ஸ்ரிலோ றூஜ் ஃபேஸ்புக் குழு நிர்வாகிகளுக்கு பகிரங்க கடிதம்: கோவிட்-19 தொற்றுநோய் குறித்த கட்டுரைகளின் தணிக்கையை முடிவுக்கு கொண்டுவா!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியும் (PES), உலக சோசலிச வலைத் தளமும் ஸ்ரிலோ றூஜ் (Stylos rouges - சிவப்பு பேனாக்கள்) ஃபேஸ்புக் குழு நிர்வாகிகளால் COVID-19 தொற்றுநோய் பரவுவது பற்றிய கட்டுரைகளின் தணிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கின்றன. டிசம்பர் 2018 இல் உருவாக்கப்பட்ட இக் குழுவில் பிரான்சில் 70,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். ஐரோப்பா முழுவதும் COVID-19 தொற்றுக்கள் மீண்டும் பரவுவதோடு, ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதால், பள்ளிகளில் வைரஸ் பரவுவது பற்றிய தகவல்களை சுதந்திரமாக விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் ஆசிரியர்களுக்கு ஜனநாயக உரிமை இருப்பது அவசியம்.

'கோபமடைந்த ஆசிரியர்கள், நோய்வாய்ப்பட்ட பள்ளிகள், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற வாசகத்தை ஒரு எதிர்ப்பாளர் வைத்திருந்தார்.

அக்டோபர் 9 அன்று, ஸ்ரிலோ றூஜ் உறுப்பினர் ஒருவர், 'பிரெஞ்சு ஆரம்பப் பள்ளிகளில் முகக்கவச கட்டுப்பாட்டை மக்ரோன் நீக்குகிறார்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். பல நேர்காணல்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிக்கைகளை கொண்ட, பல WSWS கட்டுரைகள், கடந்த 18 மாதங்களில் குழுவில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன, சில நூற்றுக்கணக்கான 'விருப்பங்கள்' மற்றும் கருத்துகளைப் பெற்றன. இருப்பினும், சமீபத்திய இடுகை ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து நிர்வாகிகளால் அது நீக்கப்பட்டது.

கட்டுரை ஏன் அகற்றப்பட்டது என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டபோது, ஸ்ரிலோ றூஜ் குழு நிர்வாகி ஒருவர், “உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான சாமுவல் பட்டியின் மரணம் தொடர்பான மற்றும் எங்கள் ஊதியம் தொடர்பான கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவது கொள்கையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார். சாமுவல் பட்டி, அக்டோபர் 2020 இல் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். நிர்வாகிகளுக்கு அவர்களின் முடிவை மேல்முறையீடு செய்ய அனுப்பிய இரண்டு பின்தொடர்தல் செய்திகள் பதிலளிக்கப்படவில்லை.

தணிக்கை செய்யப்பட்ட கட்டுரை, பள்ளிகளில் மக்ரோனின் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி விபரிக்கிறது. அதன் பகுப்பாய்வு, Public Health France and modelling by the Pasteur Institute வழங்கிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. அது, கால்கேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். மல்கோர்சாட்டா காஸ்பெரோவிச் என்பவரையும் மேற்கோள் காட்டியது, அவருடைய பணியானது, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் கடுமையான விஞ்ஞான நடவடிக்கைகளுக்குள் COVID-19 ஐ அகற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

ஸ்ரிலோ றூஜ் ஃபேஸ்புக் குழுவின் செயல்கள் பல கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. தொற்றுநோய், பள்ளிகளுக்குள் அதன் தாக்கம், குழந்தைகள் மீதான அதன் தாக்கம், பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் வேறு என்ன கட்டுரைகள் நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன? இந்த முக்கியமான தகவலை ஆசிரியர்கள் அணுகுவதைத் தடுக்க ஏன் முடிவெடுக்கப்பட்டது?

ஆசிரியர்களின் ஊதியம் அல்லது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களின் ஆபத்து பற்றிய தகவல்களைக் காட்டிலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றிய தகவல்கள் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவை அல்ல என்ற கூற்று வெளிப்படையாக அபத்தமானது. கொடிய வைரஸ் பள்ளிகளில் தொடர்ந்து பரவி, ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பாதிக்கிறது. பிரெஞ்சு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. பிரான்சில் குறைந்தது ஒன்பது குழந்தைகள் ஏற்கனவே வைரஸால் இறந்துள்ளனர். டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனையில் உள்ளனர்.

வகுப்பறைகளில் வைரஸ் தாக்கி இறந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. இந்தத் தகவல் அரசாங்க அதிகாரிகளால் மறைக்கப்படுவதோடு, தொழிற்சங்கங்களால் தெரிவிக்கப்படாமல் விடப்படுகிறது.

