ஆசிரிய தலையங்கம்

Forth International Volume-14 No.1 March-1987

நான்காம் அகிலம் தொகுதி-14 எண்.1 மார்ச்-1987

பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான மைக்கல் பண்டாவும், அவருக்கு மிகவும் நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பாளரும், அவ்வமைப்பின் நிறுவனர் மற்றும் நீண்ட காலத் தலைவருமான ஜெரி ஹீலியும், நவம்பர் 8, 1986 அன்று பிரிட்டிஷ் ஸ்ராலினிஸ்டுகள் குழு ஒன்று அமைத்துக் கொடுத்த பகிரங்க அரங்கு ஒன்றில் நான்காம் அகிலத்தின் மீதும்  லியோன் ட்ரொட்ஸ்கி மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தினார். இதைத் தொடர்ந்து பண்டா, "உண்மையான லியோன் ட்ரொட்ஸ்கி தயை செய்து விடையிறுப்பாரா?" என்ற தலைப்பில் ஒரு புதிய ஆவணத்தை சுற்றறிக்கைக்கு விட்டார்; "அனைத்துலகக் குழு ஏன் புதைக்கப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள்" என்ற அவருடைய இழிந்த ஆவணத்தின் தொடர்ச்சியாக இது வந்தது; அந்த ஆவணத்தில் 1928ல் இருந்து ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய முழு போராட்டமும் கைவிடப்பட்டதுடன் மட்டும் அல்லாமல், ஸ்ராலினை ஒரு "தொழிலாள வர்க்க பொனபார்ட்" என்று பாராட்டியதோடு அக்டோபர் புரட்சியின் காவலர் என்றும் பெருமைப்படுத்தி, அரசியல் புரட்சி முன்னோக்கை எதிர்ப்புரட்சி நடவடிக்கை என்று நிராகரித்து, தன்னை மிக்கைல் கொர்பச்சேவின் ஆதரவாளர் என்றும் அறிவித்தார்.

இந்த நிகழ்வு உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும், முன்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நடந்து வந்த அரசியல் வளர்ச்சிகளை பற்றி ஆராய்ந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மிகப் பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பண்டாவின் பரிணாமம் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) விட்டோடிகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நடத்திய போராட்டத்தின் மாபெரும் நிரூபணமாக இருப்பது மட்டும் அல்லாமல், ஹீலி மற்றும் சுலோட்டர் பற்றிய மிகப்பெரும் அரசியல் குற்றச்சாட்டாகவும் உள்ளது.

ஒருவரையும் போலல்லாது ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பின் தலைமையில் பல தசாப்தங்கள் வாழ்ந்த பின்னர் நேரடியாக ஸ்ராலினிச முகாமிற்குள் சென்றுள்ள தனது மாணவனின் முன்னோடியில்லாத காட்டிக்கொடுப்பினால் முற்றிலும் அதிர்ந்து போன நிலையில்? ஒரு பகுப்பாய்வு எனக் கூறப்படக்கூடிய விளக்கத்தைக் கொடுக்கவும் முடியாத நிலையில், ஹீலி இதை தான் எதிர்பார்க்காத, உணரமுடியாத, எதிர்க்க முடியாத புறநிலை சக்திகளின் வளர்ச்சியானால் ஏற்பட்டது என்று விபரித்துள்ளார். ஹீலியின் சார்பில் அவநம்பிக்கைமிக்க புனருத்தான  பணியில், அவருடைய சீடர் ரேய் அத்தோவ் (Ray Athow) ஹீலியின் மிக நெருக்கமான அரசியல் கூட்டாளியான பண்டாவின் அரசியல் கூர்ப்பு பல ஆண்டுகளாக அவர் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று வெறுமையாக அறிவித்துள்ளார்.

