இங்கிலாந்தின் தாயார் லீசா டியஸ் இரண்டாவது பள்ளி பகிஸ்கரிப்பிற்கான தனது அழைப்பைப் பற்றி பேசுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

SafeEdForAll உறுப்பினர் லீசா டயஸ் அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை இரண்டாவது பள்ளி பகிஸ்கரிப்பிற்கான தனது அழைப்பு குறித்து உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினார்.

'அக்டோபர் 1 அன்று முதல் பள்ளி பகிஸ்கரிப்பு, நான் எதிர்பார்த்ததை விட கூடிய பிரதிபலிப்பைப் பெற்றது. அதற்கான பிரமாண்டமான வடிவமைப்புகள் என்னிடம் இல்லை. நான் அதில் மிக முக்கியமானதாக கருதுவது அது ஒரு உலகளாவிய முயற்சியாக இருந்ததே'.

ஒளிப்பதிவு செய்திகள் உட்பட இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆதரவு வந்தது. மேலும் உலக சோசலிச வலைத் தளத்தால் ஒரு உலகளாவிய இணைய வழி பகிஸ்கரிப்பில் இவை சேகரிக்கப்பட்டுள்ளன.

லீசா டயஸ் தனது குழந்தைகளுடன்

லீசா தொடர்ந்து 'அப்போதிருந்து நாங்கள் எப்போது மீண்டும் பகிஸ்கரிப்பு செய்வோம் என்று கேட்டார்கள். நாங்கள் அவற்றை வாரந்தோறும் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆசிரியர்களாக இருக்கும் எனது நண்பர்கள் அவர்கள் பள்ளிகளில் இப்போது நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை விவரிக்க என்னைத் தொடர்பு கொண்டு அவர்களுடைய கதைகளைச் சொல்கிறார்கள்.

'ஒவ்வொரு 14 மேல்நிலைப் பள்ளிக் குழந்தைகளிலும் ஒருவருக்கு கோவிட் இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம். இன்னும் 12-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட இந்த வயதினர்கள் விதிவிலக்காகவே உள்ளனர். தடுப்பூசி போடப்படுவது தொடர்ந்து தாமதமாகிறது. கோவிட் பள்ளிகளை கிழித்தெறிந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் தொற்றுநோயைப் பெறுவதற்கான வேண்டுமென்றே ஒரு திட்டம் இப்போது அவர்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால்தான், எதிர்வரும் அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை மற்றொரு பகிஸ்கரிப்பை நான் முன்மொழிந்தேன்.

லீசா 'எனது குழந்தைகள் பள்ளியினதும் மற்றும் உள்ளூர் நகரகசபையின் பதிலுக்காக காத்திருக்கிறேன். ஏனென்றால் Good Law Project மாநில கல்வி செயலாளர் நதிம் ஸஹாவிக்கு ஒரு பொதுவான முன்-நடவடிக்கை நெறிமுறை கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் அல்லது அது ஒரு தீவிர ஆபத்தை எடுத்துக்காட்டும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தங்கள் வீட்டில் வசிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்பது தொடர்பாக பள்ளிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

'போதுமான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், பள்ளிகள் தற்போது தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு மிகவும் கடுமையான ஆபத்தை உருவாக்குகின்றன என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி, இது 'தவிர்க்க முடியாதது' என்றும் கூறினார்'”.

இந்த நேர்காணல் வரை, இதற்கு லீசா எந்த பதிலும் பெறவில்லை. அப்போதிருந்து, Wigan இல் உள்ள Woodfield தொடக்கப் பள்ளியின் பதிலை அவர் ட்வீட் செய்துள்ளார்: 'முன்பு அறிவுறுத்தப்பட்டபடி, குழந்தைகள் வருகைதராத பிரச்சினை இப்போது உள்ளூர் அதிகாரிகளின் கைகளில் உள்ளது மற்றும் பள்ளியின் நிலைப்பாடும் அப்படியே உள்ளது.'

லீசா இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், 'எதிர்பார்த்தபடி, அவர்கள் @GoodLawProject செய்திகளால் முற்றிலும் அசையவில்லை மற்றும் வருகை தராததை அங்கீகரிக்கவோ அல்லது எழுத்துக்கோர்வை மறதி நோயினால் [dyslexic] பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு பாடவேலைகள் வழங்கவோ மறுக்கிறார்கள். அவர்களும் @WiganCouncil இலும் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருவதாக தெரிகிறது.

எங்கள் நிருபரிடம் பேசிய லீசா, “இதற்கிடையில் உங்களுக்கு கன்சர்வேடிவ் கல்வி செயலாளர் நாதிம் ஸஹாவி தலைமை ஆசிரியர்களிடம், பள்ளிகளில் ஏன் பலர் சமூகமளிக்கவில்லை, அது ஒரு மர்மம் போல இருப்பதாக கூறுகிறார். இதே நேரத்தில் நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் வெளிப்படையாக 'எச்சரிக்கையை' வெளிப்படுத்துகிறார். அவர் சுகாதார அதிகாரிகளின் தனிப்பட்ட கூட்டத்தில் குறிப்பாக தேசிய சுகாதார சேவை ஊழியர்களிடையே பிரச்சனை 'மிகப்பெரியது' மற்றும் 'பெரிதாகிறது' என்று கூறினார். இது பாரிய தாக்கங்களைக் கொண்டுள்ளது.

