பம்பாய் உயர்நீதிமன்றம் அச்சுறுத்தும் தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிர பேருந்து தொழிலாளர்களின் ஐந்து மாத வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பெரும் ஆபத்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

70,000 க்கும் மேற்பட்ட மகாராஷ்டிர மாநில சாலைதொழிலாளர்ப் போக்குவரத்துக் கழக (Maharashtra State Road Transport Corporation - MSRTC) தொழிலாளர்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடத்தி வரும் போர்க்குணமிக்க வேலைநிறுத்தப் போராட்டம், தொழிலாளர்கள் தங்கள் முக்கிய கோரிக்கைகளை அடையாமல் உடைக்கப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7 வியாழக்கிழமையன்று, MSRTC பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இயந்திர பொறியாளர்கள் மற்றும் மற்ற தொழிலாளர்களும் ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமைக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று பம்பாய் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பு, ஏப்ரல் 21க்கு பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு மற்றும் அனைத்து தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்ய மகாராஷ்டிர மாநில அரசுக்கு சொந்தமான MSRTC க்கு சட்டபூர்வ அனுமதியை வழங்கியிருக்கிறது.

MSRTC தொழிலாளர்கள் அவர்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கோருகிறார்கள். (படம் உதவி: MSRTC வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்)

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிரான தீர்ப்பு குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பராப் அதைப் பற்றி எந்த வார்த்தையும் பேசாமல் பதிலளித்துள்ளார். “ஏப்ரல் 22 க்குப் பிறகு பணியில் இணைந்துகொள்ளாத தொழிலாளர்கள், அவர்களுக்கு இனிமேல் வேலை தேவைப்படாது என்பதாக கருதப்படும்” என்று ஆணவத்துடன் பதிலளித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களுடைய வாய்வழி கவனிப்பின்போது தொழிலாளர்களை நோகடிப்பதாக அவர்களுடைய பதில்கள் இருந்தன. ” “உங்கள் வேலையை மீண்டும் தொடங்குங்கள்” இதே மாதிரி சென்று உங்கள் வாழ்வாதாரத்தை இழக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்கள்.

இந்த வகையில் தொடர்ந்த நீதிபதிகள், MSRTCயை மாநில அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையை மாநில அரசு நிராகரிதிருப்பதை எதிர்கொள்வதற்கு, 'பிற தீர்வுகானும் வழிகளைப்' பயன்படுத்துமாறு தொழிலாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முதலாளித்துவ அமைப்பிலுள்ள கட்சிகளை வற்புறுத்தும் பயனற்ற முயற்சிகளில் தொழிலாளர்கள் தங்கள் ஆற்றலைச் செலவிட வேண்டும் என்று நீதிபதிகள் கருதுகின்றனர். முதலாளித்துவ கட்சிகள் MSRTC தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தங்கள் விரோதத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றன.

தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனமான MSRTC, மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகின்றனர், இதன் மூலம் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம், சலுகைகள் மற்றும் வேலைப் பாதுகாப்பு போன்றவைகளை அவர்களும் பெற முடியும். பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரு அத்தியாவசிய போக்குவரத்து வழிமுறையாக இது இருப்பதுடன் நகரங்களை இணைக்கும் பேருந்து போக்குவரத்தை தனியார்மயமாக்கும் MSRTC நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்கும் வழிமுறையாக அவர்கள் இணைப்புக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தின் பழிவாங்கல்கள், அரசாங்க அச்சுறுத்தல்கள் மற்றும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்ற நீதிமன்றங்களின் தொடர்ச்சியான தீர்ப்புகள் ஆகியவற்றை மீறி தொழிலாளர்கள் மீது மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த மூன்று நாள் விசாரணைகளின் முடிவில், வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு ஏப்ரல் 22 காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இணைப்பு கோரிக்கையை அரசு நிராகரித்ததைத் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கியது. உண்மையில், இது ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மோதல் முழுவதும், பாசிச சிவசேனா தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட தேசிய காங்கிரஸ் கட்சி உட்பட கூட்டணியின் மாநில அரசாங்கம் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை செய்ய முடியாது மற்றும் அது 'கட்டுப்படியாகாது' என்பதில் உறுதியாக இருக்கின்றன. ஆனால் வேலைநிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த நவம்பரில் வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று முதன்முதலில் அறிவித்தபோது, இணைப்புக் கோரிக்கையை 'படிப்பதாக' ஒரு போலியான செயல்முறையை உயர்நீதிமன்றம் உருவாக்கியது.

