பிரான்சின் ஜிரோண்ட் பகுதியில் வரலாறு காணாத வறட்சி மற்றும் வெப்ப அலைக்கு மத்தியில் காட்டுத்தீ மீண்டும் பரவுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம் பிரான்சின் ஜிரோண்ட் பகுதி மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை காட்டுத்தீ அழித்த பின்னர், அது மீண்டும் தென்மேற்கு பிரான்சை சூழ்ந்துள்ளது. ஜிரோண்ட் பொலிஸ் தலைமை அதிகாரி Fabienne Buccio வின் கூற்றுப்படி, தீயானது ஜூலையில் லோன்டிரா வில் ஏற்பட்ட தீயின் தொடர்ச்சியாகும், இது 'வெளியே போகவில்லை' ஆனால் 'நிலத்தடிக்கு சென்றது'. 'வெப்பம், வறண்ட காற்று, வரலாறு காணாத வறட்சி மற்றும் நிலத்தில் கரி அதிகம் இருப்பதால்' தீ மீண்டும் எழுந்ததாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 9 முதல், தீ கூடுதலாக 7,400 ஹெக்டேர் தாவரங்களை எரித்துள்ளது. வரலாறு காணாத வறட்சி மற்றும் 35°C (95 டிகிரி F) க்கும் அதிகமான வெப்பநிலையுடன் மற்றொரு வெப்ப அலைக்கு மத்தியில் இது மிகவும் வறண்ட தாவரங்களால் தூண்டப்படுகிறது. பெரும்பாலும் Hostens மற்றும் Belin-Beliet நகராட்சிகளில் சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 1,100 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளியன்று, ஜிரோண்ட் இன் துணை முதல்வர், Ronan Leaustic, அந்த நாளில் தீ விரிவடையவில்லை என்றாலும், 'வானிலை நிலைகள் நம்மை தீவிர விழிப்புணர்வை நோக்கித் தள்ளுகின்றன' என்று கூறினார்.

ஜூலை 19, 2022 செவ்வாய்க் கிழமை, தென்மேற்கு பிரான்சின் ஃப்ளோட்ஸ் ப்ளூஸ் கேம்பிங் தளத்தில் எரிந்த கார் ஒன்று காணப்படுகிறது. [AP Photo/Bob Edme] [AP Photo/Bob Edme]

தீக்கு எதிரான அவசர நடவடிக்கைகளில், ருமேனியா, ஜேர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியாவில் இருந்து சுமார் 300 தீயணைப்பு வீரர்களும், கிரீஸ், இத்தாலி மற்றும் சுவீடனில் இருந்து 6 கூடுதல் கனடேர் நீர் குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும். வெள்ளிக்கிழமை மாலை, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் ட்வீட் செய்ததாவது, 16,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரெஞ்சு பாலினேசியாவிலிருந்து —16,000 கிலோமீட்டர் தொலைவில்— தீயணைப்பு வீரர்கள் கூட தீயை அணைக்க வரவழைக்கப்பட்டனர்.

தீப்பிழம்பை அணைக்க தன்னார்வ தீயணைப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. குறுகிய அறிவிப்பில் கொண்டு வரப்பட்ட தன்னார்வலர்கள் சிறந்த பயிற்சி பெற்ற நிபுணர்களுடன் இணைந்து ஜிரோண்ட் தீக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவரான Gregory Allione கோரியதை விடக் குறைவாக உள்ளன, ஜூலை மாதம் ஜிரோண்ட் இல் ஏற்பட்ட தீ விபத்துகளுக்குப் பின்னர் Le Monde இடம் 'தன்னார்வலர்களின் ஊதியத்தை அரசாங்கம் ஈடுகட்ட வேண்டும், அதனால் தீயை எதிர்த்துப் போராட நிறுவனங்கள் அவர்களை எளிதாகப் பயன்படுத்த முடியும்' என்று கூறினார். ஜூலையில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்குப் பின்னர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

ஜூலை மாதம், ஜிரோண்ட் பகுதியில் காட்டுத்தீயால் லோன்டிரா வனப்பகுதியில் 19,000 ஹெக்டர் (46,950 ஏக்கர்) தாவரங்களும், La Teste-de-Buch இல் 7,000 ஹெக்டர் (17,300 ஏக்கர்) தாவரங்களும் அழிக்கப்பட்டன, அத்துடன் இப்பகுதியில் சுமார் 40,000 குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். நிலையான வன தீ பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தத் தவறியதால் La Teste-de-Buch இல் அதிக எண்ணிக்கை ஏற்பட்டதாக வன சமூகங்களின் தேசிய கூட்டமைப்பு துணைத் தலைவர் Francis Cros லு மொண்ட் இடம் தெரிவித்தார்.

