World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WSWS Launches campaign against LTTE death threats

Defend the democratic rights of the Socialist Equality Party (Sri Lanka)

உலக சோசலிச வலைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) ஜனநாயக உரிமைகளை காப்பாற்று

Statement by the WSWS editorial board
5 October 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளமும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கையின் வடக்கில் ஊர்காவற்துறை தீவில் சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளூர் உத்தியோகத்தரின் மரண அச்சறுத்தலை கண்டனம் செய்வதற்காக அனைத்து உ.சோ.வ.த. வாசகர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

சோ.ச.க. ஊர்காவற்துறையில் ஒரு நீண்ட மற்றும் அடிப்படையான வரலாற்றைக் கொண்டுள்ளது. அது இலங்கை இராணுவத்தின் அழிவுகரமான நடவடிக்கைகளுக்கும் கொழும்பு அரசாங்கத்துக்கும் மற்றும் வடக்கில் உள்ள அதன் அரசியல் ஏஜன்டுகளுக்கும் எதிராக ஊர்கவாவற்துறை மீனவர்களதும் மற்றும் அவர்களின் குடும்பங்களதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் சுயாதீன நலன்களையும் காப்பதற்காக உறுதியாகப் போராடி வந்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த முன்நோக்கானது, நாட்டின் வடக்கில் இலங்கை அரசாங்கத்தின் கனிஷ்ட பங்காளியாக தம்மை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் நலன்களை குறுக்கறுக்கின்றது. சோ.ச.க.வுக்கு எதிரான முதலாவது மரண அச்சுறுத்தலானது இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி இரண்டு நாட்களின் பின்னரும் கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முதலாவது தாய்லாந்து பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரும் விடுக்கப்பட்டது.

இனவாத சிங்கள அரசுக்கு எதிரான கசப்பானதும் மற்றும் நீண்டதுமான உள்நாட்டு யுத்தத்தில் போராடி வந்த விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இப்போது கொழும்புடனும் மற்றும் மேலைத்தேய சக்திகளுடனும் தமது நற்சாட்சிப் பத்திரங்களை ஸ்தாபித்துக்கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் சட்டபூர்வத்துக்கும் அதிகாரத்தில் பங்கு வகிப்பதற்குமான மாற்றங்களின் பேரில் அது சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கோரும் சுதந்திர சந்தை கொள்கையை நடைமுறைக்கிடுவதோடு தொழிலாள வர்க்கத்திலிருந்தும் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்தும் எழும் எதிர்ப்பை தாமதமின்றி நசுக்கும்.

ஆகவேதான் விடுதலைப் புலிகள் சோ.ச.க. அங்கத்தவர்களின் உயிருக்கு அச்சறுத்தல் விடுத்துள்ள அதேவேளை கட்சி அதன் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்வதிலிருந்து தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோ.ச.க. மற்றும் அதன் ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலானது, கொழும்பிலும் தாய்லாந்திலும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்டு வரும் புதிய நிர்வாக அமைப்பின் கீழ் தமிழ் தொழிலாளர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியது என்ன என்பதற்கான ஒரு முன் எச்சரிக்கையாகும்.

முதலாவது மரண அச்சுறுத்தலை செப்டெம்பர் 6ம் திகதி சோ.ச.க.வால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பான அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கூட்டமொன்றில் விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை பிரதிநிதியான செம்மணனால் விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் செம்மணன், விடுதலைப் புலிகள் "இந்த வகையிலான கட்சியை அனுமதித்ததில்லை" எனக் குறிப்பிட்டார். அவர் 1991ல் ஒரு தற்கொலைப் போராளியால் கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அனுபவித்தது போன்ற அதே சிகிச்சையை சோ.ச.க.வும் எதிர்நோக்கக் கூடும் என எச்சரித்தார். அவர் குறிப்பிட்டதாவது "இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது? வெகு விரைவில் நாங்கள் நோயைக் கண்டு பிடித்து அவசியமான மருந்தைக் கொடுப்போம்."

