பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் போலி-இடது கட்சிகளும் சியோனிசக் குழுவுடன் இணைந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் பெண்ணிய அணிவகுப்பில் அணிவகுத்துச் செல்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமை, பாரிஸில் உள்ள தேசிய சதுக்கத்தில் (Place de la Nation) முற்றிலும் மாறுபட்ட, அரசியல் கதாபாத்திரங்களின் இரண்டு கூட்டங்களைக் கண்டது. அவற்றில் ஒன்று காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர ஆர்வமுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டிருந்தது. மற்றொன்று, இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கும் அல்லது அலட்சியமாக இருக்கும் வலதுசாரிய பெண்ணிய அமைப்புகள் மற்றும் அதனுடன் இணைந்த போலி-இடது நட்புக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

இந்த முரண்பாடு, மக்ரோன் அரசாங்கத்திற்கு பாரிய வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், ஒரு புறம் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்களின் அரசியல் ஊழியர்களும், மறுபுறம் பரந்துபட்ட மக்களையும் கொண்டிருக்கிறது. இது, பிரெஞ்சு அரசியலின் மையத்தில் உள்ள அடிப்படை அரசியல் மோதலை அம்பலப்படுத்தியுள்ளது.

20,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மரணமடைந்துள்ளனர். இஸ்ரேலிய தலைவர்கள் பகிரங்கமாக பாலஸ்தீனத்திற்கு எதிரான அவர்களின் இனப்படுகொலையை மோசடியான “மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்குப்” பிறகு மீண்டும் அதிகரிக்கத் தயாராகி வருகின்றனர். பிரெஞ்சு போலி-இடது குழுக்களும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் காஸா பகுதியில் நடந்து வரும் படுகொலைகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்தி, கடந்த வார இறுதியில் நடந்த இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டத்தை சனிக்கிழமையன்று மக்ரோன் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பெண்ணிய பேரணியாக கலைத்தனர்.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான சர்வதேச தினத்தின் ஒரு பகுதியாக NousToutes (நாங்கள் எல்லோரும்) மற்றும் Grève feministe (பெண்ணிய வேலைநிறுத்தம்) ஆகிய அமைப்புகளால் பெண்கொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பாளர்களின் கூற்றுப்படி, பாரிஸில் 80,000ம் பேர் அணிவகுத்துச் சென்றனர் மற்றும் பிற பிரெஞ்சு நகரங்களில் சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

MeToo மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை எடுத்துக்காட்டும் வீடியோவை ட்வீட் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஆதரவு இந்த போராட்டத்துக்கு கிடைத்தது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), நிரந்தரப் புரட்சி (RP), அடிபணியாத பிரான்ஸ், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைவாதிகள் உட்பட அனைத்து முக்கிய பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் போலி-இடது கட்சிகளும், தமது முக்கிய பிரதிநிதிகளை இதற்கு அனுப்பியிருந்தன.

தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மக்ரோன் அரசாங்கம் மற்றும் போலி-இடது கட்சிகள் பிரான்சின் மோசமான சமூக நிலைமைகளைத் தணிப்பது அல்லது ஏகாதிபத்திய படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அக்கறை காட்டவில்லை. மாறாக, ஏகாதிபத்தியப் போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவை உருவாக்க, நடுத்தர வர்க்க அடையாள அரசியலை அவர்கள் உணர்வுபூர்வமாக ஊக்குவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது MeToo இயக்கத்தின் அதிதீவிர வலதுசாரி மற்றும் ஏகாதிபத்திய சார்பு தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு போலி-இடது குழுவும் அதனை ஆதரித்து வருகிறது. அரசியல் எதிர்ப்பை அச்சுறுத்தும் வகையில் பாலியல் குற்றங்கள் தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தும் MeTooவின் முறையானது, இம்முறை சியோனிச-பெண்ணியவாதிகளால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக “அக்டோபர் 7” என அழைக்கப்படும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சியோனிச பெண்ணிய அமைப்பின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான, இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆதரவான இந்தக் குழு, அக்டோபர் 7 நிகழ்வுகளைச் சுற்றி சியோனிச பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளது. ஹமாஸால் “பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிதைக்கப்பட்டு மற்றும் கொலை செய்யப்பட்டதாகக்” கூறி, அல்-அக்ஸா “பாரிய பெண் படுகொலையின்”  வெள்ள நடவடிக்கை என்று இந்தக் குழு அழைத்தது.

