Political crisis in SriLanka deepens

Why the Socialist Equality Party turned down Sri Lankan President Kumarathunga's invitation to all-party talks

ஸ்ரீலங்காவில் அரசியல் நெருக்கடி ஆழமடைகிறது

ஏன் சோசலிச சமத்துவக் கட்சி ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்தது

15 may 2000

ஸ்ரீலங்காவில் பிரிவனைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அடைந்த இராணுவத் தோல்விகளால் உருவாக்கப்பட்ட ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தனது நிர்வாகத்துக்கு முண்டுகொடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் இரண்டு பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு ஏனைய கட்சிகளுடன் சேர்த்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்ரீலங்கா பிரிவான சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாததோடு, அதன் தேசிய செயலாளர் விஜே டயஸ் அதற்கான காரணத்தையும் சோசலிச சமத்துவக்கட்சியின் யுத்தத்திற் கெதிரான அதன் நீண்டகால எதிர்ப்பையும் மீண்டும் எடுத்துக்காட்டி பின்வரும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவிற்கு,

ஜனாதிபதி அம்மையார் அவர்களே,

தமிழ் மக்களுக்கு எதிராக உங்களது அரசாங்கத்தால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய யுத்தம் தொடர்பாகவும் யாழ்ப்பான குடாநாட்டில் இராணுவத்தின் தோல்வி தொடர்பாகவும் விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சியை அழைத்திருந்தீர்கள். உங்களது அழைப்பிற்கான பதிலாக இக்கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கலந்து கொள்ளாது என்பதை நான் உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

அரசாங்கம் தனது கொள்கைக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டமுடியாது பரந்த அவசரகால சட்டவிதிகளை பிரகடனப்படுத்தியிருக்கையில் இக்கூட்டமானது ஒரு முழு ஏமாற்றாகும். தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாட்டின் பரந்த தன்மை என்னவெனில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் அனைத்தும் ஒடுக்கப்படும் என்பதாகும்.

இதற்கு மேலாக உங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள பரந்த ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் அதன் உண்மையான தேவையை எடுத்துக்காட்டுகின்றது. யுத்தத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு ஆதரவை தேடுவதற்கும் அதனது கொள்கைகளுக்கு நம்பிக்கையை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. இந்த யுத்தம் நாடுமுழுவதும் உள்ள சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களுக்கு அழிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு இந்த முட்டாள்தனமான நடவடிக்கைகளில் கலந்துகொள்ள எவ்வித நோக்கமுமில்லை.

எவ்வாறு இருந்தபோதும் நீங்கள் யுத்தம் தொடர்பான எமது கருத்தைக் கேட்டிருந்தீர்கள். எமது கருத்து பின்வருமாறு;- தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நோக்கத்தையுடைய ஒரு பிற்போக்கான யுத்தத்தை நடாத்துவதற்கான ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. நீங்கள் 1994ம் ஆண்டு பதவிக்கு வரும்போது சமாதானத்தைக்கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தீர்கள். அதற்கு மாறாக யுத்தம் தீவிரமயமாக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண மக்கள் மீது அதன் பாரம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னைய பத்தாண்டுகளில் தொடர்ந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலும் பார்க்க கடந்த ஆறு வருடங்களில் கூடியளவு படைவீரர்களும் பொதுமக்களும் இறந்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு சிங்கள தொழிலாளர்களும் விவசாயிகளும் பொறுப்பல்ல. தற்போது அவர்கள் அதற்கான பாரிய செலவை மட்டுமல்லாது திகைப்படையச் செய்யும் அளவிலான உயிர் இழப்பையும், அதிகரித்துவரும் காயமடைந்தவர்களையும், அங்கவீனர்களையும் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இராணுவ இயந்திரத்திற்கு வழங்குவதற்காக அடிப்படை தேவைகளுக்கான அரசாங்கச் செலவினத்தின் பாரியவெட்டுக்களையும் சுமக்க வேண்டியுள்ளது. அவர்களின் விருப்பம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதும், அவர்களது தமிழ் சகோதர, சகோதரிகளுடன் சகோதரத்துவமான சமாதானமுமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து ஸ்ரீலங்கா இராணுவப் படைகளை முற்றுமுழுதாகவும், உடனடியாகவும் வாபஸ் பெறுமாறு மிகத்தெளிவாக அழைப்பு விடுக்கின்றது. ஸ்ரீலங்கா முதலாளித்துவத்தின் நலன்களின் பேரில் நடாத்தப்படும் இந்த யுத்தத்திற்காக ஒரு சிப்பாயும் உயிரிழக்கக்கூடாது, ஒரு ரூபாயும் செலவழிக்கப்படக்கூடாது.

உங்கள் உண்மையுள்ள,

விஜே டயஸ்
தேசிய
செயலாளர்,
சோசலிச சமத்துவக்
கட்சி

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்