News Line டிசம்பர் 11, 1986 பதிப்பில் வந்துள்ள அத்தோவின் கட்டுரைப்படி, "இந்த வளர்ச்சியின் ஆதாரம் வேலைத்திட்ட ரீதியான முரண்பாடு அல்ல, புரட்சியின் விதிகளிலும், அவற்றிற்கு பண்டா கொண்டிருந்த எதிர்ப்பிலும் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. ஹீலியின் "அறிதல் செயல்முறை!" (Practice of cognition) யின் உதவியுடன் இது உண்மையில் மிகச் சிறந்த கண்டுபிடிப்புத்தான்! அத்தோவின் போலியான இயங்கியல் முறை ட்ரொட்ஸ்கியின் முறையில் இருந்து நேரடியாக முரண்படுகிறது; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் ஸ்ராலினிச கன்னையின் அரசியல் வளர்ச்சியை குறிப்பிட்ட ட்ரொட்ஸ்கி, இவற்றை "மாறுகின்ற சூழ்நிலைகளால்" என விளக்க அல்லது நியாயப்படுத்த முற்படும் முயற்சி ஏற்கப்பட முடியாதது என்றார். வழிகாட்டுதல் என்றால் ஓரளவிற்கேனும் வருங்காலம் பற்றி முன்கூட்டிக் கணித்தல் வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ட்ரொட்ஸ்கிச அஸ்திவாரங்களை கீழறுப்பதற்கு பல ஆண்டுகள் பண்டாவுடன் ஒத்துழைத்திருந்த ஹீலி, இப்பொழுது பண்டாவின் கைவிடலுக்கு அப்பட்டமாக புறநிலை சக்திகள் காரணம் என்று தன்னுடைய சொந்த அடிச்சுவடுகளை மறைக்கும் வகையில் கூறுகிறார். எதிர்புரட்சிகர சக்திகளுக்கு பண்டா நிபந்தனையற்ற சரணடைந்தது பற்றி மிக அதிக குரல் கொடுத்திருந்த போதிலும், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) யில் அக்டோபர் நெருக்கடிக்கு முன்பு பண்டாவுடன் கொண்டிருந்த ஒரு அரசியல் கருத்து வேறுபாடு பற்றிக் கூட சுட்டிக்காட்ட முடியாது. உண்மையில், பெப்ரவரி 8, 1986ல் நியூ லைனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் எழுதியதாவது: "நாங்கள் அரசியலில் ஒன்றாக செயல்பட்டு வந்த 35 ஆண்டுகளில் அவர் பல நேரமும் வாதிடுவார், ஆனால் மாநாடுகளாலும் அநேகமாக கணக்கிலடங்கா மத்திய மற்றும் அரசியல் கூட்டங்களால் அந்த நீண்டகாலத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முக்கிய முடிவிற்கும் அரசியல் ரீதியாக உடன்பட்டுத்தான் இருந்தார்." இன்னும் சமீபத்தில், செப்டம்பர் 23, 1986ல் மீண்டும் கருத்துக்களை சரிசெய்துவிடமுடியும் என்ற வெளிப்படையான நம்பிக்கையை கொண்டிருந்த ஹீலி, "தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை வரலாற்று பொருள்முதல்வாத முறையின் சிறந்த மரபின் வழிநின்று சக்திவாய்ந்த வகையில் கட்டியமைத்ததற்கு" பண்டாவின் மீது பெரும் புகழாரத்தையும் சூட்டியுள்ளார்.

சுலோட்டர் தலைமையிலான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கன்னை இதேபோல் பண்டாவின் அரசியல் பரிணாமம் பற்றி விளக்க முடியாத நிலையில்தான் உள்ளது. மிகத் துல்லியமாகக் கடந்த காலம் பற்றி "கணித்துக் கூறி" பதக்கம் வாங்கிய மனிதர் ஒருவரைப் போல், "பண்டா எங்கு செல்லுகிறார்?" என்ற வினாவை பண்டா தன்னுடைய எதிர்புரட்சிகர சேருமிடத்தை அடைந்த பின்னர்தான் சுலோட்டர் எழுப்பினார். (Workers Press, November 29, 1986)

முற்றிலும் நேர்மையற்ற தன்னுடைய கட்டுரையில், தன்னுடைய சொந்த பிளவின் நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில் வரலாற்றை திரித்துக்கூற சுலோட்டர் முற்படுகிறார். இவ்வாறு சுலோட்டரின் படி, "ஹீலி மற்றும் நோர்த்தை, அவருடைய ட்ரொட்ஸ்கிச காலத்திலேயே இருந்த அவரது நிலைப்பாடுகளையும் கூட (மாவோவைப் பற்றி பாராட்டு மற்றும் சீனாவில் கலாச்சாரப் புரட்சிக்கு ஆதரவு போன்றவை) எதிர்த்துப் போராடியிருந்த WRP தோழர்களில் பெரும்பாலானவர்களுடன் முதலில் வேறுபாட்டைக் கூறியதில் இருந்து நான்கு மாத காலத்தில் அவர் [பண்டா நிச்சயமாகவே நீண்ட பயணத்தை கொண்டுள்ளார்."

