Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் எதிர்ப்பு: நான்காம் அகிலத்திற்கான அமெரிக்க கமிட்டியின் (ACFI) எழுச்சி

134. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக, ரிம் வொல்ஃபோர்த் மூலம் தலைமையேற்கப்பட்ட ஒரு சிறு போக்கு, SWP இன் அதிகரிக்கும் சந்தர்ப்பவாத நோக்குநிலைக்கு எதிர்ப்பும் சோசலிச தொழிலாளர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களுக்கு ஆதரவும் அளித்தது. இந்தப் போக்கின் மிகப்பெரும் பலமானது, SWP இன் அரசியல் நெருக்கடியானது ஒரு சர்வதேச பிரச்சினையாக அணுகப்பட வேண்டும் என்று அது அங்கீகரித்தது தான். எனவே SWP க்குள்ளான போராட்டம், ஏதாவதொரு அரசியல் பிரச்சினை குறித்த விவாதத்தில் ஒரு தந்திர அனுகூலத்தை பெறுவதான நிலைப்பாட்டில் இருந்து நடத்தப்பட முடியாது. பதிலாக, விவாதத்தின் அடிப்படை நோக்கமானது நான்காம் அகிலத்தில் புரட்சிகர முன்னோக்கின் மைய பிரச்சினைகள் குறித்த அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவை ஏற்படுத்துவதே ஆகும். பிரிட்டிஷ் SLL தனது அமெரிக்க ஆதரவாளர்களுக்கு அளித்த அறிவுரையானது, சாத்தியமுள்ள மிகப்பெரும் அளவில் இரண்டாம்நிலை அரசியல் வேறுபாடுகள் மற்றும் அமைப்புரீதியான சிக்கல்களின் மீதான கோஷ்டி மோதல்களை தவிர்க்க வேண்டும் என்பதும், அதிகபட்சமாக இயன்ற அளவுக்கு SLLகாரியாளர்களின் அரசியல் தெளிவுக்காக உழைக்க வேண்டும் என்பதுமாகும். இந்த கோட்பாடுடனான அணுகுமுறையானது, இது சர்வதேச தெளிவூட்டலுக்கு மேலாக தேசியவாத கன்னைவாத கரிசினையுடன் ஜேம்ஸ் ரொபேர்ட்சன் தலைமையேற்று நடத்திய மற்றுமொரு சிறுபான்மை போக்கினால் எடுக்கப்பட்ட அணுகுமுறையில் இருந்து, பெரிதும் வேறுபட்டதாக இருந்தது.

135. வொல்ஃபோர்த் தலைமையிலான சிறுபான்மை குழுவானது SWP க்குள்ளாக 1961 முதல் 1964 வரை இயங்கி வந்தது. 1963 மறுஐக்கிய மாநாட்டுக்கு பின்னரும் கூட, சிறுபான்மை குழுவானது சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஒழுங்குபட்ட அரசியல் கலந்துரையாடலை நடத்துவதை தொடர்ந்தது. இருந்தபோதிலும், இலங்கை நிகழ்வுகள் SWP க்குள்ளான போராட்டத்தை ஒரு முன்னணிக்கு கொண்டு வந்தது. ICFI ஆதரவு சிறுபான்மை குழுவானது LSSP காட்டிக்கொடுப்பின் வேர்கள் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு அமைப்பு அனுமதிக்க வேண்டும் என்று கோரி SWP உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை அளித்தது. சிறுபான்மை குழுவால் ஜூன் 1964 இல் விடுக்கப்பட்ட அறிக்கையானது அறிவித்தது:

1961 முதல் 1963 வரையான மொத்த காலத்திலும், அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்டதான வகையில், உண்மையான மறு ஐக்கியத்திற்கு முன்னதாக முழுமையானதொரு அரசியல் கலந்துரையாடல் இன்றி செய்யப்படும் நான்காம் அகில மறு ஐக்கியம் ஒரு பேரழிவிற்கும் சர்வதேச இயக்கம் மற்றும் இங்கே கட்சியின் மேலதிக சீரழிவுக்கும் மட்டுமே இட்டுச் செல்லும் என்பதைத் தான் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். எமது நிலைப்பாடு முழுமையாக சரியென நிரூபணமாகியிருக்கிறது......

எமது கட்சியை மற்றும் அது இப்போது அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சர்வதேச வடிவத்தை உடைத்தெறியும் அரசியல், தத்துவார்த்த மற்றும் வழிமுறையாக்க நெருக்கடியை எதிர்கொள்ள இனியும் மறுப்பது இயலாது. கட்சியின் இருப்புக்கே முக்கியமானதாக இந்த கேள்விகள் குறித்த ஒரு முழுமையான கலந்துரையாடல் உடனடியாக அனைத்து கிளைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டாக வேண்டும் . [79]

136. இந்த கடிதத்தை அளித்தவுடன், கையெழுத்திட்ட ஒன்பதுபேரும் அங்கத்துவத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சிறுபான்மை குழுவானது நான்காம் அகிலத்தின் அமெரிக்க குழுவை உருவாக்கி, ACFI ஐ அனைத்துலக குழுவுடன் அரசியல் ரீதியான உறவு கொண்டதான ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச கட்சியாக மாற்றுவதற்கு அவசியமான விரிவான தயாரிப்புக்களை மேற்கொண்டது.


[79]

Heritage, 403.