழக நிர்வாகி சகாக்கள் பலர் பெருநிறுவன அமெரிக்காவிலிருந்து பெருகிய முறையில் பெறுவது போலவே, கொலம்பியாவின் தலைவர் லீ போலிங்கர், பல மில்லியன் டாலர்கள் ஊதியத் தொகுப்பான 4.5 மில்லியன் டாலர்களை பெற்றிருக்கிறார்.

தொழிலாளர்களுடனான கலந்துரையாடல்களில், உலக சோசலிச வலைத் தளத்தையும் சோசலிச சமத்துவக் கட்சியையும் அடிக்கடி கேட்கப்படுவன: கோவிட்-19 தொற்றுக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், நாம் இன்னும் அதிகமாக வாழ வேண்டும் என்பதை நிர்வாகம் எப்படி அங்கீகரிக்கவில்லை? வைரஸை சமாளிக்க நாங்கள் மூடவேண்டும் என்று அவர்கள் ஏன் பார்க்கவில்லை? எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாககூறும் தொழிற்சங்கங்கள் ஏன் எப்பொழுதும் நிர்வாகத்தின் பக்கம் உள்ளன?

இதற்கு பதில் என்னவென்றால், முக்கிய பெருநிறுவன நிர்வாகிகளின் வருமானங்களும் மற்றும் செல்வங்களும், அவர்களுக்குப் பின்னால் நிதியளிப்பவர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் ஆகியோர்கள் பணியிடங்கள் திறந்தே இருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவிலும் உலக அளவிலும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் மூலம் இலாபங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படவேண்டும் என்றும் தங்கள் உறுதிப்பாட்டை ஆணையிடுகின்றனர். அது மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருள்சார் நலன்களுக்காக இந்த சுரண்டல் தீவிரமடைய வேண்டும், புதிய சுற்று ஊதிய வெட்டுக்கள், பணிநீக்கங்கள் மற்றும் பெருநிறுவன மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

"தொழிற்சங்கங்கள்" என்று அழைக்கப்படும் பெருநிறுவன நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கொள்கைகளை செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறிவிட்டவர்கள், தொழிலாளர் மேலாண்மை அமைப்புகளில் இளைய நிர்வாகிகள் (junior executives in the systems of labor management), ஆகியோருக்கு மேலும் அத்தகைய ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க ஆசிரியர் சம்மேளனத்தின் (American Federation of Teachers) தலைவர் ராண்டி வெய்ன்கார்டன் (வருடாந்திர ஊதியம், 564,236 டாலர்கள்), RWDSU இன் ஸ்டூவர்ட் ஆப்பிள்பாம் (344,464 டாலர்கள்), சேவை ஊழியர்கள் சர்வதேச தொழிற்சங்க (Service Employees International Union) தலைவர் மேரி கே ஹென்றி (279,126 டாலர்கள்) வரை வழங்கப்படுகிறது, பெருத்த செலவு கணக்குகள் மற்றும் ஆறு எண்ணிக்கை ஊதியங்கள் கொண்ட எண்ணற்ற பிற தொழிற்சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொள்கின்றனர், அனைவரும் செல்வத்தையும் மற்றும் நலன்களையும் கொண்டுள்ளதுடன், அவர்கள் தொழிலாளர்களிடமிருந்து பிரிந்தும், விரோதமாகவும் ஒரு சமூக அடுக்கில் அமர்ந்திருக்கின்றனர். தொழிற்சங்கங்களை நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பது சர்வதேச அளவில் நடந்துள்ளது. வோல்க்ஸ்வாகனில் (Volkswagen- VW) கூட்டுப் பணிக் குழுவின் தலைவரும், ஐஜி மெடால் தொழிற்சங்கத்தின் (IG Metall trade union) முக்கிய உறுப்பினருமான பெர்ண்ட் ஓஸ்டர்லோ சமீபத்தில் VW வின் டிரக் மற்றும் பஸ் துணை நிறுவனத்தில் ஒரு நிர்வாக நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார், இதன் மூலம் சுமார் 1 மில்லியன் யூரோக்கள் வருமானம் இதற்காக பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவன தலைமை நிர்வாகிகள் மற்றும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்கள், தொழிற்சங்கங்களிலுள்ள அவர்களின் உதவியாளர்களால் விசுவாசமாக பாதுகாக்கப்படுகின்றன, இது சமூகத்தின் மீது ஒரு புற்றுநோயாக மாறியுள்ளது. அவர்களின் ஒட்டுமொத்த சமூக ஒழுங்கான முதலாளித்துவமும், பெரும்பாலான மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எதையும் பூர்த்தி செய்வதற்கு முக்கிய தடையாக உள்ளது, மேலும் பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுக்கிறது, இதில் அத்தியாவசியமற்ற உற்பத்தியை உடனடியாக மூடுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு முழு இழப்பீடு மற்றும் சிறு வணிகங்களுக்கான ஆதரவு உட்படவாகும்.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் அடுக்குகள் போராட்டங்களுக்கு இழுக்கப்படுகின்றன. இந்த போராட்டங்கள் சமுதாயத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வியை பெருகிய முறையில் எழுப்பும்: முதலாளித்துவவாதிகளுக்கும் பெருந்தொற்று நோய் இலாபக்காரர்களுக்கும், அவர்களின் நலன்களானது இலாபங்கங்களையும் இறப்புக்களையும் கோருகின்றன, அல்லது தொழிலாள வர்க்கத்தின் நலன்களானது சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதையும், வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்றும் கோருகின்றன. அதாவது சோசலிசம்?

இந்தப் போராட்டங்களுக்கு தயார்படுத்துவதற்கு தேவையானது சர்வதேச முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் அமைப்பு ஆகும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஆனது அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலிருந்தும் தொழிற்சங்கங்களிலிருந்தும் சுயாதீனமாக ஜனநாயக முறையில் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களின் உலகளாவிய வலையமைப்பான சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கு (International Workers Alliance of Rank-and-File Committees (IWA-RFC), அழைப்புவிடுத்துள்ளது. இந்த ஆண்டு, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் தர்க்கத்தை விளக்குவதற்காகவும், உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களிடையே இந்த முன்முயற்சியை முன்னெடுப்பதற்கும், மே 1ந் திகதி சனிக்கிழமையன்று ICFI அதன் சர்வதேச மே தின இணையவழி பேரணியை நடத்துகிறது. இந்த முயற்சியில் இணைந்து கொள்ளுவதற்கு இன்று சர்வதேச மே தின பேரணியில் கலந்து கொள்ள பதிவு செய்யுமாறு நமது வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

Loading