கருவூல செயலாளர் யெல்லன் கடன் உச்சவரம்பு குறித்து மற்றொரு எச்சரிக்கையை வெளியிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க கருவூல செயலாளர் ஜனட் யெல்லன் அடுத்த வாரம் இந்த விவகாரத்தில் வாக்களிக்கும் போது, கடன் உச்சவரம்பை உயர்த்துமாறு காங்கிரஸிற்கான தனது அழைப்பை புதுப்பித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் இது 'பொருளாதார பேரழிவை' உருவாக்கும் என எச்சரித்தார்.

கருவூல செயலாளர் ஜனட் யெல்லன் இத்தாலியின் வெனிஸில் நடந்த G-20 பொருளாதார, நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகிறார்.(AP Photo/Luca Bruno)

இந்த மாத தொடக்கத்தில், யெல்லன் இந்த விவகாரத்தில் இருதரப்பு உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்து காங்கிரசுக்கு ஒரு கடிதம் எழுதியதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் கருத்துக்களத்திலும் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் நிதியங்களின் முக்கிய குரலான WSJ இன் பக்கங்களில் ஒரு கட்டுரையை எழுத வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தது, அதுதொடர்பாக பைடென் நிர்வாகத்தில் கவனத்திற்கெடுக்கப்படும் தீவிரத்தன்மையைக் காட்டுகின்றது.

தனது சமீபத்திய கருத்தில், உச்சவரம்பு அக்டோபரில் எப்போதாவது உயர்த்தப்படாவிட்டால், கருவூலத்துறையிடம் எப்போது பணம் தீர்ந்துவிடும் என்று சொல்ல முடியாது, மத்திய அரசு அதன் செலுத்துமதிகளை செலுத்த இயலாதுபோகலாம் என்று யெல்லன் தனது எச்சரிக்கையை மீண்டும் கூறினார்.

'அமெரிக்கா எப்போதும் தனது செலுத்துமதிகளை சரியான நேரத்தில் செலுத்தியது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் இரு கட்சிகளின் கருவூல அதிகாரிகளிடையே உள்ள பெரும் ஒருமித்த கருத்து என்னவென்றால், கடன் வரம்பை உயர்த்தத் தவறினால் பரவலான பொருளாதார பேரழிவை உருவாக்கும்' என்று அவர் எழுதினார்.

1960 ஆம் ஆண்டிலிருந்து கடன் உச்சவரம்பு சுமார் 80 முறை உயர்த்தப்பட்டதாக யெல்லன் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் இது பொதுவாக குறிப்பிடத்தக்க விதிவிலக்கான 2011 இல் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் 'கடன் மட்டுப்படுத்தல்' 'அமெரிக்காவை நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளியது தவிர ஏனைய இது எவ்விதமான மோதல்களும் இல்லாது செய்யப்பட்டது' என்றார்.

காங்கிரசின் சூழ்நிலையைப் பொறுத்தவரை, குடியரசுக் கட்சியின் பெரிய பிரிவுகள் ஜனவரி 6 ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்புக்கு உதவிய 'திருடப்பட்ட தேர்தல்' என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த நெருக்கடியை விட, கடன் பிரச்சினை தொடர்பான நெருக்கடி வெடிக்கக்கூடும் என்று யெல்லன் நம்புகிறார்.

நிதிய மூலதனத்தின் பிரிவுகள் நேரடியாகத் தலையிடுமாறு தெளிவாக வேண்டுகோள் விடுத்த யெல்லன், அமெரிக்கா ஒருபோதும் கடன்களை செலுத்தாமல் விடவில்லை என்றும் அவ்வாறு செய்வது 'தொடரும் பொது சுகாதார அவசரநிலையை மேலும் மோசமாக்குவதுடன், ஒரு வரலாற்றுரீதியான நிதி நெருக்கடியை துரிதப்படுத்தலாம்' என்றும் கூறினார்.

செலுத்தாமையினால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும், பங்குச் சந்தையில் செங்குத்தான வீழ்ச்சி மற்றும் பிற நிதி குழப்பங்கள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். 'எங்கள் தற்போதைய பொருளாதார மீட்பு மந்தநிலைக்கு திரும்பும், பில்லியன் டாலர் அபிவிருத்தியும் மற்றும் மில்லியன் கணக்கான வேலைகளும் இழக்கப்படும்.'