இதன் தெளிவான கருத்தானது சோ.ச.க. விடுதலைப் புலிகளின் அரசியல் பிராந்தியத்தை "ஆக்கிரமித்துள்ள" அதேவேளை சமரசமாக தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதுமேயாகும்.

செம்மணன் விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் பற்றி குறிப்பிடும்போது, அவர்கள் "மிகவும் ஆத்திரமடைந்துள்ளதோடு அவர்களை இலங்கையின் தென் பகுதிக்கு எத்தி விரட்டுவதாக (சோ.ச.க. அங்கத்தவர்களை) எங்களிடம் குறிப்பிட்டார்கள்" எனப் பிரகடனப்படுத்தினார்.

இந்தப் பிரத்தியேகமான கருத்துக்கள், விடுதலைப் புலிகள் தமது புதிய அலுவலக கட்டிட நிதிக்காக ஒரு குறிப்பிட்டத் தொகையை கறந்துகொள்ள முயற்சித்த வேளை, கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்க மறுத்ததன் பிரதிபலிப்பாகவே வெளியிடப்பட்டன.

அடுத்து வந்த இரண்டு வாரங்களில் செம்மணன் தீர்மானத்தை மாற்றுவதற்காக கூட்டுறவு சங்கத்தை இரண்டு முறை பலாத்காரமாக கூட்டுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் இரண்டு கூட்டங்களையும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் பகிஷ்கரித்தனர். சந்தேகத்துக்கிடமின்றி இந்தப் பிரதிபலிப்புகள் மீதான ஆத்திரத்தால், செம்மணன் செப்டெம்பர் 27ம் திகதி சங்கத்தின் வழமையான கூட்டத்தில் தலையீடு செய்வதற்காக அவரது பிரதிநிதியான அருந்தவனை அனுப்பி வைத்தார். அருந்தவன் தனது ஐந்து நிமிட உரையில், சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான செம்மணனின் மரண அச்சுறுத்தலை மீள உச்சரித்த அதேவேளை விடுதலைப் புலிகளை எதிர்த்து எந்த ஒரு கட்சியும் பொலிசிலோ, நோர்வேயின் சமாதான கண்கானிப்பு குழுவிடமோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திடமும் கூட முறையிடப்பட்டிருந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளாது "விரட்டியடிக்கப்படுவர்" என அறிவுறுத்தினார்.

விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு சங்கத்தை இணங்கச் செய்வதில் தோல்வி கண்டதால், மீள் அச்சுறுத்தல்களானவை சோ.ச.க.வை கட்டாயப்படுத்துவதையும், எந்தவொரு மேலதிக எதிர்ப்புக்கும் இடங்கொடாமல் இருப்பதன் பேரில் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்துக்கும் ஊர்காவற்துறையில் உள்ள சாதாரண மக்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

உலக சோசலிச வலைத் தளமும் சோ.ச.க.வும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடி விளக்கத்தைக் கோருகின்றது. தாம் குறிப்பிட்டது போல செம்மணன் விடுதலைப் புலிகளின் சார்பில் இயங்குகின்றாரா? அவரது அச்சுறுத்தல்கள் விடுதலைப் புலிகளின் தலைமையால் அனுமதிக்கப்படிருந்தவையா? விடுதலைப் புலிகள் அமைப்பு அவற்றை ஆமோதித்ததா? அவ்வாறு இல்லையெனில் செம்மணனும் அவரது பிரதிநிதியும் ஒழுக்கமும் அடக்கமும் உடையவர்களாக ஆக்கப்படுவார்களா?

