முன்னோக்கு

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ வடக்கு முன்னணியை திறக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சுவீடனும் பின்லாந்தும் வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பில் (நேட்டோவில்) இணைவதற்கும் மற்றும் ரஷ்யா உடனான அதன் மோதலை விரிவாக்கவும் அவற்றின் விருப்பத்தை வெளியிட்டு, அவற்றின் பல தசாப்த கால நடுநிலைமையைக் கைவிடுவதாக மே 16 இல் அறிவித்தன.

அதற்குப் பின்னர் மூன்று வாரங்களுக்குள், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு நீரிலும் நிலத்திலும் சண்டையிடும் அமெரிக்கத் தாக்குதல் போர்ப் படைக்குழு வந்தடைந்ததுடன், அது ஒரு கடற்படை கொத்தளமாக மாற்றப்பட்டுள்ளது, தாக்கும் போர்க் கப்பல் USS Kearsarge, துறைமுக நங்கூரக் கப்பல் USS Gunston Hall, இலக்கு நிர்ணயித்து ஏவுகணைகளை அழிக்கும் USS Gravely மற்றும் கட்டளையகக் கப்பல் USS Mount Whitney ஆகியவை அந்தப் போர்ப் படைக்குழுவில் உள்ளடங்கி உள்ளன.

Ships participating in exercise BALTOPS22 prepare to depart Stockholm, June 5, 2022. (Credit: US Navy)

அமெரிக்காவைத் தவிர வேறு எந்த கடற்படையிலும் ஒரு விமானந்தாங்கி போர்க் கப்பலாக வகைப்படுத்தக் கூடிய ஒரு மிகப் பெரிய போர்க் கப்பலான Kearsarge இல் இருந்தவாறு, அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி மார்க் மில்லி கூறுகையில், நியூ யோர்க் டைம்ஸ் வார்த்தைகளில் கூறுவதானால், பால்டிக் கடலை ஒரு 'நேட்டோ ஏரி' ஆக மாற்றும் அவர் விருப்பத்தை அறிவித்தார்.

1800 களின் தொடக்கத்தில் நெப்போலியன் போர்களுக்குப் பின்னர் இருந்து சுவீடன் உத்தியோகபூர்வமாக அணிசேராமல் இருந்தது, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களிலும் அது நடுநிலை வகித்தது.

இப்போதோ, வெறும் ஒரு சில வாரங்களுக்குள், அந்நாடு ரஷ்யா உடனான அமெரிக்கப் போரின் ஒரு புதிய முன்னணியாக மாற்றப்பட்டுள்ளது, அதன் நகரங்களில் பாரியளவில் அமெரிக்க-நேட்டோ இராணுவப் பிரசன்னம் உள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக, அச்சுறுத்தும் வகையில், ரஷ்ய தொலைதூர ஆயுத அமைப்புகளால் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன.

பின்லாந்து மற்றும் சுவீடனை நேட்டோவின் நடைமுறை உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்ள அழுத்தமளிப்பதன் மூலம், அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான அதன் போரில் இரண்டாவது முகப்பைத் திறந்து விட்டுள்ளது, அது ஒட்டுமொத்த பால்டிக் கடற்கரையையும் ஒரு வெடி உலையாக மாற்றி வருகிறது.

BALTOPS 22 பயிற்சியின் பாகமாக இந்தக் கப்பல்கள் வந்துள்ளன, நேட்டோ தகவல்படி, 'பதினான்கு நேட்டோ கூட்டாளிகள், இரண்டு நேட்டோ பங்காளி நாடுகள், 45 க்கும் அதிகமான கப்பல்கள், 75 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சுமார் 7,000 இராணுவத்தினர் இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஜூன் 2021 இல் கிரிமியன் தீபகற்பத்தைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் பயணித்த நடுத்தரப் போர்க்கப்பல் HMS Defender ஐ பிரிட்டன் அனுப்பியது, அப்போது அந்தக் கப்பல் பயணித்த பாதையில் ரஷ்யப் படைகள் குண்டுகள் வீசுவதற்கு இட்டுச் சென்ற ஒரு விட்டுக்கொடுப்பற்ற நிலைத் தூண்டப்பட்டிருந்தது.

இந்தப் பயிற்சியானது முற்றிலும் ரஷ்யா உடனான தற்போதைய மோதலின் கட்டமைப்புக்குள் வைத்துப் பார்க்கப்படும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

'கடந்த BALTOPS பயிற்சிகளில், நாளைய சவால்களைச் சந்திப்பது பற்றி நாங்கள் உரையாடினோம்,' என்று கடற்படைத் தாக்குதல் படைப்பிரிவு மற்றும் நேட்டோ உதவிப் படை (STRIKFORNATO) மற்றும் அமெரிக்க ஆறாவது படைப் பிரிவின் தளபதி துணை அட்மிரல் ஜீன் பிளாக் கூறினார். “அத்தகைய சவால்கள் இங்கே, இப்போது எங்கள் மீது உள்ளன,” என்றார்.