28 டிரில்லியன் டாலர் கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து அடுத்த வாரம் காங்கிரஸ் வாக்களிக்கும். செனட் குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கோனெல் மற்றும் காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர் தாங்கள் எதிர்க்கும் பைடென் நிர்வாகத்தின் செலவுகளுக்கு நிதியளிப்பதற்கான மசோதாவுக்கு வாக்களிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளனர். உச்சவரம்பை உயர்த்தும் ஒரு தனி மசோதாவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று 46 குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

யெல்லன் காங்கிரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி கூடுதல் செலவுகளுக்கு வசதியளிப்பதல்ல மாறாக ஏற்கெனவே இருக்கும் கொடுக்குமதிகளை சமாளிப்பதற்கே உச்சவரம்பு அதிகரிப்பு பயன்படும் என்பதை தனது கருத்துக்கள கட்டுரையில் மீண்டும் குறிப்பிட்டார். 'மற்றும் பைடென் நிர்வாகம் எந்த செலவிற்கும் அங்கீகாரம் அளிக்காதபோதும், அதில் 97 விகிதமானவை கடந்த காங்கிரஸாலும் ஜனாதிபதி நிர்வாகத்தாலும் ஏற்படுத்தப்பட்டவை என்பதால் நாங்கள் இப்போதே கடன் உச்சவரம்பை கவனிக்கவேண்டியுள்ளது'.

ஏனைய எல்லா பிரச்சனைகளையும் போலவே, குறிப்பாக பாசிச சதி முயற்சியில், முந்தைய விதிமுறைகளை மதிக்க ஜனநாயகக் கட்சியினர், தங்கள் 'குடியரசுக் கட்சி சகாக்கள்' என்று அழைப்பவர்களிடம் யெல்லன் முறையிடுகிறார். மற்றும் 'அமெரிக்காவின் கொடுக்குமதிகளை செலுத்துவது' ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருக்கக்கூடாது என்றார். முந்தைய நிர்வாகத்தின் போது, டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில், 'காங்கிரஸ் இருகட்சிகளின் ஆதரவு மற்றும் அதிக ஆரவாரம் இல்லாமல் கடன் உச்சவரம்பை மூன்று முறை நிறுத்தியது. இந்த காரணத்திற்காக, எங்கள் சட்டமியற்றுபவர்கள் மீண்டும் கடன் உச்சவரம்பை பற்றி கவனம் செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன், நாம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இங்கே ஒரு வெளிப்படையான முரண்பாடு உள்ளது. 'அதிக ஆரவாரம் இல்லாமல்' பிரச்சினையை தீர்க்க முடியும் என்று யெல்லன் உறுதியாக நம்பியிருந்தால், கடந்த வாரத்தில் இரண்டு முறை இந்த பிரச்சினையை பற்றி பகிரங்கமாக எழுதுவதும் மற்றும் அது தீர்க்கப்படாவிட்டால் 'பேரழிவு' என சுட்டிக்காட்டுவதும் அவசியமில்லை.

கடைசி நிமிட தீர்வு பற்றி யெல்லன் எச்சரித்தார். 'மாதங்கள் அல்லது நிமிடங்களில் செலுத்தாமையை தவிர்ப்பதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது' என்று அவர் எழுதினார். 2011 ல் இந்த மோதல் அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டை குறைப்பதற்கு வழிவகுத்தது. அங்கு 'கடுமையான பங்குச் சந்தை வீழ்ச்சி' ஏற்பட்டது, இது 'மாதக்கணக்கில் நீடித்த நிதி-சந்தை சீர்குலைவுகளுக்கும்' வழிவகுத்தது.

