"போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்" என்ற பேரணி: ஒரு பிற்போக்கு அரசியல் வினோத நிகழ்ச்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டன், டி.சி.யில் நேற்று நடைபெற்ற 'போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்' என்ற பேரணியானது, பல நூறு சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், நவ-பாசிஸ்டுகள் மற்றும் ஒரு சுயாதீனமான வேலைத்திட்டமும் முன்னோக்கும் இல்லாத திசைதிருப்பப்பட்ட மற்றும் மனச்சோர்வடைந்த நடுத்தர வர்க்க நபர்களைக் கொண்ட ஒரு அரசியல் வினோதமான நிகழ்ச்சியாகும். 

போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்' பேரணியில் மேடையில் 'மக்கள் கட்சி' (இடது, பின்னப்பட்ட தொப்பி) நிக் பிரானா. பிரானாவின் வலதுபுறத்தில் ஜாக்சன் ஹிங்கிள் (கறுப்புக் கண்ணாடியுடன்) மற்றும் லிபர்டேரியன் கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெக்ஆர்டில் ஆகியோர் உள்ளனர். தண்ணீர் போத்தலுடனும் தொப்பியுடனும் மெக்ஆர்டலுக்குப் பின்னால் ஜேசன் பேஜ் இருக்கிறார். இவர் Oath Keepers மற்றும் Stewart Rhodes இன் ஆதரவாளராவார் [Photo: People's Party]

லிபர்டேரியன் கட்சியின் ஏஞ்சலா மெக்ஆர்டில் மற்றும் 'மக்கள் கட்சியின்' நிக் பிரானா ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த பேரணி, போரை எதிர்ப்பதற்கு 'இடது மற்றும் வலதுசாரிகளை' 'ஒருங்கிணைக்க' அமைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களால் ஒரு வாய்ப்பாக காட்டப்பட்டது. உண்மையில், அவர்களிடம் இடதுசாரி முன்னோக்கு இருக்கவில்லை. அதற்கான அரசியல் திசை முழுவதுமாக வலதுசாரிகளால் வழங்கப்பட்டது.

டக்கர் கார்ல்சனால் Fox News இலும் மற்றும் பிற வலதுசாரி ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும், அதன் சொந்த கணிப்பின்படி கூட, இந்த நிகழ்வு ஒரு நிறுவன தோல்வியாகும். அண்ணளவாக 750 முதல் 1,000 பேர் வரையே இதில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் மறைந்த பாசிச மற்றும் யூத-விரோத தனிநபர் வழிபாட்டுத் தலைவரான லிண்டன் லாரூச், அவரது மனைவி ஹெல்கா செப்-லாரூச் உட்பட அவருடன் இணைந்த அமைப்புகளில் இருந்து குறைந்தது மூன்று பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். 'MAGA கம்யூனிசத்தின்' பாசிச ஆதரவாளரான ஜக்ஸன் கிங்கள் மற்றும் Oath Keepers இன் கீதத்தை எழுதிய ஜோர்டான் பேஜ் ஆகியோருக்கும் இந்த மேடை வழங்கப்பட்டது. தீவிர வலதுசாரி தடுப்பூசி எதிர்ப்பு ஆதரவாளர் மற்றும் 'பிட்காயின்' ஊக்குவிப்பாரான ரற்ரியானா மோறோஸ் உடன் நீட்டிக்கப்பட்ட 'இசை' இடைவேளை நிகழ்ச்சியை வழங்கினார்.

ஜாக்சன் ஹிங்கிள், 'போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்' பேரணியில் கலந்து கொண்டவருடன் பேசுகிறார்

லிபர்டேரியன் கட்சியானது பேரணியின் முக்கிய அரசியல் நிலைப்பாட்டை வழங்கியது, லிபர்டேரியன் வேட்பாளர் ரொன் பௌல் இறுதி  பேச்சாளரராக இருந்தார். McArdle உம், அவர் உறுப்பினராக இருக்கும் 'Mises Caucus' ஆகியவை வலதுசாரி போராளிக் குழுக்களை நோக்கிய சுதந்திரவாதிகளின் முயற்சிகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை.

வலதுசாரி ஜனரஞ்சகத்தின் பிற்போக்குத்தனமான பிரிவினர்களின் தொடர்ச்சியான கூக்குரல் நிகழ்வுக்கு ஒரு தெளிவான யூத-விரோத அர்த்தத்தைக் கொடுத்தது. பேரணி வெள்ளை மாளிகைக்கு அணிவகுத்த பின்னர் ஒரு பேச்சாளர் இந்த மோதல் 'ஸ்லாவிக் மக்களுக்கு எதிரான ஒரு சியோனிச போர்' என்று அறிவித்தார். பாசிச சதிகாரன் அலெக்ஸ் ஜோன்ஸால் நடத்தப்படும் Infowars (அலெக்ஸ் ஜோன்ஸுக்கு சொந்தமான போலி செய்தி இணையதளம்)  இல் கடந்த வாரம் பேரணியை ஊக்குவித்த McArdle, லிபர்டேரியன் கட்சி நிகழ்வுகளுக்கு யூத-எதிர்ப்பு பேச்சாளர்களை அழைத்து பாதுகாத்து வருகிறார்.

