இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்தும் அதிவலது தளபதிகளின் கடிதத்தை பிரெஞ்சு அதிகாரிகள் ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 21ம் திகதி பிரான்சில் 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தளபதிகள் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டதிலிருந்தும், 7,000 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கையெழுத்திட்டு அதைத் தொடர்ந்ததிலிருந்தும், ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி அச்சுறுத்தலாக அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

அரசியல் மற்றும் செய்தி ஊடக ஸ்தாபகமானது கடிதத்தின் முக்கியத்துவத்தை மூடி மறைக்கவும், அரச மற்றும் இராணுவ எந்திரத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் பாசிச வலைப்பின்னல்கள் இருப்பதையும், சர்வாதிகாரத்திற்கான அவற்றின் தயாரிப்புகளையும் மக்களிடமிருந்து மறைக்கவும் முயற்சித்துள்ளது.

பல நாட்களாக மெளனம் சாதித்த பின்னர், மிகவும் பரவலாக வாசிக்கப்படும் நாளேடான லு மொன்ட்,அந்தக் கடிதத்தில் கிட்டத்தட்ட எதுவுமில்லை என்று எழுதியிருக்கிறது. அதன் அச்சுப் பதிப்பின் பக்கம் 10 இல் ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்ட அதன் முதல் கட்டுரையானது அதிவலது தேசிய பேரணியின் தலைவரான மரின் லு பென், அந்தக் கடிதத்தைப் பாராட்டி, 2022 இல் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு தளபதிகளுக்கு அழைப்பு விடுத்த பதிலை மையமாகக் கொண்டிருந்தது. அப்போதிருந்து,லு மொன்ட் இந்த விடயத்திற்கு மேலும் இரண்டு கட்டுரைகளை அர்ப்பணித்துள்ளது.

அரசியல் ஸ்தாபகம் நனவுடன் என்ன நடந்திருக்கிறது என்பதைக் குறைத்து மதிப்பிட வேலை செய்து வருகிறது. வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் கமிஷனின் உறுப்பினரான சோசலிஸ்ட் கட்சியின் (PS) செனட்டர் ஹெலோன் கான்வே-மௌரெட் (Hélène Conway-Mouret), அந்தக் கடிதம் "ஒரு தேநீர்கோப்பையில் ஒரு புயல்" என்று கூறி, தனது தொனியை அமைத்தார். ஒவ்வொரு சிறிய மாற்றமும் ஒரு எழுச்சியாக பார்க்கப்படும் உலகில், விஷயங்களை ஒருவருக்கொருவர் தொடர்புப்படுத்துவது முக்கியம். பிரான்சில் எந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் தயாரிக்கப்படவில்லை" என்றார்.

மோஸெல்லிருந்து சோசலிஸ்ட் கட்சி (PS) செனட்டரும் முன்னாள் படைவீரர்களுக்கான முன்னாள் அரசு செயலாளருமான ஜோன்-மார்க் டோடெஷினி (Jean-Marc Todeschini), இந்தக் கடிதம் "எல்லாவற்றிற்கும் மேலாக, அது இராணுவப் படைகள் குறித்து அனுப்பும் பிம்பத்திற்கு ஒரு சிக்கலை முன்வைக்கிறது" என்று புகார் கூறினார்.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இந்த கடிதம் குறித்து முழு மெளனம் காத்துவருகிறார், அதற்கு பதிலாக அமைச்சர்கள் அதற்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்வு செய்துள்ளார். அரசாங்கத்தின் எந்த உறுப்பினரும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்தியதற்காக எழுதியவர்கள் மீது குற்றவியல் குற்றம் சாட்டப்பட வேண்டும் அல்லது ஏற்கனவே என்ன வலைப்பின்னல்கள் உள்ளன மற்றும் அவர்கள் ஏற்கனவே என்ன தயாரிப்புகளை செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனையைக் கூறவில்லை.

செவ்வாய்கிழமை, ஜனவரி 19, 2021 அன்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், மேற்கு பிரான்சிலுள்ள ப்ரெஸ்ட் கடற்படை பயிற்சி மையத்தில் பிரெஞ்சு ஆயுதப் படைகளுக்கு புத்தாண்டு உரை நிகழ்த்துவதற்கு முன்னர் இராணுவ தளபதிகளுடன் பேசுகிறார். (Stephane Mahe/Pool Photo via AP)

ஞாயிறன்று இரவு, அது வெளியிடப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னரும், மரின் லு பென்னின் பகிரங்க வேண்டுகோளுக்கு ஒரு நாளுக்குப் பின்னரும், இந்த பிரச்சினை குறித்து உரையாற்றிய முதல் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி ஆவார். இராணுவ எந்திரத்தையும் உலகெங்கிலுமுள்ள பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக செயற்படும் அதன் திறனையும் கீழறுக்கும் என்று அவரது கருத்துக்கள் பெரும்பாலும் லு பென் மீது வலதிலிருந்து தாக்குதலாக இருந்தது.

