மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சில நாட்களாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் புதிய மாறுபாட்டின் தோற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர், இது COVID-19 க்கு காரணமான வைரஸ் ஆகும். அடையாளம் காணப்பட்ட BA.2.86 வைரசுக்கு 'பிரோலா' என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு அதன் முனைப்புள்ளி புரதத்தில் 35 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது ஒமிக்ரான் XBB.1.5 இலிருந்து வேறுபடுகிறது. இது, பூகோளரீதியாக ஆதிக்கம் செலுத்திய சமீபத்திய மாறுபாடு மற்றும் அடுத்தடுத்த தடுப்பூசிகள் அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் ஞாயிற்றுக்கிழமை முதன்முதலில் கண்டறியப்பட்ட பிறகு, பிரோலா டென்மார்க் மற்றும் பின்னர் அமெரிக்காவில் வரிசைப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தொற்று குறித்து அறிவித்தது. மூன்று கண்டங்களில் நான்கு நாடுகளில் பிரோலா கண்டறியப்பட்டிருப்பது என்பது இது ஒரு வலிமையான மாறுபாடு என்பதைக் குறிக்கிறது, அது பெரும்பாலும் சில காலமாக பூகோளரீதியாக கண்டறியப்படாமல் பரவியிருக்கலாம்.
டென்மார்க் பகுதிகளில், வெளிப்படையாக தெரியும்படியாக உள்ள சமூக பரவலைப் பற்றி குறிப்பிட்ட மூலக்கூறு வைராலஜிஸ்ட் டாக்டர் மார்க் ஜோன்சன் வெள்ளிக்கிழமை “மூன்று டென்மார்க் நோயாளிகளும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் எந்த தொடர்பும் இல்லை. இது மேலும் மேலும் பனிச்சரிவு போல் தெரிகிறது”என்று ட்வீட் செய்தார்,
பிரோலா மற்றும் XBB.1.5 க்கு இடையிலான மரபணு வேறுபாடு, முதல் ஒமிக்ரான் மாறுபாடு மற்றும் வைரஸின் அசல் விகாரத்திற்கு இடையிலானதுடன் ஒப்பிடலாம். முனைப்புள்ளி புரதத்தில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான பிறழ்வுகள் ஒமிக்ரானை தடுப்பூசிகள் மற்றும் முந்தைய தொற்றுகளால் உருவாகும் நோய் எதிர்ப்புகளைத் தவிர்ப்பதை சாத்தியமாக்கின. அது பெரும் தொற்றுநோயின் போது எந்த சமயத்திலும் எந்த கட்டத்திலும் ஊடறுத்து செல்வது மற்றும் மீண்டும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட மிகப் பெரிய பூகோளரீதியான தெற்று நோய் அலையை தோற்றுவித்தது.
'ஒமிக்ரான் 'மென்மையானது' என்ற தவறான தகவல் பரப்பும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பூகோளரீதியாக மில்லியன் கணக்கான மரணங்களை ஏற்படுத்தியது மற்றும் அதுவே முழு பெரும் தொற்றுநோயின் மிகப் பெரிய நீண்ட COVID அலையாக இருந்திருக்கலாம். பிரோலா அத்தகைய 'ஒமிக்ரான் வகை' நிகழ்வை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள், இதில் பூகோளரீதியாக பில்லியன் கணக்கான மக்கள் COVID-19 ல் பாதிக்கப்படலாம் அல்லது மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம். Pirola வினால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு அல்லது கொல்லப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால், அது வாரங்கள் அல்லது மாதங்கள் வரை தெரியாமல் இருக்கும், ஏனெனில் அவற்றுக்கான அறிகுறிகள் இல்லை.
சுயாதீனமாக இயங்கும் விஞ்ஞானிகள் Pirola மாறுபாட்டின் தோற்றம் குறித்து பொதுமக்களைப் பயிற்றுவிக்கப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு கார்ப்பரேட் ஊடகமும் குற்றவியல் மவுனத்தை கடைப்பிடிக்கின்றனர்.
இந்த புதிய மாறுபாட்டினால் வளர்ந்து வரும் கவலை, EG.5 மாறுபாட்டால் பெரும்பாலும் தூண்டப்படும், 'எரிஸ்' என்று புனைப்பெயரிடப்பட்டுள்ளது, இது உலகளவில் வரிசைப்படுத்தப்பட்ட தொற்றுக்களில் 30 சதவீதத்திற்கும் மேலானதை இப்போது கணக்கில் எடுத்துக்கொள்கிறது, என்ற சூழலில் எழுகிறது.