அமெரிக்கா உக்ரேனியப் போரை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி, பின்லாந்தை நேட்டோவில் இணைப்பதன் மூலம் ரஷ்யாவை ஒட்டியுள்ள நேட்டோவின் நில எல்லையை இரட்டிப்பாக்க முயல்கிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஒரு முன்முகப்பாக மாற்ற, பல ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள திட்டங்களை அமெரிக்கா இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது முன்னர் 2014 ஆட்சிக் கவிழ்ப்புச் சதியைத் தொடர்ந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கொண்டு உக்ரேனை ஆயுதமயப்படுத்தி, அதை அமெரிக்க/நேட்டோ பினாமியாக மாற்றிய அதே விதத்தில், ஆனால் இன்னும் பெரியளவில், செய்யப்படும் ஒரு மறுநடவடிக்கையாக அச்சுறுத்துகிறது.

சம்பவங்களின் இந்தத் திருப்பம் உக்ரேன் மக்கள் மீது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது, இந்தாண்டு போரின் விளைவாகப் பத்தாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த அபிவிருத்தியுடன் சேர்ந்து, அமெரிக்க/நேட்டோ போர் முயற்சியின் பயங்கரமான நோக்கங்கள் அதிகரித்தளவில் தெளிவாகி வருகின்றன. அவை 2021 இல் உக்ரேன் முதலில் அறிவித்தவாறு, இராணுவ வழிமுறைகள் மூலமாக கிரிமியாவை மீண்டும் மீட்டெடுப்பதற்கான நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டு உள்ளன. அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக உடைக்கும் முனைவின் பாகமாக, பால்டிக் மற்றும் கருங்கடல் மீது அதன் முழுக் கட்டுப்பாட்டைப் பெற முயல்கிறது.

தி அட்லாண்டிக் இல் வெளியாகி பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு கட்டுரையில், அணு ஆயுதப் போருக்கு வக்காலத்து வாங்கும் ஹெர்மன் கான் நிறுவிய ஹட்சன் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் ஒரு வல்லுனர், கேய்சி மைகெல் குறிப்பிடுகையில், “சோவியத் ஒன்றியம் மற்றும் ரஷ்யப் பேரரசின் கலைப்பு மட்டுமல்ல மாறாக உலகின் ஏனைய பகுதிகளுக்கு மீண்டும் ஒருபோதும் ஓர் அச்சுறுத்தலாக இல்லாதவாறு ரஷ்யாவையே கலைக்க' பாதுகாப்புத் துறைச் செயலர் டிக் சீனெ 1991 இல் வைத்த முன்மொழிவை உடன்படும் விதமாக மேற்கோளிட்டார்.

மைக்கேல் பின்வரும் தீர்மானத்தைத் தருகிறார்: 'புஷ் மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த போது ரஷ்யாவின் ஏகாதிபத்திய அபிலாஷைகளை முறியடிப்பதற்குப் பதிலாக, வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள், நல்லதே நடக்குமென நம்பினார்கள். நமக்கு இனி அந்தச் சௌகரியம் கிடையாது. 1991 இல் தொடங்கிய அந்தத் திட்டத்தை மேற்கு நிறைவு செய்தாக வேண்டும். அது முழுமையாக ரஷ்யாவை விடுவிக்க முயல வேண்டும்.”

ரஷ்யாவை 'சிதைக்க' வலியுறுத்துவதன் மூலம், அமெரிக்க ஊடகம் ஒரு செய்தியை அனுப்புகிறது: அதாவது, போரின் நோக்கம் வெறுமனே தற்போதைய அரசாங்கத்தைத் தூக்கியெறிவது மட்டுமல்ல, ரஷ்யாவைத் திட்டமிட்டு அழிப்பதும் அதைத் துண்டாடி, அதன் மூலோபாயக் கனிம வளங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆதார வளங்களைச் சூறையாடுவதும் ஆகும்.

மே 21 இல் உக்ரேனுக்கு 40 பில்லியன் டாலர் ஆயுதப் பொதியில் கையெழுத்திட்டதற்குப் பின்னர், அமெரிக்கா கூடுதலாக 700 மில்லியன் டாலர் ஆயுதங்களை அறிவித்தது, அத்துடன் M109 தானியங்கி சிறு பீரங்கி, ஹார்பூன் கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 50 மைல் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் நடுத்தர தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தியது.

வாரயிறுதியில், ரஷ்யா கியேவில் உள்ள டாங்கிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, அந்த டாங்கிகள் நேட்டோ உறுப்பு நாடுகளால் வழங்கப்பட்டதாக மாஸ்கோ கூறியது. நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ரஷ்யாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில், காஸ்பியன் கடல் மீது பறந்த போர் விமானங்களில் இருந்து அந்த வான்வழித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

கடந்த வாரம், ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் அல் ஜசீராவுக்குக் கூறுகையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ வழங்கிய ஆயுதங்கள் ரஷ்யாவுக்குள் இலக்கு வைக்கப்பட்டால், நேட்டோ பகுதிக்கு எதிராக ரஷ்யா தாக்குதல்களை நடத்தும் என்று கடுமையாகச் சூசகமாகக் கூறினார்.

