கோவிட்-19 இன் இயற்கையான தோற்றம் குறித்த உலக சோசலிச வலைத் தள அறிக்கையை ‘தவறான வழிநடத்துதலாக’ ட்விட்டர் தவறாக வகைப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட காலையில், WSWS எழுத்தாளர் இவான் பிளேக்கிற்கு ட்விட்டர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியது, 'எங்கள் ஆதரவுக் குழு உங்கள் கணக்கை மதிப்பாய்வு செய்துள்ளது, நாங்கள் பிழை செய்ததாகத் தெரிகிறது. ட்வீட் எங்கள் கோவிட்-19 தொடர்பான தவறான தகவல் கொள்கையை மீறவில்லை என்பதை நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏதேனும் சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், விரைவில் உங்களை ட்விட்டரில் சந்திப்போம் என்று நம்புகிறோம்.

கீழே விவரிக்கப்பட்ட தணிக்கை தற்காலிகமாக நீக்கப்பட்டது, ஆனால் சில மணி நேரங்களுக்குள் மீண்டும் திணிக்கப்பட்டது. வூஹான் ஆய்வக பொய்யைப் பற்றிய எங்கள் எழுத்துக்களின் தணிக்கைக்கு எதிராகவும், விஞ்ஞானிகள் மற்றும் கோவிட் எதிர்ப்பு ஆர்வலர்களின் ட்விட்டரின் பொது தணிக்கைக்கு எதிராகவும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புமாறு எங்கள் வாசகர்களை அழைக்கிறோம்.

***

ஆகஸ்ட் 19 அன்று, 'Sars-CoV-2 இயற்கையானது என்பதை இரண்டு சமீபத்திய ஆய்வுகள் மறுஉறுதிப்படுத்துகின்றன' என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள (WSWS)கட்டுரையுடன் இணைக்கும் அனைத்து இடுகைகளுக்கும் ட்விட்டர் எச்சரிக்கையைச் சேர்த்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றுநோய் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கி 'இருக்கலாம்' என்று ஒரு வலைத் தளத்திலிருந்து கட்டுரை வந்ததாக ட்விட்டர் கூறியது.

ட்விட்டர் அதன் பயனர்களை இணைப்பைப் பகிர அனுமதிக்கிறது, ஆனால் மற்ற பயனர்களுக்கு அவர்களின் செய்தி ஊட்டத்தில் ஒரு எச்சரிக்கை தோன்றும்: 'தெரிந்திருக்கவும், இந்த ட்வீட் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று எச்சரிக்கிறது..

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், ட்விட்டரின் முடிவுக்குப் பதிலளிக்கும் வகையில் எழுதினார்: “விஞ்ஞான வெளிப்பாடுகள் மீதான ட்விட்டர் இன் தணிக்கையால் WSWS மீண்டும் இலக்காகியுள்ளது. வூஹான் ஆய்வக பொய் —SARS-CoV-2 வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறி— முற்றிலும் மதிப்பிழந்துவிட்டது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கோவிட்-19 தொற்றுநோய்க்கான WSWS உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் ஒருங்கிணைப்பாளர் இவான் பிளேக் மேலும் கூறினார்: 'இது கொள்கை ரீதியான விஞ்ஞானிகள், நிருபர்கள் மற்றும் கோவிட் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிரான பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.'

WSWS எழுத்தாளரும் ஆசிரியருமான ஆண்ட்ரே டேமன், “@Twitter மற்றும் @TwitterSupport இரண்டு சமீபத்திய ஆய்வுகள் கோவிட்-19 இன் இயற்கையான தோற்றம் குறித்து அறிக்கையிடும் இந்த கட்டுரையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பை உடனடியாக நீக்க வேண்டும். கோவிட்-19 பற்றிய தவறான தகவல் மற்றும் சதி தத்துவங்களை WSWS முறையாக எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

நோர்த், பிளேக் மற்றும் டேமன் ஆகியோரின் அறிக்கைகள் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டன, மேலும் WSWS வாசகர்களும் கோவிட்-19 நிபுணர்களும் எதிர்ப்புடன் பதிலளித்தனர். உதாரணமாக, பொது சுகாதார ஆர்வலரான லோரா மியர்ஸ், “இது அப்பதமானது. இது வெகுதூரம் சென்றுவிட்டது, ட்விட்டர் இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூறினார்.

