முன்னோக்கு

UAW தலைவர் தேர்தல் விவாதம்: ஒரு சாமானிய சோசலிசவாதி தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (UAW) தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். முதன்முறையாக, ஒரு சாமானிய வாகனத் தொழிலாளியான தலைவர் பதவிக்கான வேட்பாளர் வில் லெஹ்மன், 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் பார்க்கப்பட்ட ஒரு இணையவழி மன்றத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நேரடியாக எதிர்கொள்ள முடிந்தது.

இந்த விவாதம் இரண்டு ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியது.

சகிக்க முடியாத வேலை நிலைமைகள், வீழ்ச்சியடைந்து வரும் உண்மையான ஊதியங்கள் மற்றும் UAW ஆல் ஆதரவளிக்கப்பட்ட தீவிர சுரண்டலுக்கு எதிராக போராடுவதற்கு முன்னோக்கி செல்லும் வழியை தேடும் நூறாயிரக்கணக்கான சாமானிய தொழிலாளர்களிடம் லெஹ்மன் தனது கருத்தை முன்வைத்தார்.

UAW தலைவர் ரே கரி, நீண்டகால அதிகாரத்துவவாதியான ஷான் ஃபைன், 163 ஆவது உள்ளூர் தொழிற்சாலை தொழிற்சங்க தலைவர் மார்க் கிப்சன் மற்றும் பிரையன் கெல்லர் ஆகிய ஏனைய அனைத்து வேட்பாளர்களும் பல தசாப்தங்களாக விட்டுக்கொடுப்புக்களை மேற்பார்வையிட்ட மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக செயற்பட்ட ஒரு அமைப்பை பாதுகாத்தனர். அந்த அமைப்பிற்கான எந்த எதிர்ப்பும் 'பிளவுபடுத்தும்' என்று வலியுறுத்தி அதற்குள் இருந்த தங்கள் 'அனுபவத்தை' பரப்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் ஏமாற்றிக் கையாளப்படக்கூடிய பொருட்களாக மட்டுமே இருக்கின்றனர். (பார்க்க, வரலாற்று விவாதத்தில், UAW தலைவர் வேட்பாளர் வில் லெஹ்மன், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழிக்கவும், சாமானிய தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கவும் அழைப்பு விடுத்தார்)

விவாதத்தின் போது, UAW இல் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் சர்வதேசரீதியான அனைத்து தொழிலாளர்களுக்கு ஒரு தெளிவான மூலோபாயத்தை லெஹ்மன் முன்வைத்தார்.

முதலாவதாக, அவர் ஒரு புதிய அதிகாரத்துவத்திற்கான அமைப்பை நிறுவுவதற்கான விடயத்தை முன்வைத்தார். அதாவது தொழிலாளர்கள் தமது போராட்டத்தை ஐக்கிப்படுத்துவதற்கும் தமது தலைவிதியை தம்மால் கட்டுப்படுத்துவதற்குமான சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் ஒரு வலைப்பின்னலை உருவாக்குவதன் தேவையை முன்வைத்தார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் UAW அதிகாரத்துவத்துடன் எவ்வாறு பணியாற்றுவார் என்ற நியூ யோர்க் டைம்ஸின் முன்னாள் நிருபரான ஸ்டீவன் கிரீன்ஹவுஸின் கேள்விக்கு பதிலளித்த லெஹ்மன், “அவர்களில் எவருடனும் நான் பணியாற்ற விரும்பவில்லை. எனது முன்னுரிமை முழு நேரமும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து, சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை உருவாக்கி நாமே முடிவுகளை எடுப்பதுதான். பல தசாப்தங்களாக எங்களை விற்றுவிட்ட அதே அதிகாரத்துவ முறைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை. … மீண்டும், நான் தொழிற்சாலை தளத்தில் உள்ள தொழிலாளர்களை ஒழுங்கமைக்க முயலுவேன். ஏனென்றால் எல்லா அதிகாரமும் அங்குதான் உள்ளது. இந்த அதிகாரம் அதிகாரத்துவத்திடம் இல்லை” என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அவர் மேலும் கூறினார், “நாங்கள் பேசுவது இரண்டு தனித்துவமான அடுக்குகளை பற்றியதாகும். இங்குள்ள அதிகாரத்துவத்தினர் அதை விரும்ப மாட்டார்கள். ஆனால் நான் அவர்களுடன் பேசவில்லை. தொழிலாளர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும் அவர்களிடம் நான் பேசுகிறேன், நான் அவர்களுக்கு கூறுவது என்னவெனில் :மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தை மறுசீரமைக்க வேண்டும்” என்பதாகும்.

சாமானிய தொழிலாளர்களின் அமைப்பு 'பிளவுபடுத்தும்' என்ற கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், 'நான் உருவாக்கும் ஒரே பிரிவு தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு இடையேதான்' என்று லெஹ்மன் பதிலளித்தார்.

