World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

WSWS international conference: Resolutions condemn war in Iraq, call for international unity of working class

உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு

2 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் இணைந்து மிச்சிகன், அன் ஆர்பர் நகரில் மார்ச் 29 - 30 ஆகிய நாட்களில் சோசலிசமும் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிரான போராட்டமும் யுத்தமும்: புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான மூலோபாயமும் வேலைத்திட்டம்'' என்ற தலைப்பில் மாநாடு ஒன்றை நடாத்தியது. ஏப்ரல் 1ம் தேதி உலக சோசலிச வலைத் தள மாநாட்டின் சுருக்கமான விவரத்தை வெளியிட்டது. (காண்க: சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு) அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி தலைவரும் உலக சோசலிச வலைத்தள சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப உரையும் வெளியிடப்பட்டது. (காண்க: கட்டுக்கடங்கா குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்)

மாநாட்டுப் பிரதிநிதிகள் ஏகமனதாக நிறைவேற்றிய 6 தீர்மானங்களில் இரண்டு தீர்மானங்களை இன்றைய தினம் வெளியிடுகின்றோம். எதிர்வரும் நாட்களில் மற்றைய தீர்மானங்களையும் பிரசுரிப்போம்.

மாநாட்டு தீர்மானம்: ஈராக்குடனான போரை நிறுத்து! அமெரிக்கா - பிரிட்டன் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறு!

இந்த மாநாடு, அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கிற்கு எதிராக ஆரம்பித்துள்ள போரை ஒரு சர்வதேச போக்கிரித்தனமான நடவடிக்கை என கண்டித்தது. சரியான வரையறுப்பில் இது ஒரு ஏகாதிபத்தியப் போர். இது ஒரு கொள்ளையடிக்கும் போர் மட்டுமல்லாது, பாக்தாத்தில் காலனித்துவ பாணியிலான ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதுடன் ஈராக்கின் பாரிய எண்ணெய் வளத்தை கைப்பற்றி ஏனைய போர்களில் வெற்றிபெறுவதற்காக மத்திய கிழக்கில் தனக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையை கைப்பற்றிக்கொள்வதையும் நோக்கமாக கொண்டது.

புஷ் நிர்வாகமும் அதற்கு லண்டனில் உடந்தையாக இருப்பவர்களும் இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு கூறியிருக்கின்ற காரணங்கள் அனைத்தும் அரைகுறை உண்மைகள், தவறான தகவல்கள் மற்றும் அப்பட்டமான பொய்களுமாகும். 2001 செப்டம்பர் 11ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈராக் பொறுப்பல்லாததுடன், அமெரிக்காவிற்கு ஈராக்கினால் எந்த விதமான இராணுவ அச்சுறுத்தலும் இல்லை. இது போரினாலும் மற்றும் கடந்த 12 ஆண்டு கால அமெரிக்க ஆதரவிலான பொருளாதார தடை நடவடிக்கைகளால் ஈராக்கிய மக்களுக்கு உணவு, மருந்து இதர அத்தியாவசிய பொருட்கள் பறிக்கப்பட்டதால் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ள ஒரு வறிய நாடாகும்.

சதாம் ஹூசேனின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஈராக் மக்களை விடுவிப்பதற்காக புஷ் நிர்வாகம் போர் ஆரம்பித்திருப்பதாகக் கூறிக்கொள்வது முற்றிலும் அகம்பாவமான செயலாகும். படையெடுத்து வந்திருப்போர்களுக்கு எதிராக, ஈராக் மக்கள் வீரமான எதிர்ப்பு போரை நடத்துவதனாலேயே இந்தக் கூற்று பொய்யானது என்பது போர் ஆரம்பித்த ஆரம்ப நாட்களிலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் உலகம் முழுவதிலும் சிலி நாட்டிலிருந்து இந்தோனேசியா வரை மிக கொடுங்கோன்மை நிறைந்த சர்வாதிகாரங்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் சிஐஏ ஆரம்பத்தில் சதாம் ஹூசேனை உருவாக்கியதுடன், அவர் தொழிலாள வர்க்க கட்சிகளுக்கும் ஈராக்கின் தேசிய சிறுபான்மையினருக்கும் எதிராக மேற்கொண்ட ஒடுக்குமுறைகளை சிஐஏ ஆதரித்தது. 1980 முதல் 1988 வரை ஈரானுக்கு எதிராக சதாம் ஹூசேன் நடாத்திய போரை காட்டர் மற்றும் றீகன் நிர்வாகங்கள் ஆதரித்தன.