ஆனால் தன்னுடைய வாசகர்களுக்கு சுலோட்டர் தெரிவிக்காதது என்னவென்றால், ட்ரொட்ஸ்கிசம் பற்றி பண்டா நிராகரித்தது "27 காரணங்களை" அவர் எழுதியபோதே தொடங்கி விட்டது என்பதைத்தான். இந்த ஆவணம் வெளிவந்த இரு வாரங்களுக்குள் வேர்க்கர்ஸ் லீக்கின் (தொழிலாளர் கழகம்) செயலாளர் டேவிட் நோர்த், "நான்காம் அகிலத்தின் முழு அரசியல், தத்துவார்த்த, வேலைத்திட்ட மற்றும் வரலாற்று அஸ்திவாரங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதை" இது பிரதிநிதித்துவம் செய்கிறது என்று எழுதினார். (David North, "Behind the Split in the Workers Revolutionary Policy" Bulletin, February 21, 1986, reprinted in Fourth International, Volume 13, No.2). ஆனால் சுலோட்டர், பண்டாவின் "27 காரணங்களுக்கு" ஆதரவு கொடுத்து, அவற்றை பெப்ருவரி 1986ல் அனைத்துலக குழுவில் இருந்து WRP யின் பிளவிற்கு அரசியல் அரங்காக பயன்படுத்தினார். சுலோட்டரின் செயற்பட்டியலில் மிக முக்கியமாக இருந்தது அனைத்துலகக் குழுவில் இருந்து உடைத்துக் கொள்ளுதல் என்பதாக இருந்தது. "27 காரணங்களில்" வெளிப்படையான ஸ்ராலினிச ஆதரவு நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், பண்டாவின் சகோதரருக்கு சுலோட்டர் பெப்ருவரி 2, 1986 அன்று ஒரு கடிதம் எழுதினார்; அதில் "கட்சியில் இருக்கும் பிளவை ஆழப்படுத்துவதற்கான அனைத்துலகக் குழுவிற்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்திற்காக" எமது சக்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்துவதை தவிர எதுவும் செய்தால், அது குற்றம் சார்ந்த குறுகிய தன்மையுடைய செயலாகிவிடும்" என்று அறிவித்தார் -- இதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சார்புடைய சிறுபான்மையை WRP யில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்தினார்.

அனைத்துலகக் குழுவில் இருந்து பிளவிற்கு சுலோட்டர் தயாரிப்பு நடத்திக் கொண்டிருக்கையில், அதை செயல்படுத்துவதற்கு தேவையான கன்னைவாத வெறியைத் தட்டி எழுப்புகையில், 1985 அக்டோபர் 26-27 தேதிகளில் நடந்த WRP சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் பகுதியின் அரசியல் சீரழிவிற்கு பண்டா கொண்டிருந்த பங்கைப் பற்றி அதன் உறுப்பினர்களிடம் பேசியதற்காக நோர்த்தை அவர் கோபத்துடன் கண்டித்தார். WRP தலைமையில் இருந்த சுயநலக் கும்பல் உறவுகளுக்கான நியாயப்படுத்தல்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை கைவிட்டதற்கான எந்த அரசியல் பொறுப்பிலிருந்தும் பண்டாவை விடுவித்தார். நிரந்தரப் புரட்சி மீதான சந்தர்ப்பவாத தாக்குதலுக்கு ஹீலிதான் பொறுப்பு என்றும் கூறினார். சுலோட்டருடைய கூற்றின்படி, அவரும் பண்டாவும் "ஆக்கபூர்வமான, தத்துவார்த்த வேலைகளை" செய்ததாகவும், விளக்கப்படாத சில காரணங்களை ஒட்டி, அது "கூடுதலான வகையில் IC, WRP மற்றும் ஜெரி ஹீலியால் அவரது லண்டன் அலுவலகத்திலிருந்து நேரடியாகவும் பார்விச் கூடத்தின் மூலமும் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நியூஸ்லைன் இவற்றின் உண்மையான வழிகாட்டலில் இருந்து பிரிந்து போயிற்று." (ibid., p.65). "அனைத்தையும் ஸ்ராலின் மீது குறைகூறவும்" என்ற வரலாற்று தத்துவம்தான் இது!