“கண்டித்து செயல்படுவதற்கு எதற்கு காத்திருக்கிறீர்கள்”  போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை அவர்கள், ஏந்தியிருந்தனர். மேலும், “நீங்கள் யூதராக இல்லாவிட்டால்”, இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைக் கொள்கையை எதிர்க்கும் எவரையும் யூத எதிர்ப்பு மற்றும் வன்பணர்வுக்கு மன்னிப்பு வாங்குபவர் என்று MeToo குற்றம் சாட்டலாம்.

அக்டோபர் 7 சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் சியோனிஸ்ட் குழுவினர்

இந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் LePoint பத்திரிகையிடம் கூறினார்: “[நாங்கள்] பெண்ணிய சங்கங்கள் அனைத்தையும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க கட்டாயப்படுத்த விரும்புகிறோம். அவர்கள் ஒன்று சொல்லட்டும்: யூதப் பெண்கள் மற்றவர்களைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, அல்லது ஆம், ஹமாஸால் நடத்தப்படும் பெண் கொலைகளை நாங்கள் கண்டிக்கிறோம்”.

காஸாவில் தற்போதைய இனப்படுகொலையை விட “இஸ்ரேலியர்களின் மீதான கொலை மிகவும் கவலைக்குரியது, ஏனெனில், இஸ்ரேலியர்களுக்கு நடந்தது போலல்லாமல், பாலஸ்தீனிய பெண்கள் துல்லியமாக குறிவைக்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார். இதிலிருந்து, வரலாற்றில் இஸ்ரேலிய ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியின் போது, எந்தப் பெண்களும் உயிரிழப்பது பாலஸ்தீனியப் போராளிகளின் உள்ளார்ந்த பெண் வெறுப்பு நம்பிக்கைகளின் காரணமாகவே ஒழிய, பல தசாப்தங்களாக இஸ்ரேலிய அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை மற்றும் காஸா பகுதிக்கு எதிரான முற்றுகையின் காரணமாக அல்ல.

போலி-இடதுகளால் ஊக்குவிக்கப்படும் மார்க்சிச எதிர்ப்பு நடுத்தர வர்க்க பெண்ணியத்தில் எதுவுமே தீவிர தேசியவாத சியோனிசத்திற்கோ அல்லது முஸ்லிம்களை இழிவுபடுத்துவதற்கோ பொருந்தாது. கடந்த சனிக்கிழமையின் சீரழிந்த அரசியல் காட்சியானது, MeToo இன் பிற்போக்கு முறை மற்றும் அரசியல் உள்ளடக்கம் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்கும் போது யூதப் பெண்களின் உயர்ந்த மதிப்பை வலியுறுத்துவது, தீவிர அகநிலை நடுத்தர வர்க்க பெண்ணிய உலகக் கண்ணோட்டத்தை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்கிறது.

அக்டோபர் 7 குழு என்பது, அடையாள அரசியலின் போலி-இடது ஊக்குவிப்பாளர்களுக்கும், தீவிர வலதுசாரிகளுக்கும் இடையிலான புனிதமற்ற திருமணமாகும். LePoint பத்திரிகையின் கூற்றுப்படி, இஸ்ரேலிய அமைப்பாளர்கள் SOS Racism (பிரான்சின் இனவெறிக்கு எதிரான இயக்கம்) இயக்கத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்தனர். இது அமெரிக்காவின் பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) இயக்கத்தின் தலைமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலையான ஆதரவாளரான பிளாக் லைவ்ஸ் மேட்டர், பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடுவதற்கு, நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வசூலித்த பணம் சம்பந்தப்பட்ட ஊழல் மோசடியில் சிக்கியது. அதிதீவிர வலதுசாரி யூத பாதுகாப்பு கழகத்தின், பல மோசமான உறுப்பினர்களும் அக்டோபர் 7 குழுவின் பேரணியில் நேரில் கண்ட சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.