அதிகாரத்துவத்தில் இருந்து சாமானிய தொழிலாளர்களை பிரிக்கும் சமூக பிளவு பற்றிய விடயம் விவாதம் முழுவதும் வளர்ந்தது. ஒரு சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொண்ட ஃபெயினின் அறிக்கையின்படி, 'எங்கள் அணிகளில் ஊழல் உள்ளது' என்றும் அது UAW ஐ பின்தள்ளியது என்றார். லெஹ்மன் அதற்கு ''எங்களிடம்' தொழிற்சாலையில் உள்ள 'எங்கள் அணிகளில்' ஊழல் இல்லை” எனப் பதிலளித்தார்.

“எங்களிடம் எந்த ஊழலும் இல்லை. ஊழல் செய்தது அதிகாரத்துவம்தான்... நாங்கள் அவர்களை போன்றவர்களல்ல. தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தில் இருந்து வேறுபட்டவர்கள். மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் அதிகாரத்தை நேரடியாக தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”.

இந்த விவாதம் முழுவதும் லெஹ்மன் மட்டுமே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவம், அவர்கள் எதிர்த்த ஒப்பந்தங்களை ஏற்க வேண்டிய கட்டாயம், வறுமை நிலை ஊதியத்திற்கு வேலை செய்த அனுபவம் போன்ற தொழிலாளர்களின் அனுபவங்களைப் பற்றி பேசக்கூடியதாக இருந்தது.

2020ல் ஆலைகளை மீண்டும் திறக்க நிறுவனங்களுக்கு UAW உதவிய பிறகு, பணியில் இருந்தபோது அல்லது கோவிட்-19 காரணமாக இறந்த தனிப்பட்ட தொழிலாளர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மற்ற வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கிரீன்ஹவுஸ் கேட்டபோது, லெஹ்மன் தொழிற்சாலையில் உள்ள பயங்கரமான சூழ்நிலைகளால் கருச்சிதைவு ஏற்பட்ட பெண் தொழிலாளர்களின் அனுபவங்களை எடுத்துரைத்தார்.

இரண்டாவதாக, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு அவர் சக்திவாய்ந்த அழைப்பு விடுத்தார். 'தொழிலாளர்கள்தான் அனைத்து இலாபத்தையும் உருவாக்குகின்றார்கள்' என்று அவர் கூறினார். 'நாம் அனைவரும் சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால், இந்த நிறுவனங்களை மூடலாம்' என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கர்ரி மற்றும் பிற வேட்பாளர்களின் தேசியவாத வார்த்தையாடலுக்கு பதிலளித்த லெஹ்மன், 'என் வேண்டுகோள்... சர்வதேச தொழிலாள வர்க்கம் சாமானிய தொழிலாளர் குழுக்களில் ஒன்றுபட்டு சர்வதேச அளவில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே' என்றார்.

பல்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக, லெஹ்மன் 'UAW என்ன செய்யகின்றது என்றால் அமெரிக்கக் கொடியை அசைத்து, அது நம்மைப் பிரித்து 'அமெரிக்காவில் மட்டும் உற்பத்தி' என்று கூறுகிறது. பல்தேசிய நிறுவனங்களை எதிர்கொள்ள எங்களுக்கு உலகளாவிய ஒற்றுமை தேவை. அது தொழிற்சாலைகளில் ஒழுங்கமைக்கும் தொழிலாளர்களிடமிருந்து மட்டுமே வரப்போகிறது.

மூன்றாவதாக, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச, முதலாளித்துவ-எதிர்ப்பு முன்னோக்கை லெஹ்மன் முன்வைத்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

'நான் ஒரு சோசலிசவாதி' என்று லெஹ்மன் கூறினார். “தொழிலாளர்களின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நான் உழைக்கிறேன்... அவர்கள் அனைவரும் முதலாளிகள். அவர்கள் அனைவரும் முதலாளித்துவம் அனுமதிக்கும் நிலைமையின் கீழ் செயற்பட போகிறார்கள்... தொழிலாளர்களுக்கு இந்த ஆலைகளில் உற்பத்தியை ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்த தொழிலாளர் அமைப்புகள் தேவை. இது மனித தேவைக்கு பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டுமே தவிர தனியார் இலாபத்திற்காக அல்ல.' முதலாளித்துவ அமைப்பின் 'பைத்தியக்காரத்தனத்திற்கு' எதிராக, 'எங்களுக்குத் தேவை, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், மேலும் அந்த பொருளாதாரத்தின் மீது தொழிலாளர் கட்டுப்பாடு நமக்குத் தேவை' என்றார்.

