மக்ரோனின் அமைச்சர்கள், பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகளுடன் இஸ்ரேல் ஆதரவுப் பேரணியில் கைகோர்க்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரின் லு பென்

நேற்று, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் காசா மீதான இஸ்ரேலிய அரசாங்கத்தின் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அமைச்சர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணியில் மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணியின் (NR) தலைவர்களுடன் அருகருகே அணிவகுத்துச் சென்றனர்.

இந்நிகழ்வின் அரசியல்ரீதியான ஏமாற்றுகின்ற மற்றும் வஞ்சகத் தன்மை கிட்டத்தட்ட வெளிப்படையாகத் தெரிகிறது. பாராளுமன்றம் மற்றும் செனட் தலைவர்களான மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியைச் (Renaissance party) சேர்ந்த யாயல் பிரவுன்-பிவெ மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சியின் (LR) ஜெரார் லார்சே ஆகியோர் யூத எதிர்ப்பு மற்றும் இன வெறுப்பை எதிர்ப்பதாகக் கூறி இந்த அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தனர். எவ்வாறெனினும், யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பிற்கு இடைவிடாமல் அழைப்பு விடுக்கும் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போரை ஆதரிக்கும் ஒரு அரசாங்கத்தால் அழைக்கப்படும் சக்திகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.

இஸ்ரேல் அரசு காஸாவில் இனப்படுகொலையை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறாமல் இன்று இனப்படுகொலை குறித்து நேர்மையாக யாரும் பேச முடியாது. அதன் படைகள் 11,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன மற்றும் 70,000 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியுள்ளன, பாதுகாப்பற்ற மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது குண்டு வீச்சுக்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை மழைபோல் வீசின. இஸ்ரேலிய அதிகாரிகள் காஸாவிலிருந்து தப்பிப்பிழைத்த அனைவரையும் அண்டை நாடான எகிப்தின் சினாய் தீபகற்பத்திற்கு வெளியேற்றும் தங்கள் நோக்கத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர், பாலஸ்தீனியர்களின் காஸாப் பகுதியை இதன் மூலம் இனரீதியாக சுத்தப்படுத்துகின்றனர்.

ஞாயிறன்று பாரிஸில் நடந்த இஸ்ரேலிய-சார்பு பேரணியானது, யூத எதிர்ப்பு மற்றும் இன வெறுப்புக்கு எதிராக வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டாலும், உண்மையில் காஸா மீதான போருக்கு மக்ரோனின் ஆதரவின் ஒரு பகுதியாக இருக்கிறது. வலதுசாரி நாளேடான Le Figaro இல் வெளியிடப்பட்ட அத்தகைய பேரணிக்கு பிரவுன்-பிவெ மற்றும் லார்சே விடுத்த அழைப்பு, “குடியரசு ஆபத்தில் உள்ளது” என்று பிரகடனம் செய்வதுடன், “இஸ்லாமியவாதத்திற்கு எதிரான ஒரு அரணாக” இருக்க உறுதியளிக்கிறது. ஆனால் அது காஸா இனப்படுகொலை குறித்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கொள்கைகள் குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை.

பிரதமர் எலிசபெத் போர்ன் மற்றும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் உட்பட மக்ரோனின் அரசாங்கத்தின் 27 அமைச்சர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். அதிதீவிர வலதுசாரி, யூத எதிர்ப்பு Action française  கட்சியின் அனுதாபியான டார்மனன், பிரெஞ்சு பல்பொருள் அங்காடிகளில் கோஷர் மற்றும் ஹலால் உணவு இருப்பதைக் கண்டித்ததற்காக இழிபுகழ் பெற்றவர். காஸா மீதான போருக்கு, இஸ்ரேல் “தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையை” அங்கீகரிப்பதற்கு மக்ரோன் இஸ்ரேலுக்கு விரைந்து சென்றதுடன், நெதன்யாகுவை ஒரு “நண்பர்” என்று பாராட்டிய மக்ரோன் வழங்கிய ஆதரவைத் பேரணியில் கலந்து கொள்வதன் மூலம், பிரான்சின் அதிவலது கலக பொலிஸ் பிரிவுகளின் தலைவர் டார்மனன் தொடர்கிறார்.

இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்க்கும் பாலஸ்தீனியர்களை “ஒழிக்க” அழைப்புவிடுப்பதன் மூலம் காஸா போருக்கு எதிர்வினையாற்றிய லு பென்னைப் பொறுத்தவரை, அவர் தனது அதிதீவிர வலதுசாரி கட்சியை பிரெஞ்சு அரசியல் வாழ்க்கையின் மையத்தில் வைக்க முயல்கிறார். “இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு எங்கள் உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களை நான் அழைக்கிறேன். எங்கள் யூத சகாக்கள் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன,” என்று லு பென் RTL வானொலிக்கு தெரிவித்தார், அவரும் அவரது உதவியாளர் ஜோர்டான் பார்டெல்லாவும் கலந்து கொள்வார்கள் என்று வலியுறுத்தினார்.

பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்த ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியையும் லு பென் தாக்கினார். LFI “மிகவும் மெத்தனமாகவும், மற்றும் மிகவும் கடினமான பாதைக்கு உடந்தையாக இஸ்லாமியவாத பிரிவுகளுக்கு உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார். அவர்களுடன் போரிடாவிட்டால், ஒருவர் தெளிவற்றவர்” என்றார்.

குறிப்பாக, பேரணியில் லு பென்னின் கட்சி கலந்துகொள்வதானது, அது யூத எதிர்ப்பிற்கு எதிரானது என்ற மோசடியான பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. RN (தேசியப் பேரணி), அதன் ஸ்தாபகத் தலைமுறை பெரும்பாலும் இனப்படுகொலை, நாஜி ஒத்துழைப்புவாதியான ஜாக் டோரியோவின் (Jacques Doriot) பிரெஞ்சு மக்கள் கட்சியின் (French Popular Party (PPF) முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டதோடு, அதன் யூத எதிர்ப்பிற்கு இழிபுகழ் பெற்றது. அதன் முந்தைய தலைவரான மரினின் தந்தை ஜோன்-மரி லு பென் யூத எதிர்ப்பு அறிக்கைகளினால் நீதிமன்றங்களில் மீண்டும் மீண்டும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டவராவார், யூத கூட்டு இனப்கொலையை (Holocaust) “வரலாற்றின் அற்பவிடயம்” என்று அவர் நிராகரித்தார்.

பார்டெல்லா வெட்கமின்றி இந்தச் சாதனையை நியாயப்படுத்தினார், BFM-TV யிடம் இவ்வாறு கூறினார்: “ஜோன்-மரி லு பென் ஒரு யூத எதிர்ப்பாளர் என்று நான் நினைக்கவில்லை.” தீவிர வலதுசாரி CNews கேபிள் சேனலில் இந்தக் கூற்றைப் பற்றி கேட்கப்பட்டபோது, பார்டெல்லா மீண்டும் அதை நியாயப்படுத்தினார்: “இந்த விஷயத்தில் நாங்கள் எப்போதும் அவதூறுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்று கூறினார்.

இத்தகைய அறிக்கைகள் பிரான்சிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் மற்றும் காஸா மீதான இஸ்ரேலிய போருக்கு எதிரான வெகுஜன போராட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் சர்வதேச ரீதியில் முக்கியமான பிரச்சினைகளை கூர்மையாக முன்வைக்கின்றன. 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் இருந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதிலும் முடிவில்லாப் போர்களை நடத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான காலனித்துவ சகாப்தத்தின் இரத்தம் தோய்ந்த குற்றங்களுக்கு கடிகாரத்தை திருப்புவதற்காக அவர்கள் ஒரு உலகளாவிய போரை நடத்தி வருவதால், காஸாவில் இனப்படுகொலைக்கு இஸ்ரேலிய ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டுகின்றன.

உக்ரேனில் ரஷ்யா மீதான அதன் போர் மற்றும் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அதன் நவ-காலனித்துவ போர்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மக்ரோன் அரசாங்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இரத்தம் தோய்ந்த பதிவை சுத்தப்படுத்த வேலை செய்து வருகிறது. Le Figaro வில் பிரவுன்-பிவெ மற்றும் லார்சே ஆகியோரால் ஞாயிறன்று வெளியிடப்பட்ட பேரணிக்கான அதன் அழைப்பானது காஸாவிலுள்ள ஹமாஸ் அரசாங்கத்தை நாஜி ஆட்சியுடன் சமப்படுத்தியது. காஸா மீதான சட்டவிரோத இஸ்ரேலிய முற்றுகைக்கு எதிரான அக்டோபர் 7 பாலஸ்தீனிய எழுச்சியை “இனப்படுகொலைக்குப் பின்னர் இழிதன்மை வாய்ந்த சமத்துவமற்ற ஒரு படுகொலை” என்று அது விவரித்தது.

உலக மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு இனப்படுகொலை ஏகாதிபத்திய ஆட்சியான நாசிசத்துடன், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுடனான இந்த ஆத்திரமூட்டும் மற்றும் பொய்யான ஒப்பீடு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை மூடி மறைக்கிறது. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது கொல்லப்பட்ட 1,400 இஸ்ரேலியர்களை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் நடத்திய போர்களில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுடன் இது ஒப்பிடுகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, மாலி மற்றும் அதற்கு அப்பாலும் 21 ஆம் நூற்றாண்டின் நேட்டோ போர்களில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கானவர்களும் இதில் அடங்குவார்கள்.