ஸ்ரிலோ றூஜ் ஃபேஸ்புக் குழுவின் நிர்வாகிகள், கோவிட்-19 தொற்றுநோய் ஆசிரியர்களுக்குப் பொருத்தமற்றது என்று கூறலாம், ஆனால் ஆசிரியர்கள் அதைத் தாங்களே தீர்மானிக்க முடியும் என்பது அடிப்படை ஜனநாயக உரிமை. அத்தகைய தகவல்கள் இல்லாமல், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களினதும், தமதும் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களினதும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எப்படி போராட முடியும்?

சமீபத்திய வாரங்களில் பிரான்சில் வைரஸ் விரைவாக மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் இது மிகவும் முக்கியமானதாகும். அக்டோபர் 30 ஆம் தேதி பதிவான 7,360 தொற்றுக்கள் செப்டம்பர் 21 க்குப் பின்னர் மிக அதிகமாகும்.

கடந்த காலங்களில், தொற்றுநோய் பற்றிய தகவல்களை ஆசிரியர்களுக்கு வழங்க ஸ்ரிலோ றூஜ் முயன்றது. அதன் இணையதளத்தில், ஆசிரியர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு, பிரான்ஸ் முழுவதும் தொற்றுநோயின் பரிணாமத்தை கண்காணிக்க, COVID-19 தகவல் பக்கம் உள்ளது. மே 2020 முதல் இந்தப் பக்கம் நான்கு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதன் மூலம், இந்தத் தகவலில் ஆசிரியர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். அப்படியானால், பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் வைரஸின் புதிய எழுச்சிக்கு மத்தியில், WSWS இலிருந்து தொற்றுநோய் பற்றிய விஞ்ஞானரீதியான செய்திகளுக்கு ஆசிரியர்களின் அணுகலைத் தணிக்கை செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்?

அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், தங்கள் செயல்களால். பள்ளிகளில் குழப்பத்தையும் பாதுகாப்பின்மையையும் விதைக்கும் மக்ரோன் அரசாங்கத்தின் முயற்சிகளை புறநிலை ரீதியாக நிர்வாகிகள் ஆதரிக்கின்றனர் மார்ச் 2020 இல் தொடங்கிய ஆரம்ப பூட்டுதல் முடிவடைந்ததிலிருந்து, வைரஸ் பரவுவதில் ஏற்படும் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட முறையில் பள்ளிப்படிப்பை எல்லா விலையிலும் தொடர வேண்டும் என்று மக்ரோன் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குழந்தைகளின் உளவியல் நல்வாழ்வைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியும்.

மக்ரோனின் கொள்கையின் மையப் பகுதி: பெருநிறுவன இலாபம் ஈட்டும் செயல்பாடுகளில் எந்தத் தடையையும் தடுக்கும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பதோடு, வைரஸ் பரவும் வெகுஜன தொற்று மூலம் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை' அடைய அவர் முயற்சிக்கிறார்.

பிரான்சில் இந்த சமூக படுகொலைக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். நவம்பர் 2020 இல், கல்வியாளர்கள் டஜன் கணக்கான பள்ளிகளில் வகுப்புகளை மூடுவதற்காக திடீர் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தனர் மற்றும் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் பள்ளிகளை பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதை எதிர்த்தனர்.

ஆசிரியர் சங்கங்கள் எந்தவொரு பரந்த அணிதிரட்டலையும் எதிர்ப்பதால் மட்டுமே இந்த இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் தொடக்கத்தில் இருந்து பள்ளிகளில் மக்ரோன் அரசாங்கத்தின் கொலைகார சுகாதாரக் கொள்கையை ஆதரித்து செயல்படுத்திய Sud Education மற்றும் CGT தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத்திற்கு நிர்வாகிகளின் நடவடிக்கைகள் சேவை செய்கின்றன.

ஆளும் உயரடுக்கின் சமூக படுகொலை கொள்கைக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஸ்ரிலோ றூஜ் ஃபேஸ்புக் குழுவின் நிர்வாகிகள் தகவல்களை இலவசமாக பரப்ப அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் கோருகிறோம், இது இல்லாமல் ஆசிரியர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க ஒரு வெற்றிகரமான போராட்டத்தைப் பற்றி பேச முடியாது. ஃபேஸ்புக் குழுவின் உறுப்பினர்களை குழுவின் நிர்வாகிகளுக்கு எழுதுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் மற்றும் அவர்கள் தொற்றுநோய் பற்றிய கட்டுரைகளின் தணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோருகிறோம். அவர்களின் கடிதங்களின் நகலை WSWS க்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்: https://www.wsws.org/en/special/pages/contact.html.

Loading