சர்வதேச மே தினம் 2022: இணையவழி பேரணி

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 1 ஆம் திகதியை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகள், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் மற்றும் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தினத்தை கொண்டாட உள்ளன.

கூட்டமானது மோசமான சூழ்நிலையில் நடத்தப்படுகின்றது. உக்ரேனில் இப்போது நடத்தப்படும் போர் உலகளாவிய பேரழிவிற்குள் தள்ளப்படும் முன் நிறுத்தப்பட வேண்டும். அனைத்துலகக் குழு, நேட்டோவின் இரக்கமற்ற ஏகாதிபத்திய அபிலாஷைகளை எதிர்க்கும் அதே வேளை, புட்டின் ஆட்சி உக்ரேன் மீதான அதன் அவநம்பிக்கையான படையெடுப்பை நியாயப்படுத்த முன்வைக்கும் தேசிய பேரினவாதத்தை நிராகரிக்கிறது.

20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை செய்தது போல், ஆளும் உயரடுக்குகள் இப்போது மனிதகுலத்தை ஒரு உலகப் போரில் தள்ள தயாராகி வருகின்றன. இரண்டாம் உலகப் போர் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது. ஒரு மூன்றாம் உலகப் போர், பல கோடி மக்களை, சிலவேளை சில நூறுகோடி மக்களை காவுகொள்ளும் ஒரு அணு ஆயுதப் பேரழிவாக விரைவாக விரிவடையும்.

மே 1 கூட்டம், உலகளாவிய பார்வையாளர்கள் முன் பின்வரும் பிரேரணையை முன்வைக்கும்: மனிதகுலத்தின் தலைவிதியை பணவெறி மற்றும் அரசியல் பொறுப்பற்ற ஆளும் வர்க்கத்தின் கைகளில் விடக்கூடாது. 20 மில்லியன் மக்களின் உயிரைப் பறித்த தொற்றுநோயைத் தடுப்பதற்குத் தேவையான கொள்கைகளை செயல்படுத்த மறுத்ததன் மூலம் அது அம்பலப்பட்டுள்ளது.

முதலாளித்துவத்தின் கீழ், எவ்வளவு பேரழிவுகரமான விளைவுகள் ஏற்பட்டாலும், இலாபக் குவிப்பு எப்போதும் மக்களின் உயிர் வாழ்வை விட முன்னுரிமை பெறுகிறது. ஒவ்வொரு கண்டத்திலும் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைகிறது, ஆனால் அது வெற்றிபெற ஒரு சோசலிச மூலோபாயம் அவசியமாகும். மே 1 கூட்டத்தின் நோக்கமும் இதுதான். நாம் முதலாளித்துவத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுப்போம்.

சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கலந்து கொள்ளுங்கள்!

இந்த தசாப்தத்தை சோசலிசப் புரட்சியின் தசாப்தமாக ஆக்குங்கள்!

எதிர்காலத்திற்கான போராட்டத்தில் இணையுங்கள்!

பேரணியில் கலந்துகொள்ள இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.