அமைச்சர்களின் இராஜினாமா போரிஸ் ஜோன்சனை பதவியிலிருந்து வெளியேற்ற முனைகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போரிஸ் ஜோன்சனை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வற்புறுத்துவதற்காக நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் இன்று தங்கள் அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

பல்வேறு காலகட்டங்களில் தலைமைத்துவ சவாலாக முன்வந்த இரண்டு மூத்த அமைச்சரவை உறுப்பினர்களிடமிருந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கோள் காட்டப்பட்ட உடனடி காரணம், கிறிஸ் பிஞ்சருக்கு எதிரான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஜோன்சன் அறிந்திருந்த போதிலும், இந்த ஆண்டு பெப்ரவரியில் அவரை கிறிஸ் துணைத் தலைமைக் கொறடாவாக நியமித்தார். ஆனால் இது கன்சர்வேடிவ் கட்சிக்குள் உள்மோதலை ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இது பூட்டுதல்களின் போது மதுபான விருந்துகள் மீதான ஊழல்களுக்குப் பின்னர், டோரிகள் தங்கள் முக்கிய ஆதரவுப் பகுதிகளில் கூட வீழ்ச்சி ஏற்படுத்த வழிவகுத்தது.

சாஜித் ஜாவித் தனது அறிக்கையில், பிரிட்டிஷ் மக்கள் 'தங்கள் அரசாங்கத்திடம் இருந்து நேர்மையை சரியாக எதிர்பார்க்கிறார்கள்' என்று கூறினார். வாக்காளர்கள் இனி அரசாங்கத்தை 'பிரபலமானதாக' அல்லது 'தேசிய நலனுக்காக செயல்படுவதில் திறமையுள்ளதாக பார்க்க மாட்டார்கள்... கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு எங்கள் சகாக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதனை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை காட்டுகின்றது” என்றார்.

சுனக் தனது இராஜினாமாவை ட்விட்டரில் அரை மணி நேரத்திற்குள் ஏறக்குறைய ஒரே மாதிரியான சொற்களில் அறிவித்தார். “அரசாங்கம் ஒழுங்காகவும் திறமையாகவும் கவனமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சரியாக எதிர்பார்க்கிறார்கள்” என எழுதினார்.

இந்த இராஜினாமாக்கள் மட்டும் (அமைச்சரவை மட்டத்தில் இல்லை என்றாலும் இன்னும் அரை டஜன் பேருடன்) ஜோன்சனுக்கு பதவியில் தொடர்வதை கடினமாக்கின்றது. மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்வார்கள் மற்றும் ஜோன்சனுக்கு 'கதவு காட்டப்படும்' என்று டோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ பிரிட்ஜென் கூறினார்.

ஏப்ரல் 5, 2021 திங்கட்கிழமை இலண்டனில் உள்ள டவுனிங் தெருவில் கொரோனா வைரஸ் மாநாட்டின் போது பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Stefan Rousseau/Pool via AP)

ஜோன்சன் ஒரு கட்டாய மற்றும் தொடர் பொய்யர் என்பதை மீண்டும் நிரூபித்ததன் மூலம் பிஞ்சர் ஊழல் மேலும் மோசமாகிவிட்டது.

5 நவம்பர் 2017 அன்று, முன்னாள் ஒலிம்பிக் படகோட்டியும் கன்சர்வேட்டிவ் வேட்பாளருமான அலெக்ஸ் ஸ்டோரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, உதவி நாடாளுமன்ற பிரிவுத்தலைவர் பதவியிலிருந்து பிஞ்சர் இராஜினாமா செய்து, கட்சியின் குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் காவல்துறையை நோக்கி திரும்பினார். முன்னாள் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரொம் பிளென்கின்சாப்பை 'தொட்டதாக' அவர் குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் அவர் நடத்தை விதிகளை மீறவில்லை என்று கண்டறியப்பட்டது.

ஜூன் 30 அன்று, கார்ல்டன் தனியார் உறுப்பினர்களின் மதுபான சாலையில், டோரி ஹான்ட் என்ற இடத்தில் குடிபோதையில் இருவரைப் தொட்டதாக ஒப்புக்கொண்ட பின், பிஞ்சர் துணைத் தலைமைக் கொறடா பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பின்னர் மற்ற குற்றச்சாட்டுகளும் வெளிவந்தன.