1946-1954 பிரெஞ்சு இந்தோசீனா மற்றும் 1954-1962 அல்ஜீரிய போர்களில், பிரான்சின் குற்றங்கள் குறித்து பிரவுன்-பிவெ மற்றும் லார்சே ஆகியோர் மறைமுகமாக மூடிமறைத்தது, கீழிருந்து காஸாவைப் பாதுகாக்கும் இயக்கத்திற்கு எதிராக மக்ரோன் தேசிய பேரணிக் (RN) கட்சியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த இரண்டு போர்களிலும், பிரான்ஸ் மில்லியன் கணக்கானவர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்து, நூறாயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் பாரிய அளவில் சித்திரவதைகளை மேற்கொண்டது.

RN ஆனது வரலாற்றுரீதியாக நாஜி ஒத்துழைப்புவாத PPF க்கு அப்பால், முக்கியமாக அல்ஜீரியா சுதந்திரம் பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்ட முன்னாள் பிரெஞ்சு குடியேற்றவாதிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றது. அதன் முதல் தலைவரான ஜோன்-மரி லு பென், அல்ஜீரியாவில் ஒரு பாராசூட் பிரிவில் லெப்டினென்டாக இருந்தார், இந்தப் பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக சித்திரவதையைப் பயன்படுத்துவதில் இழிபுகழ் பெற்றது. பிரான்சில் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போர்-எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும், இந்த சக்திகள் மீண்டும் மீண்டும் போரை தொடர நிர்பந்திக்கும் வகையில், சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்திற்கு எதிராக மக்ரோனும் முழு பிரெஞ்சு முதலாளித்துவமும் அழைப்பு விடுக்கும் அரசியல் சக்திகள் மற்றும் மரபுகள் இவைகள்தான். சமூக சமத்துவமின்மை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் முதல் மாதங்களுக்கு எதிரான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, பிலிப் டு வில்லியர்ஸைச் சுற்றியுள்ள அதிவலது “பிரெஞ்சு அல்ஜீரியா” ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர்களின் மகன்கள் அதிவலது இதழான Current Values இல் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். தங்கள் தந்தையரின் வரலாற்றை எதிரொலிக்கும் வகையில், பிரெஞ்சு நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கான இஸ்லாமியவாதிகளின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவதற்கு எதிராக இராணுவரீதியில் தலையிடுமாறு அவர்கள் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு அச்சுறுத்தலை விடுத்தனர்.

போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் உலகை உலுக்கி வரும் நிலையில், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு புறநிலை புரட்சிகர சூழ்நிலை உருவாகி வருகிறது. மக்ரோன் அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு குறிப்பாக உணர்திறன் கொண்டுள்ளது, ஏனெனில் அது இந்த வசந்த காலத்தில் அதன் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஒரு வெகுஜன வேலைநிறுத்த இயக்கத்தை எதிர்கொண்டது, இது பிரெஞ்சு மக்களில் முக்கால்வாசி பேரின் எதிர்ப்பையும் மீறி அது அதைத் திணித்தது. வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தாக்குவதற்கும் வங்கிகளின் கட்டளையை திணிப்பதற்கும் பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்தி மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார் என்பதை பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும் பரந்த அளவில் ஒப்புக்கொள்கிறார்கள்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஆதரிக்கும் மக்ரோன் அரசாங்கம் அல்லது நேட்டோ அரசாங்கங்கள் போன்றவற்றுடன் பணிபுரியும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது அரசியல் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவுமே இல்லை. பிரான்சில், மக்ரோனுடனான அவரது தொடர்ச்சியான அரசியல் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இஸ்ரேல்-சார்பு பேரணியில் கலந்து கொள்வதில்லை என்ற LFI இன் முடிவை எதிர்த்த LFI உறுப்பினர் பிரான்சுவா றஃபானின் பங்கு, இந்த சக்திகளின் வலதுசாரி பரிணாமம் குறித்த ஒரு எச்சரிக்கையாகும்.

மக்ரோன் அரசாங்கமானது இப்போது RN போன்ற பாசிச, காலனித்துவ-சார்பு சக்திகளை தழுவியிருப்பது, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை என்பதற்கான மேலும் ஒரு எச்சரிக்கையாகும். சர்வதேச அளவில் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம், ஏற்கனவே உள்நாட்டில் சமூக தாக்குதல்கள் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு இஸ்ரேலிய இராணுவத்திற்கான மீள்விநியோகத்தை நிறுத்துவதற்கும், போரை நிறுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு காஸா இனப்படுகொலையை ஆதரிக்கும் அரசாங்கங்களை தூக்கிவீசுவதற்கும் ஒரு வெகுஜன, சர்வதேச வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும்.

Loading