'இது தன்னுள்ளே ஏதோ ஓர்வெல்லியன் தன்மையை கொண்டுள்ளது. தொற்றுநோய் பிரதிபலிப்பு மற்றும் மீட்பு குறித்த இந்த புதிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு (APPG) அமைக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞானத்தை பார்ப்பதாகக் கூறுகிறது. ஆனால் அவர்களின் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் விகான் நகர சபையின் பொது சுகாதார இயக்குனர் பேராசிரியர் கேட் ஆர்டெர்ன் ஆவர், அவர் கோவிட் 'சமூகத்தில்' பரவுகிறது ஆனால் பள்ளிகளில் அல்ல என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

Collateral Global இனால் APPG நிதியுதவி பெற்று நிர்வகிக்கப்படுகிறது என்று Byline Times தெரிவிக்கிறது.இது,Collateral Global கோடீஸ்வரர்கள் நிதியளித்ததும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மற்றும் இயற்கை நோய்த்தொற்றை ஆதரிக்கும் Great Barrington Declaration இனை தொடர்ந்து வெளிவந்த அமைப்பாகும்.

தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி பேசிய லீசா, “ஆசிரியர் சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் சொந்த உறுப்பினர்களைப் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமான தடுப்பு நடவடிக்கை பற்றி பேசுகிறார்கள் மற்றும் அரசாங்கத்திற்கு 'வலுவான வார்த்தை' கடிதங்களை எழுதுகிறார்கள். ஆனால் அது மிகக் குறைவு, மிகவும் தாமதமானது என்றார்.

'எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே கெவின் கோர்ட்னியுடன் [தேசிய கல்வி சங்கத்தின் இணை பொதுச் செயலாளர்] கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. அவர் பள்ளிகளுக்கு 'இடையூறுகளை குறைத்தல்' பற்றி பேசினார் மற்றும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பது பற்றி அவரது சொந்த உறுப்பினர்களால் கேட்டப்பட்டபோது, அவர் அடிப்படையில் 'நாங்கள் எதற்காக வேலைநிறுத்தம் செய்கிறோம், எந்த அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்?' இதற்கான பதில்கள் தெளிவாக உள்ளன: குழந்தைகள் பள்ளிக்கு வருவது பாதுகாப்பாக இருக்கும் வரை பள்ளிகள் மூடப்பட வேண்டும்.

'ஆசிரியர்கள் ஊதியத்தை இழப்பார்கள் என்ற வாதத்தைப் பொறுத்தவரை, ஏன்? அவர்கள் இணையத்தின் மூலம் கற்பிக்க முடியும். இது முன்பு செய்யப்பட்டது, அது மீண்டும் செய்யப்பட வேண்டும், செய்யப்படமுடியும். வெளிப்படையாக, முக்கிய பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்க நீங்கள் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்டளவிலான ஊழியர்களை வைத்திருக்கலாம், ஆனால் முன்னுரிமை அவர்கள் தொற்று, நோய்வாய்ப்படுதல் மற்றும் இறப்பை தடுக்க குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு கொடுக்க வேண்டும். இந்த பருவகாலப்பகுதியில் இதுவரை 11 குழந்தைகள் இறந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 94 குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகளுக்கு ஆபத்து இல்லை என்று கூறுவது பொய்.

'கட்டிடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் இருந்திருந்தால், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று அபாயத்தை எதிர்கொள்லாம். இப்போது நாங்கள் கோவிட்டின் போது என்ன செய்கிறோம். இதுதான் நடைமுறையில் உள்ள கட்டுப்படுத்தும் நோக்கம். அரசாங்கம் கடிதங்களை பற்றி கவனம் எடுக்காது. அவர்கள் தங்கள் சொந்த விஞ்ஞான ஆலோசகர்களைக் கூட கேட்கவில்லை.

லீசா மேலும் கூறினார், “சிலர் பள்ளி பகிஸ்கரிப்பை பற்றி ஒளிபரப்புமாறு பிபிசியை அணுகினர், ஆனால் அவர்கள் அதைத் தொடமாட்டார்கள்.

'நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு எதிராக நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும். அதனால்தான் அக்டோபர் 24 பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள் என்ற இணையவழி கருத்தரங்கு மிகவும் முக்கியமானது. மக்கள் விஞ்ஞானத்தை கேட்க வேண்டும். நாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம், இதை நாம் முடிவுக்குக் கொண்டுவர முடியும். கோவிட்டை விரைவாக ஒழிக்க முடியும். நாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம், இதை நாம் முடிவுக்குக் கொண்டுவர முடியும். கோவிட் ஒழிக்க மிகவும் தாமதமாகாது. டாக்டர் மால்கோர்சாடா காஸ்பெரோவிச், டெல்டா மாறுபாடு தொடர்பாக இது உண்மையிலேயே உச்ச கட்டத்திற்கு சென்று ஒழிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்று கவலை தெரிவித்தார். இதைத்தான் நாம் செய்ய வேண்டும் மற்றும் பொய்களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் விஞ்ஞானத்தை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

Loading