ஜோன்சன், பிஞ்சரின் நடத்தையை மிகவும் அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அவரை 'கையால் தொடுபவர்' என்று அழைத்தார், பிரதமரின் பரம எதிரி டொமினிக் கம்மிங்ஸ் அவர் 2020 இல் 'பெயரால் பிஞ்சர் என என்றழைக்கப்படுபவர், இயல்பிலேயே கிள்ளுபவர்' என்று கேலி செய்ததாகக் கூறினார்.

ஆனால் ஜோன்சன் மீண்டும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் இழப்பில் விஷயங்களை வெட்கக்கேடாக முயற்சி செய்தார். ஜூலை 1 ஆம் தேதி, எண் 10, அவரை நியமிக்கும் முன் பிஞ்சருக்கு எதிரான 'குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள்' எதுவும் ஜோன்சனுக்குத் தெரியாது என்று கூறியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிஞ்சர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஜோன்சன் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி அறியாதவர் என்று ஜூலை 4 வரை முன்னணி கூட்டாளிகள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் அன்றைய தினம் அவரது உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் முந்தைய 'குற்றச்சாட்டுகள் பற்றி அவருக்குத் தெரியும் ... அவை தீர்க்கப்பட்ட அல்லது முறையான புகார் கொடுக்கும் அளவிற்கு முன்னேறவில்லை' என்று கூறினார். ஆனால் 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக ஒரு நியமனத்தை நிறுத்துவது பொருத்தமற்றது” என்று கூறினார்.

ஜோன்சன், தனது தலைமை அதிகாரியான ஜெனரல் மைக்கேல் எல்லிஸ் மூலம், நேற்று முந்தைய குற்றச்சாட்டுகள் குறித்து தகவலளிக்கப்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே சமயம் சமீபத்திய குற்றச்சாட்டுகள் வெளிவந்த பின்னர் தன்னால் 'இதை நினைவுகூர முடியவில்லை' என்றும், அதுபற்றி செயல்படாததற்கு 'கடுமையான வருத்தம்' என்றும் கூறினார். 'சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியுறவு அலுவலகத்தில் கிறிஸ் பிஞ்சருக்கு எதிராக ஒரு புகார் செய்யப்பட்டது... என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு விளக்கப்பட்டது. எனக்கு நேரம் கிடைத்தால் நான் அதை மீண்டும் யோசிப்பேன். அவர் இதிலிருந்து ஒரு பாடத்தை படித்துக்கொள்ளவில்லை மற்றும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்வேன்” என ஒப்புக்கொண்டார்.

பின்னோக்கிப் பார்க்கையில், பிஞ்சருக்கு துணைத் தலைமைக் கொறடாவாக அரசாங்கப் பொறுப்பை வழங்குவது 'தவறான செயல்' என்று அவர் கூறினார். ஒரு BBC நேர்காணலில், ஜோன்சன் தனது சொந்த அணியை 'என் சார்பாக விஷயங்களைச் சொன்னதற்காக அல்லது நான் செய்த அல்லது தெரியாததைப் பற்றி விஷயங்களைச் சொல்ல முயற்சிப்பதற்காக' குற்றம் சாட்டினார்.

இந்த சமீபத்திய ஊழல் ஜோன்சனுக்கு எதிரான சக்திகளின் சமநிலையைக் குறைக்கக்கூடும், இருப்பினும் அதற்கு இன்னும் நேரம் எடுக்கலாம். முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்தின் போது, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நிருபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பைனான்சியல் டைம்ஸின் வைட்ஹால் ஆசிரியர் செபாஸ்டியன் பெய்ன், “நீங்கள் ஜோன்சனின் கூட்டாளிகளான ஜேக்கப் ரீஸ் மோக், நடீன் டோரிஸ் ஆகியோரின் முகங்களைப் பார்க்க முடியும்... அவர்கள் இறுகிய முகத்தை கொண்டிருந்தனர். அவர்களின் தனிப்பட்ட நற்பெயர்கள், பிரதம மந்திரி மற்றும் அரசாங்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜாவித் மற்றும் சுனக் செயல்படுவதற்கு முன்னர் எந்தவொரு முக்கிய இராஜினாமாவின் தொடர் விளைவின் எச்சரிக்கை பற்றி அவர், 'இறுதியில் அரசியல் ஈர்ப்பு விதிகள் உதைக்கும் என்று நான் நினைக்கிறேன்' என மேலும் கூறினார்.

