அணுவாயுதப் போரின் ஆபத்து குறித்து நடைபெறவுள்ள சோ.ச.க.-IYSSE பொதுக் கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவளிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடத்தும் இணையவழி போர் எதிர்ப்புக் கூட்டத்திற்கு தொழிலாளர்களும் மாணவர்களும் உற்சாகமாக பதிலளித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 16 பொதுக் கூட்டத்திற்கான கட்சியின் பிரச்சாரத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சியின் இலக்கியங்களை வாங்குகின்றனர்.

அணுவாயுதப் போர் ஆபத்தை தடுப்பதற்காக சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்பு! என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் அமெரிக்க-நேட்டோ போர், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பேரழிவிற்கு அச்சுறுத்தும் ஒரு மூன்றாம் உலகப் போரின் முதல் கட்டமாகும்.

தொழிலாள வர்க்கம் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் முதலாளித்துவ மற்றும் போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் ஊக்குவிக்கப்படும் நல்ல எதிர்பார்ப்பு கட்டுக் கதைகளை நிராகரித்து, இந்த ஆபத்துக்கு மிகுந்த தீவிரத்துடன் பதிலளிக்க வேண்டும். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ யுத்தம் ஒரு அணுவாயுத பேரழிவாக விரிவடைவதைத் தடுப்பதற்கான ஒரே வழி ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE பிரச்சாரகர்களுக்கு கடந்த வாரத்தில் இலங்கையின் பிரதான நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து எதிர்வரும் கூட்டத்திற்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.

வட இலங்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பலர் அக்டோபர் 11 அன்று வளாகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் கட்சி பிரச்சாரகர்களால் அமைக்கப்பட்ட புத்தக மேசைக்கு ஈர்க்கப்பட்டனர். ஞாயிறு கூட்டத்தில் கலந்துகொள்ள பல மாணவர்கள் அந்த இடத்திலேயே பதிவு செய்தனர்.

போரின் கொடூரங்கள், குறிப்பாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு அரசாங்கங்களால் நடத்தப்பட்ட கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால இனவாத யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் பற்றி பலர் பேசினர். பலர் உக்ரைனில் நடந்த போரை ஒத்த விடயங்களை கூறினர்.

விஞ்ஞான பீட மாணவி கே.சங்கவி கூறுகையில், “இந்த அழிவுகரமான போர் [உக்ரைனில்] நிறுத்தப்பட வேண்டும். ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் [அமெரிக்க அணுகுண்டு வீச்சு] என்ன நடந்தது என்பதையும், அங்குள்ள மக்கள் இன்றும் துன்பப்படுகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். இந்தப் போரில் அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது பேரழிவாகவே இருக்கும்,” என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சவிந்து, பொதுக் கூட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பிரச்சாரகர்களிடம் கூறினார்.

'உக்ரைன் போர் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் நான் முழு உடன்பாடு கொண்டுள்ளேன். அணு ஆயுதப் போர் தொடங்கினால் நமது எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் அழிந்துவிடும். உண்மையில், அணுவாயுத யுத்தம் வெடிக்கவிருக்கும் சூழ்நிலையில் மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்கக் கூட முடியாது.

சவிந்து

உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் சமமாக பொறுப்பேற்கவில்லை என்று கூறிய சவிந்து, “நேட்டோ சக்திகளைக் கொண்ட அமெரிக்காவுக்கு இந்த போர் எப்படி தேவைப்பட்டது, அவர்கள் ரஷ்யாவை எவ்வாறு தூண்டினார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

“நான் போருக்கு எதிரானவன். உங்களுடன் பேசுவதற்கு முன்பு அதை நிறுத்த வழி இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறியது போல் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு போருக்கு எதிரான இயக்கத்தை கட்டியெழுப்பலாம் என்ற அரசியல் புரிதலுக்கு வந்தால் அதை நிறுத்த முடியும். போரின் அழிவு குறித்து தொழிலாளர்களிடையே பரந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். இந்த பணியை முன்னெடுத்துச் செல்வதில் இந்த கூட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்,'' என்றார்.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் கொழும்பின் புறநகரில் உள்ள ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புத்தக மேசையை அமைத்து அங்கு பிரச்சாரம் செய்தனர்.

இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள நுவரெலியாவைச் சேர்ந்த மாணவர் பிரேம், சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற தமிழ் மொழி புத்தகத்தை வாங்கினார்.

'தலைமுறை தலைமுறையாக நாம் வறுமையில் தள்ளப்பட்டுள்ளோம், ஆனால் முதலாளிகளும் ஆளும் உயரடுக்கினரும் ஆண்டுதோறும் பணக்காரர்களாக ஆகிவருகின்றனர்,' என்று அவர் கூறினார். “இந்தப் போரை இன்னும் செல்வந்தர்களாவதற்கு முதலாளிகள் நடத்தும் மற்றொரு போராட்டமாக நான் கருதுகிறேன். போருக்கு எதிராக எப்படிப் போரிடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் உங்கள் கூட்டத்தில் நான் பங்கேற்பேன்.”