தீ விபத்தின் காரணமாக, போர்தோவிலிருந்து பிரெஞ்சு-ஸ்பானிஷ் எல்லையின் மேற்குப் பகுதி வரை செல்லும் A63 மோட்டார் பாதை, வியாழன் அன்று இரு திசைகளிலும் மூடப்பட்டு, வெள்ளிக்கிழமை ஓரளவு மீண்டும் திறக்கப்பட்டது. வியாழன் அன்று ஸ்பெயினில் இருந்து டஜன் கணக்கான லாரிகள் பிரான்சுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டன.

பிரான்சின் பேர்கண்டி பிராந்தியத்தில் ஜேர்மனியின் எல்லையில் உள்ள Le Jura, கடந்த இரண்டு நாட்களில் குறிப்பிடத்தக்க காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது, 660 ஹெக்டர் (1,630 ஏக்கர்) இரண்டு தீயில் இழந்தது. பிரிட்டானி, அஞ்சோ மற்றும் Ile-de-France பிராந்தியம் உட்பட பிரான்சின் பிற இடங்களில் பல சிறிய தீ இன்னும் கொண்டிருக்கிறது, மேலும் அங்கு போக்குவரத்து சேவைகளை பாதித்துள்ளது.

வியாழன் முதல் சனிக்கிழமை வரை பிரான்சின் தெற்கு மற்றும் மேற்கில் வெப்பநிலை 30 டிகிரியை எட்டும் நிலையில், 2022 ஆம் ஆண்டின் நான்காவது வெப்ப அலையின் பின்னணியில் தீயின் விரிவாக்கம் வருகிறது. இடையிடையே இலேசான மழைப்பொழிவுடன் கூடிய கடுமையான வெப்பத்தின் அலை அலையானது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வறட்சியை ஏற்படுத்தியுள்ளது, இது ஒரு உயர்ந்த மட்டத்திலான ஐரோப்பிய காட்டுத்தீ பருவத்திற்கு வழிவகுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவுக்குள் Belin-Béliet இல் குறைந்தது 17 வீடுகள் அழிக்கப்பட்டன. மூன்று வாரங்களுக்குள் கிராமம் காலி செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஒரு உள்ளூர்வாசி, Karine Monjeau கூறினார்: 'கனவு மீண்டும் தொடங்குகிறது. இதிலிருந்து நாம் எப்போது வெளியேறப் போகிறோம்?”

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பிரான்சில் 60,901 ஹெக்டர் (150,490 ஏக்கர்) காட்டுத்தீயால் அழிக்கப்பட்டுள்ளது — ஒரு முழு வருடத்திற்கான தேசிய சராசரியை விட மூன்று மடங்கும் புதிய உயர்ந்த மட்டமுமாகும். மிகவும் வறண்ட வெப்பநிலையுடன் சமீபத்திய ஆண்டுகளில் ஆகஸ்ட் முழுவதும் மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா முழுவதும் 2022 இல் சாதனை எண்ணிக்கையிலான தீ விபத்துகளைக் கண்டது. ஐரோப்பிய வன தீ தகவல் அமைப்பின் (EFFIS) படி, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை, 615,341 ஹெக்டர் (1,520,541 ஏக்கர்) ஐரோப்பா முழுவதும் எரிக்கப்பட்டது; இந்த தேதியில் முந்தைய அதிகபட்சம் 380,742 ஹெக்டர் (940,834 ஏக்கர்) எரிந்தது. எழுதும் வரையில், 740,583 ஹெக்டர் (1,830,020 ஏக்கர்) இழந்துள்ளதாக EFFIS மதிப்பிட்டுள்ளது, இது ஒரு வாரத்தில் 125,000 ஹெக்டர் (308,882 ஏக்கர்) அதிகரித்துள்ளது.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் காட்டுத்தீயால் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர், குறைந்தது 65,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கோடை மாதங்களில், ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கானோர் கடுமையான வெப்பத்தின் தொடர்ச்சியான அலைகளால் இறந்துள்ளனர்.