விவாதத்தின் போது, லெஹ்மன் ஜனநாயகக் கட்சியினரையும் குடியரசுக் கட்சியினரையும் கண்டனம் செய்தார். அவர்களால் 'ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய போர் உட்பட, அணுவாயுத பேரழிவு ஆபத்தில் ஆழ்த்துவது உட்பட' வெளிநாடுகளில் போரை நோக்கி பெருமளவில் நிதியை திருப்பி விடுவதை எதிர்த்தார். அதே நேரத்தில் தொற்றுநோயின்போது ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டி, இது அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் உட்பட 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் மரணத்தை விளைவித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

வில் லெஹ்மனின் பிரச்சாரத்தின் மூலம், அரசியல் ஸ்தாபகத்தாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட நிலைமைகள் மற்றும் கருத்துருக்கள் தொழிலாளர்களின் முன் கொண்டுவரப்படுகின்றது. தொழிலாளர்களின் அனுபவங்களுடன் இவ்வாறான ஒரு சோசலிச முன்னோக்கு மிகவும் பொருந்திவருவதால் அவ்வாறான ஒரு முன்னோக்கிற்கான அணுகலை எந்த அளவிற்கு தொழிலாளர்கள் இழந்துள்ளனர் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

UAW தலைமையின் பாரிய ஊழல் மற்றும் குற்றச்செயல்களால் மட்டுமே இந்த விவாதமும் நடைமுறைக்கு வந்தது. இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட ஒரு டஜன் UAW நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் நேரடித் தேர்தல்கள் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை மேற்பார்வையிட்டார். இந்த கருத்துக்கணிப்பு தொழிற்சங்க அமைப்பின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

இந்த விவாதத்தையோ அல்லது தேர்தலைப் பற்றியோ விளம்பரப்படுத்தாததன் மூலம், UAW முடிந்தவரை குறைவான தொழிலாளர்கள் வாக்களிப்பதன் மூலம், தனது அமைப்பிற்குள்ளேயே ஒரு மோதலுக்கு மட்டுப்படுத்தப்படுவதை நம்புகிறது. இந்த உண்மை இருந்தபோதிலும், 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதைப் பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் போது அதைப் பார்த்ததாகவும், லெஹ்மனின் பிரச்சாரத்தைப் பற்றி விவாதித்து வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஊடகங்களும் தன் பங்கிற்கு அதை புறக்கணிக்க முயல்கின்றன. உலக சோசலிச வலைத் தளத்திற்கு வெளியே, Detroit News மற்றும் Free Pressமட்டுமே அதன் உண்மையான உள்ளடக்கம் எதையும் தராத மேலோட்டமான கட்டுரைகளை எழுதியுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் இதன் முன்னாள் முன்னணி தொழிற்துறை நிருபர் அந்த நிகழ்வை நிர்வகித்தாலும், விவாதம் குறித்து ஒரு கட்டுரை கூட எழுதவில்லை.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் தொடர்புடைய Labor Notesமற்றும் Jacobin உள்ளிட்ட போலி-இடதுகளின் வெளியீடுகளும் விவாதத்தைப் பற்றி அறிவிக்கவில்லை. சீர்திருத்தவாதியாக விளம்பரப்படுத்த முயற்சிக்கும் வேட்பாளர்களில் ஒருவரான ஷான் ஃபைனை Labor Notes ஆதரித்துள்ளது. மேலும் ஃபைனை ஒரு நீண்டகாலமாக அதிகாரத்துவ அமைப்பின் அங்கத்தவர் என்பதை அம்பலப்படுத்தும் நிகழ்வை தொழிலாளர்கள் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. இவை சோசலிச அல்லது இடதுசாரி அமைப்புகள் அல்ல. உண்மையில் அவை வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் முயற்சியின் ஒரு பங்காளிகளாகும்.

விவாதத்தின் போக்கு அரசியல் மற்றும் வர்க்க சக்திகளின் பரந்த உறவை வெளிப்படுத்தியது. ஒருபுறம் தொழிற்சங்க அமைப்பு, அரசு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு நிறுவனமான கணிசமான உயர் நடுத்தர வர்க்க அடுக்குடன் பணியாற்றுகிறது.

மறுபுறம், வில் லெஹ்மனின் பிரச்சாரம் அவ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட போராடும் ஒரு வளர்ந்து வரும் சாமானிய தொழிலாளர்கள் இயக்கத்தை வெளிப்படுத்துகின்றது. ஒரு காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களினாலும், பைடென் நிர்வாகத்தினாலும் திணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான இரயில் தொழிலாளர்கள் வெடித்த எதிர்ப்புடனும் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள், சேவைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் மத்தியில் வளரும் வேலைநிறுத்த இயக்கத்துடனும் இந்த பிரச்சாரம் இணைந்து செல்கின்றது.

பிரச்சாரத்தில் இந்த விவாதம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது. இப்பிரச்சாரம் முடிந்தவரை தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுவதற்கான தீவிரமான போராட்டத்திற்கான அடிப்படையாகவும் அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்க சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளமாகவும் இருக்கவேண்டும்.

Loading