பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

ஆகஸ்ட் 20, 1940 இல், மெக்சிக்கோ நகரத்தின் புறநகர்ப் பகுதியான கொயோகானில் நாடுகடத்தப்பட்டு வாழ்கையில் சோவியத் இரகசிய போலிஸ் துறையான ஜி.பி.யுவால் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.உலக சோசலிசப் புரட்சியின் மார்க்சிச தத்துவார்த்தவாதியும் நவீன அரசியல் வரலாற்றின் உயர்ந்த மனிதர்களில் ஒருவருமான ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை இவ்வாறு முடிந்தது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் உலக சோசலிச இயக்கத்திற்கும் நீண்டகால தாக்கங்கள் கொண்ட ட்ரொட்ஸ்கியின் படுகொலை இருபதாம் நூற்றாண்டின் மிகவும் அரசியல் ரீதியாக விளைவுகளைக் கொண்ட குற்றங்களில் ஒன்றாகும். இன்னும், பல தசாப்தங்களாக, படுகொலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஸ்ராலினிச சதித்திட்டத்தின் பாரிய அளவு கவனமாக திட்டமிடப்பட்ட மூடிமறைப்புக்கு உட்பட்டது.

1975 ஆம் ஆண்டில், ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு படுகொலைதொடர்பாக முதல்முறை ஒழுங்குமுறையான விசாரணையை மேற்கொண்டது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என அழைக்கப்படும் இந்த விசாரணை, ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைக்கு எதிரான ஸ்ராலினின் சதித்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்த நான்காம் அகிலத்திற்குள்ளான ஜி.பி.யூ முகவர்களின் வலையமைப்பை வெளிப்படுத்த வழிவகுத்த

 இந்த விசாரணையை,பப்லோவாத மற்றும் போலி-இடது அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன, இதை ட்ரொட்ஸ்கிசஇயக்கத்திற்குள் இருத்தப்பட்டிருந்த ஒற்றர்களின் 'முகவர்-தூண்டுதல்' என்று கண்டனம் செய்தன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிப்பட்டஅரசு புலனாய்வு ஆவணங்கள் அனைத்துலகக் குழுவின் கண்டுபிடிப்புகளை உறுதிசெய்து பாதுகாப்பும் நான்காம் அகிலத்தின் புலன்விசாரணைகளை உறுதிப்படுத்திய போதிலும், இதுவே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

ஆகஸ்ட் 20, 1940 அன்று ட்ரொட்ஸ்கியை கொலை செய்ய ஸ்ராலினிச முகவர் ரமோன் மேர்கடேர் பயன்படுத்திய கை கோடரியை மெக்சிகன் பொலிசார் வைத்திருக்கிறார்கள்
வீடியோ நேர்காணல்: ஏன் எப்படி GPU லியோன் ட்ரொட்ஸ்கியை கொலை செய்தது

பகுதி- 1

அக்டோபர் 3, 2015 அன்று, உலக சோசலிச வலைத் தளம் டேவிட் நோர்த் உடன் இரண்டு பகுதி நேர்காணலை மேற்கொண்டது. முதல் பகுதியில் WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர், 'ஏன், எப்படி ஜி.பீ.யூ லியோன் ட்ரொட்ஸ்கியைக் கொன்றது' என விளக்குகிறார்.

பகுதி-2

WSWS நிருபர் ஆண்ட்ரேயா பீட்டர்ஸ் உடனான நேர்காணலின் இரண்டாம் பாகத்தில், ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் முக்கியத்துவம், அனைத்துலகக் குழுவின் விசாரணையின் மூலங்கள், வளர்ச்சி மற்றும் அதன் முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்து நோர்த் தனது கலந்துரையாடலை தொடர்கிறார்.

சமீபத்திய கட்டுரைகள்