Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது அகல்பேரவை

137. மறுஐக்கியத்திற்கு பிந்தைய கட்டத்தில், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளையும் , உலக முதலாளித்துவ வளர்ச்சியின் கட்டமைப்புக்குள் அதன் புறநிலை முக்கியத்துவத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மதிப்பிட நேர்ந்தது. உலக ட்ரொட்ஸ்கிச சக்திகளை உறுதிப்படுத்தவும் உலகெங்கிலும் ட்ரொட்ஸ்கிச கட்சிகளை ஸ்தாபிக்க அடித்தளங்களை அமைக்கவும் அனைத்துலகக் குழுவானது தனது மூன்றாம் உலக மாநாட்டை ஏப்ரல் 1996ல் நடத்தியது. மாநாட்டு தீர்மானம் உலக முதலாளித்துவத்திற்குள்ளாக ஆழமடைந்துவரும் முரண்பாடுகளையும் போருக்கு பிந்தைய செழிப்பின் சரிவின் அடையாளங்களையும் சுட்டிக் காட்டியது. ஏகாதிபத்தியம் ஒரு ஆழமான நெருக்கடியில் இருப்பதாக அது குறிப்பிட்டது. இரண்டாம் உலகப் போரின் தருணத்திலும் மற்றும் அதற்குப் பின்னரும் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியானது, அதிலும் குறிப்பாக அணு ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் தானியங்கு எந்திர அமைப்புகளின் அறிமுகம், உற்பத்தி சக்திகள் மற்றும் முதலாளித்துவ சொத்து உறவுகளுக்கு இடையிலான மோதலை உடைவுப் புள்ளி வரையும் நெருக்கியது. இந்த முரண்பாட்டினால் உருவாகும் போராட்டங்கள் தொழிலாள வர்க்க இளைஞர்களை தீவிரமடையச் செய்கின்றன. நான்காம் அகிலத்தின் கட்சிகள் இந்த போராட்டங்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும்.

138. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை தடுப்பதில் பப்லோவாத திருத்தல்வாதத்தின் புறநிலைப் பாத்திரத்தின் மீது மாநாட்டு தீர்மானம் மைய அழுத்தத்தை வைத்தது.

'காலனித்துவ புரட்சி' மற்றும் தொழிலாளர் அரசுகளில் அரசியல் புரட்சி என முன்னேறிய நாடுகளில் புரட்சியை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கும் திருத்தல்வாதமானது தொழிலாளர்கள் இயக்கத்தின் மீது முதலாளித்துவ ஆதிக்கத்திற்கும் மற்றும் புரட்சிகர கட்சிகளை கட்டுவதை தடுப்பதற்கும் ஒரு மிக முக்கிய மூடுதிரையாக செயல்படுகிறது. தத்துவார்த்த மற்றும் அரசியல் கேள்விகள் மீது விவாதம் இன்றி உருவாக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் சுய பாணி ஐக்கிய செயலகத்தின் தத்துவம் மற்றும் நடைமுறையில் இந்த திருத்தல்வாதம் குறிப்பாக வெளிப்படுகிறது. நான்காம் அகிலத்தைக் கட்டுவதில் அடுத்த கட்டமானது இதற்கு மாறானதாக கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தில் இயக்கத்தின் தத்துவம் மற்றும் கொள்கைகளின் அனைத்து பகுதிகள் ஆகியவற்றில் மிக உள்ளார்வமிக்க ஒரு தத்துவார்த்த கலந்துரையாடலுடன் பின்தொடர்வதாக இருக்க வேண்டும்.[80]

139. நான்காம் அகிலத்தின் வளர்ச்சியை கடந்த கால போராட்டங்களின் படிப்பினைகளின் மீது அடித்தளமாகக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை அனைத்துலக குழு வலியுறுத்தியது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு அரசியல்ரீதியாக மற்றும்]தத்துவார்த்த ரீதியாக தீர்க்கமான அம்சமே தவிர -பிற, மிக முக்கியமாக, கட்சி கட்டும் பணிகளில் இருந்து திசைதிருப்பலல்ல என்பதை இது மேலும் வலியுறுத்தியது. துல்லியமாக, மார்க்சிச திருத்தல்வாதத்திற்கு எதிரான தொடர்ந்த போராட்டங்கள் மூலம் தான் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது முதலாளித்துவ வர்க்கத்தால் தீவிரமாக இறக்கப்பட்ட கருத்தியல் ரீதியான அழுத்தங்களுடன் போரிட்டு தனது புரட்சிகர முன்னோக்கினை உருவாக்கியது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்த இந்த கருத்துருவானது, கோட்பாட்டளவிலான அரசியல் ஒத்துழைப்பு சாத்தியமா என்பதை தீர்மானிக்கும் பொருட்டு மூன்றாம் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த தொழிலாளர் குரல் (Voix Ouvrière) மற்றும் ஜேம்ஸ் ரொபேர்ட்சனின் ஸ்பார்ட்டாசிஸ்ட் போக்கு (Spartacist tendency) ஆகியவற்றால் எதிர்க்கப்பட்டது. இரண்டு தருணத்திலும் இது சாத்தியமில்லாததாக நிரூபணமானது.

140. இந்த குழுக்களின் படி, ICFI பெருமளவில் பப்லோவாதம் மற்றும் நான்காம் அகிலத்திற்குள்ளான அரசியல் போராட்டங்கள் குறித்து அதீத மதிப்பீட்டை செய்துவிட்டது. ரொபேர்ட்சன் 1966 கருத்தரங்கில் அறிவித்தார்:

இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் சீரழிவுடன் ஒப்பிடத்தக்க ஒரு வழியில், ட்ரொட்ஸ்கிச திருத்தல்வாதம் தொழிலாளர்களை முடக்க அவசியப்படுகிறது என்கிற அளவுக்கு முதலாளித்துவத்தின் நடப்பு நெருக்கடியானது கூர்மையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது என்ற விதத்தில் நாம் விடயங்களை கையாளுகின்றோம். [81]

141. மார்க்சிசத்தை குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கிடம் இருந்து தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரிக்கும் அனைத்தும் இந்த அறிக்கையில் சுருங்கக் கூறப்பட்டு விட்டது. சாராம்சத்தில், நான்காம் அகிலத்துக்குள்ளான மோதலின் புறநிலை சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை ரொபேர்ட்சன் மறுத்துக் கொண்டிருந்தார். திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் போல்ஷ்விக் கட்சியை லெனின் கட்டியது, மற்றும் பின்னர் ஸ்ராலினிசம் மற்றும் மத்தியவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் இவற்றின் அனைத்து பாடங்களும் புறக்கணிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்திலான பெரும் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுபோக்குகளுடன் மிகவும் தெளிவானதொரு இணைப்பு கொண்ட நான்காம் அகிலத்துக்குள் பப்லோவாதத்துடனான நீண்ட போராட்டமானது ரொபேர்ட்சனால் ஏறக்குறைய பல்வேறு தனிநபர்களுக்கு இடையிலான ஒரு அற்ப சண்டை என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுவிட்டது. அதுவும் ரொபேர்ட்சனின் மதிப்பீடு பப்லோவாதத்தின் புறநிலை முக்கியத்துவமானது ஒரு முதலாளித்துவ கூட்டரசாங்கத்திற்குள் LSSP இன் நுழைவினால் செயற்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு பின்னர் இரண்டு வருடங்களுக்கும் குறைவானதொரு காலத்தில் வந்தது!


[80]

Trotskyism Versus Revisionism, Volume 5 (London: New Park Publications, 1975), pp. 25-7.

[81]

“Spartacist Statement to the International Conference, Marxist Internet Archive,