1990-91ல் முதலாம் வளைகுடா போர் நடந்த பின்னர் முதலாவது புஷ் நிர்வாகம் சதாம் ஹூசேனின் ஆட்சியை விரும்பியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமெரிக்கா ஆதரவு கொடுத்து வரும் ஆட்சிகளை குழப்பத்தில் வீழ்த்திவிடக்கூடிய குர்திஷ் இனத்தவர் மற்றும் ஷியீட்டுக்களின் எழுச்சியை அடக்க சதாம் ஹூசேனை அமெரிக்கா ஆதரித்தது. தற்போது இரண்டாவது புஷ் நிர்வாகம் போருக்கு சென்றிருப்பது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அல்ல, மாறாக அமெரிக்க இராணுவ சர்வாதிகாரத்தை ஈராக் மக்கள் மீது திணிப்பதற்காகவாகும்.

இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டுவரும் மிகக்கொடுரமான முறைகளான கப்பல்களிலிருந்து நெடுந்தொலைவு இலக்கு கொண்டு பாய்கின்ற ராக்கெட்டுகள், கிளஸ்டர் குண்டுகள், யூரேனியம் கலந்த ஆயுதங்கள், நேபாம் போன்றவை அவற்றின் உண்மையான அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. மக்களிடம் கடுமையான எதிர்ப்பு தோன்றியிருப்பதாலும், ஒவ்வொரு நகரத்திலும் வீட்டுக்கு வீடு போர் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாலும், அமெரிக்காவும் பிரிட்டனும் தவிர்க்க முடியாத அளவிற்கு ஈராக் மக்களை கொன்று குவிக்கும் போரில் இறங்கியுள்ளது. புதிதாக இராணுவத்தில் கட்டாயமாகப் பணியாற்ற அழைக்கப்பட்ட மிகப்பெரும்பாலான இளைஞர்கள் உள்ள ஈராக் இராணுவத்திற்கு எதிராக மட்டுமல்ல ஈராக் மக்கள் அனைவருக்கும் எதிராக போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நம் கண் முன்னால் மிக பயங்கரமான சம பலமில்லாத எதிரிகள் நடத்துகின்ற போரை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஒரு சிறிய பாதுகாப்பற்ற ஒரு நாட்டை எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் ஒரு இராணுவ வல்லரசு பொடிப்பொடியாக்கிக் கொண்டிருப்பதை உலகின் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களும் மிகுந்த வெறுப்போடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் உண்மையான மிரட்டல் பாக்தாத்திலிருந்து அல்ல வாஷிங்டனில் இருந்துதான் வருகிறது என்பதை உலக மக்களில் மிகப்பெரும்பாலோர் சரியாகவே மதிப்பீடு செய்து இருக்கின்றனர்.

''நமது படைகளுக்கு ஆதரவு தரவேண்டும்'' என்ற சாகசத்தின் அடிப்படையில் அரசியல்வாதிகள் போருக்கு ஆதரவு காட்டுவதை நியாயப்படுத்துகின்ற எல்லா முயற்சிகளையும் இந்த மாநாடு நிராகரிக்கின்றது. ஆவேச உரைகள் மற்றும் பொய் மூட்டைகளின் அடிப்படையில் இந்தப் போரில் களமிறக்கி விடப்பட்டிருக்கின்ற மிகப்பெரும்பாலான அமெரிக்க, பிரிட்டனின் இளைஞர்களும் இளம் பெண்களும் வாஷிங்டனில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற போர் வெறியரின் பொய்களுக்கு பலிக்கடாவாக ஆகியிருக்கிறார்கள். ஒரு மறைமுக - இரகசிய செயல்திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அல்லது பிரிட்டன் மக்களது நலன்களுக்காகவல்லாது ஆளும்தட்டினரின் நலன்களுக்காக அந்த இளைஞர்கள் பிறரை கொல்லுமாறு அல்லது அவர்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஐ.நா. பாதுகாப்பு சபையை மீறி தன்னிச்சையாக போருக்கு செல்ல புஷ் நிர்வாகம் எடுத்த முடிவானது, தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட எந்த விதமான சட்ட அல்லது இராஜதந்திர கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படப்போவதில்லை என்பதை உலகிற்கு காட்டுகின்றது. அமெரிக்க ஊடகங்கள் எவ்வளவுதான் போருக்காக வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்தாலும் ஒரு அடிப்படை உண்மையை அவைகளால் மறைக்க முடியவில்லை. எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் ஒரு சுதந்திர நாட்டின் மீது சர்வதேச சட்டங்களையும் அப்பட்டமாக மீறி ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த அடிப்படை உண்மை.

