கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் பகுதியில் தேசியவாத சக்திகளை சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் பாராட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிப்ரவரி 2014 இல் உக்ரேனில் பாசிசவாதிகள் தலைமையிலான சதித்திட்டத்தை அமெரிக்காவும் ஜேர்மனியும் ஆதரித்ததிலிருந்து, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து நேட்டோவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சியான Defender 2021 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்றது. கியேவில் ஏகாதிபத்திய ஆதரவுடைய ஆட்சி, நேட்டோவில் உக்ரேனுக்கு அங்கத்துவத்தை கோருவதுடன் மற்றும் டொன்பாஸ் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் கிரிமியாவை 'மீண்டும் கைப்பற்றவும்' ஒரு இராணுவத் தாக்குதலை திட்டமிட்டுள்ளது.

ரஷ்ய கருங்கடல் கடற்படையின் மையமாக விளங்கும் கருங்கடலில் உள்ள தீபகற்பம் மார்ச் 2014 முதல் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மாஸ்கோ ஒழுங்கமைத்த வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் இந்த இணைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிரான பாசிச தலைமையிலான சதித்திட்டத்திற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் கிழக்கில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான எதிர்ப்பாளர்களின் மீதான உக்ரேனிய இராணுவத்தினதும் மற்றும் பாசிச கிளர்ச்சியாளின் தாக்குதலுக்கும் இவ்வாறு கிரெம்ளின் பதிலளித்தது.

உக்ரேனிய இராணுவத்திற்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையில் கிழக்கு உக்ரேனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 14,000 பேரின் உயிரை பலியெடுத்துள்ளதுடன் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக மாற்றியுள்ளது. அணுசக்தி கொண்ட ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ தலைமையிலான ஒரு பகிரங்க போர் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிர்வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும். ரஷ்ய ஆயுதப்படைகளுக்கும் கருங்கடலில் ஒரு பிரிட்டிஷ் நாசகாரி கப்பலுக்கும் இடையிலான சமீபத்திய மோதலானது, அத்தகைய மோதலின் ஆபத்து எவ்வளவு பெரியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) உக்ரேனில் தீவிர வலதுசாரி சதி மற்றும் ஆரம்பத்தில் இருந்தே ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்ட தாக்குதலைக் கண்டித்தது. உக்ரேனில் ஆட்சி மாற்ற நடவடிக்கையை 'ஜனநாயகப் புரட்சி' என்று புகழ்ந்து, பாசிச சக்திகளுடனான ஒத்துழைப்பை மூடிமறைத்து பாதுகாத்த தாராளவாத மற்றும் போலி-இடது அமைப்புகள் மற்றும் வெளியீடுகளுக்கு எதிராக அது தனது விமர்சனத்தை முன்வைத்தது.

அதே நேரத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ரஷ்ய தேசியவாதத்தையும் எதிர்க்கிறது. புட்டினின் ஆட்சியும் கிழக்கு உக்ரேனில் அதன் பிரதிநிதிகளும் ஏகாதிபத்திய போர் ஆதரவாளருக்கு ஒரு மாற்றீட்டை முன்வைக்கவில்லை. அவை ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதன் மூலம் தோன்றிய ஒரு குற்றவியல் தன்னலக்குழுவின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவர்களின் இராணுவ நடவடிக்கைகள் போரின் ஆபத்தை அதிகரிப்பதுடன் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த தேசியவாதத்தை ஊக்குவிக்கின்றன.

இராணுவவாதம், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஆதரிக்கிறது. குறிப்பாக உக்ரேனைப் பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி 1930 களின் முற்பகுதியில் ஒரு முதலாளித்துவ அடிப்படையிலான அதன் சுதந்திரம் பிற்போக்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் உக்ரேனை ஏகாதிபத்திய சக்திகளின் விளையாட்டுப் பொருளாக மாற்றும் என்றும் எச்சரித்தார். ஸ்ராலினிச பயங்கரம் நூறாயிரக்கணக்கான சோசலிஸ்டுகளுக்கு எதிராக எழுந்தபோது, ட்ரொட்ஸ்கி உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக ஒரு சுதந்திர சோவியத் உக்ரேனுக்காக போராடினார்.