ட்விட்டரால் எச்சரிக்கப்பட்ட WSWS கட்டுரை, SARS-CoV-2 வைரஸின் விலங்கியல் தோற்றத்தை உறுதிப்படுத்தும் விஞ்ஞான இதழின் ஜூலை 26 பதிப்பில் வெளியிடப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ ஆவணங்களை அடிப்படையாக கொண்டது. இரண்டு விஞ்ஞான ஆவணங்களில், ஒன்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் துறையைச் சேர்ந்த மைக்கேல் வொரோபேவாலும், மற்றொன்று கலிஃபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள Bioinformatics and Systems Program பிரிவைச் சேர்ந்த ஜொனாதன் E. பெக்கராலும் வெளியிடப்பட்டது, இவை, சீனாவின் வூஹானில் உள்ள ஹூவானன் கடல் உணவு மொத்த விற்பனை சந்தையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த காட்டு விலங்குகள்தான் கொரோனா வைரஸூக்கான சாத்தியமான ஆதாரமாக இருக்கலாம் என்ற கருத்தை வலுப்படுத்துகின்றன.

WSWS கட்டுரை, கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்ததாகவும், “மனிதர்களைப் பாதிக்க அவர்களைத் தொற்றியதாகவும்,” செய்தித்தாள்கள் காட்டுவதாக விரிவாக விளக்குகிறது, மேலும் இந்த விஞ்ஞான ஆவணங்கள் பெரும்பாலும் மதிப்பிழந்த ‘வூஹான் ஆய்வக’ சதித் தத்துவத்திற்கு எதிராக மேலும் ஒரு அடி கொடுப்பதைக்” குறிக்கிறது என்று கூறுகிறது.

கோவிட்-19 தொற்றுநோயின் முதல் மாதங்களில் இருந்து, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இணைந்து உலக சோசலிச வலைத் தளம் உழைத்து வந்துள்ளது, அதாவது வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான தாக்கம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் தொடர்ந்து பாடுபட்டுள்ளது. “கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய ‘தொழிலாளர் விசாரணை’” மூலம், WSWS ஆனது, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் பொது சுகாதார நெருக்கடி குறித்து பரப்பப்பட்டு வரும் மூடிமறைப்புக்கள், பொய்மைப்படுத்தல்கள் மற்றும் தவறான தகவல்களை பொதுவில் குறைக்க உதவக்கூடிய நேர்காணல் நிகழ்ச்சிகள், அறிக்கைகள், வீடியோக்கள் மற்றும் பிற ஆதாரங்களின் இணையற்ற காப்பகத்தை சேகரித்து வழங்கியுள்ளது.

WSWS ஒரு சமூக ஊடக தளத்தால் தணிக்கை செய்யப்படுவது இதுதான் முதல் முறை அல்ல. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 வாரங்களுக்கு, 'வாஷிங்டன் போஸ்டின் 'வூஹான் ஆய்வக' சதி தத்துவம் அம்பலமானது' என்ற தலைப்பில் WSWS கட்டுரையைப் பகிர்வதை Facebook தடுத்தது. வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் இருந்து கோவிட்-19 வெளியிடப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது என்று போஸ்ட் ஒப்புக்கொண்டதாக அக்கட்டுரை அறிக்கை செய்தது.

2017 ஆம் ஆண்டில், Project Owl திட்டத்தை கூகுள் செயல்படுத்தியதால் பயனர் போக்குவரத்தில் செங்குத்தான சரிவு ஏற்பட்டதை WSWS கவனித்தது, இது அதன் தேடல் முடிவுகளில் ‘அதிக அதிகாரம் வாய்ந்த உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டுவதற்கு’ வடிவமைக்கப்பட்டிருந்தது. கூகுளின் வழிமுறைகளில் (algorithms) ஏற்பட்ட மாற்றம், இணையதளத்தில் ஒரு மாற்று, இடதுசாரி மற்றும் சோசலிச வெளியீட்டாளர்களுக்கு கூகுள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்தியது என்பதை WSWS வெளிப்படுத்தியது.

