ஆப்கானிஸ்தான் அகதிகள் ஐரோப்பிய ஆட்சியாளர்களிடமிருந்து எல்லை சுவர்களையும் முள்வேலியையும் எதிர்கொள்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 15 அன்று காபூல் தலிபான்களிடம் வீழ்ந்ததிலிருந்து, சர்வதேச அளவில் அரசுகள் நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளின் தலைவிதியின் மீது இடைவிடாத கைவரிசையில் ஈடுபட்டன. ஆப்கானிஸ்தான் உட்பட கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த போர்கள், கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக மாற்றி, ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்தவை இதே அரசாங்கங்கள்தான்.

ஏகாதிபத்திய இராணுவப் படைகள் இறுதியாக இந்த மாதம் புறப்பட்ட, 20 வருடப் போரரானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டில் 550,000 பேர்களை இடம்பெயர வைத்தது, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த விதியை சந்தித்தவர்கள் கிட்டத்தட்ட 3 மில்லியன் ஆப்கானியர்கள என்பதையும் இத்துடன் சேர்க்க வேண்டும்.

இப்போது தப்பிக்க விரும்பும் ஆக்கிரமிப்புடன் பணிபுரிந்தவர்கள் மீது முதலைக் கண்ணீர் வடித்ததைப் பொறுத்தவரை, தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் இருந்துலிருந்து ஐரோப்பாவின் அரசாங்கங்கள் சில ஆயிரத்துக்கும் மேல் அகதிகளை எடுக்க மறுத்துவிட்டன.

இந்த மே 21, 2021 இல், கோப்பு புகைப்படம், கிரேக்க-துருக்கி எல்லை, கிரீஸ், போரோஸ் கிராமத்திற்கு அருகில் எவ்ரோஸ் ஆற்றில் எஃகு சுவருடன் காவல் துறையினர் ரோந்து சென்றனர். (AP Photo/Giannis Papanikos, File)

2015 ஆம் ஆண்டில், சிரியப் போரிலிருந்து சுமார் 1 மில்லியன் அகதிகளை ஒரு தீர்வுத் திட்டத்தில் அனுமதிக்க நாட்டின் எல்லைகளைத் திறக்கும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கொள்கைக்கு எதிராக அதி- வலதுசாரி அரசியல் சக்திகள் அணிதிரண்டன. இந்த முறை அத்தகைய கொள்கை இருக்கவில்லை, ஐரோப்பிய யூனியன் (EU) மற்றும் அதன் உறுப்பு நாடுகள் ஐரோப்பிய கோட்டையின் எல்லைகளை இறுக்குவதில் கவனம் செலுத்துகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, சுலோவேனிய பிரதமர் ஜானெஸ் ஜான்சா, 'ஐரோப்பிய ஒன்றியம் ஆப்கானிஸ்தானுக்கு எந்த ஐரோப்பிய குடியேற்ற நடைபாதையையும் திறக்காது' என்று ட்வீட் செய்து, 2015 ஆம் ஆண்டின் 'மூலோபாய தவறு' மீண்டும் நடக்காது என்று குறிப்பிட்டுள்ளார். ஆறுமாத சுழற்சிமுறையிலான ஐரோப்பிய ஜனாதிபதி பதவியை தற்போது நிர்வகிப்பது சுலோவேனியா. ஜான்சா, முன்னாள் ஸ்ராலினிஸ்ட் மற்றும் வலதுசாரி ஆர்வலர், பாசிச ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

ஜான்சாவின் அறிக்கையை ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சசோலி எதிர்த்தார், ஆனால் அது ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை துல்லியமாக பிரதிபலிக்கிறது. காபூலின் வீழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் எல்வா ஜூலியா மார்கரெட்டா ஜோஹன்சன் உள்துறை அமைச்சர்களின் அசாதாரண கூட்டத்திலிருந்து அறிவித்தார், “மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளுக்கு வரும் வரை நாங்கள் காத்திருக்கக் கூடாது. இது ஒரு தீர்வு அல்ல. கடத்தல்காரர்களால் நடத்தப்படும் பாதுகாப்பற்ற, ஒழுங்கற்ற மற்றும் கட்டுப்பாடற்ற வழிகள் மூலம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி செல்வதை நாங்கள் தடுக்க வேண்டும்.”

பிரச்சனை ஐரோப்பாவிற்கானதல்ல, ஏனெனில் 'கணிசமான எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் குடிமக்கள் ஏற்கனவே அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர் ... நாங்கள் எங்கள் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் தொடர்வோம் மற்றும் பாகிஸ்தான், ஈரான் மற்றும் தஜிகிஸ்தான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தருக்கி போன்ற பிற நாடுகளில் உள்ள புரவலர் சமூகங்களுடன் எங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவோம்..'

எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரும் ஒரே ஒரு ஆப்கானிஸ்தான் அகதியை அழைத்துச் செல்லவும் உறுதியான திட்டங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. பெரும் வல்லரசுகள் தங்கள் இராணுவப் படைகளை மேலும் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் கைப்பாவை அரசாங்கத்தை ஆதரிக்க உதவிய சில ஆயிரம் பொதுமக்களை வெளியேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன.

தனக்குப் பின்னர், பின் அதிபராக மேர்க்கெல் ஆதரவளித்த அவரது கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தலைவர் ஆர்மின் லாஷெட், காபூல் வீழ்ச்சியடைந்தவுடன், 'சிரிய உள்நாட்டுப் போர் தொடர்பான தவறுகள் மீண்டும் செய்யப்படக்கூடாது ... 2015 மீண்டும் நடக்காது' என்று டுவீட்டுரை செய்தார். ஒரு நாள் கழித்து, அதி-வலது முக்கிய எதிர்க் கட்சியான ஜேர்மனிக்கான மாற்று (Alternative for Germany) கட்சியின் தலைவர் ஆலிஸ் வைடெல் அறிவித்தார், “2015 ஐ மீண்டும் நிகழ அனுமதிக்கக் கூடாது. உண்மையான அகதிகள் முடிந்தால் அவர்களின் சொந்தப் பகுதியில் கட்டாயம் உதவியளிக்கப்பட வேண்டும்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார், பிரான்ஸ் 'புலம்பெயர்ந்தோரின் அலைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மற்றும் எதிர்கொள்ள வேண்டியிருந்த்து' என்று தனது முக்கிய கவலையை அறிவித்தார். பாரிஸ் 'ஒரு வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றுபட்ட பதிலை தாமதமின்றி கட்டியெழுப்புவதற்கான முன்முயற்சியை வலியுறுத்துகிறது, இதில் ஒழுங்கற்ற ஓட்டங்களுக்கு எதிரான போராட்டம் ... மற்றும் பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் போன்ற போக்குவரத்து மற்றும் புரவலர் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.'

ஆஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் கூர்ஸ் ஞாயிற்றுக்கிழமை கூறினார், 'நாங்கள் இப்போது தானாக முன்வந்து அதிகமான நபர்களை ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்கு எதிராக அவர் தெளிவாக இருந்தார் -அது எனது அதிபர் பதவியிலும் நடக்காது.' அதற்குப் பதிலாக, 'நாங்கள் முடிந்தவரை நாடு கடத்த வேண்டும்.'

இங்கிலாந்து தனது ஆப்கானிஸ்தான் இடமாற்றங்கள் மற்றும் உதவி கொள்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்துப் படைகள் அல்லது அதிகாரிகளுடன் ஒத்துழைத்தவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்து பிரிட்டன் இந்த ஆண்டு வெறும் 5,000 ஆப்கானிஸ்தான் மக்களை எடுத்துக் கொள்ளும். இவர்கள் 'ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் முயற்சிகளை ஆதரித்த ஆப்கானியர்கள், எடுத்துக்காட்டாக மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள்.' நுழைய முன்னுரிமைகளாக பட்டியலிடப்பட்டவர்களில் 'ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள்' உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 20,000 பேர் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

38 மில்லியன் மக்கள்தொகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 10,000 பேரை மட்டுமே அழைத்துச் செல்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆஸ்திரேலியா 3,000 ஐ எடுக்கும், ஏற்கனவே இருக்கும் திட்டத்தின் கீழ் அவர்கள் ஏற்கனவே உறுதியளித்தனர்.

இப்போது தடைசெய்யப்பட்ட 2015 இன் கொள்கை 2016 இல் ஜேர்மனியால் வேகமாக கைவிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக, மேர்க்கெல் அந்த ஆண்டு கிரேக்கத்தின் போலி-இடது சிரிசா அரசாங்கம் மற்றும் துருக்கியுடன் ஐரோப்பாவின் தெற்கு எல்லையில் புகலிடம் கோருவதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த இழிவான ஒப்பந்தத்தின் கீழ் —புகலிடத்திற்கான உரிமையை திறம்பட அகற்றிய சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்— ஐரோப்பிய ஒன்றியம் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல துருக்கியின் சர்வாதிகார ஆட்சிக்கு பில்லியன்களை செலுத்துகிறது. ஏஜியன் கடல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கரையை அடைவதற்கு கிரீஸ் துருக்கிக்கு அகதிகளை பெருமளவில் நாடு கடத்துகிறது.

Greek Migration Minister Notis Mitarachi announced as the Taliban came to power, “Our country will not be a gateway to Europe for illegal Afghan migrants.”

