திமோதி ஸ்னைடர் யூதப்படுகொலை வரலாற்றை பொய்மைப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

திமோதி ஸ்னைடரின் Bloodlands புத்தகத்தின் பின்னுரையானது அதிர்ச்சியூட்டும் வகையில் துல்லியமற்ற அறிக்கைகளை அளிக்கிறது. யூதப்படுகொலையை கிழக்கு ஐரோப்பாவில் பாரிய அளவில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பிராந்தியரீதியாக தீர்மானிக்கப்பட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக சித்தரித்து, ஸ்னைடர் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய பாதிக்கப்பட்டவர்களின் அளவைக் குறைத்துக்காட்டுகின்றார்.

அவர் 'ஜேர்மன் யூதர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் தப்பிப்பிழைத்தனர்.' உண்மையில், ஏறத்தாழ 525,000 யூதர்களை கொண்ட ஜேர்மனியின் மூன்றாம் குடியரசிற்கு முந்தைய மக்கள் தொகையில், 160,000 பேர் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் கிட்டத்தட்ட 1939 க்கு முன் ஜேர்மனியை விட்டு வெளியேறிய யூதர்களாவர் என வலியுறுத்துகிறார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஸ்னைடர் தொடர்கிறார்: 'யூதப்படுகொலையில் கொல்லப்பட்ட யூதர்களில் தொண்ணூற்றேழு சதவிகிதத்தினர் ஜேர்மன் கலாச்சாரத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.' இது வார்த்தைகளின் வித்தியாசமான தேர்வாகும். இதில் அண்ணளவாக 120,000 (போருக்கு முந்தைய மக்கள் தொகையான 140,000 ஆக இருந்த) கொல்லப்பட்ட டச்சு யூதர்களை விலத்திவிடுகின்றதா?

அப்படியானால் ஆஸ்திரிய யூதர்களின் நிலைமை என்ன. அவர்களில் 192,000 பேரில் சுமார் 65,000 பேர் கொல்லப்பட்டனர்? பிரான்ஸ் (90,000 பேர் கொல்லப்பட்டனர்), பெல்ஜியம் (30,000 பேர் கொல்லப்பட்டனர்), ஹங்கேரி (500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்) மற்றும் கிரீஸ் (67,000 பேர் கொல்லப்பட்டனர்) யூதர்களை ஸ்னைடர் எந்தப் பிரிவில் வைக்கிறார்?

ஸ்னைடர், பாதிக்கப்பட்டவர்களை எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதிலிருந்து அல்லாமல், மாறாக அவர்கள் நாடு கடத்தப்பட்ட மரண முகாம்களின் இருப்பிடத்தின் மீது முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் யூதப்படுகொலையின் அனைத்து ஐரோப்பிய பாதிப்பின் அளவையும் குறைக்கிறார்.

'யூதப்படுகொலையில் கொல்லப்பட்ட அந்த ஜேர்மன் யூதர்கள் போருக்கு முந்தைய ஜேர்மனியின் எல்லைகளுக்கு அப்பால், லோட்ஸ், மின்ஸ்க் அல்லது ரிகா (Łódz, Minsk, or Riga) போன்ற இடங்களில் இறந்தனர்.'

இவ்வாறு, கிழக்கு ஐரோப்பிய மரண முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு விஷவாயுவால் கொல்லப்பட்ட ஒரு ஜேர்மன் யூதர் ஸ்னைடரின் Bloodlands இற்கு பலியாகிறார். அதில் ஜேர்மன் மற்றும் சோவியத் ஆட்சிகளின் நடவடிக்கைகளின் விளைவாக மரணங்கள் நிகழ்ந்தன எனக் குறிப்பிடப்படுகின்றது. நாஜி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் சமமானவை மற்றும் இதற்கான சமமான பொறுப்புக் கொண்டவை எனப்படுகின்றது.

இந்த ஆய்வறிக்கை நீண்ட காலமாக நாஜி சார்பான நியாயப்படுத்தல் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அனைத்து வரலாற்று பொய்மைப்படுத்தல்களை போலவே, ஸ்னைடரும் வினோதமான கூற்றுக்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை அடித்தளமாக கொண்டுள்ளார்.

