மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை திணிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையை பிரெஞ்சு போலீஸ் முடுக்கிவிட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

வியாழனன்று பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் தனது அரசாங்கத்தின் வெறுக்கப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தை திணிக்க ஜனநாயக விரோத சட்டப் பிரிவான 49.3 ஐப் பயன்படுத்துவதாக அறிவித்ததில் இருந்து பிரான்சின் முக்கிய நகரங்கள் எதிர்ப்பு அலையை எதிர்கொள்ளுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள், கழிவுளை மேலாண்மை நிலையங்கள் மற்றும் இரயிவே உட்பட பிரான்சின் முக்கிய தொழிற்துறைகளை ஒரு வேலைநிறுத்த அலை சூழ்ந்துள்ளது.

ஒரு தோல்வியுறும் வாக்கெடுப்பானது ஐரோப்பிய நிதியச் சந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்ற பிரச்சனைகளால் மக்ரோன் தனது சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றினார். இந்தச் சீர்திருத்தம் பிரெஞ்சு முதலாளித்துவத்தால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது 2030 க்கு முன்னர் பிரெஞ்சு இராணுவத்தின் பாரிய 413 பில்லியன் யூரோ மீள்ஆயுதமயமாக்கலுக்கும், சமூகத்தின் செல்வந்த பிரிவுகள் மீது வரியை அதிகரிக்காமல், உக்ரேனில் போருக்கு ஆயுத விநியோகங்களுக்கும் நிதியளிக்கும்.

இலங்கை, கிரேக்கம் மற்றும் பிரிட்டனிலுள்ள தொழிலாளர்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும் பல தசாப்தகால சிக்கன நடவடிக்கைகளின் தாக்கங்களுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்ரோனின், முதலாளித்துவ அரசுக்கு மற்றும் போருக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் வந்துள்ளது.

வெள்ளி மற்றும் சனி முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெரும் ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் முழுவதிலும் தொடர்ந்தன. ரென், நான்ந், போர்தோ, லியோன், நீஸ் மற்றும் மார்சேயில் இரண்டு இரவுகளிலும் ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் நடந்தன. கேபிடோல் டு துலூஸில் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது, ஏனெனில் சதுக்கத்திற்கான அனைத்து அணுகல் வழிகளையும் போலீசார் தடுத்தனர்.

பாரிஸில், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில், பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ் டு லா கோன்கார்ட் மற்றும் பிளாஸ் டு  இத்தாலி ஆகிய இடங்களில் கூடினர். வெள்ளிக்கிழமை காலை, இவ்ரி-சுர்-செயினில் வேலைநிறுத்தம் செய்யும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களைப் பாதுகாக்க மாணவர்கள் தொல்பியாக் பல்கலைகழக வளாகத்தில் கூடினர். தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்கக் கோரி தலைநகரில் வார இறுதி முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சனிக்கிழமை மாலை பிளாஸ் டு இத்தாலியில் கூடிய போராட்டக்காரர்கள்:

வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறை சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) எச்சரிக்கைகளை உறுதிப்படுத்தியது: அதாவது பிரெஞ்சு ஆளும் வர்க்கம் கடந்த தசாப்தத்தில் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சுயாதீனமான எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கு ஒரு பொலிஸ் அரசை கட்டியெழுப்புவதற்கும் அரச வன்முறையை இயல்பாக்குவதற்கும் செலவிட்டுள்ளது. வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை போராட்டங்களில் இதுவரை குறைந்தது 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் LeMediaTV இன் பத்திரிகையாளர் Chloé Grace உம் அடங்குவார், அவர் பிளாஸ் டு லா கான்கார்டில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கும் போது கைது செய்யப்பட்டார்.

