David North
1917 ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

முதலாம் உலகப் போர் மற்றும் ரஷ்ய புரட்சி வெடித்த நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினைகள் எதுவும் -பேரழிவு தரும் போர்கள், பொருளாதார நெருக்கடிகள், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல் ஆகியவை தீர்க்கப்படவில்லை. உண்மையில், அவை இன்று இன்னும் கூர்மையாக முன்வைக்கப்படுகின்றன.

இத்தொகுப்பில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளின் பெரும்பாலான பகுதி, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதோடு உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தம் ஓர் இறுதி முடிவுக்கு வந்துவிட்டது என்ற வாதத்திற்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். புக்குயாமாவின் “வரலாற்றின் முடிவு” என்பதற்கும், ஹோப்ஸ்வாமின் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்பதற்குமான எதிர்ப்பில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது நிச்சயமாக ஒரு மிக முக்கிய சம்பவம்தான் என்றபோதினும், அது சோசலிசத்தின் அதிர்ச்சிகரமான முடிவைக் குறிக்காது என்று சமகால வரலாற்றாசிரியர்களுக்கு எதிராக டேவிட் நோர்த் வாதிடுகிறார்.

  1. ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்: முன்னுரை
  2. சோசலிசமும் வரலாற்று உண்மையும்
  3. ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?
  4. 1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுதல்: சதியா அல்லது புரட்சியா?
  5. அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?
  6. வரலாற்றின் நீண்ட நிழல்: மாஸ்கோ வழக்குகள், அமெரிக்க தாராளவாதம் மற்றும் அமெரிக்காவில் அரசியல் சிந்தனையின் நெருக்கடி
  7. லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்: பேராசிரியர் எரிக் ஹோப்ஸ்வாமுக்கான பதில்
  8. ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும் புரட்சியும்
  9. தொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன?
  10. பின்நவீனத்துவத்தின் இருபதாம் நூற்றாண்டு: அரசியல் விரக்தியும் வரலாற்று உண்மையில் இருந்து பறந்தோடலும்
  11. லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்1
  12. 1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்
  13. நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: மார்க்கசிச மூலோபாயம் பற்றிய ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு
  14. ஸ்ராலினிசத்தின் மீதான ட்ரொட்ஸ்கியின் வெற்றி: நான்காம் அகிலத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் 1938-2013
  15. “சாதாரண ஜேர்மனியர்கள்” என்னும் கட்டுக்கதை: டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரது சுயவிருப்ப-தண்டனை நிறைவேற்றுனர்கள் புத்தகத்தின் ஒரு திறனாய்வு
  16. இரண்டாம் உலக யுத்தத்திற்கான காரணங்களும், விளைவுகளும்
  17. வரலாறு பிரச்சாரமாக: புத்திஜீவிகளும் உக்ரேனிய நெருக்கடியும்
  18. எல்லாம் எங்கெல்சின் தவறு: ரொம் ரோக்மோரின் மார்க்சிசத்திற்குப் பின்னர் மார்க்ஸ் பற்றிய மதிப்புரை
  19. பிற்சேர்க்கை-1: நியூ யோர்க் டைம்ஸ் நூல் மதிப்புரைக்கு ஒரு கடிதம்
  20. பிற்சேர்க்கை-2: ரிச்சார்ட் பைப்ஸ் உடனான ஒரு கடித பரிமாற்றம்