இந்த வரலாற்றுக் கண்ணோட்டங்களையும் அரசியல் கோட்பாடுகளையும் கால்களால் மிதித்து, கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய தேசியவாத சக்திகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்கும் அரசியல் போக்குகள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நாசப்படுத்துகின்றன. உண்மையில் கியேவில் உள்ள பாசிச நேட்டோ ஆதரவு சக்திகளின் கைகளை நேரடியாக பலப்படுத்துகின்றன.

இவ்வாறான போக்குகளில் ஒன்று கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி (EEK) ஆகும், இது சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தை மறுசீரமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் (CRFI) ஒரு பகுதியாகும். CRFI இன் மற்ற உறுப்பினர்களில் ஆர்ஜென்டினாவில் உள்ள தொழிலாளர் கட்சி (PO) மற்றும் துருக்கியில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சி (DIP) ஆகியவை அடங்கும். மே 10 அன்று, கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பொதுச் செயலாளர் சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் “டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் (VRD) மக்களுக்கு சகோதரத்துவ வாழ்த்துக்கள் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் (Photo: Prensa Obrera, CC BY 4.0, via Wikimedia Commons) [Photo by Prensa Obrera / CC BY-SA 4.0]

தனது அறிக்கையில், சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் தன்னையும் கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் சர்வதேசவாதிகளாகவும் மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசை பாசிசம் மற்றும் போருக்கு எதிரான ஒரு அரணாகவும் சித்தரிக்க முயன்றார். எடுத்துக்காட்டாக, மைக்கேல்-மாட்சாஸ், “2014 இல் கியேவில் நடந்த பாசிச சதித்திட்டத்திற்கு எதிராக டொனெட்ஸ்கிலும் டொன்பாஸ் முழுவதிலும் நடந்த போராட்டம் பண்டேரா கும்பல்களின் வாரிசுகளுக்கும் அவர்களின் ஏகாதிபத்திய பாதுகாவலர்களுக்கும் எதிரான அதே போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.” எனவே அவரும் அவரது கட்சியும் 'ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பாளர்கள், பாசிஸ்டுகள், பண்டேராவின் வாரிசுகள் மற்றும் தன்னலக்குழுக்களின் தாக்குதல்களுக்கு ஆளான உங்கள் மக்களுடனும் பிற மக்களுடனும் எங்கள் ஐக்கியத்தை அறிவிக்கின்றோம்' என்று எழுதினார்.

இந்த சதி, அடுத்தடுத்த இராணுவத் தாக்குதல் மற்றும் மே 2, 2014 அன்று ஒடேசாவில் டஜன் கணக்கான சதி எதிர்ப்பாளர்களைக் கொன்றது உட்பட பாசிச சக்திகளின் குற்றங்கள் குறிப்பாக கிழக்கு உக்ரேனில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைத் தூண்டியது என்பது ஒரு உண்மை. ஆனால் இந்த சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு ஒரு பங்குவகிக்க முடியும் என்ற கூற்று முற்றிலும் தவறானது. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என்பது கியேவில் ஏகாதிபத்திய ஆதரவுடைய ஆட்சிக்கு ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்கள் ஆழ்ந்த வேரூன்றிய எதிர்ப்பின் முற்போக்கான வெளிப்பாடு அல்ல. இது ஸ்டீபன் பண்டேரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களைப் பாராட்டுகிறது. டொனெட்ஸ்கில் இடம்பெற்ற காட்சிகளை தமக்கு அழைக்கும் கூறுகள் தங்களை வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் தேசியவாதிகள் மற்றும் உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாவர்.

மார்ச் 3 முதல் நவம்பர் 4, 2014 வரை இருந்த டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் முதல் ஆளுநர் வலதுசாரி தீவிரவாத பின்னணியுடன் உக்ரேனில் ரஷ்ய சார்பு இயக்கத்தின் தலைவரான பாவெல் குபாரேவ் ஆவார். நவ-நாஜி மற்றும் யூத எதிர்ப்பு அமைப்பான ரஷ்ய தேசிய ஐக்கியத்தின் (Russian National Unity) உறுப்பினராக இருந்த அவர் புதிய ரஷ்யா கட்சியின் (PN) தலைவராக இருந்தார். புதிய ரஷ்யா கட்சி மே 13, 2014 அன்று டொனெட்ஸ்கில் நிறுவப்பட்டது. மேலும் ரஷ்ய பாசிசத்தின் பிரதிநிதிகள் மற்றும் அலெக்ஸாண்டர் புரோச்சனோவ் மற்றும் அலெக்சாண்டர் டக் போன்ற தீவிர வலதுசாரிகளின் பிரதிநிதிகளிடையே ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