கிரேக்க குடியேற்ற அமைச்சர் நோடிஸ் மிதாராச்சி, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன், 'சட்டவிரோத ஆப்கானிய புலம்பெயரந்தோர் ஐரோப்பாவிற்குச் செல்ல எங்கள் நாடு நுழைவாயிலாக இருக்காது' என்று அறிவித்தார்.

தங்களது போர்களில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் மோசமான சுருங்கக் கூறும் விதமாக, கிரீஸ் கடந்த வெள்ளிக்கிழமை துருக்கியுடனான தனது வடக்கு எல்லையில் ஒரு பெரிய 40 கிமீ (25 மைல்) எஃகு வேலி மற்றும் புதிய மின்னணு கண்காணிப்பு அமைப்புடன் சீல் வைத்ததை அறிவித்தது. சுவரை முடிப்பதற்கான பணிகள், ஆரம்பத்தில் 2012 இல் தொடங்கி, சிரிசாவால் அதிகாரத்தில் இருந்தபோது (2015-2019) தொடர்ந்தது, ஆப்கானிஸ்தானில் நடந்த நிகழ்வுகள் காரணமாக விரைந்து சென்றது. கடந்த வெள்ளிக்கிழமை, கிரேக்கத்தின் புதிய ஜனநாயக அரசாங்கத்தின் குடிமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகாலிஸ் கிறிசோகோயிடிஸ் எல்லைச் சுவரை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவரோடு எவ்ரோஸ் பகுதிக்குச் சென்றார். காபூலின் வீழ்ச்சி 'புலம்பெயர்வோர் வரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது ... சாத்தியமான தாக்கத்திற்காக நாங்கள் செயலற்ற வகையில் காத்திருக்க முடியாது ... எங்கள் எல்லைகள் பாதுகாப்பாகவும் மீற முடியாததாகவும் இருக்கும்.'

அகதிகளுக்கு ஒவ்வொரு ஒற்றை நிலப் பாதையும் வேலிகள் மற்றும் முள்வேலிகள் மூலமும் ஒவ்வொரு கடல் வழியும் ரோந்து கப்பல்கள் மூலம் முறையாக மூடப்படுகிறது.

துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் துருக்கி 'ஐரோப்பாவின் புலம்பெயர்ந்தோர் சேமிப்பு அலகு' ஆகாது என்று எச்சரித்தார். கிழக்கு எல்லை மாகாணமான வான் கவர்னர் மெஹ்மத் எமின் பில்மேஸ் கூறினார், 'எங்கள் எல்லைகள் கடந்து செல்ல முடியாதவை என்பதை உலகம் முழுவதும் காட்ட விரும்புகிறோம் ... ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த அலை இல்லை என்பதே எங்கள் மிகப்பெரிய நம்பிக்கை.'

திங்களன்று, அங்காரா ஈரானுடனான அதன் மூன்று மீட்டர் உயர எல்லைச் சுவரில் இந்த ஆண்டின் இறுதியில் மேலும் 64 கி.மீ சேர்க்கப்போவதாக அறிவித்தது. 2017 ல் தொடங்கப்பட்ட சுவர், ஈரான் முழுவதும் பல வார கால நடைப் பயணத்தை மேற்கொண்டு துருக்கிக்குள் அகதிகள் நுழைவதைத் தடுக்கிறது. மீதமுள்ள 560 கிமீ எல்லைகள் 'பள்ளங்கள், கம்பி மற்றும் பாதுகாப்பு ரோந்து மூலம் 24 மணிநேரமும்' பலப்படுத்தப்படும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் இக்கோளில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட குடிவரவு எதிர்ப்பு கொள்கைகளில் ஒன்றை அமல்படுத்தி வருகிறார், அதில் பெரும்பாலானவை கிரேக்கத்தில் விதிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தன முறையைக் மாதிரியாகக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள் பத்தியில், இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ், ஆப்கானிஸ்தானுக்கு அண்டை நாடுகளில் அகதிகளாக தப்பிக்கிறவர்கள் உள்ள நாடுகளில் ஜோன்சன் அரசாங்கம் 'தொடர் செயலாக்க மையங்களை' அமைக்கும் என்று எழுதினார் ... அவர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கான உரிமையை நிறுவ முடிந்தால், அவர்கள் பிரிட்டனுக்கு பறப்பார்கள்.”

ஞாயிற்றுக்கிழமை, துருக்கி தனது பிராந்தியத்தில் தனது வெளியுறவு அமைச்சகத்தின் எச்சரிக்கையுடன் அத்தகைய மையத்தை அனுமதிப்பதை மறுத்தது, 'இது தொடர்பாக இது போன்ற கோரிக்கை வைக்கப்பட்டாலும் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.'

Loading