ஜம்மு காஷ்மீர் மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க இந்திய இராணுவம் குவிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பர் 18 அன்று ஜம்மு காஷ்மீர் பகுதியில் 20,000 மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்ட தனியார்மயமாக்கலுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய அரசாங்கம் இராணுவ மற்றும் துணை இராணுவப் படைகளை குவித்திருக்கும் சம்பவத்தை இந்திய மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் முக்கிய எச்சரிக்கையாக எடுக்க வேண்டும்.

மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கை, வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பரந்த பிரிவினரை அணிதிரட்டும் ஒரு புள்ளியாக மாறிவிடும் என்ற அச்சத்திலிருந்து எழுந்துள்ளது. இந்திய பெரு வணிகம் மற்றும் அவர்களின் அரசியல் கை கூலிகளான மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்துகின்ற அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக பெருகி வருகின்ற கடுமையான தாக்குதல்களுக்கு எதிராக சமீபத்திய மாதங்களில் எண்ணற்ற போர்குணமிக்க போராட்டங்கள் நடந்துள்ளன.

மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க இராணுவம் அனுப்பப்பட்டிருப்பது ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக இருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் பெரும் மக்கள்தொகையைக் கொண்டிருக்கிற மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் (உபி) ஏற்கனவே இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது. அங்கு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் உபி மாநிலத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்கள் அடுத்துவரும் ஆறு மாதங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. உபி மாநிலத்தின் கடுமையான அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் (Essential Services Maintenance Act - ESMA) கீழ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை விருப்பப்படி கைது செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டிற்கும் உட்பட்டவர்கள் ஆவர்.

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஒரு இந்திய துணை இராணுவப்படையின் சிப்பாய் நிற்கிறார். (AP Photo/ Dar Yasin)

ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ உட்பட அரசியல் அமைப்பிலுள்ள பாஜகவின் முன்னைய எதிரிகள் எவரும் மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிரான இராணுவத் தலையீட்டை கண்டிக்கவில்லை அல்லது விமர்சிக்கவுமில்லை அதன் மூலம் அதற்கான மறைமுக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். சிபிஎம் தலைமையிலான இந்திய தொழிற்சங்கத்தின் மையம் (சிஐடியு) அரசின் நடவடிக்கைக்கு வாய்மொழியாகக் கூட எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தவறிவிட்டது.

டிசம்பர் 18 அன்று, ஜம்மு காஷ்மீர் மின்வாரிய மேம்பாட்டுத் துறையின் (Power Development Department - PDD) சுமார் 20,000 ஊழியர்கள், லைன்மேன்கள் உள்ளிட்ட முதல் மூத்த பொறியாளர்கள் வரை அனைவரும், PDD ஐ பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (Power Grid Corporation of India - PGCI) இணைப்பதற்கு மேற்கொள்ளும் மோடி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கடந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக அரசாங்கத்தின் “கோவிட் நிவாரண பொதியின்” ஒரு பகுதியாக அனைத்து யூனியன் பிரதேச மின் விநியோக நிறுவனங்களும் தனியார்மயப்படுத்தப்படும் என்று அறிவித்தார். PGC உடன் இணைப்பது ஒரு அதை இணைப்பதற்கு முக்கிய படியாக அமைந்துவிடும் என்று PDD ஊழியர்கள் சங்கத்தால் (PDD Employee’s Association – PDDEA) பிரதிநிதித்துவப்படுத்தும் PDD ஊழியர்கள் அஞ்சுகிறார்கள். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மேலும் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியிருந்தனர். அவைகளில் அனைத்து ஆபத்தான வேலையில் ஈடுபடும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் மின்வாரிய மேம்பாட்டுத்துறை பொறியாளர்கள் வேலைகளை “ஒழுங்குபடுத்துதல்” மற்றும் உதவித் தொகையிலிருந்து அவர்களின் சம்பளத்தைப் பிரித்தெடுத்தல் மற்றும் பல்வேறு கார்பரேஷன்களுக்கு அனுப்பப்படுகிற அனைத்து PDD ஊழியர்களுக்கு ஒரு முறையான வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல் அடங்கியிருந்தன.