மக்ரோனும் அவரது பாசிசவாத உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானனும், தீவிர வன்முறையுடன் கூடிய முறையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குமாறு போலீசாருக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர். களத்தில் பத்திரிகையாளர்களால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில், பலத்த ஆயுதம் ஏந்திய போலீசார் அமைதியான, நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களை திடீரெனவும் கொடூரமாகவும் தாக்குவதைக் காட்டுகிறது. ஒவ்வொரு முக்கிய நகரத்திலும், முழு உடல் கவசம் அணிந்து, எரிவாயு, தடிகள், கலகக் கேடயங்கள் மற்றும் அனேகமாக தாக்குதல் துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்ட போலீஸ் படையினர், போராட்டக் குழுக்களை மீண்டும் மீண்டும் தாக்குவதற்கும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதற்கும் முன்பு அவர்களை சுற்றி வளைக்கின்றனர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களை கலைத்த பின்னர், ஆரம்ப கைதுகளில் இருந்து தப்பித்த சந்தேகத்திற்குரிய ஆர்ப்பாட்டக்காரர்களை BRAV (வன்முறை நடவடிக்கை ஒடுக்குமுறைக்கான படையணி - Brigade de Répression de l'Action Violente) போலீஸ் மோட்டார் சைக்கிள் பிரிவுகள் பாரிஸின் தெருக்களில் தேடின. சனிக்கிழமையன்று பிளாஸ் டு இத்தாலி அருகே டசின்கணக்கான கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தலையில் கைகளை வைத்து ஒரு கட்டிடத்திற்கு எதிராக அணிவகுக்க வைக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு, மீண்டும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் லியோனில் போராட்டக்காரர்கள் மீது நாய் போலீஸ் பிரிவு நாய்களை ஏவிவிட்டது.

சனிக்கிழமையன்று, பாரிஸ் காவல்துறை நகரத்தில் பதிவு செய்யப்படாத அனைத்து கூட்டங்களும் 'கலைக்கப்படும்' என்று ஒரு உத்தரவை வெளியிட்டது. CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்கத்தின் இல் து பிரான்ஸ் பிராந்திய அமைப்பு அழைப்பு விடுத்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ் டு இத்தாலியில் கூடத் தொடங்கியபோது, 'பல குண்டர்கள் இருப்பதால், அமைப்பாளர் கலைந்து செல்ல அழைப்பு விடுக்கிறார்' என்று ஒரு போலீஸ் அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோக பாத்திரத்தை விளக்குகிறது: அதாவது அரசாங்கத்தால் அழைக்கப்படும்போது, தொழிற்சங்க அதிகாரத்துவம் அதன் ஆதரவாளர்களை குற்றம் சாட்டுகிறது மற்றும் போலீசாரின் வன்முறை ஒடுக்குமுறையை மன்னிக்கிறது.

இரவு முடிவில், பாரிஸில் சனிக்கிழமை 67 பேரையும், நாடு முழுவதும் 187 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான போராட்டக்காரர்கள் வரிசை:

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

BRAV-M பிரிவுகள் போராட்டக்காரர்களை வேட்டையாடுகின்றன:

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மீதான வெகுஜன சீற்றம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மக்ரோனின் ஊன்றுகோலுக்கு ஆதரவான தலைவர்களின் அலுவலகங்களைத் தாக்கி வருகின்றனர். வெள்ளிக்கிழமை, லியோனில் இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் 4 வது வட்டாரத்திலுள்ள மேயர் அலுவலகத்திற்குள் நுழைந்து பகுதியளவில் அதை எரித்தனர். முன்னதாக சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த குடியரசுக் கட்சியின் (LR) தலைவர் எரிக் சியோட்டியின் அலுவலகங்கள் சனிக்கிழமை நீசில் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. பல நகரங்களில், மக்ரோன், பிரதமர் எலிசபெத் போர்ன் மற்றும் பிற அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

ஓய்வூதிய வெட்டுக்களை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளைப் பாதுகாக்க பொலிஸ் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் சேவைகளைப் பயன்படுத்தி, நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆளும் வர்க்கம் முயல்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் இல்லாமல் மக்ரோனை தோற்கடிப்பதற்கான ஒரு வழியாக இது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளால் ஊக்குவிக்கப்படுகிறது.

ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியானது பொலிஸ் மற்றும் அரசுடன் பரந்த உறவுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கின் கட்சியாக அதன் உண்மையான நிறத்தைக் காட்டுகிறது. ஞாயிறன்று, மெலோன்சோன் ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறை குறித்த ஊடகங்களின் கண்டனங்களை இவ்வாறு எதிரொலித்தார்: 'இந்த சட்டத்திற்கு எதிராக போராடும் நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய ஒரு செய்தி உள்ளது. எங்களுக்கு எதிராகத் திரும்பும் நடைமுறைகள் மூலம் போராட்டத்தை கண்ணுக்குத் தெரியாததாக மாற்றாதீர்கள். பிரெஞ்சு போலீஸ் வன்முறை அடக்குமுறை குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை ஆதரித்த LR பிரதிநிதிகளை நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்குமாறு LFI பாராளுமன்றத் தலைவர் மிஷோல் பொம்பார்ட் அழைப்பு விடுத்தார். 'இந்த சீர்திருத்தத்தைப் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதைத்தான் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்: [மக்ரோன் 49.3 ஐப் பயன்படுத்துவதை] நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று அவர் கூறினார்,