"திருமதி லு பென்னின் வார்த்தைகள் இராணுவ நிறுவனம் பற்றிய கடுமையான தவறான புரிதலை பிரதிபலிக்கின்றன, இது ஆயுதப் படைகளின் தலைவராக விரும்பும் ஒருவர் பற்றி கவலையளிக்கிறது," என்று அவர் எழுதினார். "திருமதி லு பென் பரிந்துரைத்த ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குவது நமது இராணுவ கருவியையும் எனவே பிரான்சையும் பலவீனப்படுத்தும்."

கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் என்ற உண்மையை, அதன் அரசியல் முக்கியத்துவமின்மையை வலியுறுத்துவதற்காக, பார்லி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆயினும்கூட "ஓய்வுபெற்ற" தளபதிகளும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் தங்கள் செயலூக்கமாக கடமையிலிருக்கும் சகாக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி, துல்லியமாக அத்தகைய வெளிப்படையான அரசியல் பிரகடனங்களில் அவர்களுக்கு பொது முகமாக செயல்படுகிறார்கள் என்பது நன்கு அறியப்பட்டதாகும். திங்களன்று France Info விற்கு மேலும் ஒரு கருத்துரையில், அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள தீவிரமாக பணியாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பார்லி அறிவித்தார்.

கடிதத்தின் பகிரங்கமாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியரும் Place Armes வலைத் தளத்தை நிர்வகிப்பவருமான முன்னாள் கேப்டன் ஜோன்-பியர் ஃபாப்ரே-பெர்னாடாக் (Jean-Pierre Fabre-Bernadac), கடிதத்தில் கையெழுத்திட்ட முதல் 1,500 கையொப்பமிட்டவர்களின் பட்டியலில் ஒருவராவார். அது வெளியிடப்பட்ட நாட்களில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை 7,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று அது கூறுகிறது.

ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடங்குவதற்கான வெளிப்படையான அச்சுறுத்தலான இந்தக் கடிதம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களுடன் (neighbourhood) ஒருங்கிணைக்கிறது, "இஸ்லாமியவாதமும் banlieues க்களின் (banlieues - தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகள்) கூட்டங்களும், நாட்டில் பல பிளவுகளுக்கு இட்டுச் சென்று, அதை நமது அரசியலமைப்பிற்கு முரணான சித்தாந்தங்களுடன் பிரதேசங்களுக்குள் மாற்றுகின்றன" என்று எச்சரிக்கிறது.

இராணுவப் பிரதிநிதிகள், "நமது இராணுவ அந்தஸ்துக்கு தேவைப்படுவது போல், நமது நடவடிக்கைகளுக்காக நமது தோலை எப்போதும் வரியில் வைக்கத் தயாராக இருக்கும் தேசத்தின் ஊழியர்கள், அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன் செயலற்ற பார்வையாளர்களாக இருக்க முடியாது" என்று அது கூறுகிறது.

அரசாங்கத்தால் எதுவும் செய்யப்படவில்லை என்றால், "மெத்தனம் சமூகம் முழுவதும் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து பரவி, இறுதியில் ஒரு வெடிப்பையும், நமது நாகரிகத்தின் மதிப்புகளைப் பாதுகாக்கவும், தேசிய பிரதேசத்தில் நமது சக தேசத்தினரைப் பாதுகாக்கவும் ஒரு ஆபத்தான பணியில் நமது செயலூக்கமான கடமையிருக்கும் தோழர்களின் தலையீட்டைத் தூண்டும்.

"பிற்போடுவதற்கு இனி நேரம் இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம், இல்லையெனில் நாளை உள்நாட்டுப் போர் வளர்ந்து வரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும், நீங்கள் பொறுப்பேற்கும் இறப்புக்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும்."

