மே 21 தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 21 ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆறு வேட்பாளர்களை செனட்டிற்கு நிறுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் பெயர் குறிப்பிடப்படாமல் எங்கள் வேட்பாளர்கள் குழுக்களாக பட்டியலிடப்படுவார்கள். நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள செனட் வாக்குச்சீட்டுகளின் மேல் வரிசையில் பெயர் இருக்கும்.

நியூ சவுத் வேல்ஸ்

Max Boddy and Oscar Grenfell

33 வயதான Max Boddy சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளரும் மற்றும் தேசியக் குழுவின் உறுப்பினருமாகும். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கூட்டணி மற்றும் தொழிற்கட்சி ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் கைகளில் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைப் பற்றி எழுதுகிறார். அவர் நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளதுடன், பழங்குடியினர் தொடர்பாக முதுநிலை கற்கையை முடித்தவராவார்.

2019 இல் Boddy, நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் தொகுதிக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக பதவியில் இருக்கும் தொழிற்கட்சியை சேர்ந்த ஜோயல் ஃபிட்ஸ்கிப்பனுக்கு எதிராக நின்றார். ஃபிட்ஸ்கிப்பனின் குடும்பம் 1984 ஆம் ஆண்டிலிருந்து இந்த பதவியைப் பிடித்துவருகின்றது. அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் உற்பத்தி நிறுத்தம் மற்றும் சுரங்க உற்பத்தியின் மந்தநிலை ஆகியவற்றால் அப்பகுதி பேரழிவிற்கு உட்பட்டது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான வேலைகள் இழப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

30 வயதான Oscar Grenfell, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) இன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆவார், அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினரும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு வழக்கமான நிருபர் ஆவார். ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கின் பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடி மற்றும் பசுமைவாதிகளின் முதலாளித்துவ சார்பு கொள்கைகள் மற்றும் போலி-இடதுகளின் பிளவுபடுத்தும் 'அடையாள' அரசியல் போன்ற முக்கிய அரசியல் மற்றும் தொழில்துறை பிரச்சினைகள் குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார்.

Grenfell சிட்னியின் உள்-மேற்கில் பிறந்து வளர்ந்தார் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்தார். சிட்னி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் முதன்மையானவர். 2015 இல், அவர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் Bankstown இல் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராகவும், 2016 இல் நடந்த கூட்டாட்சித் தேர்தலில் Grayndler இலும், 2019 இல் தொழிற்கட்சி உறுப்பினரான ஜூலி ஓவன்ஸுக்கு எதிராக Parramatta வில் போட்டியிட்டார்.

விக்டோரியா

Peter Byrne and Jason Wardle

63 வயதான Peter Byrne, ஒரு கட்டிடக் கலைஞரும் மற்றும் ஒரு கார் தொழிலாளியின் மகனுமாவார். அவர் 1983ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான சோசலிஸ்ட் லேபர் லீக்கில் இணைந்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கார் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், விமானிகள் மற்றும் ஆசிரியர்களின் வேலைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரங்கள் உட்பட, மெல்போர்ன் பகுதியில் கட்சியின் வேலைகளில் Byrne முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அவர் விக்டோரியா தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019 இல் Calwell தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவர் உத்தியோகபூர்வ ஸ்தாபகக்கட்சிகள் மற்றும் நலிந்துள்ள பாராளுமன்ற முறைக்கு பின்னால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட முயன்ற பசுமைவாதிகள், தொழிற்கட்சி மற்றும் போலி-இடது விக்டோரியன் சோசலிஸ்டுகளின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டார்.

30 வயதானJason Wardle, விக்டோரியா பல்கலைக்கழகத்தில் IYSSE இன் தலைவராக உள்ளார். Wardle இன் தந்தை மற்றும் மாமாக்கள் வணிகக் கப்பல் தொழிலாளர்களாவர். இவர் பேர்த்தில் வளர்ந்ததுடன், அங்கு ஒரு சாதாரண கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்தார். அவர் 2019 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தலையீடுகள் மற்றும் ஆசிய-பசிபிக் பகுதியில் சீனாவுடனான வாஷிங்டனின் மோதலில் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைப்பு உட்பட இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான அவரது எதிர்ப்பின் காரணமாக Wardle அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினார். தொழிற்கட்சியின் இராணுவவாத மற்றும் வணிக சார்பு வேலைத்திட்டத்தின் மீது வெறுப்படைந்த பின்னர் அவர் சோசலிச சமத்துவக் கட்சிக்கு திரும்பினார். Wardle மெல்போர்னுக்குச் சென்று 2017 இல் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்தார்.