சந்திர குமார்

மகாவலி அதிகார சபையின் தொழிலாளியான சந்திர குமார் கூறுகையில், “இந்தப் போர் பல மாதங்களாக உக்கிரமடைந்து வருவதை நான் அறிவேன் ஆனால் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி எனக்கு தெரியாது. இந்தப் பகுதியில் இப்படி ஒரு அணு ஆயுதப் போர் வெடித்தால், உலகில் யாரும் தப்ப மாட்டார்கள். நாம் ஒன்றிணைந்து இந்தப் போரை எதிர்க்க வேண்டும். உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கமைப்பது அவசியமாகும். இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லப்படுபவை எதுவும் இதைச் செய்யவில்லை,” என்றார்.

பணவீக்கம் மற்றும் வீட்டுக் கடனுக்கான அதிக வட்டி விகிதங்களைச் சமாளிக்க முயற்சிக்கும் அரசுத் துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி, ஒரு கணக்கெடுப்புத் துறை ஊழியர் பிரச்சாரகர்களிடம் பேசினார். ஜூலையில் முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட அவர், தொழிலாளர்களை மௌனமாக்குவதற்கு இப்போது பயன்படுத்தப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளையும் கண்டித்தார்.

'உங்கள் விளக்கங்களை அடுத்து, இந்த நாட்டின் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதி என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். மேற்கத்திய சக்திகளால் உக்ரைனில் தூண்டிவிடப்பட்ட போரின் காரணமாக, உலகம் தெளிவாக இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் அணுவாயுத யுத்தம் ஒரு உண்மையான ஆபத்து ஆகும். நீங்கள் முன்வைத்த வேலைத்திட்டம் சரியானது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சாமிமலை தோட்டப் பகுதியில் உள்ள ஃபெயர்லோன் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் இளம் ஊடகவியலாளர் ஆர்.கோபிராஜ் கூறியதாவது: “உக்ரைனில் போர் தீவிரமடைய அமெரிக்காவே முக்கிய காரணம். மற்ற நாடுகளில் உள்ள மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக அமெரிக்கா எப்போதும் கூறினாலும் ஈராக், சிரியா, லிபியா போன்ற பல நாடுகளை அழித்துவிட்டது.

ஆர். கோபிராஜ்

“ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் அணு ஆயுதப் போர் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாங்கள் அறிவோம். இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும், அதற்காக நாம் பாடுபட வேண்டும். முதலாளித்துவத்தின் கீழ் போரை நிறுத்த முடியாது என்பதையும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதன் மூலம் போரை நிறுத்த சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிட வேண்டும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.”

கோபிராஜ் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பதிவு செய்து கலந்து கொள்வதாகவும், கூட்ட இணைப்பை தனது ஊடக சகாக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.

ஹட்டனைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.பத்மாவதி, “அமெரிக்கக் கொள்கை உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது, அதனால்தான் நேட்டோவும் அமெரிக்காவும் உக்ரைனில் இந்தப் போரை நடத்துகின்றன. இந்த ஆபத்தான யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

பத்மாவதி, உக்ரைன் போர் உலகம் முழுவதும் சமூக நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். “வாழ்க்கைச் செலவு இப்போது மக்களால் தாங்க முடியாததாக உள்ளது. எங்கள் பாடசாலையில் படிக்கும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோரின் பொருளாதாரச் சிரமங்களால், கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கும், தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள். எங்கள் பாடசாலையில் சுமார் 1,000 மாணவர்கள் உள்ளனர், ஆனால் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 300 மாணவர்கள் வரவில்லை.

'சில மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு கிடைத்தாலும், அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் அங்கு நான்கு ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கும், மேலும் அந்த செலவுகள் தாங்க முடியாதவை.'

ஒரு இளம் ATG சிலோன் தொழிலாளி, சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களுடன் பேசினார். ஏற்றுமதிக்கான உயர்தர கையுறைகளை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ளது. அவர் எதிர்வரும் பொதுக் கூட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார்: 'உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும், மேலும் இந்த போருக்கு அதிக செல்வத்தை செலவழிக்கும் முதலாளிகளின் தடைகளை உடைக்க உங்களுக்கு [சோ.ச.க.] பலம் வேண்டும்.'

ATG தொழிலாளர்கள் 2019 இல் நடத்திய எதிர்ப்பு ஊர்வலம்.

ஓய்வுபெற்ற ஆசிரியையான புஷ்பா விக்கிரமநாயக்க கூறியதாவது: “உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் என்பது நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வரும் ஒரு ஏகாதிபத்திய போர் ஆகும். பூமியில் மனிதகுலத்தின் இருப்பையே அச்சுறுத்தும் இந்த அணு ஆயுத மோதல் பெரும் பேரழிவைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப அழைக்கப்பட்ட இந்த இணையவழி பொதுக்கூட்டம் ஒரு தீர்க்கமான கூட்டமாகும்.

Loading