பிரித்தானிய டோரி அரசாங்கமும் தொழிற்கட்சியும் இலாபத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் மோதிக்கொள்கையில் பவுண்ட்டின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரித்தானிய கருவூல தலைவர் குவாசி குவார்டெங்கின் 45 பில்லியன் பவுண்டுகள் வரிக் குறைப்பு அறிவிப்பு, வார இறுதியில் பவுண்டு பெறுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

திங்கட்கிழமை ஒரு கட்டத்தில் ஸ்டேர்லிங் பவுண்டு கிட்டத்தட்ட 5 சதவிகிதம் சரிந்து, 1 பவுண்டு 1.035 டாலராக இருந்தது. இது, 1985 இன் பின்னரான மிகக்குறைந்த அளவாகும். ஜப்பானிய நோமுரா வங்கியானது நவம்பர் மாத இறுதியில் இரண்டிற்கும் இடையேயான மதிப்பை முன்னறிவித்து, மேலும் ஆண்டின் இறுதியில் 0.975 டாலர்களாக வீழ்ச்சியடையும் எனக் குறிப்பிட்டது.

பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் (இடது) மற்றும் அதிபர் குவாசி குவார்டெங் ஆகியோர் செப்டம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக தங்கள் வளர்ச்சித் திட்டத்தைப் பற்றி விவாதித்தனர். 10 டவுனிங் ஸ்ட்ரீட், செப்டம்பர் 22, 2022 [Photo by Rory Arnold/No 10 Downing Street/Flickr / CC BY-NC-ND 4.0]

முன்னாள் அமெரிக்க கருவூல செயலாளர் லாரி சாம்மர்ஸ் புளூம்பேர்க்கிடம், 'இறுதியில் பவுண்டு டாலருக்கும் கீழே குறைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.' அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,' இதை சொல்வது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, ஆனால் ஒரு வளர்ந்து வரும் சந்தை தன்னை ஒரு மூழ்கும் சந்தையாக மாற்றுவதைப் போல இங்கிலாந்து நடந்து கொள்கிறது என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

BlueBay Asset Management அமைப்பின் தலைமை முதலீட்டு அதிகாரி மார்க் டவுடிங், பைனான்சியல் டைம்ஸிடம், 'சர்வதேச முதலீட்டாளர்கள் இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழக்க நேரிடுவதோடு, அது ஸ்டேர்லிங்கின் நீண்ட நெருக்கடிக்கு வழிவகுக்கும் ஒரு உண்மையான ஆபத்து உள்ளது.' என்றார்.

அரசாங்கப் பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்ததாலும், கடந்த நிதியச் சரிவுக்குப் பின்னர் அவற்றின் அதிகபட்ச விகிதங்களுக்கு உயர்ந்த இரண்டு ஆண்டு மற்றும் ஐந்தாண்டு அரசாங்க கடன் பத்திரங்களுக்கான இலாபங்கள் வீழ்ச்சியடைந்ததாலும் இங்கிலாந்து சந்தையின் நம்பிக்கையில் சரிவுக்கான பரந்த அறிகுறிகள் காணப்பட்டன. பத்து வருட அரசாங்க கடன்பத்திரங்களுக்கான இலாபமானது 2010 ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமாக இருந்ததுடன், இப்போது 1957 க்குப் பின்னர் மிக மோசமான மாதமாக உள்ளது.

ஸ்டெர்லிங்கின் சரிவு பேரழிவுகரமான உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் பவுண்டு பலவீனமடைவதால், பிரிட்டனுக்கான இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. இது பெட்ரோல், பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிசக்திக்கு தொழிலாளர்கள் செலுத்தும் விலைகளை உயர்த்துகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உலகளவில் டாலர்களில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இங்கிலாந்து அதன் எண்ணெய் நுகர்வில் 11 சதவீதத்தையும் அதன் எரிவாயுவில் 50 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது. இங்கிலாந்தில் உட்கொள்ளப்படும் உணவில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே உயர்ந்த பணவீக்க விகிதம் (12.3 சதவீத சில்லறை விலை அதிகரிப்பு) இதை மேலும் அதிகரிக்கும்.