நாம் விடுதலைப் புலிகள் தமது உள்ளூர் உத்தியோகத்தர்களின் அவமதிக்கத்தக்க அச்சுறுத்தல்களையும் அதேபோல் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சோ.ச.க. வின் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் தாக்குதல்களையும் பகிரங்கமாகவும் நிபந்தனையின்றியும் மறுதலிக்க வேண்டும் என உடனடியாக கோரிக்கை விடுக்க எங்களுடன் இணையுமாறு இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் சோசலிச சமத்துவக் கட்சியை இலக்கு வைத்தது இது முதற் தடவையல்ல. 1998 ஜூலையில், விடுதலைப் புலிகள் வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு சோ.ச.க. அங்கத்தவர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். சோ.ச.க. உறுப்பினர்கள் தமிழ் தொழிலாளர்களுக்கு மத்தியில் சோ.ச.க.வின் வேலைத் திட்டத்துக்காக பிரச்சாரம் செய்து வந்தார்கள்: அது தீவின் வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை உடனடியாக வாபஸ்பெறச் செய்வதற்காகவும் விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத முன்நோக்குக்கு எதிராக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச ஐக்கிய குடியரசுக்காக தமிழ், சிங்களத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதுமாகும். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை இந்த நால்வரையும் அது தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த போதிலும், அது சோ.ச.க.வும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக முன்னெடுத்த சக்திவாய்ந்த அனைத்துலக பிரச்சாரத்தின் பெறுபேறாக முடிவில் அவர்களை விடுதலை செய்யத் தள்ளப்பட்டது.

சோ.ச.க. ஊர்காவற்துறையில் தாக்குதலுக்குள்ளானது இது முதற் தடவை அல்ல. 2000 ஆண்டு மார்ச்சில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உள்ளூர் உத்தியோகத்தர்கள், தமது அன்றாட வாழ்க்கையின் ஜீவனோபாயத்தின் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறைகளுக்கு எதிரான உள்ளூர் மீனவர்களின் போராட்டத்துக்கு தலைமை வகித்துக் கொண்டிருந்த சோ.ச.க. அங்கத்தவர்களையும் மற்றும் ஆதரவாளர்களையும் சரீர ரீதியில் தாக்கியது. ஈ.பி.டி.பி.யின் மூர்க்கமானதும் இரகசியமானதுமான தாக்குதலானது, அதனது பிரதிநிதிகள் வேறு எதற்காகவும் அன்றி கொழும்பு அரசாங்கத்துக்கு கூலிப்படைகளாகவும் குண்டர்களாகவும் மட்டுமே இயங்குகிறார்கள் என்பதை தீர்க்கமாக அம்பலப்படுத்துகிறது.

சோ.ச.க.வுக்கு எதிரான அண்மைய மரண அச்சுறுத்தலானது விடுதலைப் புலிகள் இதேபோன்ற ஒரு பாத்திரத்தை இட்டு நிரப்புவதற்காகவே தயார் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. சோ.ச.க.வின் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகளை விடுதலைப் புலிகளின் குண்டர் நடவடிக்கைகளால் பயமுறுத்த முடியாது. இந்த அமைப்பின் மரண அச்சுறுத்தலானது தமிழ் சிங்கள தொழிலாள வர்க்கத்தின் மீதான அதனது எதிர்ப்பையும், தமது பொது ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக வடக்கிலும் தெற்கிலும் உள்ளத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக இலங்கையில் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தின் மீதுமான எதிர்ப்பையும் மாத்திரமே அம்பலப்படுத்துகிறது.

சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களை விலக்கிக்கொள்வதோடு அதை மறுதலிக்குமாறும், கட்டாயப்படுத்தலிலும் அடக்குமுறையிலிருந்தும் சுதந்திரமாக தமது அரசியல் வேலைகளை மேற்கொள்வதற்கான சோ.ச.க.வின் உரிமையை உத்தரவாதம் செய்யுமாறு விடுதலைப் புலிகளைக் கோருவதற்காக உ.சோ.வ.த.வும் சோ.ச.க.வும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை போற்றும் அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது.

கடிதங்களையும் அறிக்க்ைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரிகள்:

யாழ்ப்பாணம்

Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road, Kokuvil
Jaffna

Sri Lanka

கொழும்பு

LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3
Email: slmm-hq@mfa.no

அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்:

லண்டன்

The LTTE
c/- Eelam House
202 Long Lane
London SE1 4QB
United Kingdom
Telephone: 44-171-403-4554
Fax: 44-171-403-1653

தயவுசெய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளை உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி வைக்கவும்:

Email: editor@wsws.org
Fax:
United States: 248-967-3023
Britain: 0114 244 0224
Australia: 02 9790 3501

See Also:

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்
மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்
பகுதி-1  | பகுதி-2

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Top of page