'இந்த ஆயுதங்கள் ரஷ்ய நிலப்பரப்புக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால், பின்னர் முடிவெடுக்கும் மையங்களைத் தாக்குவதை தவிர எங்கள் ஆயுதப் படைகளுக்கு வேறு வழியில்லை,' என்று மெட்வடேவ் அறிவித்தார். 'நிச்சயமாக, இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கும் மையங்கள், துரதிர்ஷ்டவசமாக, கியேவ் எல்லைக்குள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,' என்றார்.

மெட்வடேவ் விவரித்ததைப் போன்ற ஒரு தாக்குதலை அமெரிக்கா வரவேற்கும் என்று தீர்மானிக்காமல் இருப்பது சாத்தியமில்லை, இது போர் நடத்துவதில் எஞ்சியிருக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அகற்ற அனுமதிக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் இந்த மோதலில் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், அமெரிக்க-நேட்டோ கொள்கையின் பொறுப்பற்ற தன்மையைப் புவிசார் அரசியலின் பூதக் கண்ணாடி மூலமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியாது.

உள்நாட்டு சமூகப் பதட்டங்களை வெளியில் திசை திருப்பும் முயற்சியின் பாகமாகவும், மற்றும் ஒரு கற்பனையான 'தேசிய ஐக்கியத்தை' செயல்படுத்தவும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு ஒரு நிரந்தரப் போர் நிலை தேவைப்படுகிறது. பைடென் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் 'என்றென்றும் போரை' முடிவுக்குக் கொண்டு வந்தமை, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராகப் போரை நடத்துவதில் மீள ஒருமுனைப்படுவது மற்றும் மறுநிலைநிறுத்தல்களை செய்வதன் பாகமாக இருந்தது என்பது இப்போது தெளிவாகிறது.

அதே நேரத்தில், 'பயங்கரவாதம் மீதான போரை' 'வல்லரசு மோதலாக' மாற்றியமைக்குத் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலை விரிவாக்க வேண்டியுள்ளது. பணக்காரர்களுக்கான பிணையெடுப்புக்கு எடுக்கப்படாத கையிலுள்ள அனைத்து சமூக ஆதார வளங்களையும் போர் கருவிகளுக்குத் திருப்பி ஆக வேண்டியுள்ளது. காங்கிரஸ் ஒதுக்கிய பாரியளவிலான தொகைகளை, குறிப்பாக சமூக திட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஏனைய அரசு செலவினங்கள் மீதான தாக்குதல்கள் மூலமாக, தொழிலாள வர்க்கம் செலுத்துமாறு செய்தாக வேண்டும்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கான உள்நாட்டு அங்கங்களான, வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய இரண்டுமே, முறையே, வார இறுதியில், தகுதியுடைவர்களுக்கான சமூகத் திட்டங்களை வெட்டக் கோரி தலையங்கங்களைப் பிரசுரித்தன. ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான மருத்துவ உதவித் திட்டத்தில் இருந்து மில்லியன் கணக்கானவர்களை அகற்றுமாறு ஜேர்னல் கோரியது. நரமாமிசவாதம் (cannibalism) மூலமாக வறுமையைப் போக்க ஜோனாதன் ஸ்விஃப்டின் நையாண்டி முன்மொழிவை வெளிப்படையாக குறிப்பிட்ட வாஷிங்டன் போஸ்ட் சமூக பாதுகாப்புச் சலுகைகளில் ஒரு 'மிதமான' குறைப்புக்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் இந்த பத்திரிகைகள் முன்மொழிந்த சிக்கன நடவடிக்கைகள் ஆரம்பம் மட்டுந்தான். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகையே கைப்பற்றுவதற்கான திட்டமானது, முதலாளித்துவ நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் நோக்கில் பாரியளவிலான சமூக உறவுகளின் மறுசீரமைப்பை உள்ளடங்கி உள்ளது. அதே நேரத்தில், போர் விரிவாக்கப்படுவதன் விளைவாக ஏற்படும் வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்பாடு, போருக்கு எதிராக அணித்திரட்டப்பட வேண்டிய சமூக சக்தியாக தொழிலாள வர்க்கத்தை வெளிப்படுத்துகிறது.

அதிகரித்து வரும் விலைகளுக்கு ஏற்ற சம்பள உயர்வுகளுக்காக நாடு முழுவதிலுமான வேலையிடங்களில் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள், வேகமாக கட்டுப்பாட்டை மீறி சுழன்று, மனித நாகரீகத்தையே பேரழிவுடன் அச்சுறுத்தி வரும் ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு வேலைத்திட்டம் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Loading