முதலீட்டாளர்களை பீதியடையச் செய்வதிலிருந்து பவுண்டின் வீழ்ச்சியைத் தடுக்க, இங்கிலாந்து வங்கி (BoE) எதிர்பார்த்ததை விட வேகமாக வட்டி விகிதங்களை உயர்த்த தள்ளப்படும். சந்தைகள் தற்போதைய விகிதமான 2.25 சதவீதத்திலிருந்து நவம்பரில் 4 சதவீதத்திற்கும் அடுத்த கோடையில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளன.

திங்கள்கிழமை மாலை ஒரு அறிக்கையில், வங்கி 'தேவைப்பட்டால் வட்டி விகிதங்களை மாற்ற தயங்காது' என்று அறிவித்தது.

இங்கிலாந்து வங்கி (BoE) திட்டமிட்டுள்ள வட்டி விகித உயர்வுகள், 'இங்கிலாந்தில் இப்போது தொடங்கியுள்ள நீண்ட மந்தநிலையை ஆழப்படுத்தவும்... மில்லியன் கணக்கானவர்களை வேலையின்மையிலும், சமூகக் கஷ்டங்களுக்குள்ளும் தள்ளும்' நோக்கம் கொண்டது என உலக சோசலிச வலைத் தளம் ஆகஸ்ட் மாதம் விளக்கியது. அதன் நோக்கம், பல பெரிய வேலைநிறுத்தங்களை எதிர்கொள்கையில், 'இந்த எழுச்சி பெறும் போர்க்குணத்தை எதிர்கொண்டு, நம்பிக்கையிழந்த தொழிலாளர்களை மேலும் காட்டுமிராண்டித்தனமான ஊதிய வெட்டுக்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்துவது அல்லது பாரிய வேலையின்மை மற்றும் நிதிய அழிவை எதிர்கொள்ளச் செய்வதாகும்' என அது மேலும் குறிப்பிட்டது.

லோம்பார்ட் வீதியில் இருந்து பார்க்கப்படும் பாங்க் ஆஃப் இங்கிலாந்து கட்டிடம் [Photo by DAVID ILIFF / CC BY-SA 4.0]

பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் முதலீட்டைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தத் தயாராக உள்ளது என்பதை சர்வதேச நிதியத்திற்கு நிரூபிக்க வங்கி முயல்வதால், குவார்டெங்கின் அறிவிப்பு இந்த நிகழ்ச்சிப்போக்கை துரிதப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று, வங்கிகள், வீடு கட்டுபவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் பங்கு விலைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டமை, இது 'இலண்டன் நகரம் அதிகரித்து வரும் திருப்பி செலுத்தமுடியாத கடன்கள், வீடுகளுக்கான தேவை குறைதல் மற்றும் நுகர்வோர் செலவினங்களின் ஆழமான கட்டுப்படுத்தலை எதிர்பார்க்கிறது' என கார்டியனின் வணிக நிருபர் கிரேம் வேர்டன் எழுதினார்.

தொழிலாள வர்க்கத்திலிருந்து பணக்காரர்களுக்கு செல்வத்தை பாரியளவில் மறுபகிர்வு செய்ய, குவார்டெங் ஏற்கனவே பலவீனமான இருக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை நொறுக்குகிறார். Resolution Foundation என்ற சிந்தனைக் குழுவின் பகுப்பாய்வின்படி, தனிநபர் வருமான வரிக் குறைப்பினால் கிடைக்கும் இலாபத்தில் மூன்றில் இரண்டு பங்கு, பணக்கார முதல் 20 சதவீத குடும்பங்களுக்குச் செல்லும். 45 சதவீதம் மேல்மட்டத்தில் உள்ள முதல் 5 சதவீதத்தினருக்குச் செல்லும். 12 சதவீதம் மட்டுமே பாதி ஏழை குடும்பங்களுக்கு செல்லும்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தில் அன்டி சம்மர்ஸ் மற்றும் அருண் அத்வானி ஆகியோரின் ஆய்வின்படி, இதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள 3.5 மில்லியனுக்கு அதிகமான வருடாந்த வருமானமுள்ள 2,500 பணக்காரர்களுக்கு மட்டும் 1 பில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும்.

