இந்த ஞாயிற்றுக்கிழமை சோ.ச.க./IYSSE (இலங்கை) நடத்தும் இணையவழி பொதுக்கூட்டம்: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர்த்திடு! ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை “உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர்த்திடு!” என்ற தலைப்பில் ஒரு இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன.

மார்ச் 9 நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த வாரம் இரத்துச் செய்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, வாக்களிக்கும் ஜனநாயக உரிமையின் மீது நடத்தியுள்ள முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் சம்பந்தமாக இந்தக் கூட்டம் பிரதானமாக கவனம் செலுத்தும்.

விக்கிரமசிங்கவின் எதேச்சதிகார நடவடிக்கைகள், வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அரசாங்கத்தின் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியும் சர்வாதிகார வடிவிலான ஆட்சியை நோக்கிய மற்றொரு படியுமாகும். சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்பட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சி அலையை பற்றி அரசாங்கம் அஞ்சுகிறது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தியும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக மோசடித்தனமாக காட்டிக்கொள்கின்றன. இரு கட்சிகளும், அதே போல் அவற்றின் துணை குழுக்களும், விக்கிரமசிங்க ஆட்சியுடன் தந்திரோபாய வேறுபாடு மட்டுமே கொண்டுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. ஜே.வி.பி., ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத் தாக்குதல்களை ஆதரிப்பதில் நீண்ட சரித்திரத்தை கொண்டுள்ள அதே சமயம், ஐ.ம.ச. தலைவர்கள், சமீப காலம் வரை, விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலையில் பாரிய எதிர்ப்புக்கள் வெடித்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான ஆளும் வர்க்க சதியில் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்கள் உடந்தையாக இருந்தன.

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்களும், அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட அழைப்பு விடுக்கின்றன. இந்தப் போராட்டத்தில் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொள்ள கிராமப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களை ஒன்றிணைக்க, இந்த நடவடிக்கை குழுக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி ஆரம்பித்துள்ளது.

விக்கிரமசிங்கவின் அடக்குமுறை நடவடிக்கைகளை தோற்கடிக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் இந்த முன்னோக்கிற்காக போராட வேண்டும். தொழிலாள வர்க்க நடவடிக்கையின் எழுச்சி, ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்யாவில் உக்ரேனில் நடந்துவரும் பேரழிவுகரமான போருக்கு, சர்வாதிகார மற்றும் பாசிச வழிமுறைகளுக்கு திரும்புவதன் மூலமே சர்வதேச அளவில் ஆளும் உயரடுக்குகள் பிரதிபலிக்கின்றன.

இந்த ஆபத்தை எதிர்கொள்ள தேவையான சர்வதேச சோசலிச மூலோபாயம் பற்றி எங்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். இந்த இணையவழி கூட்டத்தில் கலந்து கொள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

https://us06web.zoom.us/meeting/register/tZAod-GhqzsuHNy3m-SRSk_Ha62fm0fi3-99

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்கிறார்

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

Loading