பாவெல் குபாரேவ் (Photo: Andrew Butko, CC BY-SA 3.0 via Wikimedia Commons)

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்போதைய தலைவர்கள் குபாரேவ் போன்றவர்களில் இருந்து தோன்றியவர்களாவர். அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உயர்வு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பொதுவாக மாஸ்கோவில் முதலாளித்துவ புட்டின் ஆட்சியில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளனர்.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்போதைய இடைக்காலத் தலைவர் டொனெட்ஸ்க் குடியரசின் ரஷ்ய தேசியவாதக் கட்சியின் தலைவர் டென்னிஸ் புஷிலின் ஆவார். தனது அரசியல் வாழ்க்கைக்கு முன்னர், மோசமான பங்குதாரர் நிறுவனமான MMM நிறுவனத்திற்காக அவர் இயங்கிவந்தார். இது 1990 களின் முற்பகுதியில் ரஷ்யாவில் மிகப்பெரிய போலி நிதித்திட்டங்களில் ஒன்றை உருவாக்கி மற்றும் 10 முதல் 15 மில்லியன் மக்களின் வைப்புகளை திருடியது. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்போதைய பிரதம மந்திரி விளாடிமிர் பாஷ்கோவ் 1993 வரை ரஷ்ய கடற்படையில் பணியாற்றினார். மேலும் 2008 இல் இர்குட்ஸ்க் ஒப்லாஸ்டில் அபிவிருத்திக்கான பிராந்திய அமைச்சராக இருந்தார். அவர் 2012 மற்றும் 2015 க்கு இடையில் அதே நிர்வாக பிராந்தியத்தின் துணை ஆளுநராக பதவியேற்றிருந்தார்.

பாஷ்கோவ் உக்ரேனிய தன்னலக்குழுவினரான சேர்ஜி குர்ச்சென்கோவுடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும் அவரது நிறுவனமான Vneshtorgservis உடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய Rosneft network இன் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு நிறுவனத்தையும் பாஷ்கோவ் வைத்திருக்கிறார். Rosneft இனை ரஷ்யாவின் பணக்கார தன்னலக்குழுவினரில் ஒருவரான புட்டினின் நெருங்கிய நம்பிக்கையுள்ள ஈகோர் செட்ஷின் கட்டுப்படுத்துகிறார்.

ஆகஸ்ட் 31, 2018 அன்று வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர் இழந்த புஷிலினின் முன்னோடி அலெக்சாண்டர் சச்சர்ச்சென்கோ, யூத எதிர்ப்பு அறிக்கைகளுக்கு புகழ் பெற்ற ஒரு பெரும் ரஷ்ய தேசியவாதியாவார். ஒரு Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையின் அறிக்கையின்படி, சச்சார்சென்கோ ஒரு நேர்காணலில் 'ஒரு காலத்தில் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கு சொந்தமான அனைத்து பிரதேசங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர' அழைப்பு விடுத்தார். அப்போதுதான் “ரஷ்யாவின் பொற்காலம்” தொடங்கும் என்றார். இந்த பிரச்சினை கியேவை திரும்பப் பெறுவது மட்டுமல்ல, 'பேர்லினையும் எடுத்துக் கொள்ளவது மட்டுமல்ல.' ஒருவர் “அதையும் மீறி பிரிட்டனை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ரஷ்யர்களாகிய எங்கள் பெரும் துரதிர்ஷ்டம் ஆங்கிலோ-சாக்சனியர்கள்” என்றார்.

கியேவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் “சக்திவாய்ந்த யூத மக்களின் பரிதாபகரமான பிரதிநிதிகள்” என்றும், அவர்களுக்கு கொசாக்குகளின் வாரிசுகளின் தலைமையாக நிற்க உரிமை இல்லை என்றும் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சச்சார்சென்கோ ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் என்று ஆஸ்திரிய நாளேடான Die Presse 2015 இல் செய்தி வெளியிட்டது.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் இந்த சக்திகளுக்கு ஏற்ப உள்ளன. கியேவில் உள்ள மேற்கத்திய சார்பு ஆட்சியைப் போலவே, டொன்பாஸிலும் பிரிவினைவாத கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் சர்வாதிகார “சட்டம் ஒழுங்கு” கொள்கையால் குணாதிசயப்படுத்தப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில், தேசத்துரோகம் மற்றும் உளவு போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்சி இன, மத மற்றும் பாலியல் சிறுபான்மையினரை முறையாக ஒடுக்குகிறது. ஊடக அறிக்கையின்படி, ரோமா மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது ஆயுதமேந்திய குழுக்களால் பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டில், டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர், “ஓரினச்சேர்க்கை கலாச்சாரம் பரவி வருகிறது… அதனால்தான் அதில் ஈடுபடும் எவரையும் நாங்கள் கொல்ல வேண்டும்” என்று கூறினார்.