சியோனிச போராட்டக்காரர்களுடன், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஆதரவளிக்கும் உக்ரேனிய சார்பு போராட்டக்காரர்களின் குழுவும் சியோனிசக் குழுவுடன் இணைந்து “புட்டின் வன்புணர்வாளர்” என்று கண்டனம் செய்யும் பதாகைகளுடன் ஊர்வலத்தில் இணைந்திருந்தனர்.

திவாலான அரசியல் மற்றும் இந்த தேசியவாத மற்றும் பெண்ணியவாத வட்டங்களைப் போலல்லாமல் முற்றிலும் மாறாக, உறுதியான பாலஸ்தீனிய சார்பு போராட்ட எதிர்ப்பாளர்கள் இருந்தனர். காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கும் குழுக்களால் அவர்கள் எதிர்கொள்ளப்படுவார்கள் என்பதை அறியாமல், இனப்படுகொலை மற்றும் மோசடியான “மனிதாபிமான இடைநிறுத்தங்களை” ஊக்குவிக்கும் முதலாளித்துவ ஊடகங்களின் பிரச்சாரத்தை எதிர்த்து சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இவர்கள் வந்திருந்தனர்.

உலக சோசலிச வலைத்தளமானது, சாரா என்பவருடன் பேசியபோது, “அப்பாவி மக்களைக் கொல்வதும், போலிச் செய்திகள் மற்றும் இஸ்ரேலியப் பிரச்சாரத்தின் அடிப்படையில் ஒரு இனப்படுகொலையை ஆதரிப்பதும் சரியல்ல என்பதால் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இந்த நேரத்தில் நான் எந்த அரசாங்கத்தையும் ஆதரிக்கவில்லை. அது மக்ரோன் அல்லது சவூதி அரேபியாவின் இளவரசராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்களை அம்பலப்படுத்திக் கொண்டு, மக்கள் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவில்லை என்பதைக் காட்டினார்கள்” என்று அவர் விளக்கினார்.

தான் கலந்து கொள்ளும் போராட்டம் முதன்மையாக பெண்ணியக் குழுக்களால் அழைக்கப்பட்டது என்பதை உணரவில்லை என்று அவர் விளக்கினார். “நேர்மையாக, நான் வர முடிவு செய்தபோது அவர்கள் இரண்டு ஒருங்கிணைந்த எதிர்ப்புகளை நடத்துவது எனக்குத் தெரியாது. நான் எல்லோருடைய உரிமைகளையும் ஆதரிக்கிறேன், ஆனால் நான் ஒரு பெண்ணியவாதி அல்ல”.

சாரா

சர்வதேச பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்ட “மனிதாபிமான இடைநிறுத்தங்களின்” மோசடி தன்மையையும் சாரா கண்டித்தார்: “இது ஒரு விளையாட்டு. நீங்கள் ஒரு இனப்படுகொலையை இடைநிறுத்த முடியாது, நீங்கள் அதை முடிவுக்கு கொண்டுவரலாம். மனிதாபிமான இடைநிறுத்தம் என்று எதுவும் இல்லை. எனக்கு இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. நான்கு நாட்கள் இடைநிறுத்தம் காஸாவில் இறந்தவர்களை, அவர்களின் குடும்பங்களில் இருந்து கூட்டி அடக்கம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. அவர்கள் இன்னும் மேற்குக் கரையில் மக்களைக் கொல்கிறார்கள். இது வெறும் முட்டாள்தனம் என்று நான் நினைக்கிறேன்” என்று சாரா குறிப்பிட்டார்.

உலக சோசலிச வலைத்தளமானது, தனது மனைவி சமந்தாவுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட போவாஜிலா என்பவரிடம் பேசியது. இனப்படுகொலையை நியாயப்படுத்த இஸ்ரேல் சார்பு அமைப்பு ஒன்று அக்டோபர் 7-ம் தேதி பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து பதிலளித்த போவாஜிலா, “அக்டோபர் 7-ம் தேதி நடந்த நிகழ்வுகள் ராணுவம் என்று நான் நினைக்கிறேன், சிறைக் காவலர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் கதையின் மற்றொரு அத்தியாயம் இது. அது ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து வந்த பதில். ஒரு வரலாற்று அர்த்தத்தில் காஸா போராளிகளிடம் நிறைய பொருட்கள் இருந்தன” என்று குறிப்பிட்டார்.