அமெரிக்காவின் பாசிச அச்சுறுத்தல் பற்றி எச்சரிப்பதில் இருந்து இடது மற்றும் வலது ஒற்றுமையை ஊக்குவிப்பவராக அரசியல் ரீதியாக பரிணாம வளர்ச்சியடைந்த அமைதிவாத பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிறிஸ் ஹெட்ஜஸ், தொடர்ந்து வரும் பேச்சாளர்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கும் நோக்கில் ஒரு பிரசங்கத்துடன் நிகழ்வைத் தொடங்கினார்.

ஹெட்ஜஸ், Grayzone அமைப்பின் மேக்ஸ் புளூமென்டல், பசுமைக்கட்சியின் ஜில் ஸ்டெய்ன் மற்றும் நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் மற்றும் இன்னும் சிலருடன் சேர்ந்து 'இடது-வலது' கூட்டணிக்கு முற்போக்கான முகப்பைக் கொடுத்து, தீவிர வலதுசாரிகளை நியாயப்படுத்தினர். அவர்களின் முக்கிய செய்தி என்னவென்றால், பாசிச வலதுசாரிகளுடன் ஒற்றுமை அனுமதிக்கப்படுகிறது மற்றும் இது தீவிரமாக தொடரப்பட வேண்டும் என்பதாகும். வலதுசாரிகளுடன் ஒத்துழைப்பதை எதிர்ப்பவர்கள் அரசியல் எதிரிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

'இடது-வலது ஒற்றுமையின்' எதிர்ப்பாளர்கள் மீதான உள்ளார்ந்த  விரோதம் ஹெட்ஜஸ் மற்றும் புளூமெண்டலின் பல்வேறு காணொளி பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது

கொள்கைரீதியான சோசலிச அரசியலைப் பாதுகாப்பதற்கு எதிரான இந்தக் கோபம் டோரின் உரையில் வெடித்தது. பாசிசவாதிகளுடனான ஐக்கியத்தை எதிர்ப்பதற்காக உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான மெல்லிய-மறைக்கப்பட்ட கண்டனத்திற்கு அவர் தனது பெரும்பாலான கருத்துக்களை அர்ப்பணித்தார்.

டோரைப் பொறுத்தவரை, வலதுசாரிகளுடன் கூட்டணி என்பது ஒரு தந்திரோபாயம் மட்டுமல்ல. இது அவரது சொந்த அரசியல் பார்வையின் வெளிப்பாடு ஆகும். பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டித்து, கோவிட்-19 தொற்றுநோய்க்கான வலதுசாரிகளின் நிலைப்பாட்டை டோர் முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில், நான் உணரும் வலிக்காக அவர்கள் முதலில் சொன்னது போல் செயல்படாத தடுப்பூசியை அவர்கள் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக என் அண்டை வீட்டாரை வெறுக்க வேண்டும் என்று 'அவர்கள்' விரும்புகிறார்கள்' என்று அறிவித்தார்.  அவர் மேலும் கூறினார், 'மேலதிக தடுப்பு ஊசியை உண்ணுங்கள் முட்டாள்ப்பயல்களே' என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஒரு கட்டத்தில், டோர் 'அமெரிக்காவில் முட்டைகளை வாங்குவதற்கு கஷ்டப்படும் நாஜிகளுக்கு நாங்கள் நிதியுதவி செய்யலாம், நாங்கள் ஏன் உக்ரேனில் உள்ள நாஜிகளுக்கு அந்த பணத்தை அனுப்புகிறோம்?' என வினோதமாக கேட்டார்.

ஆளும் வர்க்கத்தின் பாரிய தொற்றுநோய் கொள்கைக்கான ஆதரவு, தீவிர வலதுசாரிகளால் மிகவும் ஆக்ரோஷமாக ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் சாராம்சத்தில் பைடென் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது   பேரணி முழுவதும் காணப்பட்டது. பலர் 'மருத்துவ தொழில்துறை வளாகத்தை' கண்டனம் செய்ததுடன் மற்றும் அமெரிக்காவில் மட்டும் 1.14 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோயின் தீவிரத்தை குறைத்துக்காட்டினர்.

பேரணியில் கலந்து கொண்டவர்களின் அரசியல் கண்ணோட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில், டோரும் ரொன் பௌலும் பெரும் கைதட்டலை பெற்றனர். பலர் இருவரையும் உற்சாகப்படுத்தினர்.