தற்காப்பு போர் என புஷ் நிர்வாகம் கூறிவரும் தத்துவமானது சென்ற நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் மிக தாழ்வான நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமான ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான இராணுவக் கொள்கையாகும். புஷ், சென்னி, ரம்ஸ்பீல்டு கோஸ்டிகள் திட்டமிட்டு நடத்தும் ஆக்கிரமிப்பு போரானது நாஜித் தலைவர்கள் மீது நூரம்பேர்க் விசாரணையில் கூறப்பட்ட முதல் குற்றச்சாட்டாகும். அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. அதே ஆக்கிரமிப்பு போர் பற்றிய சட்ட விளக்கம் இன்னும் அப்படியே இருக்கிறது. அது ஒரு போர் குற்றமாகும்.

ஈராக் மீது அமெரிக்கா போர்த்தொடுத்தத்திற்கு காரணமாக இருக்கும் புஷ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள், நாடாளுமன்றத்தின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், இராணுவத் தளபதிகள், ஊடக ஏகபோக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகிய அனைவரும் போர்க் குற்றவாளிகள். அவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன் நிறுத்தப்படவேண்டும்.

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் அனைவரிடமும் உடனடியாக ஈராக் போரை கைவிடுவதற்கு கோரிக்கை விடுக்குமாறு, ஈராக்கிலிருந்தும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா பகுதிகளிருந்தும் சகல அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராணுவ படைகள் வெளியேற்ற கோருமாறும், ஈராக்கிற்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அந்த மக்களுக்கு பொருளாதார உதவியும் மனிதநேய அடிப்படையில் அவசர உதவிகளும் வழங்கப்படுவதற்கு கோரிக்கை விடுக்கவேண்டும் என இந்த மாநாடு வேண்டுகின்றது.

மாநாட்டுத் தீர்மானம்: தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக

இந்த மாநாடு அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது தாக்குதல் நடத்துவதை எதிர்த்து நிற்கின்ற உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

பெப்ரவரி 15-16 வார கடைசியிலிருந்து அமெரிக்கா முழுவதிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள ஒவ்வொரு நகரிலும், கிராமங்களிலும் மிகப்பெரும் அளவிற்கு ஒன்றிணைந்து பாரிய கண்டன ஊர்வலங்களை நடாத்தினர். இவை அளவிலும் பரவலிலும் இதற்கு முன்னர் எப்போதும் நடைபெற்றிராத அளவிற்கு பெரிதாக அமைந்தது.

இப்படி சர்வதேச அளவில் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதிய தலைமுறையைச் சார்ந்த தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் இப்போதுதான் முதல் தடவையாக அரசியல் போராட்டத்தில் அடியெடுத்து வைப்பதை குறிக்கின்றது. கருவாக இருக்கும் இக்கட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச சமூக இயக்கம் உருவாவதை எடுத்துக்காட்டுகின்றது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு கடந்த கூட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் முதலாளித்துவ உற்பத்தியின் சர்வதேச ஒருங்கிணைப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துகின்றது. அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு பாதுகாப்பட்ட சந்தைகளையும், அவர்களது சொந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவதையும் அடித்தளமாக கொண்ட பல்வேறு நாடுகளிலுள்ள தொழிலார்களுக்கான தேசியவாத வேலைத்திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் காலாவதியாகிவிட்டன. அதே நேரத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சுரண்டல் தீவிரமாக்கப்படுவதுடன், சமூக சமத்துவமின்மையும் அதிகரித்து வருவதும் அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகள் வரை உள்ள தொழிலாள வர்க்கம் ஒரேமாதிரியான நிலைமையை எதிர்நோக்குகின்றனர். இந்த வகையில் அதிகரித்த அளவில் முதலாளித்துவ எதிர்ப்பு வடிவம் எடுக்கும், சர்வதேச அளவிலான பெரிய சமூக போராட்டங்களுக்களின் ஒருங்கிணைப்பிற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேலும் தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக அடையாளங் காட்டிக்கொள்ளுமே தவிர தேசிய வர்க்கமாக காட்டிக்கொள்ளாது.

