Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

கட்சி பற்றிய லெனின்-ட்ரொட்ஸ்கி தத்துவம்

123. பிளவிற்குப் பின்னர், பிளவில் எழுப்பப்பட்ட அரசியல் கோட்பாட்டின் அடிப்படைப் பிரச்சினைகள் மீதாக கனன் விபரித்தார். அதிலும் குறிப்பாக பப்லோ மற்றும் மண்டேலுடைய தன்னெழுச்சி கருத்துருக்களுக்கு மார்க்சிசத்தின் சமரசத்திற்கிடமில்லாத எதிர்ப்பை அவர் எடுத்துரைத்தார்....நாங்கள் மட்டும் தான் கட்சியின் நனவுபூர்வமான முன்னணி படை மற்றும் புரட்சிகர போராட்ட தலைமையிலாக அதன் பங்களிப்பு பற்றிய லெனின்-ட்ரொட்ஸ்கி தத்துவத்தை நிபந்தனையின்றி பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இந்த தத்துவம் தற்போதைய ஆரம்ப சகாப்தத்திலிருந்த பிற அனைத்தையும் ஆக்கிரமிப்பிப்பதுடன், தீவிர உண்மைநிலையையும் முயன்று பெறுகிறது.

தற்போது தலைமைப் பிரச்சினை என்பது ஒரு நீண்டகால செயல்முறையில் வர்க்க போராட்டத்தின் தன்னெழுச்சியான வெளிப்பாட்டிற்கோ அல்லது முக்கியமாய் முதலாளித்துவம் பலவீனமாக உள்ள எந்தவொரு நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ கூட மட்டுப்படுத்தப்படவில்லை. இது சர்வதேச புரட்சி மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றம் பற்றிய அபிவிருத்தி பற்றிய கேள்வி ஆகும். இது தானாகவே நடக்கும் என்று அனுமதிப்பது, நடைமுறையில், மார்க்சிசத்தை முற்றுமுழுதாக கைவிடுவதாகும்.

இல்லை, இது ஒரு முழு நனவுடன் கூடிய நடவடிக்கையாக தான் இருக்க முடியும்; வரலாற்று நிகழ்வுப்போக்கில் நனவான கூறை பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்சிச கட்சியின் தலைமை அதற்கு தவிர்க்க இயலாத நிலையில் தேவைப்படுகிறது. வேறு எந்த கட்சியாலும் இதை செய்ய முடியாது. தொழிலாளர் இயக்கத்தில் வேறெந்த போக்கும் திருப்திகரமான மாற்றாக அங்கீகரிக்கப்பட முடியாது. அந்த காரணத்தால், பிற கட்சிகள் மற்றும் போக்குகள் மீதான நம் அணுகுமுறை சமரசத்திற்கு இடமின்றி விரோதப் போக்கை கொண்டுள்ளது.

சக்திகளின் உறவானது ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மையயவாதம் போன்ற விரோத போக்குகளால் அக்கணம் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்த அமைப்புகளுக்கு, முன்னணிப்படையின் காரியாளர்கள் பொருந்த மாற்றி அமைத்துக்கொள்வது தேவையாயிருந்தால், [அச்சமயம்] அவர்களுடன் ஒருபோதும் சமரசத்திற்கு இடமில்லாமல்; அவர்களுக்கு ஒருபோதும் வரலாற்றுப் பாத்திரத்தை அளிக்காமல், நட்புரீதியான ஆலோசனைகளுடனும், கடமை தவறாத விமர்சனங்களுடனும் மார்க்சிஸ்டுகளுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால சிறு வேலைகளுடன் அவர்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துகையில், அதுபோன்றதொரு ஒத்துபோதல் ஒரு தந்திரோபாய ஒத்துபோதலாக எல்லா காலங்களிலும் கட்டாயம் கருதப்படும்...[74]


[74]

Letter from Cannon to George Breitman, March 1, 1954, in Trotskyism vs. Revisionism, Volume Two (London: New Park, 1974) p. 65.