தனியார் மயப்படுத்துதல் மற்றும் ஒப்பந்த தொழில்கள் ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்ட அலையின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டமானது இருக்கிறது. மாநில அரசாங்க அச்சுறுத்தல்கள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அவர்களது 'சொந்த' தொழிற்சங்கங்களை மீறி, 70,000 மகாராஷ்டிர மாநில சாலை போக்குவரத்து கழக (Maharashtra State Road Transport Corporation - MSRTC ) தொழிலாளர்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மாநில அரசாங்கத்துடன் இணைப்பதற்கு அழுத்தம் கொடுக்க நவம்பர் 3 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் பெருமளவு வங்கித் துறைகளை தனியார்மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இந்தியா முழுவதிலும் இரண்டுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த மாத தொடக்கத்தில், தெற்கிலிருக்கும் தெலுங்கானா மாநிலத்தின் 60,000 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு நான்கு நிலக்கரி சுரங்கத்தை விற்க இருக்கும் மோடி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தியாவின் வடக்கிலிருக்கும் பஞ்சாப்பில் ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்தவும், சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவற்றைக் கோரி பஞ்சாப் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் இணைந்தனர்.

தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் மீது அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதன் மூலம் மோடி அரசாங்கம் பெருந்தொற்றுக்கு பதிலளித்திருந்தது, இலாபங்களுக்கு முன்னே உயிர்கள் என்ற அதன் அழிவுகரமான கொள்கைகளினால் மில்லியன் கணக்கான “அதிக இறப்புகள்” ஏற்பட வழிவகுத்தது மற்றும் கோடிக் கணக்கானவர்களை மிகவும் மோசமான வறுமைக்குள் தள்ளியது. இதில் ஒரு முக்கிய கூறாக இருப்பது அதன் தனியார்மயமாக்கல் திட்டமாகும், இதன் கீழ் ஒரு சில 'மூலோபாய நிறுவனங்கள்' தவிர மற்ற அனைத்தும் இந்திய மற்றும் உலக முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும். மற்றது தொழிலாளர் சட்ட “சீர்திருத்தம்” அதனைச் செய்வதனூடாக ஒப்பந்த தொழிலாளர் முறையை இலகுவாக்குவதுடன் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை தடைசெய்தல் ஆகியவற்றினால் பெரு வணிகங்களுக்கு மேலும் வசதியை உருவாக்கும்.

சிஐடியூ வினால் கைவிடப்பட்ட நிலையில், பிற தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது கட்சிகள்” ஆகியவை மோடி அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் வர்க்க போர் செயல்திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு எந்தவித மூலோபாயமும் இல்லாதிருந்த நிலையில் அரசாங்கத்தின் இராணுவ படைகளினால் செயல்படுத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடைப்பதற்கானதிட்டத்தின் முன்பு PDDEA வேகமாக மண்டியிட்டது. ஜம்மு பிரிவு ஆணையர் ராகவ் லன்கர் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் முகேஷ் சிங் ஆகியோருடன் திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. PDDயை PGCI யுடன் இணைப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள பேச்சுவார்த்தைகள் கிடப்பில் போடப்படும் என்று 'எழுதித்தரப்பட்ட உத்தரவாதம்' கிடைத்துள்ளதாகவும், மேலும் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது.

இத்தகைய “உறுதிமொழி” மோடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் உந்துதலை தடைசெய்யப் போவதில்லை.

ஜம்முவில் பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிற வேளையில், மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஜம்மு காஷ்மீர் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை மாலை இருளில் மூழ்கியிருந்தன.

வேலைநிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் இராணுவத்தை நிலைநிறுத்தியது சர்ச்சைக்குரிய பெரும்பான்மை-முஸ்லிம் பிராந்திய மக்களுக்கு அதன் 'அர்ப்பணிப்பை' காட்டுவதாக ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் ஆணையர் மனோஜ் சின்ஹா கூறினார், இவர் 2018 யூன் இல் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும், சட்டசபையையும் மோடி அரசாங்கம் செயல்படுத்தாமல் தடைசெய்ததிலிருந்து இந்த யூனியன் பிரதேசத்தை தற்காலிகமாக ஆட்சி செய்துவருகிறார். “நான் அவர்களின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் சிலர் மின்சார விநியோகத்தை மீண்டும் இயங்கவைக்க இராணுவம் வரவழைக்கப்பட்டதாக விமர்சித்துள்ளனர். கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (REC - Rural Electrification Corporation), தேசிய நீர்மின்சக்தி மின்வாரிய கழகம் (NHPC - National Hydroelectric Power Corporation) மற்றும் தேசிய அனல்மின் கழகம் (NTPC -National Thermal Power Corporation) ஆகியவற்றிலிருந்து ஊழியர்களும் மற்றும் இராணுவ பொறியியல் படையினரும் வந்திருந்தனர்.” என்று பத்திரிகைகளுக்கு அவர் கூறினார். இராணுவம், 'விரைவாகச் செயல்பட்டு, முக்கிய மின் நிலையங்கள் மற்றும் நீர் விநியோக ஆதாரங்களில் விநியோகத்தை பழைய நிலைக்கு கொண்டுவர அதன் துருப்புக்களை பயன்படுத்தியது' என்று முன்னாள் பாஜக அரசாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க மோடி அரசாங்கம் உடனடியாக இராணுவத்தை அனுப்பியிருப்பது, அதன் ஆகஸ்ட் 2019 அரசியலமைப்பு சதியான இந்தியாவின் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் வாழும் மாநிலமான ஜம்மூ காஷ்மீரின் தனித்துவமான, அரை தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்திலிருந்து பறித்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மேலும் மத்தியரசின் கீழ் நிரந்தரக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதை குறிக்கிறது. இது காஷ்மீர் மக்களுக்கு எதிராக மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கிறது. இது ஒட்டுமொத்த இந்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக குறிவைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மீதான தனது புதிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, மின்வாரியத் துறையை தனியார்மயமாக்க மோடி அரசாங்கம் முயற்சி செய்துள்ளது. முன்னாள் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது 2019 அக்டோபரில் விரைந்து முடிக்கப்பட்டதும் ஜம்மு காஷ்மீர் மின்வாரிய சட்டம் 2010 ஐ ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திலிருந்து ரத்துசெய்துவிட்டது மேலும் இந்திய அரசாங்கத்தின் மின்வாரிய சட்டம் 2003 மாநிலத்தில் நீடிக்க ஏற்பாடு செய்துள்ளது. அவர்களின் அடுத்தடுத்த தனியார்மயமாக்கலுக்கான வழியைத் தயாரிப்பதற்காக மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் மின் விநியோகம் என மொத்தத்தையும் மூன்று தனித்தனி நிறுவனங்களாக பிரித்துள்ளன. டிசம்பர்மாத தொடக்கத்தில் PGCI யுடன் பிரதேசத்தின் பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (Power Transmission Corporation Limited - PTCL) மற்றும் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (Power Distribution Corporation Limited - PTDL) ஆகியன இணைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2019 நிகழ்வுகள் நடந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு கோடியே ஐம்பது இலட்சத்திற்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதியான ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் பத்தாயிரத்திற்கும் அதிமான இந்திய இராணுவத்தினர் மற்றும் துணை இராணுவத் துருப்புகளைக் கொண்ட ஓரு ஆயுத முகாமாக இருக்கிறது.

அந்த சம்பவம் நடந்த தறுவாயில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல், “மோடியின் காஷ்மீர் சதி என்பது ஒரு ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற புவிசார் மூலோபாய அதிகார விளையாட்டு ஆகும். 1947 ஆம் ஆண்டு தெற்காசியாவின் வகுப்புவாதப் பிரிவினையின் மூலம் இரு நாடுகள் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் பரம எதிரியான பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கைகளை பலப்படுத்துவதே இதன் பிரதான குறிக்கோளாக இருக்கிறது. மற்றும் சீனாவுக்கு எதிராக சந்தைகள், முதலீடுகள், வளங்கள் மற்றும் பூகோளரீதியான செல்வாக்கிற்காக இந்திய உயரடுக்கு போட்டியிடுகிறது.

“இந்த முன்னேற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை மற்றும் அச்சுறுத்தலாக இருந்தாலும், மோடியின் காஷ்மீர் சதியின் தாக்கங்கள் இந்தியாவில் வர்க்கப் போராட்டத்திற்கு குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதிவிடமுடியாது.

இந்து மேலாதிக்க வலதுசாரிகளைத் தூண்டிவிட்டு, முஸ்லீம் எதிர்ப்பு வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டு அரசின் தன்னிச்சையான அதிகாரத்தை வலுப்படுத்துவதும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கு மக்களைப் பழக்கப்படுத்துவதும் பாஜகவின் ஆகஸ்ட் 5 அரசியல் சதி மற்றும் முற்றுகையின் குறிக்கோளாக இருக்கிறது.

Loading