இணையவழி பொதுக் கூட்டம்: இலங்கையில் "ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தை வெல்வது எவ்வாறு?"

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் அரச பாடசாலை ஆசிரியர்கள், சம்பள முரண்பாடுகளை நீக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி இருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தால் தூண்டிவிடப்படும் இன மற்றும் மத பிளவுகளைக் கடந்து, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 250,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், 'ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தை வெல்வது எவ்வாறு?' என்ற தலைப்பில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) தலைமையிலான ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவானது இந்த மாதம் 30 அன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பகிரங்க இழையவழி கூட்டத்தை நடத்துகிறது.

உயரும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஊதியத்தை வெல்வதற்கு ஆசிரியர்கள் மத்தியில் ஒரு தீவிரமான போர்க்குணம் உருவாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை கொழும்பில் 2,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், ஒழுக்கமான ஊதியத்தை வெல்வதற்கும், அதே போல் மாணவர்களின் இணையவழி கல்விக்கு அரசாங்கத்தால் வசதி செய்து கொடுக்கப்படாமை, கல்வி தனியார்மயமாக்கல், இராணுவமயமாக்கல் மற்றும் அரச அடக்குமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளை வெற்றிகளாக தூக்கிப் பிடித்து, 24 ஆண்டுகளாக ஆசிரியர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்து வரும் ஆசிரியர் சங்கங்கள், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைச்சரவை ஆவணங்கள் மூலம் தீர்வுகள் காண முடியும் என்ற மாயையை விதைத்து, ஆசிரியர்களின் போர்க்குணத்தை திசை திருப்ப மீண்டும் முயற்சிக்கின்றன.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மூலம், அதன் ஜனநாயக விரோத தாக்குதல்களை தோற்கடிக்கவோ அல்லது சம்பள அதிகரிப்பு உட்பட சிறந்த வேலை நிலைமைகளை வெல்லவோ முடியாது. இந்த நோக்கத்திற்காக, ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து விடுபட்டு, ஏனைய தொழிலாள வர்க்க பிரிவினர் மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்களுடன் சேர்ந்து, முதலாளித்துவ முறைமைக்கு எதிரான சோசலிச கொள்கையின் அடிப்படையில் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இந்த தீர்க்கமான வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இங்கு கூட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/meeting/register/tZItf-mprTwsHdLPBfdncZuwAnmN3D45FJFd