“வன்புணர்வு பற்றிய கூற்றுக்கள் உண்மையல்ல. இது முட்டாள்தனம். தற்போதைய போரில் பயங்கரவாதிகள் ஹமாஸ் அல்ல, இஸ்ரேல்” என்று அவர் குறிப்பிட்டார்.

போவாஜிலா மற்றும் சமந்தா

காஸாவில், இஸ்ரேலின் இனப்படுகொலை குற்றங்கள் பற்றிய சான்றுகள் பரவலாக இருந்தாலும், சியோனிச ஆதரவு போராட்டக்காரர்களிடம் அவர்களின் கூற்றுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று இளம் பிரெஞ்சு-அல்ஜீரியரான அய்மான் சுட்டிக்காட்டினார். “பாலஸ்தீன குழந்தைகளின், பெற்றோர், பெண்கள் போன்றவர்களின் சடலங்களை நாம் தினமும் பார்க்கிறோம்… மூன்றாம் தரப்பினர் மூலம் அல்ல, ஒவ்வொரு நாளும் அவர்களை நேரடியாகப் பார்க்கிறோம். ஆனால், இஸ்ரேலியர்களின் சடலங்களில், நான் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பற்றி பேசுகிறேன், ஏனென்றால் இஸ்ரேலிய தரப்பில் ஆண்கள் மற்றும் போரில் ஈடுபடும் மக்கள் மத்தியில் மரணங்கள் உள்ளன. போர், ஆனால் இஸ்ரேல் குடிமக்கள் பக்கத்தில், பெண், குழந்தை, நாங்கள் எந்த சடலத்தையும் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய இனப்படுகொலை தாக்குதலை புரிந்து கொள்ள, “ஏன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், நீங்களே கல்வி கற்க வேண்டும், வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அய்மான் மேலும் கூறினார்.

அக்டோபர் 7 நிகழ்வுகள் பற்றி உலக சோசலிச வலைத்தளம் சமீபத்தில் விளக்கியது போல், “நேரில் கண்ட சாட்சிகள் ஒரு குதிரை வண்டியை உத்தியோகபூர்வ இஸ்ரேலிய கதை மூலம் ஓட்டுகிறார்கள்... இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, நெதன்யாகு அரசாங்கமும் இஸ்ரேலிய இராணுவமும் ஒரு கொள்கையைத் தொடர, பீரங்கித் தீவனமாகப் அவர்களை பயன்படுத்துகின்றன. அது, இஸ்ரேலிய விரிவாக்கம் மற்றும் யூத மேலாதிக்கம்”.

அக்டோபர் 7 நிகழ்வுகள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமையன்று சியோனிச போராட்டக்காரர்கள் கூறியது போல், பாலஸ்தீனிய போராளிகள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் அல்லது சிதைத்தார்கள் என்பதற்கு எந்த பொது ஆதாரமும் கிடையாது.

பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்துக்கள், காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக போராட விரும்பும் வெகுஜன மக்களிடையே இருக்கும் வர்க்கப் பிளவையும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அலட்சியத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்த அலட்சியம் அதிகாரத்துவங்களின் போலி-இடது அரசியல் ஆதரவாளர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது, அவர்கள் இந்த தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு சக்திகளில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதைத் தவிர்க்க என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக நடந்து வரும் இனப்படுகொலைக்கு மத்தியில், நடுத்தர வர்க்க அடையாள அரசியலையும், ஜனநாயக விரோத MeToo இயக்கத்தையும் ஊக்குவிப்பது என்பது, இனப்படுகொலையை ஆதரிக்கும் சியோனிச சக்திகளின் தகுதியான அரசியல் நிறுவனத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிராக போராடுவதில் உறுதியாக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த மார்க்சிச எதிர்ப்பு மற்றும் தேசியவாத சக்திகளுடன் தீர்க்கமாக முறித்துக் கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள், இது ஏகாதிபத்திய படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகப் போராடுகிறது.

Loading