சுலோட்டர் மற்றும் ஹீலியின் "விளங்கங்களில்" சிறப்பான குணவியல்பினை குறித்துக்காட்டுவது பண்டாவின் நிலைப்பாடுகள் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தவை என்பதை மூடிமறைக்கும் அவர்களின் முயற்சியாகும்; ICFI க்குள்ளே எழுந்த விமர்சனத்திற்கு எதிராக அவரை பாதுகாத்தனர். ஏனெனில் துல்லியமாக ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கின் நிலைத்த தன்மை பற்றி பண்டாவின் சந்தேகங்களை இவர்களும் பகிர்ந்திருந்தனர்.

ICதிமி இன் அனைத்துப் பகுதிகளும் ஹீலியுடன் சேர்ந்து "சம அளவில் சீரழிவை" அடைந்துள்ளதாக சுலோட்டர் கூறினாலும், அரசியல் சான்றுகள் WRP 1953-64க்கு இடையே பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் ஆற்றப்பட்ட வரலாற்றுப் பாத்திரத்தின் விளைவாக WRP ஆல் செலுத்தப்பட்ட பெரும் செல்வாக்கு இருப்பினும், பிரிட்டிஷ் பகுதிக்குள் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சிக்கு தத்துவார்த்த ரீதியாக தெளிவாக பேசப்பட்ட எதிர்ப்பு இருந்தது என்பதைக் காட்டுகின்றன. 1968 ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (Revolutionary Communist League - RCL) நிறுவியவர்கள் ஸ்ராலினிசத்திற்கு பண்டா காட்டிய அரசியல் சலுகைகளுக்கு முதலில் ஆட்சேபனைகளை எழுப்பி, 1971-72ல் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அவரது சந்தர்ப்பவாத அடிபணிவு பற்றிய பரந்த விமர்சனத்தை வைத்தனர்.

நான்காம் அகிலத்தின் பதிப்பில் மீண்டும் வெளியிடப்பட்ட பங்களதேஷ் விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய-பாக்கிஸ்தானிய 1971-72 போர் பற்றிய இந்த ஆவணங்கள், பிரிட்டிஷ் பகுதி தலைமையின் வலதுசாரி பப்லோவாத நிலைப்பாட்டை எதிர்த்துப் போராட அனைத்துலக குழுவில் இருக்கும் இளைய ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் எடுக்கப்பட்ட முதல் முயற்சிகளை பதிவு செய்கிறது. பண்டாவின் வெளிப்படையான பப்லோவாத நிலைப்பாடுகளுக்கு எதிராக அரசியல் சர்ச்சைக்குரிய விஷயதானங்களாக எழுதப்பட்ட வகையில், 1970 களின் இறுதியிலும், 1980 களின் ஆரம்பத்திலும் வெளியே வந்த அடிப்படைப் பிரச்சினைகளை அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தனர் மற்றும் 1982-84 காலகட்டத்தில் வேர்க்கர்ஸ் லீக்கினால் விரிவாக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. இறுதியில் அனைத்துலகக் குழுவில் உள்ள பிளவு தங்கியிருந்த RCL ஆல் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் என்னவெனில், நிரந்தரப் புரட்சி தத்துவமும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும் ஆகும்.

