உலகளவில் உத்தியோகபூர்வ COVID-19 இறப்பு எண்ணிக்கை நான்கு மில்லியனை எட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வூஹானில் ஹுனான் சந்தையில் சந்தித்த 61 வயதான நபரில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்டு ஜனவரி 11, 2020 இல் முதல் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து, இதை எழுதும் வரையான 541 நாட்களில் 3,996,185 உயிர்கள் (உலக அளவீட்டு டாஷ்போர்டின் படி) பலியாகிவிட்டன, இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7,400 உயிர்கள் பலிக்கு சமனாகும்.

இந்த ஜூலை 4 வார இறுதியில், இழந்த உயிர்களின் எண்ணிக்கை 4 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை தாண்டியிருக்கும், அதிக இறப்பு எண்ணிக்கையானது அமெரிக்காவில் 621,300 பேர்கள், இதில் ஜோ பைடென் ஜனாதிபதியானதிலிருந்து கிட்டத்தட்ட 200,000 பேர் மேலதிகமாக இறந்துள்ளனர்.

2021 ஜூன் 28 திங்கட்கிழமை கொலம்பியாவின் ஜிபாகுவிராவில்( Zipaquira) உள்ள பிராந்திய மருத்துவமனையின் சவக்கிடங்கில், COVID-19 தொடர்பான சிக்கல்களால் இறந்த நோயாளிகளின் தகவல்களை ஒரு சுகாதார ஊழியர் பதிவு செய்கிறார். COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பு. (AP Photo/Ivan Valencia)

Think Global Health ஜூன் 2021 இல் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, COVID-19 உலகளவிலான மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணியாகும். 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து உலகெங்கிலும் உள்ள 20 இறப்புகளில் 1 இறப்பு (5 சதவீதம்) இந் நோயினாலாகும். அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகள் சரியாக இருக்குமிடத்து, இது உலகில் மூன்றாவது முக்கிய காரணியாக மாறும், இது நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய்க்கு முன்னும், பக்கவாதம் மற்றும் இதய நோய்களுக்கு அடுத்ததுமாக உள்ளது. இப் பக்கவாத இதயநோயால் “7.5 மில்லியன் இறப்புகள் அல்லது ஒவ்வொரு பத்து இறப்புகளில் ஒன்று” என மதிப்பிடப்பட்டுள்ளது. (சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது)

அறிக்கை தொடர்கிறது, “உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பல அமெரிக்க மாநிலங்களில் COVID-19 தொற்றுநோயானது இறப்பிற்கு பிரதான காரணமாக இருந்தது. ஆனால் COVID-19 இறப்புகளைக் கணக்கிட்ட பிறகும் கூட, அமெரிக்கா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இதுவே மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது ... ”

உலகளவில் கிட்டத்தட்ட 185 மில்லியன் COVID-19 நோய் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) கண்காணித்த வாராந்த புள்ளிவிவரங்கள் COVID-19 நோய் தொற்றுக்கள் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு அதிகரித்துள்ளது. டெல்டா மாறுபாடு நோய் தொற்று கிட்டத்தட்ட 100 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தென் அமெரிக்கா முழுவதும் இருந்த அனைத்து கொரோனா வைரஸ் வகையறாக்களையும் டெல்டா விரைவாக மாற்றுகிறது, அங்கு காமா மாறுபாடு (gamma variant) (அல்லது B1, பிரேசிலில் முதன்முதலில் கண்டறியப்பட்டது) கண்டத்தை அதிக தொற்று மற்றும் இறப்பு விகிதங்களுடன் தொடர்ந்து தாக்குகிறது.

Figure 1 - Weekly படம் 1 இன் படி, வாரந்தோறும், பாரிய மரணத்தின் சுமை, தொற்றுநோய்களின் காலப்பகுதி முழுவதும், அதிக வருவாய் உள்ள நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 2020 ஆரம்பம் வரை, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரேசில் ஆகியவை COVID-19 தொற்றுநோய்களின் மையமாகக் கருதப்பட்டன. COVID-19 தடுப்பூசி பிரச்சாரத்தின் தொடக்கத்திலிருந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் புதிய தொற்றுக்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன, இது COVID-19 தடுப்பூசியின் உயிர் காக்கும் விளைவுகளால் ஆகும்.

படம் 1 - WHO இன் பிராந்தியத்தின் வாராந்த இறப்பு விகிதங்கள்

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தொற்றுநோய்களில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளது, இங்கு தடுப்பூசி விகிதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன, இப்போது இந்நாடுகள் தொற்றுநோயின் முக்கிய மையமாக மாறியுள்ளது.