இதற்கு ஒரு அரசியல் முன்னோக்கு இருந்ததெனில், அது முன்னாள் டெக்சாஸ் காங்கிரஸ் அங்கத்தவரான பௌலால் வழங்கப்பட்டது. பௌல் தனது தலைமை உரையில், பெடரல் ரிசர்வ் வங்கியை இல்லாதொழித்தால், அமெரிக்க அரசாங்கம் அதன் கடனை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அதனால் இராணுவ செலவினங்களுக்கு நிதியளிக்க முடியாது என்றும் பொய்யாக கூறினார்.

உண்மையில், பௌலின் சிக்கனம் மற்றும் கடன் ஒழிப்புத் திட்டம், நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு சமூக நலத் திட்டமும் இல்லாது ஒழிக்கப்படும். இது உண்மையில் ஆளும் வர்க்கத்தின் மிகவும் வலதுசாரிப் பிரிவுகளினதும், லிபர்டேரியன் கட்சியினதும் நோக்கமாகும். 

'நாட்டை திவாலாக்கும்' குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவி, குழந்தைத் தொழிலாளர் மற்றும் பணியிடப் பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற அனைத்து 'விதிமுறைகளுக்கும்' முற்றுப்புள்ளி வைப்பதற்கான அழைப்புடன் பௌல் தனது உரையை முடித்தார்.

2017 ஆம் ஆண்டு சார்லட்டஸ்வில்லி, வேர்ஜீனியாவில் நடந்த 'வலதுசாரிகளை   ஒன்றுபடுத்துங்கள்' (“Unite the Right”) பேரணியில் தொடர்புடைய நபர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பில் பங்கேற்றவர்கள் இப் பேரணியில் கலந்து கொண்டனர்.

சார்லட்டஸ்வில்லில் 2017 பேரணியை ஒழுங்கமைக்க உதவிய முன்னணி நவ-நாஜி மேத்யூ ஹெய்ம்பாக்கை உள்ளூர் பத்திரிகையாளர் மோலி காங்கர் புகைப்படம் எடுத்தார். 'வலதுசாரிகளை   ஒன்றுபடுத்துங்கள்' பேரணிக்கு முந்தைய போட்காஸ்டில், ஹெய்ம்பாக் 'சர்வதேச யூதரையும் உள்ளூர் யூதரையும் அழித்தொழிக்க அழைப்பு விடுத்தார். அவர் ஒரு  பேகல் கடை நடத்தினாலும் எனக்கு கவலையில்லை, அவர் போக வேண்டும்' என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ட்ரம்பின் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட சிறிய எண்ணிக்கையிலான நபர்களைக் குறிக்கும் 'Justice 4 J6' என்ற சொற்றொடர் கொண்ட சட்டையை அணிந்திருந்த Proud Boy அமைப்பின் ரண்டி அயர்லாண்டையும் கொன்கர் புகைப்படம் எடுத்தார்.

இந்த பேரணி ஒரு 'போர் எதிர்ப்பு' நிகழ்வாக இருந்தது எனக்குறிப்பிடப்பட்டதே ஒரு வேளை மிகப்பெரிய மோசடியாக இருக்கலாம். 'இராணுவ-தொழில்துறை வளாகம்' மற்றும் 'போர் இயந்திரம்' பற்றிய கண்டனங்கள் எதுவாக இருந்தாலும், பேரணியின் முக்கிய தாக்கம், ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளால் பயன்படுத்தப்படும் தீவிர வலதுசாரி சக்திகளை அரசியல்ரீதியாக சட்டப்பூர்வமாக்குவது மற்றும் உயர்த்துவது ஆகும்.

கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல்:

இறுதிப் பகுப்பாய்வில், போருக்கான வலதுசாரி போலி-எதிர்ப்பு என்பது, வெளியுறவுக் கொள்கையின் சில அம்சங்களில் ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள ஒரு சர்ச்சையை பிரதிபலிக்கிறது. உக்ரேனில் தற்போதைய போர், அமெரிக்காவில் வதிவிடப்பத்திரங்கள் அற்றவர்களை நாடுகடத்துவது மற்றும் சீனாவுடனான எதிர்கால போருக்கான தயாரிப்புகள் போன்ற அமெரிக்க ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் மற்ற அழுத்தமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை சிதறடிப்பதாக நம்பும் முன்னாள் இராணுவப் பணியாளர்கள், அவர்களின் பார்வையில் முற்றிலும் பாசிசவாதிகளுக்குப் பஞ்சம் இல்லை என்பதை இணையத்தில் காணலாம். 

'போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்' பேரணியின் பங்கு ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு இயக்கத்தை வளர்ப்பது அல்ல, மாறாக இளைஞர்களை குழப்பி திசைதிருப்புவதாகும். 

பேரணியே இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது.

Loading