இந்த ஆவணங்கள் ICFI "ஜி.ஹீலியினால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது", அதற்கு எதிர்ப்பு கிடையாது எனக் கூறும் சுலோட்டரின் போலித்தனமான கூற்றைப் பொய்யாக்குகின்றன. அரசியலில், தொழிலாள வர்க்கத்தின் உலக கட்சி வளர்ச்சியை பற்றிப் பேசுகையில், வர்க்கத்தன்மை அற்ற "மேலாதிக்கம்" போன்ற சொற்களை, அந்த மேலாதிக்கத்தின் வர்க்க மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை குறிப்பிடாமல் ஒருவர் தனது ஆய்வுக்கு அடிப்படையாக கொள்வது, என்பது முற்றிலும் மார்க்சிசம் அல்லாததாகும். மத்தியதர வர்க்கத்தின் திருத்தல்வாதத்திற்கு சரணடைந்துவிட்ட பின்னர் எந்த அரசியல் நிகழ்வு பற்றியும் ஒரு வர்க்க பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சுலோட்டரால் இயலாது. ஆனால் ஆவணச் சான்று மிகத் தெளிவாக சுலோட்டருக்கு எதிராகக் கூறுகிறது. ஹீலியின் "மேலாதிக்கம்" ஒரு கோட்பாடற்ற தன்னலக் குழுவின் மூலம் செலுத்தப்படுகிறது; அதன் இருப்பே WRP யின் அரசியல் நிலைப்பாட்டின் சந்தர்ப்பவாத சீரழிவை பிரதிபலித்ததுடன் அதற்கு பங்களிப்பும் செய்கிறது. பிரிட்டிஷ் பகுதி திருத்தல்வாத முகாமிற்கு உறுதியாய் விலகிச்சென்றதன் விளைவாக 1970களின் ஆரம்பத்திலிருந்து ஒரு உலக அமைப்பு என்றவகையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஒருமுகப்பட்ட தன்மை என்றநிலை கீழறுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அனைத்துலகக் குழுவின் வரலாற்று வளர்ச்சியுடன் தொடர்புபட்ட காரணங்களால், சுலோட்டரும் மற்றும் எல்லோரும் இப்போது நம்புவதுபோல் WRP இன் காட்டிக் கொடுப்புக்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த சீரழிவு மற்றும் சிதைவு என்ற வித்தியாசப்படுத்தமுடியாத நிகழ்போக்குகளை உருவாக்கவில்லை.

வேர்க்கர்ஸ் லீக் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) இரண்டும், 1961-63 ன் பொழுது சோசலிச தொழிலாளர் கட்சி [SWP] -பப்லோவாத "மறு ஐக்கியத்திற்கு" எதிராகவும் 1964ல் லங்கா சம சமாஜக் கட்சி ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைவதற்கு எதிராகவும் சோசலிச தொழிலாளர் கழகம் (பிரெஞ்சு OCI உதவியுடன்) நடத்திய அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களின் அடிப்படையில் நேரடியாக நிறுவப்பட்டிருந்தன. வேர்க்கர்ஸ் லீக்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் -- அதேபோல் ஜேர்மனி, ஆஸ்திரேலியாவில் உள்ள ஏனைய பகுதிகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பாதுகாக்கப்பட்ட கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டிருந்த பகுதிகளும்-- 1961-64 காலகட்டத்தின் படிப்பினைகளின் அடிப்படையில் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை நனவுடன் அபிவிருத்தி செய்ய முயற்சித்த மட்டத்திற்கு, அவற்றின் உள் பரிணாமம் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை மேற்கொண்டது.