உலகளவில் 3.2 பில்லியனுக்கும் அதிகமான COVID-19 தடுப்பூசிகள் உள்ளன, இது ஒவ்வொரு 100 பேருக்கும் 42 அளவுகளுக்கு (doses) சமம். ஆபிரிக்கா இதுவரை 100 பேருக்கு 3.8 டோஸ் மட்டுமே வழங்க முடிந்தது. COVID-19 தடுப்பூசிகள் உலகளாவிய அணுகல் முயற்சி (COVAX) படி, அவர்கள் அங்கம் வகிக்கும் 134 நாடுகளுக்கு 95 மில்லியன் அளவிலான (doses) தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஜூன் வரை, இந்தியா ஒரு கட்டுக்கடங்கா இறப்பு விகிதத்தை எதிர்கொண்டது, இந்த தொற்றுநோயானது செல்வந்தநாடுகளிலிருந்து ஏழ்மையான நாடுகளுக்குள் நுழைந்தது. அந்த மூன்று மாதங்களில், இந்தியாவில் 18.2 மில்லியன் கோவிட் -19 தொற்றுக்கள் மற்றும் 235,000 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நடைமுறைப்படுத்திய பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் கொள்கைகளின் துணை தயாரிப்பு ஆகும். ஒட்டுமொத்த தொற்றுநோய்க்கும், இந்தியா 34.6 மில்லியன் COVID-19 நோய்த்தொற்றுகளையும் 400,000 க்கும் அதிகமான இறப்புகளையும் கண்டுள்ளது.

படம் 1 ஆல் விளக்கப்பட்டபடி, அமெரிக்கா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான இறப்பு வீதமாகும், இது அமெரிக்காவிலிருந்து இலத்தீன் அமெரிக்காவின் நாடுகளை நோக்கி நகர்வதை மறைக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவை என்றாலும், தென் அமெரிக்கா இதுவரை 33 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 தொற்றுக்கள் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையில் பாரிய பகுதியான 18.8 மில்லியன் COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை பிரேசில் பதிவு செய்துள்ளதுள்ளது. இருப்பினும், கொலம்பியா, ஆர்ஜென்டினா, சிலி மற்றும் பெரு (Peru) ஆகிய நாடுகளும் சமீபத்திய பேரழிவுகளை எதிர்கொண்டன.

படம் 2 - ஆபிரிக்க கண்டத்தின் வாராந்த தொற்றுக்கள் மற்றும் இறப்பு விகிதங்கள்

எவ்வாறாயினும், இது 1.2 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க கண்டத்திற்கு தொற்றுநோயை நகர்த்துவதாகும், கிட்டத்தட்ட அனைவருமே தடுப்பூசி கிடைக்கபெறாததுடன் வைரஸ் பற்றிய விபரங்களை முன்னரே அறிந்திருக்கவில்லை என பல சர்வதேச பொது சுகாதார நிறுவனங்கள் அறிக்கை முன் வைக்கின்றன. ஆபிரிக்காவிற்கான WHO பிராந்திய அலுவலக அறிக்கையின்படி, ஆறு வாரங்களுக்கும் மேலாக COVID-19 காரணமாக ஒவ்வொரு வாரமும் தொற்றுக்கள் 25 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், ஏற்படும் இறப்புகளும் அதிவேகமாக இருப்பதாக கூறுகின்றது.

WHO இன் பிராந்திய இயக்குனர் மட்ஷிடிசோ மொயட்டி (Matshidiso Moeti), “ஆபிரிக்காவின் மூன்றாவது அலையின் வேகமும் அளவும் நாம் முன்பு பார்த்த எதையும் போலல்லாது. இரண்டாவது அலையின் தொடக்கத்தின் ஒவ்வொரு நான்கு வாரங்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் தொற்றுக்கள் இரட்டிப்பாகின்றன. கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 202,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த தொற்றுநோய்களில் ஆபிரிக்க கண்டம் அதன் மோசமான வாரத்தை தாண்டிய நிலையில் உள்ளது.” 45 வயதிற்கு குறைவானவர்கள் உட்பட மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியவர்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று அவர் விளக்கினார். கூடுதலாக, டெல்டா மாறுபாடு மிகவும் கடுமையான மற்றும் நீண்ட கால நோயை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. வளர்ந்து வரும் தொற்றுநோய்களின் மோசமான அலைக்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறையை நிரப்ப, நாடுகளுக்கு அதிகப்படியான தடுப்பூசி அளவுகளைப் (doses) பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அவசர வேண்டுகோள் விடுத்தார்.