இந்த வார உயர் நீதிமன்ற விசாரணையானது, சட்டவிரோதமானது என்று அறிவிக்கும் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியதற்கும் தொடர்ந்ததற்குமாக தொழிலாளர்களுக்கு எதிராக MSRTC தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்புப் வழக்கை நிவர்த்தி செய்வதாகவும் இருந்தது.

MRSTC தொழிலாளர்கள் மிகப்பெரிய போர்க்குணத்தையும் உறுதியையும் காட்டியுள்ளனர். வேலைநிறுத்த ஊதியம் கிடைக்காத போதிலும், 2,200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், மேலும் 11,000 க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் பாரிய கைது அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்றங்களின் வேலைநிறுத்த எதிர்ப்பு உத்தரவுகள் இருந்த போதிலும் கூட, கடந்த நவம்பர் 4 அன்று வெளிநடப்பு செய்த 90,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் வேலையை விட்டு விலகியிருக்கிறார்கள்.

வேலைநிறுத்தப் போராட்டம் இப்போது பெரும் ஆபத்தில் உள்ளது என்றால் அதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் நாசவேலை தான் காரணமாகும். ஆரம்பத்தில் இருந்தே, MSRTC தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்த்தன. சிபிஎம் உடன் இணைந்த சிஐடியூ மற்றும் சிபிஐ அனுசரணை பெற்ற ஏஐடியூசி (AITUC) உட்பட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள், அரச அடக்குமுறைக்கு முகங்கொடுக்கும் வகையில் அவர்களை கைவிட்டதுடன் வேலைநிறுத்தப் போராட்டம் செய்பவர்களை அடிபணிய வைக்கும் நிறுவன மற்றும் அரசாங்க நடவடிக்கையை எளிதாக்கும் வகையில் MSRTC தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை திட்டமிட்ட முறையில் தனிமைப்படுத்தியுள்ளன.

பெருமளவிலான பொதுத்துறை தொழில்துறைகளை தனியார்மயமாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இடைவிடாத உந்துதலுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த இரண்டு நாள் தேசிய பொது வேலைநிறுத்தத்தின் போது, தனியார்மயமாக்கல் அச்சுறுத்தலுக்கு எதிராக மகாராஷ்டிர பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை மேலும் இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அவர்களுக்கு ஆதரவாக அணிதிரட்ட எதையும் செய்யாமல் இருக்கின்றன என்பது ஒரு புறமாக உள்ளது.

தொழிற்சங்க மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளின் துரோகத்தால், MSRTC தொழிலாளர்களின் சில பிரிவுகள், முன்னோக்கிச் செல்ல வழியில்லாமல், கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்ற பல்வேறு விசாரணைகளில், தொழிலாளர்களுக்கு அனுதாபம் காட்டும் உயர் நீதிமன்றத்தின் போலி நடவடிக்கைக்களால் தவறாக வழிநடத்தப்படுகின்றன. ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டும் நீதிமன்றத்தின் உத்தரவு, மாநில அரசாங்கத்துடன் MSRTC இன் இணைப்புக்கான போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சேர்ந்து ஒரு, கசப்பான அடியாக வந்துள்ளது.

கோவிட்-19 பெரும் தொற்றுநோய் மற்றும் அதனுடன் சேர்ந்து வெகுஜன வேலையின்மை மற்றும் பசி ஆகியவை தொடர்பாக ஆளும் வர்க்கத்தின் அழிவுகரமான பதிலின் மீது பெரும்பான்மை மக்களின் கோபம் அதிகரித்திருந்த நிலையில்.போராட்ட காலம் முழுவதும், MSRTC தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தை தூண்டுவதற்கு ஊக்கத்தை அளிக்கும் என்ற அபாயத்தை நீதிமன்றம் நன்கு உணர்ந்திருந்தது.,

இவ்வாறு, அவர்கள் வியத்தகு முறையில் தொழிலாளர்கள் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தியபோதும், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தியபோதும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொழிலாளர்களின் தலைவிதியைப் பற்றிக் கவலைப்படுவது போல் காண்பித்து MSRTC நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து போலியான வாக்குறுதிகளைப் பெறுவது போல் நாடகமாடினார்கள்..