பொது சேவைத்துறையின் முன்னாள் தலைவர் லோர்ட் கெர்ஸ்லேக் கூறுகையில், பிரதமரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாலியல் முறைகேடு புகார்கள் பற்றி தெரியாது என்பது 'நினைக்க முடியாதது' என்றார். முன்னாள் வெளியுறவு அலுவலக அதிகாரியும், ஜோன்சனின் கடும் எதிரியுமான சேர் சைமன் [லார்டு] மெக்டொனால்ட் என்பவரிடமிருந்து தரநிலைகளுக்கான நாடாளுமன்ற ஆணையாளர் கேத்ரின் ஸ்டோனுக்கு அனுப்பிய கடிதத்தை அவர் ஏற்றுக்கொண்டார். 'எண் 10 இன் ஆதர்ம வரிகள் உண்மையல்ல, மேலும் திருத்தங்களும் இன்னும் துல்லியமாக இல்லை.'

முன்னணி பின்வரிசை உறுப்பினர் சேர் ரோஜர் கேல் அதே கடிதத்தைப் பயன்படுத்தி, ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அனுமதிக்க கன்சர்வேடிவ்கள் தங்கள் விதிகளை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 1922 ஆம் ஆண்டின் பின்வரிசை டோரி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தற்போதைய விதிகளின் கீழ், கடந்த மாதம் ஜோன்சன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பிப்பிழைத்ததால், மற்றொருவரை அழைப்பதற்கு முன் அவருக்கு ஒரு வருட அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் வரவிருக்கும் தேர்தல்களில் குழுவின் நிர்வாக அமைப்பை மாற்றுவதற்கான நகர்வுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

சமீபத்திய ஊழல் சேர் கெய்ர் ஸ்டார்மரை அரசாங்கத்தில் மாற்றம் மற்றும் டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய நலனுக்காக செயல்பட்டு அவரை நீக்க வேண்டும் என்று பலவிதமாக அழைப்பு விடுக்கத் தூண்டியது. மேலும் நாடாளுமன்றத் தரநிலைக் குழுவின் பிளேயர்வாத தலைவர் கிறிஸ் பிரையன்ட் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

இது தொழிலாளர்களின் முன் அத்தியாவசியப் பிரச்சினைகளை எழுப்புகிறது.

ஜோன்சனின் எதிர்ப்பாளர்கள் 1930களில் இருந்து பிரிட்டிஷ் மற்றும் உலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் ஆழ்ந்த நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை கோருகின்றனர். தனது சொந்த இராஜினாமா கடிதத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கனத்தை சுமத்துவதில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதில் ஜோன்சனுடனான தனது சமீபத்திய கருத்து வேறுபாடு பற்றி சுனக் சுட்டிக்காட்டினார்.“ நமது நாடு பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. அந்த உண்மையைக் கேட்க பொதுமக்கள் தயாராக இருப்பதாக நான் பகிரங்கமாக நம்புகிறேன்,” என்று அவர் எழுதினார்.

“உண்மைக்கு எது மிகவும் நல்லதானதாக இருக்க முடியாதோ அந்தளவிற்கு அது உண்மையல்ல என்பது நம் மக்களுக்குத் தெரியும். சிறந்த எதிர்காலத்திற்கான பாதை இருந்தாலும், அது எளிதான ஒன்றல்ல என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அடுத்த வாரம் பொருளாதாரம் பற்றிய நமது முன்மொழியப்பட்ட கூட்டுப் பேச்சுக்கான தயாரிப்பில், எங்கள் அணுகுமுறைகள் அடிப்படையில் மிகவும் வேறுபட்டவை என்பது எனக்கு தெளிவாகிவிட்டது”.

அதேபோன்று, தொழிற் கட்சியானது 'தேசிய நலனுக்கு' ஆபத்தை விளைவிக்கும் வகையில் எதையும் செய்யாது என்பதை ஆளும் உயரடுக்கிற்கு நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தேசிய நலன்கள் என்பது தொழிலாளர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை ஆதரிப்பதற்கும், பெரிய பெருநிறுவனங்களால் பொருளாதாரத்தை சூறையாடுவதற்கும், வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை அகற்றுவது மற்றும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக போரை நடத்துதலுக்கும் ஒரு மறைமுகமான வார்த்தையாகும்.

ஜோன்சனையும் அவரது இழிவான அரசாங்கத்தையும் வீழ்த்துவது தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும். இதற்கு, ஏற்கனவே இரயில் மற்றும் தபால் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஏனையோரால் நடத்தப்பட்டு வரும் வர்க்கப் போராட்டத்தை, சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், நகராட்சி சில ஊழியர்கள் மற்றும் பிறருடன் அணிதிரண்டு, இப்போது தங்கள் வாழ்வாதாரத்தைக் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒரு பொது வேலைநிறுத்தம் தேவையாகும்.

Loading