மக்ரோனின் சீர்திருத்தம் மற்றும் வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறையை விடுவிப்பதற்காக அல்ல, மாறாக அவரது சீர்திருத்தத்தை திணிக்க தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளுடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்து அவரை விமர்சிப்பது திவாலான பாராளுமன்ற சூழ்ச்சிகளுக்குப் பின்னால் தொழிற்சங்கத் தலைமைகளானது தொழிலாளர்களைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.

ஞாயிறன்று BFM-TV யிடம் பேசிய CGT தொழிற்சங்கத் தலைவர் பிலிப் மார்டினெஸ், 'நாங்கள் எங்கள் எச்சரிக்கை விடுக்கும் பாத்திரத்தை வகித்தோம்... அரசாங்கமும் குறிப்பாக குடியரசின் ஜனாதிபதியும் எங்கள் எச்சரிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை' என்று கூறினார். மக்ரோன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அழைப்புகளை தான் எதிர்ப்பதாக மார்டினெஸ் வலியுறுத்தினார், 'இது அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான பிரச்சினை அல்ல, மாறாக கடந்த வியாழனன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாத வாக்களிப்பு குறித்தது' என்று அறிவித்தார்.

CFDT தொழிற்சங்கத்தின் தலைவரான லோரன்ட் பெர்ஜர், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் போராடும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை குறைக்குமாறு உத்தரவிட்டார், 'நீங்கள் உயர்நிலைப் பள்ளி இறுதி தேர்வுகளில் தலையிடக்கூடாது (bac)' என்று வலியுறுத்தினார்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான சாமானியர்களின் கிளர்ச்சி மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் கட்டுப்பாடற்ற சமூக வெடிப்பு ஆகியவற்றின் வளர்ந்து வரும் சாத்தியக்கூறுகளைக் கண்டு ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது. ஞாயிறன்று, தேசிய பாராளுமன்றத்தில் மக்ரோன் அரசாங்கத்தை குறிவைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தலைமை தாங்கும் வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதி நிபுணரான சார்ல்ஸ் டு கூர்சன் பின்வருமாறு எச்சரித்தார், 'இன்று, தொழிற்சங்கங்கள் நாங்கள் கூறியது போல் துருப்புக்களை (தொழிலாளர்கள்)  நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்த முடியாது என்று எங்களிடம் கூறுகின்றன. நேற்றிரவு முதல் அத்துமீறல்களைக் காணத் தொடங்கினோம். ஆபத்து என்னவென்றால், தொழிற்சங்கங்கள் இனி இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது.'

கால் நூற்றாண்டுக்கும் மேலாக பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியின் மிகவும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களில் ஒருவராக கூர்சன் இருந்து வருகிறார். 1993 இல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர் 30 அரசாங்க வரவுசெலவுத் திட்ட மசோதாக்கள் மீதான விவாதங்களுக்கு நிதி நிபுணராக செயற்பட்டுள்ளார், இது கடந்த மூன்று தசாப்தங்களாக பிரான்சில் சிக்கன நடவடிக்கைகளின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக அவரை ஆக்கியுள்ளது. கூர்சன் போன்ற பிற்போக்குத்தனத்தின் தூண் தொழிற்சங்கத் தலைமைகளுடன் இணைந்து போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தடுத்து நிறுத்தவும் முயல்கிறது என்பது தொழிலாளர்கள் அதிகாரத்துவங்களுடன் ஒரு முழுமையான முறிவை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

அவர்களுக்கும் அனைத்து முதலாளித்துவ-சார்பு அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளுக்கும் எதிராக, பிரான்சிலுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சாமானியக் தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைக்க வேண்டும் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான அதே போராட்டத்தில் சர்வதேச அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் இணைப்புக்களை உருவாக்க வேண்டும்.

Loading