கடைசி நிமிட தீர்வு பற்றி யெல்லன் எச்சரித்தார். 'மாதங்கள் அல்லது நிமிடங்களில் இயல்புநிலையைத் தவிர்ப்பதற்கு ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது,' என்று அவர் எழுதினார். 2011 ல் இந்த மோதல் அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டை குறைப்பதற்கு வழிவகுத்தது, 'கடுமையான பங்குச் சந்தை வீழ்ச்சி' ஏற்பட்டது, இது 'மாதக்கணக்கில் நீடித்த நிதி-சந்தை சீர்குலைவுகளுக்கு' வழிவகுத்தது.

மத்திய வங்கியின் கொள்கை உருவாக்கும் குழு இந்த வாரம் இரண்டு நாட்கள் கூடும். அங்கு முக்கிய விடயம் நேரம் மற்றும் அதன் சொத்து வாங்கும் திட்டத்தின் 'வெட்டுக்களின்' அளவு பற்றியதாக இருக்கும். தற்போது ஒரு மாதத்திற்கு 120 பில்லியன் டாலர்களில் இத்திட்டம் இயங்குகிறது. இது மார்ச் 2020 இல் தொற்றுநோயின் தொடக்கத்தில் நிதி சந்தை உருகுவதற்கு பிரதிபலிப்பாக தொடங்கப்பட்டது.

சந்தை பெருமளவில் மத்திய வங்கியிலிருந்து வரும் பணப் பரிமாற்றத்தில் தங்கியிருப்பதால், திடீரென வெட்டவேண்டும் என்று பேசுபவர்களுக்கும், இத்தகைய நடவடிக்கை திடீரென ஏற்பட்டால் அது நிதி நெருக்கடியைத் தூண்டும் என்று பயப்படுபவர்களுக்கும் இடையே பிளவுகள் உள்ளன.

மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பௌல் இரண்டு முகாம்களுக்கு இடையில் சமநிலைப்படுத்த முயன்று வருகிறார். இந்த ஆண்டின் இறுதிக்குள் 'வெட்டுக்கள்' சொத்து வாங்குதலுக்கான நடவடிக்கை 'பொருத்தமானதாக' இருக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் மத்திய வங்கி அதன் தற்போதைய பூஜ்ஜியமாக உள்ள அதன் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்த தயாராக உள்ளது என்பதற்கான சமிக்ஞையாக இதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

முன்னாள் கருவூல செயலாளர் லோரன்ஸ் சம்மர்ஸ் போன்ற வர்ணனையாளர்கள், மத்திய வங்கியின் தற்போதைய வட்டி குறைந்த பணக் கொள்கை 'தேக்கவீக்கநிலை' என்ற சூழ்நிலையை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மந்தமாகும் பொருளாதாரத்தின் மத்தியில் விலைகள் உயரும்.

நிதி ஆய்வாளர் மொஹமட் எல்-எரியன் நேற்று ப்ளூம்பேர்க்கில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துரையில் மத்திய வங்கியின் தற்போதைய கொள்கைகளின் ஆபத்துகள் பற்றிய தனது முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் கூறினார். அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சொத்து வாங்குவதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மத்திய வங்கி உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், இரண்டாவது பாதியில் படிப்படியாக வட்டி விகிதங்களை உயர்த்துவதைக் சைகை காட்ட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஆனால் 'மத்திய வங்கி இணக்கமற்ற நிலைப்பாட்டை எடுப்பது சாத்தியம் என்ற முடிவிற்கு வந்த அவர், மத்திய வங்கியின் எளிதில் பணமாக மாற்றக்கூடிய தன்மை சொத்து மதிப்புகளை அதிவிரைவாக விலை ஏற்றியுள்ளது' என்ற காரணமாக 'அடிப்படை பொருளாதார அடித்தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு இட்டுசெல்லும்” என்றார்.

கவர்ச்சிகரமானது போல் இது தெரிந்தாலும், அவர் தொடர்ந்தார், இது குறுகிய நோக்குள்ளது. ஏனெனில் இது நிதி மற்றும் பொருளாதார அபாயங்களை அதிகரிக்க அனுமதித்துள்ளதுடன் மற்றும் மத்திய வங்கி 'சடுதியாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைக் கண்டால், ஒரு ஒழுங்கான முறையில் செய்வதற்கான காலக்கேடு இறுக்கமாக இருப்பது நிரூபிக்கப்படலாம்' என்றார்.

Loading