உதாரணமாக, சோசலிச தொழிலாளர் கட்சிக்கு [SWP] வொல்போத் தப்பியோடிச் சென்றதற்கு எதிராக 1974-76ல் வேர்க்கர்ஸ் லீக்கால் நடத்தப்பட்ட போராட்டமானது, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் புதுப்பிக்கப்படுவதற்கும், அது பற்றிய படிப்பினைகளை புதிதாக உள்வாங்கிக் கொள்வதற்கும் வழிவகுத்தது. ஆனால் அந்த நேரத்திலேயே, பிரிட்டனுக்குள்ளே வர்க்க அழுத்தங்களுக்கு அதிகரித்தளவில் அடிபணிந்தமை, திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து WRP என்றுமில்லா அளவு அதிதூரம் விலகிச்செல்லுவதற்கும் மற்றும் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தை நோக்கிச்செல்லுவதையும் உருவாக்கியது. இங்குதான் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் WRP க்கும் இடையே ஒரு வெளிப்படையான மோதல் வெடிப்பதற்கான வேர்கள் இருந்தன. இவ்விதத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் WRP யின் முக்கிய பங்கு சுலோட்டர் குறிப்பிட்டுள்ளது போல் முரண்பாடற்ற எளிய இயல்நிகழ்ச்சியாக ஒன்றும் இல்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் WRP கொண்டிருந்த செல்வாக்கு தங்கியிருந்த அதே கொள்கைகளே ஹீலி, பண்டா, சுலோட்டர், ஆகியோரின் காட்டிக் கொடுப்புக்களுக்கு எதிரான அரசியல் கிளர்ச்சிகளுக்கும் இறுதியில் வழிவகுத்தன. WRP உறுப்பினர்களுக்கு நம்புவது கடினமாக இருந்தாலும், பிரிட்டிஷ் தீவுக்கு வெளியேயும் உண்மையிலேயே ஒரு உலகம் உள்ளது. அனைத்துலகக் குழுவின் பகுதிகள் ஒன்றும் WRP யின் பிற்சேர்க்கைகள் அல்ல; அவை தம்முடைய சொந்த தலைமைகளை வளர்த்துக் கொண்டு, தாங்கள் பணிபுரியும் நாடுகளில் வர்க்கப்போராட்டங்களுக்குள்ளே வாழ்ந்து போராடிவருவதால், தங்களுடைய சொந்த படிப்பினைகளை கற்றுக் கொண்டன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் இருக்கும் பிளவின் தன்மையை அறிந்து கொள்வதற்கு, நான்காம் அகிலத்திற்குள் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மிகவும் முக்கியமான பிரச்சினைகளை மீண்டும் ஆராய்வது சிறப்பைத் தரும். இப்பொழுது மத்தியவாதிகளிடையே "திருத்தல்வாதம்", "பப்லோவாதம்" என்ற சொற்பதங்கள் சொல்வடிவில் அரக்கத்தன்மை வாய்ந்தவை அல்லது அரசியல் அவதூறு சொற்கள் என்று ஒதுக்கிவிடுவது நடைமுறையில் வந்துவிட்டது. சுலோட்டர் கன்னையில் ஒரு பகுதியாக இருந்த சிரில் ஸ்மித் போன்ற விட்டோடிகள் இப்பொழுது தங்களுடைய புதிய திருத்தல்வாத நண்பர்களுக்கு பழைய நாட்களில் "குறுங்குழுவாத" WRP "பப்லோவாதத்தை" பற்றி பேசியது எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பது பற்றிய தூக்க நேர பேய் கதைகளை கூறுவதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டனர்.

ஆயினும்கூட, மரணத் தறுவாயில் உள்ள முதலாளித்துவ சகாப்தத்தில், ஏகாதிபத்தியம், வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் அதிகாரத்துவத்தில் மட்டுமல்லாமல் ஊனமுற்ற மற்றும் உருக்குலைந்த தொழிலாளர் அரசுகளிலும் தங்கியிருக்கிறது. தேசிய முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க வகையில் பலவீனமாக இருக்கும் பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு மத்தியதர வர்க்கத்தின் தீவிரமயமாக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளால் ஆற்றப்படும் முக்கிய பாத்திரத்தை ஏகாதிபத்தியம் நம்பி உள்ளது. 1961க்கும் 1963க்கும் இடையே அமெரிக்க SWP, பப்லோவாதிகளுடன் தன்னுடைய மறு ஐக்கியத்தை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கையில், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) (WRP இன் முன்னோடி அமைப்பாக இருந்தது) ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ஏகாதிபத்தியம் பின்தங்கிய நாடுகளில் குட்டி முதலாளித்துவ அடுக்கின்மீது நம்பியிருக்க வேண்டிய தன்மைக்கும், திருத்தல்வாதத்தால் முன்னெடுக்கப்பட்ட புதிய தத்துவங்களுக்கும் இடையிலான புறநிலைத்தொடர்பை நன்கு அறிந்திருந்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு இவ்வாறு அக்கறை எடுத்தனர். ஏகாதிபத்திய அமைப்பை அகற்றுவதற்கு ஒரு புதிய வரலாற்றுக் கருவி என்று மத்தியதர வர்க்கத்தின் தீவிரப்போக்கிற்கு தலைவணங்கிப் பாராட்டியவர்களுக்கு எதிராக அது போரிட்டது. குட்டி முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிராக SLL கீழ்க்கண்ட பகுப்பாய்வை செய்தது:

"தொழிலாள வர்க்கத்தின் போலித் தலைவர்கள் ஏகாதிபத்தியத்தின் தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் அதன் புறநிலை தேவைகளுக்கு பொருந்தும் ஒரு பங்கையும் கருத்தியலையும் கொண்டிருக்கின்றனர். அனைத்து வகையான சந்தர்ப்பவாதிகளும் ஒரு சில வளர்ச்சி அடைந்த நாடுகளின் தொழிலாளர் மேற்குடித்தட்டை நம்பியிருப்பதோடு மட்டும் அல்லாமல், முதலாளித்துவ முறையற்ற உலகுடன் தற்கால அரசு ஏகபோக முதலாளித்துவம்  கொண்டிருக்கும் குறிப்பிட்ட உறவுகளின் கீழ், உலக மக்களின் புதிய அடுக்குகளையும் நம்பியிருக்கின்றனர். வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் தொழில்துறை மற்றும் நிதி மூலதனத்தின் பிரமாண்டமான ஒருமுகப்படுத்தலூடாக, இராணுவமயமாக்கல், அரசையும் பொருளாதாரத்தையும் அதிகாரத்துவமயமாக்கல், பொருளாதாரத்தில் அரசு தலையீட்டில் அதிகரித்த அளவில் தங்கியிருத்தல், அதன் விளைவாக அதையொட்டி பெருவங்கிகள், ஏகபோக உரிமைகள் அரசாங்கம், இராணுவம், பாதுகாப்பு பிரிவுகள், "சமூகநலப் பணிப் பிரிவுகள்", "பொதுக் கருத்தை திரிப்பவர்கள்" ஆகியதுறைகளில் நிறைவேற்று நிர்வாகிகள் மற்றும் அதிகாரத்துவவாதிகளின் ஒரு புதிய மத்தியதர சாதியை (Middle caste) தோற்றுவித்தல் என்றபோக்கினூடாக சென்றுள்ளன. முதலாளித்துவத்தின் சர்வதேச தேவைகள் மத்தியதர சாதியால் விசுவாசமாக நிர்வகிக்கப்படுகின்றன. பின்தங்கிய நாடுகளில் அவை தங்களுக்கு இணையாக இருப்பவர்களை தேசியவாத குட்டி முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களில் காண்கின்றனர்; ஏகாதிபத்தியம் அவர்களிடத்தில்தான் அரசாங்கப் பொறுப்பை கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் நிறுவனங்களுக்கும் இந்த முறையின் அரசியல், பொருளாதார செயற்பாடுகள் பற்றிய ஒரு மொத்த கட்டுப்பாடு செலுத்தும் தொழிற்பாட்டைக் கொண்டுள்ளன.

"ஏகாதிபத்திய வளர்ச்சியின் தற்போதைய முக்கியமான கட்டத்தில் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து நீடித்திருப்பதற்கு இவ்விதத்தில் புறநிலையான வர்க்க காரணங்கள் உள்ளன. சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டம் ஒரே இயக்கத்தில் இருக்கும் போக்குகளுக்கு இடையிலான வெறும் சிந்தனைப் போக்கை ஒட்டியது அல்ல. தற்போதைய சூழ்நிலையில், புரட்சிகர நனவு என்பது மாற்றத்திற்கு முக்கியமான தேவையாகும். சோசலிசத்தின் 'புறநிலை தவிர்க்க முடியாத தன்மையை' நம்பியிருத்தல் என்பது சந்தர்ப்பவாதிகள் மற்றும் அதற்குப் பின்னே உள்ள வர்க்க சக்திகளை 'முற்போக்குப் பாத்திரத்தை" ஆற்ற நிர்பந்திக்கும் என்று ஒருவாறு நினைக்கப்படுவது, ஆபத்து நிறைந்தது மற்றும் தவறான வழிகாட்டல் ஆகும். தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தை அடைவதற்கான அதன் சொந்த பாதையை புரிந்துகொள்வதில் நனவு பெறுவதற்கு இட்டுச் செல்லுபவர்களாகிய தாம் உண்மையில் முற்போக்கானவர்கள். அனைத்து வகையான சந்தர்ப்பவாதத்திற்கும் எதிரான ஒரு உறுதியான போராட்டம் இல்லாமல், இந்தத் தலைமை வழங்கப்பட முடியாது.