பொது கருவூலத்தால் இழக்கப்படும் பில்லியன்கள் பொது சேவைகள் மற்றும் பொதுத்துறை சம்பளத்தில் இருந்து எடுக்கப்படும். Resolution Foundation இன் தலைவரான தோர்ஸ்டன் பெல் கருத்துத் தெரிவிக்கையில், 'இரட்டை இலக்க பணவீக்கத்தின் யதார்த்தம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் குடும்பங்களின் வரவு-செலவுத் திட்டங்களை இறுக்கமாக அழுத்தும்…”

'நீண்ட காலகட்டத்தில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 45 பில்லியன் பவுண்டுகள் வரிக் குறைப்புகளுக்கும், பொதுச் சேவைகளின் அளவுக்கும் தரத்திற்கும் இடையே தேர்ந்தெடுப்பதில் தெளிவான இழப்புக்கள் இருக்கும்'.

நிதி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் தலைவரான பௌல் ஜோன்சன், The Times க்கு வழங்கிய கருத்துகளில் இதை எதிரொலித்தார், “பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் ஊதிய உயர்வைக் கூட செய்வதில் ஒரு உண்மையான சிக்கல் உள்ளது. இங்கு ஒரு உண்மையான கட்டுப்படுத்தல் இருக்கும்' என்பதை ஒப்புக்கொண்டார்.

குவார்டெங்கின் நடவடிக்கைகள் குறித்து, தொழிற் கட்சியால் எதிரொலிக்கப்பட்ட நிதிய வட்டங்களில் எழும் சலசலப்பு, இந்த 'கட்டப்படுத்தல்' ஏற்கனவே நடைபெறவில்லை என்ற உண்மையால் உந்தப்படுகிறது. கன்சர்வேடிவ் பிரதம மந்திரி டேவிட் கமரூனின் கீழ் சிக்கன நடவடிக்கையின் சிற்பியாக இருந்த முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் ஆஸ்போர்ன், Channel 4 இன் Andrew Neil நிகழ்ச்சியில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினார். 'குறைந்த வரிப் பொருளாதாரத்திற்கு நீங்கள் கடன் வாங்க முடியாது' என்று வலியுறுத்தினார். அவர் மேலும் கூறினார், முக்கியமாக, “இந்த நீண்டகால குழப்ப நிலை தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் சிறிய நாடுகளின் வரி விகிதங்களையும் பெரிய நாடுகளின் செலவீனங்களையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது

ஆஸ்போர்னின் தீர்ப்பை ஏற்கும் டோரி பாராளுமன்ற உறுப்பினர்களால் ட்ரஸ் இன் தலைமையின் மீது ஏற்கனவே நம்பிக்கையில்லா கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருவணிகத்தின் சார்பாகப் பேசுகையில், UBS Global Wealth Management இன் தலைமைப் பொருளாதார நிபுணர் பௌல் டோனோவன், ட்ரஸ் இன் செலவினங்களைப் பற்றி பின்வருமாறு அறிவித்தார், 'நவீன நிதிய தத்துவம், பங்குப்பத்திரச் சந்தைகளால் ஒரு மூலையில் தள்ளப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது…”

'நவீன அரசியல் என்பது, வாக்காளர் அல்லது முதலீட்டாளர் ஒருமித்த கருத்தை விட தீவிரமான கட்சிகளை உருவாக்குகிறது என்பதையும் இது முதலீட்டாளர்களுக்கு நினைவூட்டுகிறது.