சவாஸ் மிஷேல்-மேட்சாஸின் பிரச்சாரத்திற்கு மாறாக, டொனெட்ஸ்கில் உள்ள ஆட்சி சர்வதேச அளவில் மிகவும் பிற்போக்குத்தனமான ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒத்துழைக்கிறது. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகளின் பிரதிநிதிகளை மீண்டும் மீண்டும் வரவேற்றுள்ளனர். இதில் ஜேர்மனிக்கான மாற்று கட்சியும் உள்ளடங்கும். இது ஹிட்லரின் வேர்மார்க்டை புகழ்ந்து, யூதப்படுகொலைகளையும், சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான நாஜிக்களின் நிர்மூலமாக்கல் போரையும் அற்பமானதாக்குகிறது.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் வெளியுறவு மந்திரி நத்தாலியா நிகோனோரோவா, ஜேர்மன் வலதுசாரி தீவிரவாதி மானுவல் ஓக்சென்ரைட்டரை வரவேற்கிறார் (photo: Screenshot from the official Twitter account of the VRD)

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் மற்றொரு கூட்டாளியான ஜேர்மன் தீவிர வலதுசாரி மாத இதழான Zuerst! (முதலில்!) இன் ஆசிரியர் மானுவல் ஓட்சென்ரைட்டர் ஆவார். அவர் தற்போது பேர்லினில் உள்ள அரசு வழக்குத்தொடுனரின் விசாரணையில் உள்ளார். ஏனெனில் அவர் உக்ரேனில் உள்ள ஹங்கேரிய சிறுபான்மையினரின் ஒரு நிறுவனம் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்த போலந்து பாசிச அமைப்பான “Falange” உடன் சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

பாசிச சக்திகளுடன் நேரடி உறவைப் பேணுகின்ற ஒரு முதலாளித்துவ ஆட்சியை சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் மகிமைப்படுத்துவது தற்செயலானது அல்ல. இது கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் நான்காவது அகிலத்தை மறுசீரமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் நோக்குநிலையிலிருந்து நேரடியாக உருவாகின்றது. ஏப்ரல் 2018 கூட்டணி மாநாட்டில், சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் மற்றும் பிற நான்காவது அகிலத்தை மறுசீரமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்கள், அவர்களின் விருப்பமான நான்காம் அகிலத்தை “மறுசீரமைத்தல்” ஸ்ராலினிச சக்திகளுடன் கூட்டணியில் தொடரப்படும் என்று வெளிப்படையாகக் கூறினர். குறிப்பிடத்தக்க வகையில், மாநாட்டில் பேசியவர்களில் ஒருவர் மாஸ்கோவிற்கான டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் முன்னாள் பிரதிநிதியான டார்ஜா மிட்டினா ஆவார்.

'புதிய அடித்தளம்' குறித்த மாநாட்டில் புவனர்ஸ் அயர்ஸில் ஏப்ரல் 2018 இல் சவாஸ் மிஷேல்-மேட்சாஸுக்கு அடுத்ததாக டார்ஜா மிட்டினா

ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (KPRF) பிரிந்த ஸ்ராலினிச சார்பு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் (OKP) ஒரு முன்னணி உறுப்பினரான மிட்டினா, ஸ்ராலினின் தீவிர அபிமானியாவார். தனது சொந்த அறிக்கைகளின்படி, அவர் ஆண்டுக்கு இரண்டு முறை சர்வாதிகாரியின் கல்லறையில் பூக்களை இடுகிறார். அவர் சமீபத்தில் ஒரு புதிய “ஸ்ராலின் மையத்தின்” தொடக்க விழாவில் பங்கேற்றார். அவரால் சுயமாக வெளியிடப்பட்ட படம் ஒன்று மிட்டினாவை ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகைக்கு முன்னால் “ஸ்ராலின் எங்களுடன் இருக்கிறார்” என்ற வாசகத்துடன் காட்டுகிறது. ஸ்ராலினின் படத்திற்கு முன்னால் அவரைக் காட்டும் மற்றொரு புகைப்படம், “அவரும் நானும்” என்ற குறிப்புடன் இருந்தது.

'ஸ்ராலின் எங்களுடன் இருக்கிறார்' என்ற வாசகத்துடன் ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகைக்கு முன் மிட்டினா

நான்காம் அகிலத்தை மறுசீரமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் ஸ்ராலினிசத்துடனான கூட்டணி என்பது நான்காம் அகிலத்தின் வரலாற்று ரீதியாக வேரூன்றிய வேலைத்திட்டம் மற்றும் அதன் கொள்கைகளை நிராகரித்தல் மற்றும் ஒட்டுமொத்த வரலாற்று முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் இன் கூட்டினரை பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி உட்பட நூறாயிரக்கணக்கான மார்க்சிஸ்டுகளின் உயிர்களை பறித்த ஸ்ராலினிச பயங்கரம் போன்ற கேள்விகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, ஏனெனில் அவர்கள் ஊழல் நிறைந்த அரசியல் கூட்டணிகளின் வழியில் நிற்கிறார்கள். இங்குள்ள மற்றும் உடனடியான குறுகிய கால அரசியல் உடன்பாடுகளை மட்டுமே கருத்தில் எடுப்பது என்ற கோட்பாட்டின் படி அவர்கள் இயங்குகின்றார்கள்.

முந்தைய கட்டுரையில் நான்காம் அகிலத்தை மறுசீரமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் இந்த 'சந்தர்ப்பவாத பேரம்பேசல்' குறித்து உலக சோசலிச வலைத் தளம் கருத்து தெரிவித்திருந்தது. இது 'துரோகங்கள் மற்றும் குற்றங்களில் மூழ்கியிருக்கும் ஸ்ராலினிச கட்சிகளுக்கு இது பயன்படுத்தப்படலாம் என்றால், தேசியவாத, மற்றும் பாசிச, வலதுசாரி அமைப்புகளும் உட்பட அனைத்து அமைப்புகளும் அதை ஏன் பயன்படுத்த முடியாது?” என்று குறிப்பிட்டது.

இந்த மதிப்பீடு சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் இனால் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு பெருமைப்படுத்தப்படுவதால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் அகிலத்தை மறுசீரமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் வரலாறு பற்றிய கருத்து எவ்வாறு முதலாளித்துவ நலன்களுக்காக போலி-இடது அமைப்புகளை பாசிச சக்திகளுடன் ஒன்றிணைக்கும் கூட்டணிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது என்பதற்கு டொனெட்ஸ்க் ஒரு உறுதியான எடுத்துக்காட்டாகும்.

இதுபோன்ற 'சிவப்பு-மண்ணிற கூட்டணிகளுக்கு' டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு ஒரு பிரதான எடுத்துக்காட்டாகும். பெப்ரவரி 2014 இல் உக்ரேனில் பாசிசவாதிகள் தலைமையிலான சதித்திட்டத்திற்குப் பின்னர், கிழக்கு உக்ரேனில் ஸ்ராலினிஸ்டுகள் ஏகாதிபத்திய தாக்குதலுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே உள்ள எதிர்ப்பை ஒரு தேசியவாத முட்டுச்சந்திற்கு இட்டுச்செல்வதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தனர்.

எடுத்துக்காட்டாக, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPDNR) தலைவர் போரிஸ் லிட்வினோவ், டொனெட்ஸ்க் மக்கள் குடியசின் சுதந்திர அறிவிப்பின் இணை ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். அவர் மே 16 முதல் ஜூலை 29, 2014 வரை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும், ஜூலை 23 முதல் நவம்பர் 14, 2014 வரை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உயர்குழுவின் தலைவராகவும் இருந்தார். நவம்பர் 2, 2014 அன்று டொன்பாஸில் நடந்த தேர்தலில், டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சார்சென்கோவின் வேட்புமனுவை ஆதரித்து, அவரது டொனெட்ஸ்க் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இணைந்தது. அவர்கள் இன்றுவரை இந்த நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இது புஷிலினின் கீழ் தற்போதைய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

போரிஸ் லிட்வினோவ் (Photo: Marlenuscom, CC BY-SA 4.0, via Wikimedia Commons)

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் வலதுசாரி முதலாளித்துவ தன்மை ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒத்துள்ளது. ஜூலை 2014 இல் ஒரு நேர்காணலில், 'தனியார் சொத்துடைமைக்கான உரிமையை மதிக்கும்' ஒரு மக்களின் ஜனநாயக அரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவாக லிட்வினோவ் பேசினார். உக்ரைனில் பணக்கார தன்னலக்குழுவின் உறுப்பினரான ரினாத் அகெம்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் பெருமையாகக் கூறினார். லிட்வினோவின் கூற்றுப்படி, அவர் “வணிகத்தின் கவலைகளைப் புரிந்துகொள்கிறார்” மற்றும் “அரசியல்வாதிகள் வணிக கட்டமைப்புகளில் தலையிடாது இருப்பது சிறந்தது”. அவர்கள் “கியேவில் அரசாங்கத்துடன் பொருளாதார உறவைப் பேணவும் தயாராக உள்ளனர். நாங்கள் அவர்களுக்காக அங்கு இருக்கிறோம்.' டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தோற்றத்தை 'புறக்கணிப்பது' 'வேடிக்கையானது'. அவர்கள் 'இடதுசாரி அல்லது வலதுசாரி என்ற முத்திரையை சுமக்கவில்லை' என்றார்.

சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் மற்றும் வலதுசாரி ஸ்ராலினிச சக்திகளுக்கு இடையிலான அரசியல் உறவுகள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீண்டு செல்கின்றன. ஏற்கனவே 1980 களில், சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் சோவியத் ஒன்றியத்தில் பெரெஸ்த்ரோய்கா மற்றும் கிளாஸ்னோஸ்ட்டின் கொள்கைகள் முதலாளித்துவ தனியார் சொத்துக்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, அதை உலக ஏகாதிபத்தியத்தின் கட்டமைப்புகளில் மீண்டும் ஒன்றிணைத்ததாக இருந்தபோதிலும் அரசியல் புரட்சியின் தலைவராக மிக்கையில் கோர்பச்சேவை பாராட்டினார். அப்போதிருந்து, அவரும் கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சியும் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்தனர்.

சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிட்டினாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அழைப்பின் பேரில், இந்த ஸ்ராலினிசவாதி 2007 இல் அக்டோபர் புரட்சியின் 90 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் பேசினார். ரஷ்யாவில் ஸ்ராலினிச குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடுகளில் சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் ஒரு வழக்கமான விருந்தினராகவும் உள்ளார். கடந்த ஆண்டு, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு இணையவழி மாநாட்டில் பங்கேற்றார்.

சவாஸ் மிஷேலும் டார்ஜா மிட்டினாவும் 2007 இல் ஒரு மேடையில்

சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் அரசியல் எப்போதுமே தேசியவாத சக்திகளை பிரபல்யப்படுத்தி காட்டுவதன் மூலம் குணாதிசயப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முன்னாள் கிரேக்கப் பிரிவான சர்வதேச தொழலாளர் குழுவின் தலைவராக இருந்த அவர், சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை நிராகரித்து, ஈரானில் உள்ள கொமெய்னி அரசாங்கம் போன்ற பிற்போக்குத்தன ஆட்சிகளை பெருமைப்படுத்தினார். 1985-86 உடைவின் போது பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத போக்கை ஆதரித்ததிலிருந்து, அவர் வெளிப்படையாக தேசியவாத, முதலாளித்துவ சார்பான கட்சிகளுடனான கூட்டணிகளை உருவாக்கியுள்ளார்.

கிரேக்கத்தில், சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் மற்றும் கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி ஆகியவை சமூக ஜனநாயக பாசோக், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலி இடதான சிரிசாவுடன் கூட்டணிகளை பலமுறை ஆதரித்தனர். ஜனவரி 2015 தேர்தல்களுக்கு முன்னர், கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி சிரிசாவை ஆதரித்ததுடன், “கிரேக்க கம்யூனிஸ் கட்சி, சிரிசா, அண்டார்ஸ்யாவிலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்ற இடது அமைப்புகள், அராஜகவாத மற்றும் சர்வாதிகார எதிர்ப்பு இயக்கங்களை கொண்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பிரபலமான அமைப்புகளின் சக்திவாய்ந்த ஐக்கிய முன்னணியாக… ஊக்குவித்தது. தேர்தல்களுக்குப் பின்னர், இந்த 'ஐக்கிய முன்னணி' தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்களின் (ANEL) நீட்டிக்கப்பட்டது. இந்த முன்னணி சிரிசாவின் தலைவரும் பின்னர் பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸை தொழிலாளர்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன ஆணையை சுமத்த அரசாங்கத்திற்கு கொண்டு வந்தது.

சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் இன் நெருங்கிய தனிப்பட்ட நண்பரும் மற்றும் அரசியல் ஒத்துழைப்பாளர்களில் ஒருவரான அலெக்ஸ் ஸ்ரைனர், 1978 இல் தொழிலாளர் கழகத்தை (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) விட்டுவிட்டு சோசலிசத்திற்கான போராட்டத்தை கைவிட்டார். சவாஸ் மிஷேல்-மேட்சாஸ் பின்னர் எழுதிருந்தபோன்று, ஸ்ரைனர் வேண்டுமென்றே ஒரு வசதியான நடுத்தர வர்க்க வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். அரசியல் ஈடுபாட்டிற்கு திரும்புவதை ஸ்ரைனர் சுருக்கமாக சிந்தித்தார். ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி ஸ்ரைனரின் அரசியல் கருத்துக்கள் அவர் நீண்டகாலமாக சோசலிச இயக்கத்தில் இல்லாதபோது கணிசமாக வலதிற்கு திசைதிருப்பப்பட்டதை உணர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சியில் அவரின் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பத்தை நிராகரித்தது. 2001 ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்குப் பின்னர், ஸ்ரைனர் பெருகிய முறையில் நிலையற்றவராக மாறி அனைத்துலகக் குழுவின் கடுமையான எதிர்ப்பாளராக மாறியபோது இந்த மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், ஸ்ரைனர் கியேவ் ஆட்சிக்கு 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தனது ஒப்புதல் முத்திரையை வழங்கி மற்றும் ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக அனைத்துலகக் குழுவைத் தாக்கினார்.

மே 20, 2014 அன்று ஸ்ரைனரின் வலைப்பதிவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “மார்க்சிஸ்டுகள் உக்ரேனைப் பிரிப்பதை எதிர்க்க வேண்டும். அதாவது ரஷ்யாவால் அல்லது போலந்து போன்ற பிற ‘ஈடுபாட்டாளர்கள்’ மற்றும் நேட்டோவில் அதன் ஏகாதிபத்திய பங்காளிகளால் எந்தவொரு அனைத்து மறுஇணைப்புகளையும் எதிர்க்கவேண்டும்” என எழுதினார்.

கியேவில் பாசிச சக்திகளை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய சக்திகளால் உக்ரேனை இணைப்பதற்காக வாஷிங்டனும் பேர்லினும் ஒரு சதித்திட்டத்தை ஏற்பாடு செய்த பின்னர் இந்த வரிகள் எழுதப்பட்டன. எவ்வாறாயினும், இணைப்பிற்கு எதிராக ஸ்ரைனர் தடம்புரண்டு, சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் கிரிமியாவை ரஷ்ய கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பதை தான் குறிப்பிட்டதாக கூறினார். இதற்கு நேர்மாறாக, கியேவில் உள்ள ஏகாதிபத்திய சார்பு ஆட்சியை 'ஒரு வெகுஜன இயக்கத்தினால் ஒரு அரசாங்கத்தை கவிழ்த்ததிலிருந்து' உருவானது என்ற அறிக்கையுடன் அவர் அதை பாதுகாத்தார்.

ஸ்ரைனருக்கும் சவாஸ் மிஷேல்-மேட்சாஸுக்கும் இடையிலான பிற்போக்குத்தனமான ஒத்துழைப்பு உக்ரேன் குறித்த அவர்களின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளால் கூட குறைந்தளவு தடுக்கப்படவில்லை. இந்த போலி-இடது வார்த்தையாடிகளின் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலுக்கான அடிப்படையாக இருப்பது அரசியல் கொள்கைகள் அல்ல, மாறாக தீவிர சந்தர்ப்பவாதமும் மற்றும் நடைமுறைவாதமாகும். ஸ்ரைனரைப் பொறுத்தவரையில், இது ஒரு காலத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது தோழர்களாக இருந்த மற்றும் அவர் பல தசாப்தங்களாக கைவிட்ட போராட்டத்தைத் தொடர்ந்த அனைவரின் மீதான தனிப்பட்ட ஒரு நோயுற்ற வெறுப்புடன் இணைந்துள்ளது.

Loading