புதன்கிழமையன்று, வேலைக்கு திரும்புவதற்கான காலக்கெடுவாக ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமையை நீதிமன்றம் முடிவுசெய்திருந்தது. ஆனால் விசாரணையின் முடிவில் அதை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தது.

“சிங்கத்திற்கும் ஆட்டுக்குட்டிக்கும் இடையே நடக்கும் சன்டையில் ஆட்டுக்குட்டி பாதுகாக்கப்படவேண்டும்.” என்று அறிவித்த நீதிமன்றம் பணிநீக்கம் மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றம் MSRTC நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், மாநில அரசாங்கம் வரும் நான்கு வருடங்களுக்கு MSRTC க்கு நிதிவழங்குவதற்கும், சரியான நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. பெரும்தொற்றுநோய் மற்றும் பல ஆண்டுகளாக அரசாங்க புறக்கணிப்பு காரணமாக, MSRTC யின் நிதி தற்போது சீர்குலைந்துபோயிருக்கிறது.

MSRTC நிர்வாகம், அரசாங்கம் அல்லது இது விடயமான உச்சநீதிமன்றத்தின் உத்தரவாதங்களும் மற்றும் உறுதிமொழிகளும் எந்த நம்பத்தன்மையும் அளிக்கவில்லை. வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் பெரும்பான்மை போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக அது தூண்டிவிட்ட பல குற்றவியல் நீதிமன்ற வழக்குகளை தொடரப்போவதாக வலியுறுத்தியிருக்கிறது, அதன்மூலம் அவர்களை பழிவாங்குவதற்கும் இறுதியில் பணிநீக்கம் செய்வதற்கும் ஒரு உத்திக்கு வழிவகுத்திருக்கிறது.

MSRTC க்கு வழங்கப்படும் அரசாங்கத்தின் நிதிஉதவி வாக்குறுதிகள் குறைவான நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நான்கு வருட உதவியின் அளவுக்கு புள்ளிவிவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், பேருந்து வழித்தடங்கள் மற்றும் பேருந்து நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடுவது குறித்து MSRTC நிர்வாகம் அல்லது அரசாங்கத்திடம் இருந்து எந்த விதமான அக்கறையோ அல்லது பதிலோ இல்லை. உண்மையில், வேலைநிறுத்தப்போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், MSRTC, பேருந்து வழித்தடங்களை ஒப்பந்தம் செய்வது மற்றும் அதன் சொத்துக்களை பணமாக்குவதற்கான திட்டங்களில் மாபெரும் நாடுகடந்த ஆலோசனை வழங்கும் நிறுவனமான KPMG உடன் இணைந்து செயல்பட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் MSRTC தொழிலாளர்களை பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த நோக்கத்திற்காக, இலண்டன் பேருந்து சாமானிய தொழிலாளர்கள் குழுவின் குழுவின் சார்பாக, பாதிக்கப்பட்ட பேருந்து தொழிலாளர் டேவிட் ஓ'சல்லிவன் வெளியிட்ட ஆதரவு வீடியோ அறிக்கையை WSWS பரப்புரை செய்கிறது.

தங்கள் பங்கிற்கு, MSRTC தொழிலாளர்கள் கார்ப்பரேட் சார்பு தொழிற்சங்க அமைப்புகளுடனான மோதலில் இருந்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்ல, அவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் இருந்து முற்றிலும் சுயாதீனமான மற்றும் எதிர்க்கும் புதிய போராட்ட அமைப்புகளை ஒவ்வொரு இயந்திர பழுதுபார்க்கும் இடம் மற்றும் பேருந்து பணிமனைகளிலும் MSRTC தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவை கட்டமைக்க வேண்டும். அத்தகைய குழுவின் முதல் பணி, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், பொதுச் சேவைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு கூட்டுப் போராட்டத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோளை விடுப்பதன் மூலம், தொழிற்சங்கத்தால் விதிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை உடைப்பதாகும். அத்தகைய வேண்டுகோள் மோடி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாராஷ்டிரா உட்பட மாநில அரசுகளின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கும் சுரங்கத் தொழிலாளர்கள், வங்கிகள், துறைமுகம் மற்றும் மின்சாரத் தொழிலாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான பிற தொழிலாளர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறாக சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க முற்படும் MSRTC வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச கூட்டணி குழுக்களை நம்பி இருக்கலாம். நாம் முழு மனதுடன் ஆதரவையும் மற்றும் வேண்டிய ஒவ்வொரு உதவியையும் வழங்குவோம்

Loading