'முதலீட்டாளர்கள், இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சியை உலக அழிவினை வழிபடும் ஒன்றாக கருதுகின்றனர்.'

தொழிற் கட்சி நிதிய, பெருநிறுவன நலன்களின் 'பொறுப்பான' பாதுகாவலராக தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்கிறது. நிழல் அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் கட்சியின் நடப்பு மாநாட்டில், 'டோரிகளின் பொருளாதாரத் தகமையைப் பற்றி கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்றும், 'தொழிற் கட்சி என்பது பொருளாதாரப் பொறுப்பு மற்றும் சமூக நீதிக்கான கட்சி என்பது நாளுக்கு நாள் தெளிவாகிறது' என்றும் கூறினார்.

'சமூக நீதி' பற்றிய அவரின் குறிப்புகள் ஒரு மோசடியாகும். ஒருவேளை ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரைத் தவிர, 45 பில்லியன் பவுண்டுகள் கடன் வாங்கிய பணத்தை ட்ரஸ் செலவழித்திருந்தால் கூட, எதிர்விளைவு அப்படியே இருந்திருக்கும். அந்த பணம் தொழிலாள வர்க்கத்திற்கு ஏதோ ஒரு பேரழிவான தவறின் மூலம் சென்றிருந்தால், தொழிற் கட்சியின் சீற்றம் கண்காணமுடியாததாக இருந்திருக்கும்.

திங்கட்கிழமை பிற்பகல் உலகளாவிய முதலீட்டாளர்களின் கவலைகளுக்கு குவார்டெங் பதிலளித்தார். 'பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான பரந்த விநியோகக் கொள்கைகள்', 'திட்டமிடல் அமைப்பு, வணிக விதிமுறைகளில் மாற்றங்கள்' மற்றும் 'இங்கிலாந்தின் நிதிச் சேவைத்துறை உலகளவில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள்' உட்பட, 'பரந்த விநியோகக் கொள்கைகளை' தொடர்வதாக உறுதியளித்தார். நவம்பர் 23 அன்று இடைக்கால நிதித்திட்டத்தை வெளியிடுவதாக அறிவித்தார். 'இடைக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது கடன் குறைவதை உறுதி செய்வது உட்பட, அரசாங்கத்தின் நிதி விதிகள் பற்றிய கூடுதல் விவரங்களை இந்த நிதித் திட்டம் அமைக்கும்' என்றார்.

இது பொருளாதாரரீதியாக சாத்தியமோ இல்லையோ, திட்டமிட்ட வேலைநிறுத்த எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பு சட்டம் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதலுடன், காட்டுமிராண்டித்தனமான செலவினக் குறைப்புக்களுடன் அரசாங்கம் அதன் நசுக்கும் கொள்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்ற உள்நோக்கமுள்ள அறிக்கையாகும்.

இங்கிலாந்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, இங்கிலாந்தில் பொங்கி எழும் வர்க்கப் போராட்டத்திற்கு மேலும் எரியூட்டுகின்றது. ஒவ்வொரு பணியிடத்திலும் விலைவாசி உயர்வும் வேலையின்மையும் கடுமையான எதிர்ப்பை தூண்டும் அதே வேளையில், ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கான ஒவ்வொரு பெனியையும் தொழிலாள வர்க்கத்தை கொடுக்கவைக்க முற்படுகின்றது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அரசியல் மற்றும் அமைப்புரீதியான தடைகள் அமைக்கப்படும்போதும், தொழில்துறை மோதல்கள் வெடிக்கும்போது, டோரி அரசாங்கத்திற்கும் தொழிற் கட்சி மற்றும் அவர்களின் பெருநிறுவன மற்றும் நிதி மேற்பார்வையாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்காக தொழிலாளர்கள் தங்களை ஒரு புதிய முன்னோக்கில் ஒழுங்கமைக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

Loading