WHO ஆபிரிக்காவின் பிராந்திய இயக்குநர், மாட்சிடிசோ மொயெட்டி

ஆயினும்கூட, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் கடந்த சில மாதங்களில் சாதாரணநிலை காணப்பட்ட போதிலும், மீண்டும் தொற்றுக்களின் எண்ணிக்கை மேல்நோக்கியுள்ளன, இப்போது ஐரோப்பாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் திறக்கப்படுவதால், இந்த நடவடிக்கையானது உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வைரஸ் பரவுவதை மேலும் தூண்டிவிடும்.

இந்த புள்ளிவிபரங்களின் தாக்கங்களுக்கு ஏற்ப, குறிப்பாக மற்ற அனைத்து மாறுபாடுகளையும் விட வேகமாக ஆதிக்கம் செலுத்துகின்ற மிகவும் பரவக்கூடிய டெல்டா மாறுபாட்டின் பின்னணியில் பொது சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துதல் அல்லது மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி பைடெனும் ஐரோப்பாவில் உள்ள அவரது சகாக்களும் தொற்றுநோய் பரவலை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டு கொண்டு வந்தனர்.

பாரிய நோய் அதிகரிப்புகள் பற்றிய சமீபத்திய புத்தகமான தி பாண்டெமிக் செஞ்சுரி (The Pandemic Century) இன் ஆசிரியர் மார்க் ஹொனிக்ஸ்பாம் இவ்வாறு குறிப்பிட்டார், “சில நிகழ்வுகள் ஒரு தொற்றுநோயைப் போலவே நிர்ப்பந்தமானவை. போதுமான அளவு கடுமையானதாக இருக்கும்போது, ஒரு தொற்றுநோய் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலிருந்தும் விடைகளை தேடுகிறது. அத்துடன் சமூக மற்றும் பொருளாதார பிளவுகளைக் காட்டுகிறது மற்றும் அரசியல்வாதிகளை முழுமையான மருத்துவ மற்றும் தார்மீக தேர்வுகளை எதிர்கொள்ள முன்வைக்கிறது. மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில், ஒரு தொற்றுநோய் ஒரு முழு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும்.”

மனித நாகரிகங்களை பாதித்த முந்தைய உலகளாவிய நிலமைகளைப் போலல்லாமல், COVID-19 தொற்றுநோய் தனித்துவமானது, ஏனெனில் வைரஸைக் கண்டுபிடித்து அழிக்க தேவையான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தை உலகம் கொண்டுள்ளது. அதே நேரத்தில், பள்ளி மூடல்கள், முழு அடைப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பயணக் குறைப்பு மற்றும் சமூக விலகல், தொற்றுநோய்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் போன்ற அத்தியாவசிய அசௌகரியங்களுக்காக அனைவருக்கும் தேவையான வளங்களை வழங்க முடியும்.

தொற்றுநோயின் ஒவ்வொரு கட்டத்திலும், பாரிய நோய்த்தொற்றின் கொள்கையை ஆளும் வர்க்கங்கள் வெளிப்படையாகவும் நயவஞ்சகமாகவும் ஊக்குவித்துள்ளன. சுகாதார முறைகள் மிகவும் மூழ்கியிருந்தபோது அவை மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சுருக்கமான பணிநிறுத்தங்களுடன் மட்டுமே நின்றுவிட்டன, வேறு எந்த தீர்வும் போதுமானதாக இல்லை. பள்ளிகள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோயின் முக்கிய மையம் என்பதை நிரூபிக்கும் விஞ்ஞான தரவுகளை அவர்கள் புறக்கணித்தனர். உயிர்களைப் பாதுகாக்க தேவையான பொது சுகாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக தடுப்பூசி தேசியவாதத்தை பயன்படுத்தினர்.

பெரிய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் உயரடுக்கினர் தங்கள் இலாப நலன்களுக்கு முன்னால் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் வைத்து, அவர்களின் டிரில்லியன் கணக்கான வளங்களை தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவர பயன்படுத்தியிருந்தால், தொற்றுநோய் குறைந்தது 4 மில்லியன் உயிர்களைக் கொன்றிருக்காது, அது ஒருபோதும் இழக்கப்பட்டிருக்கக்கூடாது. அவர்கள் அவ்வாறு செய்யத் தவறியது முதலாளித்துவத்தின் மொத்த திவால்நிலையையும் சோசலிசத்தின் வரலாற்றுத் தேவையையும் நிரூபிக்கிறது.

Loading