குயின்ஸ்லாந்து

Mike Head and John Davis

69 வயதானMike Head, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், உலக சோசலிச வலைத் தள நிருபரும், மேற்கு சிட்னி பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளரும் மற்றும் கட்சியின் பிரிஸ்பேன் கிளையின் செயலாளருமாவார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி உறுப்பினராக உள்ள அவர் திருமணமாகி மூன்று வயது குழந்தைகளுடன் இருக்கிறார். சமீப ஆண்டுகளில், அவர் பிரிஸ்பேன் பகுதியில் தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சியின் செல்வாக்கைக் கட்டியெழுப்பினார்.

ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான இரு கட்சிகளின் தாக்குதல்கள் மற்றும் பிற அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து உலக சோசலிச வலைத்தளத்திற்கு Mike Head தொடர்ந்து எழுதுகிறார். அவர் பல தேர்தல்களில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் 2019 இல் குயின்ஸ்லாந்தில் உள்ள பிரிஸ்பேனில் உள்ள Oxley தொகுதியில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நின்றார்.

28வயதான John Davis, இராணுவவாதம் மற்றும் போருக்கான உந்துதலுக்கு எதிராகவும் சோசலிசம் மற்றும் சர்வதேசியத்திற்கான போராட்டத்திற்கான அவரது ஆதரவின் அடிப்படையில் 2013 இல் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்தார். அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் மற்றும் நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் IYSSE குழுவின் தலைவர் ஆவார்.

நியூகேஸில் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரை பகுதியில் IYSSE ஐ கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் டேவிஸ் ஒரு முன்னணி பாத்திரத்தை வகித்துள்ளார். அவர்கள் மூன்றாம் நிலைக் கல்விக்கான வெட்டுக்களை எதிர்கொண்டு குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சாதாரண வேலைகள் அல்லது நிரந்தர வேலையின்மை தொழிலாள வர்க்க இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போராடிவருகின்றார். அவர் 2016 மற்றும் 2019 தேர்தல்களில் கட்சிக்காக வேட்பாளராக நின்றதுடன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தொடர்ந்து எழுதிவருகின்றார்.

நியூ சவுத் வேல்ஸில் செனட்டிற்கு 1 சோசலிச சமத்துவக் கட்சிக்கு எப்படி வாக்களிப்பது

• வரிக்கு மேலே உள்ள குழு F க்கு 1ஆவது வாக்களிக்கவும். (Max Boddy and Oscar Grenfell)

• 2 முதல் 6 வரை, நீங்கள் விரும்பும் வரிசையில் மற்ற குழுவிற்கு வாக்களிக்கவும்.

• செல்லுபடியாகும் வாக்குச் சீட்டைப் போட, வாக்குச் சீட்டின் மேல் உள்ள குறைந்தபட்சம் ஆறு குழுக்களுக்கு 1 முதல் 6 வரை வாக்களிக்க வேண்டும்.

விக்டோரியாவில் உள்ள செனட்டில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எப்படி வாக்களிப்பது

• வரிக்கு மேலே உள்ள Y குழுவிற்கு 1ஆவது வாக்களிக்கவும்.(Peter Byrne and Jason Wardle)

• நீங்கள் விரும்பும் எந்த வரிசையிலாவது மற்ற குழுவிற்கு 2 முதல் 6 வரை வாக்களியுங்கள்.

• செல்லுபடியாகும் வாக்குச் சீட்டைப் போட, வாக்குச் சீட்டின் மேல் உள்ள குறைந்தபட்சம் ஆறு குழுக்களுக்கு 1 முதல் 6 வரை வாக்களிக்க வேண்டும்.

குயின்ஸ்லாந்தில் உள்ள செனட்டில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எப்படி வாக்களிப்பது

• வரிக்கு மேலே உள்ள குழு I க்கு 1 ஆவது வாக்களியுங்கள். (Mike Head and John Davis)

• நீங்கள் விரும்பும் எந்த வரிசையிலாவது மற்ற குழுவிற்கு 2 முதல் 6 வரை வாக்களியுங்கள்.

• செல்லுபடியாகும் வாக்குச் சீட்டைப் போட, வாக்குச் சீட்டின் மேல் உள்ள குறைந்தபட்சம் ஆறு குழுக்களுக்கு 1 முதல் 6 வரை வாக்களிக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்புகொள்ள:
Phone:(02) 8218 3222
Email:sep@sep.org.au
Facebook:SocialistEqualityPartyAustralia
Twitter:@SEP_Australia
Instagram:socialistequalityparty_au
TikTok:@SEP_Australia

Authorised by Cheryl Crisp for the Socialist Equality Party, Suite 906, 185 Elizabeth Street, Sydney, NSW, 2000.

Loading