ஸ்னைடர் எழுதுகிறார்: 'இன்னும் துல்லியமாக ஜேர்மனியில் அல்ல 'கிழக்கில்' தான் யூதர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர்.' உண்மையில், ஜேர்மனியில் யூதர்களின் இருப்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. கார்ல் மன்னரின் நிர்வாகத்தில் யூதர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

ஸ்னைடர் மேலும் கூறுகிறார்: 'முரண்பாடாக[!], ஜேர்மனியர்கள் அவுஷ்விட்ஸுக்கு அனுப்ப விரும்பிய பெரும்பாலான யூதர்கள் உண்மையில் தப்பிப்பிழைத்தனர்.' இந்த அசாதாரண அறிக்கையை ஆதரிக்க அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ஏறக்குறைய 1.1 மில்லியன் மக்கள், பெரும்பாலும் யூதர்கள், அவுவிட்ஸில் விஷவாயுவால் இறந்தனர்.

ஸ்னைடர் எழுதுகிறார்: 'யூதப்படுகொலையின் மையம் அவுஷ்விட்ஸுக்கு கிழக்கே, ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் மரண முகாம்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் மரணக் குழிகளில் இருந்தது.' ஆனால் மரண முகாம்களைக் கட்டவும், யூதர்களை அங்கு கொண்டு செல்லவும், அவர்களை கொலை செய்யவும் யார் முடிவு செய்தார்கள்?

யூதர்களை அழித்தொழிப்பதற்கான நாஜி முடிவு 1942 இல் பேர்லினில் நடந்த வான்ஸீ (Wannsee) மாநாட்டில் எடுக்கப்பட்டது என ஸ்னைடர் குறிப்பிடவில்லை. சோவியத் சோசலிச குடியரசிற்கு எதிரான ஹிட்லரின் 'அழிப்புப் போருடன்' யூதப்படுகொலை பிரிக்கமுடியாத வகையில் தொடர்புடையது என்ற நன்கு நிறுவப்பட்ட உண்மையையும் அவர் புறக்கணிக்கிறார்.

அவர் நாஜி சார்பான மற்றும் யூத எதிர்ப்பு உக்ரேனிய தேசியவாதத்தை புறக்கணிக்கிறார். இதனால் மூன்றாம் குடியரசின் இனப்படுகொலை பிரச்சாரத்தின் செயல்திறனை விளக்க முடியாதுள்ளது. பின்னூட்டத்தில் ஸ்டீபன் பண்டேரா மற்றும் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.

ஸ்னைடர் வரலாற்றாசிரியர் சோல் ஃபிரீட்லாண்டரின் (Saul Friedlander) வேலையைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் யூதர்களை அழிப்பதில் உக்ரேனிய-நாஜி ஒத்துழைப்பை பற்றி ஃபிரீட்லாண்டர் எழுதியதை அவர் புறக்கணிக்கிறார். ஃபிரீட்லாண்டர் பாரிய கொலையில் OUN பங்கு பற்றிய கொடூரமான ஆதாரங்களை மேற்கோள் காட்டுகிறார்.

பண்டேராவின் OUN அமைப்பின் வரையறுக்கும் பண்புகள், 'கிறிஸ்தவ நம்பிக்கைகள், பாசிச கொள்கைகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான கொலைவெறி ஆகியவற்றின் கலவையாகும்' என்று ஃபிரீட்லாண்டர் எழுதினார். [The Years of Extermination: Nazi Germany and the Jews, 1939-1945]

ஸ்டீபன் பண்டேரா இப்போது உக்ரேனிய அரசாங்கத்தால் ஒரு தேசியத் தலைவராக போற்றப்படுகிறார். ஸ்னைடர் ஒருமுறை OUN இன் குற்றங்களைப் பற்றி விரிவாக எழுதினார். ஆனால் அவர் உண்மையான வரலாற்று ஆராய்ச்சிக்கான கொள்கைகளை கைவிட்டு உக்ரேனில் அமெரிக்க கொள்கையின் பிரச்சாரகராக மாறுவதற்கு முன்பு அது நிகழ்ந்தது.

உக்ரேனிய தேசியவாதிகளின் குற்றங்களை ஸ்னைடர் மூடிமறைக்கிறார் என்பதை அறிந்த பல வல்லுநர்கள் யூதப்படுகொலை ஆய்வுகள் துறையில் உள்ளனர். ஆனால் அவர்கள் ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தால் பயமுறுத்தப்படுகிறார்கள் மற்றும் ஸ்னைடரை அம்பலப்படுத்தத் துணியவில்லை. அவர்களில் சிலர் விரைவில் இது பற்றி பேச முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம்.

Loading