அக்டோபர் 28 அன்று, செனட் காமர்ஸ் கமிட்டியின் முன் சாட்சியமளிக்கும் போது, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை, WSWS குறித்து மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தேடுபொறி தணிக்கை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

தொற்றுநோய்களின் தொடக்கத்தில் இருந்தே விஞ்ஞானபூர்வமாக மறுக்கப்பட்டதான வூஹான் ஆய்வக சதித் தத்துவம் என்பது, அமெரிக்க சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், அத்துடன் அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமான தடுக்கக்கூடிய மரணங்களை விளைவித்ததான பொது சுகாதார அவசரநிலை குறித்த அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் பேரழிவுகரமான பதிலிறுப்பு மீதான கவனத்தை திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகவும் அது பயன்படுத்தப்பட்டது.

இந்த கூற்றை உறுதிப்படுத்துவதற்கு கடந்த 32 மாதங்களாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றாலும், SARS-CoV-2 இன் ஆய்வக தோற்றம் பற்றிய போலியான ‘தத்துவம்’ ஆனது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பெய்ஜிங்கிற்கு எதிராக விரிவுபடுத்தப்படும் பொருளாதார மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக முக்கிய அமெரிக்க பெருநிறுவன செய்தி ஊடகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் தொடர்ந்து பரப்பப்படுகிறது.

இதற்கிடையில், ஜனவரி 2020 முதல் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி 6.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வைரஸால் மடிந்துபோன வெகுஜன மரணத்திற்கும், மற்றும் வூஹான் ஆய்வக பொய்யைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும் பொறுப்பாளியான ஆளும் ஸ்தாபகத்தின் கொடிய ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கைகளுக்கும் இடையேயான அரசியல் தொடர்பையும் WSWS சுட்டிக்காட்டியுள்ளது.

WSWS க்கு எதிரான ட்விட்டரின் தவறான கூற்றுக்கள் என்பது, ‘கோவிட் முடிந்துவிட்டது’ அல்லது தற்போது ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரோனின் BA.5 துணைமாறுபாடு வைரஸின் முந்தைய பிறழ்வுகளை விட ‘குறைந்த தொற்றும் தன்மையுள்ளது’ அல்லது ‘குறைந்த ஆபத்துள்ளது’ என்ற தவறான கதைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீதான சமூக ஊடக தளத்தின் பரந்த தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

உதாரணமாக, நெடுங்கோவிட் ஆராய்ச்சி முன்முயற்சி திட்டம் ஞாயிறன்று “தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் கோவிட்-19 நோயின் பரிமாற்றம் குறித்த Nature இதழின் ஒரு பக்கத்திற்கான” இணைப்பை பதிவிட்டதால், அன்று அவர்களின் கணக்கு கொடியிடப்பட்டது, மற்றும் ஒரு டவீட் தடுக்கப்பட்டது. நெடுங்கோவிட் பாதிப்புகள் குறித்த மருத்துவ பரிசோதனைகளை நடத்திவரும் குழு, “ஒரே இரவில், எங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1,117 இல் இருந்து வெறும் 83 ஆக குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளது.

WSWS இன் உள்ளடக்கம் கோவிட்-19 தொற்றுநோய் பற்றி ‘தவறாக வழிநடத்துகிறது’ என்று முத்திரையிடுதலை ட்விட்டர் நீக்க வேண்டும் என்றும், தற்போதைய பொது சுகாதார நெருக்கடி தொடர்பான விஞ்ஞானபூர்வமான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கும் மற்றவர்களின் இடுகைகளை தணிக்கை செய்வதை அது நிறுத்த வேண்டும் என்றும் உலக சோசலிச வலைத் தளம் கோருகிறது.

Loading