அமெரிக்காவில் இருந்து வியாழன் அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய கழிவுநீர் தரவுகள், கடந்த எட்டு வாரங்களில், தேசிய அளவில் வைரஸ் பரவல் அளவு 227 சதவீதம் அதிகரித்துள்ளது, அல்லது மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. தற்போது, தினமும் சுமார் 610,000 அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகின்றனர், மேலும் 6 மில்லியன் பேர் தற்போது COVID-19 ல் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2021 ஆம் ஆண்டு டெல்டா அலையின்போது எட்டிய உச்ச அளவுகளுக்கு அருகில் உள்ளது. இந்த உயர்வு பெரும்பாலும் எரிஸால் இயக்கப்படுகிறது, இது கடந்த வாரம் ஆதிக்கம் செலுத்தியது மற்றும் இப்போது வரிசைப்படுத்தப்பட்ட வழக்குகளில் 20.6 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

COVID-19 இனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது உலகம் முழுவதும் விரைவாக அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா முழுவதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது ஜூலை 8 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 60 சதவீதம் அதிகரித்துள்ளன, இது தரவு கிடைக்கக்கூடிய சமீபத்திய தேதியில் அறியப்பட்டதாகும். சமீப வாரங்களில், நியூயோர்க்கில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது மற்றும் தீவிர சிகிச்சை (ICU) சேர்க்கைகள் இரட்டிப்பாகிவிட்டன, இது பெரும்பாலும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது.
குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்புகள் தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன. சீனா, கடந்த குளிர்காலத்தில் தனது பூச்சியம் -கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தை நீக்கிய பின்னர், மூன்று மில்லியன் மக்கள் வரை கொன்றிருக்ககூடிய இரண்டு பேரழிவை ஏற்படுத்திய தொற்றுநோய் அலைகளுக்கு வழிவகுத்தது, சீனாவில் மூன்றாவது தொற்றுநோய் அலை தொடங்குகிறது என்ற அச்சம் ஏற்கனவே உள்ளது.
உலகம் முழுவதும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறை முடிவடைவதால், உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் குழந்தைகள் தற்போது பள்ளிகளுக்கு திரும்பி வருகின்றன. இது ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயின் மீது எரிபொருளை ஊற்றுவதாக இருக்கும். ஏனெனில் பள்ளிகள் பெரும் தொற்றுநோய் காலம் முழுவதும் வைரஸை பரப்பும் முக்கிய மையங்களாக அறியப்பட்டுள்ளன.
உலகளவில் COVID-19 பொது சுகாதார அவசரநிலை (PHE) அறிவிப்புகளை மே மாத தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பைடென் நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, தற்போதுள்ள உலகளாவிய பரந்த தொற்று அலை மற்றும் இது Pirola மாறுபாட்டால் அதிகரிக்கும் அபாயங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த அறிவியல்பூர்வமற்ற முடிவுகள் உலகளவில் ஏற்கனவே அழிக்கப்பட்ட தொற்றுநோய் கண்காணிப்பு அமைப்புகளின் முழுமையான சரிவை தூண்டியது.
உலகின் பெரும்பகுதியில் சோதனை, தொடர்பு கண்காணிப்பு மற்றும் தொற்றுக்கள் குறித்து அறிவித்தல் ஆகியவை இப்போது இல்லை. SARS-CoV-2 இன் பரிணாமம் மற்றும் எரிஸ் மற்றும் பிரோலா போன்ற புதிய மாறுபாடுகளின் உலகளாவிய பரவலை கண்காணிக்க தேவையான மரபணு கண்காணிப்பு, கடந்த ஆண்டு குறிப்பாக PHE களை நீக்கிய பின்னர், கடுமையாக குறைந்துள்ளது.
ஆனால், இந்த பின்னோக்கிச் செல்லும் கொள்கை முடிவுகளின் மிக முக்கியமான விளைவு, இது கார்ப்பரேட் ஊடகங்களில் ஒரு தீவிரமான பிரச்சாரத்துடன் சேர்ந்து, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக நம்புவதற்கு தவறாக வழிநடத்தியது. இது பூகோள சமூகத்தை விரைவாக துடைத்துக் கட்டி வருகையில் பில்லியன் கணக்கான மக்கள் இப்போது தொற்றுநோயின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள முற்றிலும் தயாரற்ற நிலையில் உள்ளனர்,
வியாழக்கிழமை, பிரோலாவைக் கண்டுபிடித்த சுயாதீன குடிமகன் விஞ்ஞானிகளைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இரண்டும் புதிய மாறுபாட்டின் பரவலை தாம் கண்காணித்து வருவதாக அறிவித்தன. இந்த அறிவிப்புகள் பெரும்பாலும் சேதக் கட்டுப்பாட்டு நோக்கத்திற்காகவே செய்யப்பட்டன, ஏனெனில் இரண்டு நிறுவனங்களும் தொற்றுநோயின் தொடர்ச்சியான ஆபத்துக்களை மறைப்பதில் தங்கள் பங்கிற்கு முற்றிலும் மதிப்பிழந்நு நிற்கின்றன.