19ம் நூற்றாண்டின் முடிவில் உலக ஒருங்கிணைப்பின் முதல் யுகம் ஆரம்பமானது. அப்போது பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களின் விளைவாக 30 ஆண்டுகள் மிகக் கசப்பான போர்களும் பொருளாதார மந்தநிலை உருவாகியதுடன், 1914-க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலத்தில் பாசிசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் நடைபெற்றது. அதற்கு பின்னர் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியானது சந்தைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும், மலிவான ஊதியத்திற்குமான மூர்க்கமான போட்டியை உருவாக்கிவிட்டது. மீண்டும் ஒருமுறை உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசமைப்பிற்கும் மற்றும் உற்பத்தியின் சமூகமயமாக்கலுக்கும் செல்வத்தை தனியார் கைப்பற்றிக் கொவதற்கும் இடையிலான முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் வெளிவந்தன. இது பகிரங்கமாக வெடித்துச்சிதறி மனித சமுதாயத்தை சீரழிவிற்குள்ளாக்க அச்சுறுத்தியது.

ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கு எதிரான போராட்டத்தில் உண்மையான ஒரே வெகுஜன அடித்தளம் அமெரிக்க மற்றும் சர்வதேச உழைக்கும் வர்க்கமாகும். இந்த போராட்டத்திற்கு ஒரு உணர்வுபூர்வமான சர்வதேச தகவமைவும் முன்னோக்கும் தேவை. நமக்கு மேலேயிருந்து எந்த அமைப்பும் இதை செய்து தரமுடியாது. ஏதாவது ஒரு ஏகாதிபத்திய அரசோ அல்லது தேசிய அரசுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் போன்றவற்றின் ஆசீர்வாதத்துடனோ இதைச் செய்துவிட முடியாது. பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களையும் மற்றும் வெளியுறவு கொள்கையின் தேவைகளையும் கருத்தில்கொண்டுதான் செயல்படுகின்றார்கள். இந்த முதலாளித்துவ அரசுகள் எதுவும் உலக சமாதானத்திற்கான சாதாரண மக்களின் விருப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவேதான் கண்டனங்கள் மற்றும் பேரணிகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் எவ்வளவு விரிவான அடிப்படையில் அமைந்திருந்தாலும் அது ஆட்சியில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காக கொண்டிருந்தால் போருக்கான முயற்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஆதரவை பெற்ற அடித்தளத்திலிருந்து ஒரு இயக்கத்தை நிர்மாணிக்க வேண்டும். அந்த இயக்கம் சர்வதேச சோசலிச மூலோபாயம் ஒன்றை அடித்தளமாக கொண்டு சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு அந்த இயக்கம் நடாத்தப்பட்டால்தான் போருக்கு எதிரான இயக்கம் முன்னோக்கி செல்லமுடியும்.

தொழிலாள வர்க்கத்தை தேசியம், இனம், மதம், பாலியியல் அடிப்படையில் பிரித்து வைக்கின்ற எல்லா முயற்சிகளையும் இந்த மாநாடு எதிர்க்கிறது. இது போன்ற இரண்டாம் நிலை உணர்வுகளை அரசியல் ரீதியில் அற்பமான காரணங்களை முன்நிறுத்தி தொழிலாளர்களது ஒற்றுமையை சீர்குலைத்து பலவீனப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கவேண்டும். சோசலிச சர்வதேசியவாதம் மிகமுற்போக்கானதுடன் புரட்சிகரமானதுமான வரலாற்று போக்குகளையும் கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது. ஆனால் இன்னும் உலக சமாதான, சமூக சமத்துவ மற்றும் நீதிக்காக முழுமையாக எல்லா நாடுகளின் தொழிலாளர்களும் தங்களது போராட்டங்களை உலக முன்னோக்கின் அடிப்படையில் இணைப்பதற்கான முழுமையான உணர்வுபூர்வமான உந்துதல் காணப்படவில்லை.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக உருவாகியுள்ள சர்வதேச ரீதியான மிகப்பெரும் வெகுஜன இயக்கம் முன்வைத்துள்ள அரசியல் பொறுப்புக்களை இந்த மாநாடு உணர்க்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் போருக்கு எதிரான உணர்வுகள் வெளிப்பட்டு உள்ளன. இவை சர்வதேச அளவில் ஏற்பட இருக்கின்ற மாற்றத்திற்கு நல்வரவு கூறுகின்ற அம்சமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளின் சர்வதேச தன்மையால் கோடிக்கணக்கான மக்கள் பலத்தை பெற்றுள்ளார்கள். இப்போது நம்முன் உள்ள மிக முக்கியமான கடமை என்னவென்றால் இந்த புதிய இயக்கத்தில் அரசியல் வர்க்க உணர்வை அபிவிருத்தி செய்வதும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் இடையிலுள்ள முக்கிய தொடர்பை புரிந்துகொள்வற்கு உதவுவதுமாகும்.

See Also :

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு

கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page