ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம்

அமெரிக்கா 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரை' ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், முழு உலகமும் ஏகாதிபத்திய வன்முறையின் ஒரு விரிவான புயலுக்குள் இழுக்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதன் நட்பு நாடுகளின் போர்களால் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்கள் அல்லது அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். முதலாம் உலகப் போர் முடிவடைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மோதல்கள் மீண்டும் ஒரு பேரழிவுகரமான உலகளாவிய மோதலை நோக்கி நகர்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் புதிய சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடுகிறது. போருக்கு எதிரான போராட்டம் என்பது,அதற்கு மூல காரணமான முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிரான போராட்டமாகும்.

போருக்கு எதிரான போராட்டம் பற்றியவை
உலகம் முழுவதிலுமான தொழிலாளர்கள் போராட்டங்கள்

உலக மக்கள்தொகையில் பெரும் தொகையான தொழிலாள வர்க்கமே நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் புரட்சிகர சக்தியாகும். இவ்வளவு காலமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கம், 2018 முதல் உலகெங்கிலும் பரவியுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் தனது சொந்த சுயாதீன நலன்களை வலியுறுத்த தொடங்குகிறது.

ICFI இன் வேலைத்திட்டம் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது: அனைத்து நாடுகளிலும், தேசிய இன, இனக்குழு, மொழி, மத,பாலின, பாலியல் நோக்குநிலை அல்லது வேறு பல அடையாளங்களின் அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக நாங்கள் போராடுகிறோம்.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடிப்படையில் ஒன்றே: போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், சுரண்டல், வேலையின்மை, வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவு போற்றவற்றிற்கு உலகளாவிய தீர்வு தேவை: அது சோசலிசம்.

உலகம் முழுவதிலுமான தொழிலாளர்கள் போராட்டங்கள்
பெருந்தோட்ட தொழிலாளர் போராட்டங்கள்

இந்திய உபகண்டத்தை தனது ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரித்தானியா காலனித்துவவாதிகளினால், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அடிமைகளாக இலட்சக்கணக்கில் கொண்டு வரப்பட்டவர்களே பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆவர். தேயிலை, இறப்பர், கோப்பி பெருந்தோட்டங்களிலேயே பாட்டாளி வர்க்கம் செறிந்திருந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இலங்கை முதலாளித்துவத்துக்கும் இடையில் ஏற்பட்ட “சுதந்திர” ஏற்பாட்டின் ஜனநாயக-விரோதப் பண்பு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கைகளில் வெளிப்படையானது. ஐக்கிய தேசியக் கட்சி இலட்சக்கணக்கில் இருந்த தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான பிரஜா உரிமையை பறிக்கும் சட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தது. இந்த ஜனநாயக விரோதச் சட்டத்தை போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே சர்வதேச சோசலிச அடித்தளத்தில் சமரசமற்று எதிர்த்தனர்.

சக்திவாய்ந்த, போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் தோற்றத்தையிட்டு இலங்கை முதலாளித்துவத்தின் சகல தட்டுக்களும் எல்லையற்ற பீதியில் இருந்தன.

தீவின் வடக்கு, கிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்த தமிழ் முதலாளித்துவத் தட்டுக்கள், அந்த மசோதாவுக்கு வாக்களித்ததன் மூலம், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக, தமது வர்க்க ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர்.

1800களின் நடுப்பகுதியில் இருந்து, இலங்கையில் தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களைத் தொடங்கிய பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் மரபு அவ்வாறே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மேலும் படிக்க
இலங்கை உள்நாட்டுப் போர் 1983-2009

இந்த பகுதி, இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்திற்கான மூலங்களை வர்க்க அடித்தளத்தில் விபரிக்கிறது.

சம்பவங்கள், ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய ஜனநாயாக கேள்விகளுக்கான போராட்டங்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்ற ட்ரொட்ஸ்கிச ஆய்வை உறுதிப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் எதிராக இன, மத, மொழி, பால் வேறுபாடுகள் கடந்து தொழிலாள வர்க்கத்தை சோசலிச முன்னோக்கில் ஐக்கியப்படுத்த போராடுகிறது.

மேலும் படிக்க

சமூக சமத்துவத்திற்கான போராட்டம்

இன்று சமத்துவமின்மையின் அளவுகள் வரலாற்றில் முன்னுதாரணமின்றி உள்ளன. ஆக்ஸ்பாமின் கூற்றுப்படி, சுமார் 26 பில்லியனர்கள் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமான செல்வத்தை கூட்டாக கட்டுப்படுத்துகின்றனர். 2018 ஆம் ஆண்டில், உலகின் பில்லியனர்களின் செல்வம் 900 பில்லியன் டாலர் அல்லது 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் 3.8 பில்லியன் மக்கள் தங்கள் செல்வம் 11 சதவிகிதம் குறைந்துள்ளதை காண்கின்றனர்.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் வேண்டுமென்றே நோக்கம் கொண்ட நோக்கமாகும், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வறுமையின் மூலம் பெருநிறுவன உயரடுக்கை வளப்படுத்தும் ஒற்றை எண்ணத்துடன் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.

சமூக சமத்துவமின்மை பற்றிய கட்டுரைகள்
புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் பாதுகாக்க!

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு எதிரான பரந்துபட்ட மக்களின் கோபங்களை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அடுக்குகளான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக திசை திருப்பிவிட முயல்கின்றன.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் குறித்து மேலும்
பாசிசத்திற்கு எதிரான போராட்டம்

முன்னோடியில்லாத வகையில் சமூக சமத்துவமின்மை, தொடர்ச்சியான போர்கள் மற்றும் பெரும்-வல்லரசு மோதலுக்கான உந்துதல் ஆகியவை, ஜனநாயக வடிவிலான ஆட்சியைப் பராமரிப்பதுடன் பொருந்திப்போக முடியாதுள்ளது. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் வெகுஜனங்களுக்கு எதிராக இயக்க, அரசு எந்திரம், கண்காணிப்பு மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை கட்டமைக்கின்றன.

அமெரிக்காவில் இருந்து ஜேர்மனி வரை, பாசிச சக்திகள் ஆளும் வர்க்கத்தால் முறையாக ஊக்குவிக்கப்படுகின்றன. சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் போருக்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பை வன்முறை மூலம் அடக்குவதற்கான தயாரிப்புகளின் பாகமாக அவர்களின் உயர்வு உள்ளது.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மேலும்
இணைய தணிக்கையை எதிர்ப்போம்! 

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும், அரசாங்கங்கள் இணையத்தை உடைக்கவும், சோசலிச மற்றும் இடதுசாரி கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கவும், தொழிலாளர்கள் இணையவழியில் தொடர்புகொள்வதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் முடியாமல் தடுக்கின்றன. தணிக்கை செய்வதில் அவர்கள் பேஸ்புக், கூகிள் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட மாபெரும் சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒத்துழைக்கின்றனர்.

தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில் மேலும்
ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!

ஒரு விருது பெற்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கக்கூடிய உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, ட்ரம்ப் நிர்வாகம் ஜூலியன் அசாஞ்சை ஒப்படைக்கச் செய்ய முயல்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் ஆவணத்தை பிரசுரித்ததே அவரது ஒரே 'குற்றம்' ஆகும்.

அசாஞ்சை விடுவிப்பதற்கான பிரச்சாரங்கள்