பிரோலா உலகளவில் பரவுமா அல்லது கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் இந்த விளைவுகள் முற்றிலும் சாத்தியமானவையே. உண்மையில், இந்த அபாயங்கள் வைரஸ் சுதந்திரமாக பரவுவதற்கு விடப்படும் போது மட்டுமே அதிகரிக்கின்றன மற்றும் பில்லியன் கணக்கான தொற்று ஏற்பட்டவர்களில் மாறுபாட்டுக்கு உள்ளாகிறது.
COVID-19 தொற்றுநோய்க்கு முதலாளித்துவத்தின் பதிலளிப்பு என்னவென்றால், இலாப உற்பத்தியை அதிகரிக்கவும், மக்கள் தொகையை தொற்றுநோய், மரணம் மற்றும் நீண்டகால COVID ஆகியவற்றின் தொடர்ச்சியான அலைகளுக்கு உட்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட முடிவற்ற பொய்கள், தவறான தகவல்கள் மற்றும் கொலைகாரக் கொள்கைகளின் தொடர்ச்சியாகும்.
ஏகாதிபத்திய போர் சாதனங்கள் மற்றும் வங்கி மீட்புகளுக்கு எல்லையற்ற வளங்கள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் அடுத்த தலைமுறை COVID-19 தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் காற்று மாசுபாட்டைத் தடுக்க உள்கட்டமைப்பை புதுப்பிப்பதற்கான ஆராய்ச்சிக்கு வெறும் ஒரு சிறு தொகை தான ஒதுக்கப்படுகிறது. உயர்தர முகக்கவசங்கள், துல்லியமான சோதனைகள், சிகிச்சைகள் மற்றும் இப்போது கூட தடுப்பூசிகள் அனைத்தும் சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான மக்களினால் வாங்கும் திறன் அற்றனவாக அல்லது கிடைக்க முடியாதவையாக உள்ளன.
சமூகத்தை இயக்கும் நிதி உயரடக்கு சிறு குழு சமூக நலன்கள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது. முதலாளித்துவம் உலகப் போரின் காட்டுமிராண்டித்தனத்தில் இறங்கும்போது, “தகுதியானவை நிலைத்து வாழ்தல்” என்ற பாசிச மந்திரம் மீண்டும் ஒருமுறை அதிகார மண்டபங்களில் எதிரொலிக்கிறது.
தற்போதைய அனுபவம், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மக்களின் திரள்கள் தொற்றுநோயின் முக்கிய அலைகளை அனுபவிக்கும்போது, அவர்களின் அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்கள் அதை மூடி மறைப்பதை தவிர வேறு எதுவும் செய்யாதபோது, அது நவீன சமுதாயத்தின் அடிப்படை சமூக முரண்பாட்டைக் காட்டுகிறது - அது முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலானது.
புரட்சிகர சோசலிச இயக்கம் முகங்கொடுக்கும் ஒரு மையப் பணி, தொழிலாள வர்க்கத்திற்கு இந்த மோதல் குறித்த புரிதலையும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும். அதேபோல் போர், பாசிசம், காலநிலை மாற்றம் மற்றும் முதலாளித்துவ அமைப்பிலிருந்து எழும் அனைத்து பெரிய சமூகப் பிரச்சினைகளையும் தடுக்க தேவையான அரசியல் திட்டத்தையும் வழங்குவதாகும்.
அடிப்படை ரீதியில், பெரும்தொற்றுநோய் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன, ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு சமூக மற்றும் அரசியல் நெருக்கடி ஆகும். உலக சோசலிச வலைத்தளம் மற்றும் அனைத்துலக குழு (ICFI) ஆகியவை இந்த கட்டாயத்தை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக விளக்கியுள்ளன, மேலும் இந்த போராட்டத்திற்கு ஒரு புரட்சிகர தலைமைத்துவத்தை வழங்கியுள்ளன. வைரசின் புதிய மற்றும் அபாயகரமான மாறுபாடுகள் உலகெங்கும் பரவி வருவதால், இந்தப் போராட்டத்தை உலகளாவிய அளவில் ஆழப்படுத்துவது இன்னும் அவசியமாக உள்ளது.