இந்த மொத்த எண்ணிக்கை வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும். போர்ச்சுகலில், Serra da Estrela தேசிய பூங்காவும் இந்த வாரம் காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளது. தீ இதுவரை 10,000 ஹெக்டர் (24,711 ஏக்கர்) காடுகளை அழித்துவிட்டது, தற்போது 1,500 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 12 விமானங்கள் மூலம் போராடி வருகின்றனர். ஜூலை மாதத்தில் வரலாறு காணாத தீ அலைகளை கண்ட பிரிட்டன், புதிய சுற்று தீவிர வெப்பத்தை எதிர்கொள்கிறது, வரும் நாட்களில் வெப்பநிலை 36° C (97 டிகிரி F) ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் வியாழக்கிழமை ஜிரோண்டுக்கு விஜயம் செய்தார். லோண்டிராக்கு அருகே பேசிய அவர், காட்டுத்தீ மீதான அரசாங்கத்தின் அணிதிரள்வு 'முழுமையானது' என்றும் அரசாங்கம் இதற்கு முன் 'இவ்வளவு வளங்களை' வழங்கவில்லை என்றும் கூறினார். இந்த உண்மைக்கு சான்றாக ஜூலை தீ விபத்துக்குப் பின்னர் ஏழு நீர்குண்டு ஹெலிகாப்டர்களை அரசாங்கம் வாங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஜிரோண்ட் இன் தற்போதைய நிலைமை காட்டுத்தீயில் இருந்து மக்களைப் பாதுகாக்க மக்ரோன் அரசாங்கம் தவறிவிட்டது என்பதைக் காட்டுகிறது. காட்டுத்தீ பருவத்தின் உச்சத்திற்கு முன்பே, ஜூலையில் நடந்த நிகழ்வுகள், ஜிரோண்டின் மக்கள்தொகையை தொடர்ந்து வரும் வாரங்களில் தீயில் இருந்து பாதுகாக்க உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதைக் காட்டியது.

என்ன நடவடிக்கைகள் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. தீ தடுப்புகளின் மேம்படுத்தப்பட்ட அமைப்புகள், தீ கண்காணிப்பு, அதிக தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவுவதைத் தடுக்கலாம் என்று முன்னணி தீயணைப்பு வீரர்கள் மற்றும் சூழலியல் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். வரலாறு காணாத வறட்சி மற்றும் இன்னுமொரு வெப்ப அலைக்கு மத்தியில், கோடைக்காலம் முடிவதற்குள் மேலும் காட்டுத்தீ தெளிவாக தவிர்க்க முடியாதது, ஆனால் மக்ரோன் அரசாங்கத்தால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜிரோண்ட் இல் மீண்டும் ஒருமுறை கொடிய தீ புதுப்பித்திருப்பது, புவி வெப்பமடைதலையும் அதன் விளைவுகளையும் பிரான்சிலும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கத்தால் சமாளிக்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது. ஐரோப்பா மற்றும் அலாஸ்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ பரவி வருகிறது, மேலும் கலிபோர்னியா மற்றும் வட ஆபிரிக்காவில் குறிப்பிடத்தக்க தீ தொடர்ந்து எரிகிறது. 2020 முதல், காட்டுத்தீ ஆஸ்திரேலியா, ரஷ்யா, வட ஆபிரிக்கா மற்றும் கலிபோர்னியாவின் பெரும் பகுதிகளை அழித்துவிட்டது.

தற்போதைய 1.2°C (2.2°F) புவி வெப்பமடைதலின் விளைவுகள் தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து ஏற்கனவே எண்ணற்ற தீவிர வானிலை நிகழ்வுகளில் எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியுள்ளன, அத்துடன் மில்லியன் கணக்கான காலநிலை அகதிகளின் வெளியேற்றத்திற்கும் காரணமாகின்றன.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் முயற்சிகள், பல் இல்லாத பாரிஸ் உடன்படிக்கை, புவி வெப்பமடைதலை தொழில்துறைக்கு முந்தைய காலநிலையிலிருந்து 2°C (3.6 டிகிரி F) க்கு மட்டுமே கட்டுப்படுத்த முயல்கிறது. ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிறது. புவி வெப்பமடைதல் மற்றும் காட்டுத்தீ உட்பட அதன் விளைவுகள், முதலாளித்துவ சொத்து உறவுகளைத் தூக்கியெறிந்து, மையப்படுத்தப்பட்ட விஞ்ஞான உற்பத்தித் திட்டமிடலுடன் அதை மாற்றுவதன் மூலம் மட்டுமே நிர்வகிக்க முடியும் மற்றும் மாற்றியமைக்க முடியும்.

Loading