ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, அமெரிக்க கிழக்கு வலய நேரப்படி (EST) பிற்பகல் 1.00 முதல் 3.00 மணி வரை

பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பதிவு செய்ய

உலக சோசலிச வலைத் தளமும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிகளும் (IWA-RFC) அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை ஒரு சர்வதேச இணையவழி கருத்தரங்கத்தை நடத்துகின்றன. இந்த நிகழ்வில், COVID-19 ஐ ஒழிப்பதற்கான வழிமுறைகளை விளக்க புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் தொற்றுநோயியல் நிபுணர்களும் பங்குபற்றுவார்கள். அவர்களுடன் சர்வதேச அளவில் சாமானிய தொழிலாளர் குழுக்களில் செயல்படும் தொழிலாளர்களும் பங்கேற்பார்கள். தொற்றுநோய்களின் போது தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசுவதோடு விஞ்ஞானிகள் குழுவிடம் கோவிட்-19 தொடர்பான கேள்விகளை எழுப்புவார்கள்.

தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், COVID-19 இலிருந்து உத்தியோகபூர்வ உலகளாவிய இறப்பு எண்ணிக்கை இப்போது 5 மில்லியனை தாண்டியுள்ளது. 'அதிகப்படியான இறப்புகளால்' அளவிடப்படும் உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. தற்போது, கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், கிட்டத்தட்ட 6,000 பேர் நோயால் இறக்கின்றனர். இந்த வைரஸ் இப்போது குழந்தைகளை அச்சுறுத்தும் எண்ணிக்கையில் தொற்றிக் கொண்டிருக்கிறது, பள்ளிகளை மீண்டும் நேரடி கற்றலுக்குத் திறப்பதன் மூலம் தூண்டப்படுகிறது. இது, ஒரு முழு தலைமுறையினருக்கும் தெரியாத நீண்ட கால விளைவுகளை கொண்டுள்ளன.

பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் கொள்கைகள் வைரஸ் பரவுவதற்கும் திரிபடைவதற்கும் அனுமதித்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள போரிஸ் ஜோன்சன், பிரேசிலில் உள்ள ஜெய்ர் போல்சனாரோ மற்றும் ஏனையவர்களின் அரசாங்கங்களும் 'சமுக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' என்ற கொள்கையை பின்பற்றுகின்றன, அதாவது மக்கள்தொகையில் வேண்டுமென்றே தொற்றை பரவவிடும் கொள்கை. அமெரிக்காவில், தடுப்பூசிகளுடன் இணைந்து போதிய 'தணிப்பு' நடவடிக்கைகளால், தொற்றுநோயை நிறுத்த முடியும் என்ற பைடென் நிர்வாகத்தின் கூற்று, தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் மகத்தான அதிகரிப்பால் மறுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், கோவிட்-19 பரவலை தணிப்பதை நோக்கமாகக் கொண்ட பயண மற்றும் பிற கட்டுப்பாடுகளை நீக்க, அரசாங்கங்களுக்கு பெரும் அழுத்தம் கொண்டுவரப்படுகிறது.

தொற்றுநோய் நிறுத்தப்படக்கூடியது மற்றும் நிறுத்தப்படவும் வேண்டும். உலகளாவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான ஒவ்வொரு கருவிகளையும் உலகளாவிய அளவில் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒழிப்பு நடவடிக்கை மட்டுமே சாத்தியமான மற்றும் பயனுள்ள மூலோபாயம் என முன்னணி விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த இணையவழி கருத்தரங்கம் முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை விளக்கும் மற்றும் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவர, எதிர்காலத்தை மீட்டெடுக்க ஒரு பரந்த அடிப்படையிலான மற்றும் சர்வதேச இயக்கத்தை உருவாக்க தேவையான முக்கியமான அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும்.

நேர மண்டல மாற்றங்கள்:

மெக்சிகோ நகரம்: அக்டோபர் 24, ஞாயிறு, பகல் 12 மணி

இலண்டன்: அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி

பேர்லின்: அக்டோபர் 24 ஞாயிறு மாலை 5 மணி

இஸ்தான்புல்: அக்டோபர் 24 ஞாயிறு மாலை 6 மணி

மும்பை: அக்டோபர் 24 ஞாயிறு, இரவு 10:30 மணி

பெய்ஜிங்: அக்டோபர் 25 திங்கள் காலை 1:00 மணி

சிட்னி: அக்டோபர் 25 திங்கள் அதிகாலை 4:00 மணி

ஆக்லாந்து: அக்டோபர் 25 திங்கள் காலை 6:00 மணி

Loading