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி குறித்து இத்தகைய வெளிப்படையான அச்சுறுத்தல்கள் சுற்றிவருகின்றன என்றால், அது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான தயாரிப்புக்கள் அரசாங்க இயந்திரத்தில் உயர் மட்டங்களில் விவாதிக்கப்பட்டு, தயாரிக்கப்படுவதால்தான் ஆகும். அண்டை நாடான ஜேர்மனியில், இராணுவத்திலுள்ள பாசிச வலைப்பின்னல்கள் படுகொலை செய்யப்பட வேண்டிய இடதுசாரி அரசியல்வாதிகளின் பட்டியல்களை தொகுத்து, ஆயுதங்கள் மற்றும் துணைக்கலப் பொருட்களை சேமித்து வைக்கும் ஒரு "நாள் எக்ஸ்" (“day X”) க்கான தொலைநோக்கு தயாரிப்புக்களை செய்துள்ளன என்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது.

மக்ரோன் அரசாங்கமானது ஒரு பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு சதியை விட தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் குறித்து மிகவும் அஞ்சுகிறது. அதனால்தான் ஜெனரல்களின் கடிதத்தின் முக்கியத்துவத்தை மூடி மறைக்க அது உறுதியாக உள்ளது. மேலும், பாசிச கடிதம் பெரும்பாலும் மக்ரோன் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிரான்சில் ஒரு முஸ்லீம் "பிரிவினைவாத" இயக்கத்தின் ஆபத்து என்று கூறப்படுவதை கண்டனம் செய்யும் அதன் வாதமானது பிரான்சிலுள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு எதிராக இயக்கப்படும் மக்ரோனின் "பிரிவினைவாத-விரோத" சட்டத்தின் உந்துதலை பிரதிபலிக்கிறது.

இந்தப் பெருந்தொற்று நோய்க்கு மத்தியில், மக்ரோனின் முஸ்லீம்-விரோத பிரச்சாரமானது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும், பெருநிறுவன இலாப ஈட்டத்தில் எந்த தடையையும் தடுப்பதற்காக, வைரஸ் தடையின்றி மக்கள் முழுவதும் பரவ அனுமதிக்கும் அதன் கொலைகார கொள்கையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்ரோனே ஒரு பொலிஸ் அரசின் படைகளை கட்டியெழுப்ப வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். அரசாங்கம் சமீபத்தில் அதன் "பொதுப் பாதுகாப்பு" சட்டத்தை இயற்றியது, இது பொலிஸ் மிருகத்தனமான செயற்பாடுகளை படம் பிடித்து வெளியிடும் குடிமக்களை குற்றவியல்ரீதியாக துன்புறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை திறக்கிறது. 2018 முழுவதிலும், கலகப் பிரிவு போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள், ஸ்டன் கையெறி குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் நாய்களை ஏவித் தாக்குதல் நடத்துதல் ஆகியவைகள் மூலம் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தினார். போர்க்கால பாசிச சர்வாதிகாரி பெத்தானை மக்ரோனே ஒரு "சிறந்த சிப்பாய்" என்று பாராட்டினார்.

சர்வாதிகாரத்தை நோக்கித் திருப்புவதை எதிர்க்கும் அரசியல் ஸ்தாபகத்தின் முற்போக்கான பிரிவு எதுவும் இல்லை. வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மட்டங்களால் உந்தப்பட்டு, முதலாளித்துவ ஜனநாயகம் உலகெங்கிலும் உடைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஜனவரி 6 அன்று ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடங்கவும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை முறியடிக்கவும் முயன்றார். ஸ்பெயினில், ஓய்வு பெற்ற தளபதிகள் பகிரங்கமாக ஒரு இராணுவ அரசாங்கத்திற்கும் "26 மில்லியன்" இடதுசாரி வாக்காளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை படுகொலை செய்யவும் அழைப்பு விடுக்கின்றனர்.

சர்வாதிகாரத்திற்கான இந்த உந்துதலுக்கு ஒரே பதில் சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஒரு ஐக்கியப்பட்ட சக்தியாக அரசியல் அணிதிரட்டுவதில்தான் உள்ளது. இந்த சனிக்கிழமை, மே 1ந் திகதியன்று, உலக சோசலிச வலைத் தளம் ஒரு சர்வதேச இணையவழி பேரணி நடத்துவதில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் மற்றும் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான உந்துதலுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் படுகொலைகளுக்கு எதிரான அதன் போராட்டத்தை ஒழுங்கமைக்க தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்ட செற்பாட்டு நடவடிக்கையை கோடிட்டுக்காட்டும். எங்கள் வாசகர்கள் அனைவரும் பேரணிக்கு பதிவு செய்து கலந்து கொள்ளுவதற்கு திட்டமிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading