வீடுகளில் இருந்து பாரியளவில் வெளியேற்றப்படுவதற்கான பொறுப்பை பைடென் கை கழுவுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் மில்லியன் கணக்கான வாடகை குடியிருப்பாளர்கள் வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும், அவர்களது உடமைகளை இழக்கும், மற்றும் வீடற்றுப்போகும் நிலைக்கு ஆளாகும் ஆபத்தை உருவாக்கும் வகையில் வீடுகளிலிருந்து வெளியேற்றங்கள் குறித்த கூட்டாட்சி தடையை முடிவுக்குக் கொண்டுவர அனுமதித்ததன் பின்னர், பைடெனின் வெள்ளை மாளிகை திங்கட்கிழமை பிற்பகல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அதன் நடவடிக்கைகளின் விளைவால் ஏற்பட்ட இந்த பரந்த சமூக துயரத்திற்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்க உறுதியாக மறுக்கிறது.

போஸ்டனில், ஜூலை 30, 2021, வெள்ளிக்கிழமை மாநில அவைக்கு வெளியே நடந்த செய்தியாளர் கூட்டத்தின் போது வீட்டு நீதிக் குழுக்களின் கூட்டணியைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களைக் காட்டுகிறார்கள். [Credit: AP Photo/Michael Dwyer]

“வெளியேற்றத்தை தடுக்கும் முயற்சிகள்” பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை, குறிப்பாக பல குடும்பங்கள் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்களாக இணைந்து வாழக்கூடிய வீடற்றவர்களுக்கான தங்குமிடங்கள், கூடார முகாம்கள் மற்றும் நெரிசல் மிக்க குடியிருப்புக்கள் ஊடாக காட்டுத்தீ போல பரவக்கூடிய “டெல்டா மாறுபாடு விரைந்து பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அவசர தேவை அதிகரித்து வருவதை குறிப்பிட்டு,” செயல்படுத்தப்படும் பாரிய மக்கள் வெளியேற்றத்தின் கொடூரமான விளைவை ஒப்புக்கொள்கிறது.

ஆனால், “அமெரிக்கர்கள் கட்டாய வெளியேற்றத்தினால் ஏற்படும் துன்பத்தை எதிர்கொள்ள விடாமல் தடுக்க ஜனாதிபதி பைடென் மேலும் நடவடிக்கை எடுத்து வருகிறார்,” என்று உறுதியளிக்கும் அதேவேளை, இந்த நெருக்கடி குறித்து ஏனைய மக்கள் எதையாவது செய்ய வேண்டும் எனக் கோருபவர்களின் பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. இந்த அறிக்கை அரசியல் இரட்டை வேடத்தால் மெல்லியதாக மூடிமறைக்கப்பட்ட அலட்சியத்தை நையாண்டி செய்வது போல உள்ளது.

பொது சுகாதார அடிப்படையிலும், மற்றும் மூன்று மாத கால அளவில் பலமுறை நீட்டிக்கப்பட்டதுமான கடந்த செப்டம்பரில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்ட வெளியேற்ற எதிர்ப்பு உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததற்கு கிடைத்த வலதுசாரி பெரும்பான்மை ஆதரவு பற்றி குறிப்பிட்டு, “வெளியேற்றங்களைத் தடுக்க மேலதிக நடவடிக்கைகளை எடுக்க ஏதேனும் பிற அதிகாரிகள் இருக்கிறார்களா,” என்பது பற்றி ஏனைய கூட்டாட்சி அமைப்புக்களுடன் விவாதிக்க பைடென் தனது சொந்த வெள்ளை மாளிகையை அறிவுறுத்துகிறார்.

தொற்றுநோயினால் மற்றும் அவர்களது வாடகையை செலுத்த முடியாத நிலைமையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட கூட்டாட்சித் திட்டமான அவசர வாடகை உதவி (Emergency Rental Assistance) வாடகைதாரர்களும் நில உரிமையாளர்களும் கிடைக்கும்வரை வெளியேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அவர் அழைப்பு விடுக்கிறார். இந்த திட்டத்திற்காக சுமார் 47 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் 3 பில்லியன் டாலர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களும், மற்றும் நில உரிமையாளர்களும் பின்வாங்குவதே இதற்கு காரணமாகும்.

இரு தரப்புக்களிலும் கணிசமான சமூக நலன்களை உள்ளடக்கிய நில உரிமையாளர்களுக்கு எதிராக வாடகைதாரர்களுக்கு உதவ ஏதாவது செய்வதற்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளிடையே நிலவும் அரசியல் எதிர்ப்பால் இது தூண்டப்பட்டதிலிருந்து, அது ஏன் செய்யப்படவேண்டும் என்பதற்கான எந்தவித காரணத்தையும் வழங்காமல் பின்வாங்குவதை நிறுத்த மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு பைடென் அழைப்பு விடுக்கிறார்.

“அடுத்த 30 நாட்களுக்கு வெளியேற்றத்தை நிறுத்த” நில உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பதோடு, “மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படவும், தொற்றுநோய் மற்றும் வெளியேற்ற அபாயத்தின் காரணமாக பணம் செலுத்துவதில் பின்தங்கியவர்களுக்கான வினியோக சேவைகளை வெட்டுவதை தவிர்க்கவும் பயன்பாட்டு சேவைவழங்குநர்களுக்கு” வேண்டுகோள் விடுக்கிறார்.

ஒரு பக்தியுள்ள மதவாதியான பைடென், சாத்தான் தனது நகங்களையும் வாலையும் வெட்டவும், சிங்கம் ஆட்டுக்குட்டியுடன் படுத்துக் கொள்ளவும் ஒரு வேண்டுகோளை சேர்க்கவில்லை, மாறாக நில உரிமையாளர்களும் மற்றும் பயன்பாட்டு நிறுவனங்களும் தங்களது தொழிலாள வர்க்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு இடைவேளை வழங்க கெஞ்சுவது போல அவர் அதைச் செய்யலாம்.

வாஷிங்டனில் உள்ள ஜனநாயகக் கட்சியினரிடையே சுட்டிக்காட்டப்படும் இந்த குழப்பமான பேச்சுடன் இணைந்து, வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வது, மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காலக்கெடுவான ஜூலை 31 ஆம் தேதிக்குள் சட்டத்தை நிறைவேற்றத் தவறியதற்கு தங்களது உள் கட்சி எதிர்ப்பாளர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரின் (House Democrats) பல்வேறு பிரிவுகள் கூறுகின்றனர்.

பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ், பிரதிநிதி கோரி புஷ் மற்றும் ஏனையோர் குற்றம் சாட்டுகையில், “மிதவாதிகளின்” குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு பிரிவு, அதாவது வலதுசாரி சபை ஜனநாயகவாதிகள் வெளியேற்ற தடையை அக்டோபர் 18 வரையிலும் நீட்டிக்க வெள்ளிக்கிழமை காலை முன்வைக்கப்பட்ட மசோதாவை ஆதரிக்க மறுத்துவிட்டனர். அவர்களில் சிலர் வாக்களிப்பதற்கு வருவதை அனுமதிப்பதற்கு மாறாக ஆகஸ்ட் மாத காங்கிரஸ் இடைக்கால ஓய்வின் போது அவர்களது மாவட்டங்களுக்குத் திரும்பிச் செல்லும்படி மிரட்டப்பட்டனர்.

ஆனால் ஒகாசியோ-கோர்ட்டெஸ், புஷ் மற்றும் ஜனநாயகக் கூட்டமைப்பின் ஏனைய “இடதுசாரியினர்” எனப்படுவோர், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு வாகனமாக ஏகாதிபத்தியம் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இந்த வலதுசாரி கட்சியின் நம்பகத்தன்மையை தாங்கிப்பிடிக்க தங்களது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இவர்கள், தங்களது சகாக்கள், வீடற்றவர்களாக்கப்படுவது குறித்து வாடகைதாரர்களுக்கு செய்வதை விட நில உரிமையாளர்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் கண்டு தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் இருந்தனர்.

சபை சபாநாயகர் நான்சி பெலோசியும், ஜனநாயக கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஏனையோரும், காங்கிரஸின் நடவடிக்கை இல்லாமல் தடையை நீட்டிக்க முடியாது என அறிவிக்க கடந்த வியாழக்கிழமை வரை வெள்ளை மாளிகை காத்திருந்ததற்கு குற்றம்சாட்டினர். ஆனால் ஜூலை 31 காலக்கெடு பற்றி வாஷிங்டன் முழுவதும் நன்கு அறியப்பட்டிருந்தது, மேலும் முட்டுக்கட்டை ஆட்சியை மாற்றுவதற்கான ஜனநாயகக் கட்சியினரின் மறுப்பு ஒருபுறமிருக்க, எந்தவொரு செயலையும் தடுப்பதில் செனட் முட்டுக்கட்டைகளின் தவிர்க்க முடியாத தன்மையும் அறியப்பட்டிருந்தது.

உண்மை என்னவென்றால், நில உரிமையாளர்களின் இலாப நலன்களை பாதிக்கும் செயல்கள் ஒருபுறம் இருக்க, சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லை என்பதால் வெளியேற்ற தடைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது. நில உரிமையாளர்களில் ஒரு சில சொத்துக்களைக் கொண்ட “mom-and-pop” எனப்படும் ஒரு குடும்பத்தினை சேர்ந்த உரிமையாளர்கள் என்றழைக்கப்படுபவர்கள் மட்டும் உட்பட மாட்டார்கள், மாறாக நில-வீட்டு சாம்ராஜ்யங்களை கட்டுப்படுத்தும் பெரும் நிதி நிறுவனங்களும் அடங்கும்.

இப்போது அதன் விளைவுகள் முதலில் சீரற்றதாக உணரப்படும். வெளியேற்றங்கள் குறித்து மாநில மற்றும் உள்ளூர் கட்டுப்பாடுகளில் கூட்டுவேலை இருப்பதால், தொற்றுநோயின் போது பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன்படி, நியூயோர்க், நியூ ஜெர்சி, மேரிலாந்து, கலிபோர்னியா, ஓரேகான் மற்றும் வாஷிங்டனில் உள்ள வாடகைதாரர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பெரும்பாலும் சில மாதங்களுக்கு சில வரையறுக்கப்பட்ட பாதுகாப்புக்களைக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பல பகுதிகளில், ஒருவேளை இந்த வாரத்திலேயே கூட, வெளியேற்றங்களின் அலை உடனடியாகத் தொடங்கும். உள்ளூர் கணக்கெடுப்பின்படி, டெட்ராய்டில் 600 குடும்பங்களை வெளியேற்ற அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செயின்ட் லூயிஸில் உள்ள, ஷெரீஃப் அலுவலகம், இறுதி கட்டத்தை எட்டிவிட்ட 126 வெளியேற்ற உத்தரவுகளை நிறைவேற்ற அது தயாராகி வருவதாகவும், இந்த மிருகத்தனமான பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுக்களில் ஊழியர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் கூறியது. ஷெரீஃப் வெர்னான் பெட்ஸ் தனது அலுவலகம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தினமும் 30 வெளியேற்றங்களை அமல்படுத்தத் தொடங்கும் என்று கூறினார். மேலும் நிலுவைப் பணிகளை “முடிக்க” போவதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே ஏல நேரத்தை அறிவித்த நில உரிமையாளர்களால் நூற்றுக்கணக்கான புதிய வெளியேற்றக் கோரிக்கைகள் பதிவு செய்யப்படலாம் எனவும் அவர் எதிர்பார்க்கிறார். மேலும் அவர், “தடைக்காலம் முடிந்தவுடன், ‘கேட்டி கதவை மூடு’ என்று அது இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கணக்கெடுப்பின்படி, மிசிசிப்பி, தெற்கு கரோலினா மற்றும் ஜியோர்ஜியாவில் சராசரிக்கும் அதிகமான வாடகைக் கடன் சுமையுடன் தென் மாநிலங்களிலுள்ள வாடகைதாரர்கள் மோசமான வாய்ப்புகளையே கொண்டுள்ளனர். மற்றும் மிசிசிப்பி வாடகைதாரர்கள் ஒரு வெளியேற்ற வழக்கை இழந்து, அதே நாளில் வீதிக்கு வரக்கூடிய மிகவும் பிற்போக்குத்தனமான சட்டங்கள் அங்கு உள்ளன. அதேவேளை ஆர்கன்சாஸ் நில உரிமையாளர்கள் வாடகை செலுத்தாத வாடகைதாரர்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முனையலாம்.

Loading