"எமது ஏகாதிபத்திய சகாப்தத்தின் தனிச்சிறப்பான இயல்புகள் என்ற கண்ணோட்டத்தில்தான் நான்காம் அகிலம் குறிப்பிட்ட நாடுகளில் இயக்கத்தின் பிரச்சினைகளை அணுகுகிறது. ஏகாதிபத்தியத்தின் பொதுத் தேவைகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் பொதுத் தேவைகள் பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் அரசியல் போக்குகளின் பங்கை நிர்ணயிக்கின்றன. முதலாளித்துவத்தால் வளர்க்கப்பட்டுள்ள உலகச் சந்தை மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ள அல்லது பின்தங்கிய நாடுகளில் அனைத்து வளர்ச்சியையும் இந்த சர்வதேச நிலைப்பாட்டிலிருந்து ஆராயும் தேவையை எப்போதைக்குமாக ஏற்படுத்தியுள்ளன. இந்த முழுச் சித்திரத்தில் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் நிலைமையை மாற்ற முடியும்; எனவே நாம் ஒவ்வொரு பிரச்சினையையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து ஆராய்கிறோம். இயக்கத்தின் விந்தையான கூறுபாடுகளும் குறிப்பிட்ட நாடுகளில் அதன் வளர்ச்சியும் ஒரு பொது மாதிரியின் பல வகைகள் என்ற விதத்தில் விளங்கிக் கொள்ளப்படாமல், அதன் உண்மையான முக்கியத்துவம் உலக அரங்கில் ஏகாதிபத்தியத்திற்கும் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையேயான போராட்டத்தினால் தான் தீர்மானிக்கப்படும் ஒரு பகுதி இயல்நிகழ்வாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்." (Labour Review, Winter 1961, pp.90-91) 

இவ்விதத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நான்காம் அகிலத்தை தாக்கிய திருத்தல்வாதம் ஒரு வர்க்க நிகழ்வுப்போக்காகும்; இது ஏகாதிபத்தியம் தன்னின் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் தேவைகளையே பிரதிபலித்தது. பாட்டாளி வர்க்க புரட்சியின் வெளிப்பாட்டை எதிர்கொண்ட நிலையில், ஏகாதிபத்தியம் மத்தியதர வர்க்கத்தின் புதிய அடுக்குகளுக்கு தன்னுடைய நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையே ஒரு இடைத்தாங்கி பாத்திரத்தை மேற்கொள்ளவைக்கும் வாய்ப்புக்களை திறந்துவிட இருந்தது. பப்லோவாத திருத்தல்வாதம் ஏகாதிபத்தியத்தின் இந்த அடிப்படைத் தேவைகள் மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் வர்க்க நலன்கள் ஆகியவற்றை, இச்சக்திகளுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மாற்றி ஏற்றுக் கொள்ளுவதை நியாயப்படுத்தும் முக்கியமான தத்துவார்த்த சூத்திரங்களாக மொழிபெயர்த்தது. பழைய முதலாளித்துவ அரசு, பல்வேறு குட்டிமுதலாளித்துவ வர்க்க துணையாட்கள் அல்லாது தொழிலாள வர்க்கம் முதன்மையான வரலாற்று நடவடிக்கையாளராக உள்ள பாட்டாளி வர்க்க புரட்சியினால் அழித்தொழிக்கப்படாது, குட்டி முதலாளித்துவம் அரச எந்திரத்தை கட்டுப்படுத்துவதின் மூலம், சோசலிசத்தை உருவாக்க முடியும் என்ற பயனற்ற பிரமைக்கு இடம்தேடிக்கொடுக்கும்.

1951 ஆரம்பத்திலேயே, கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் அகற்றப்பட்ட விந்தையான சூழ்நிலையில் இருந்து பப்லோவால்  வரையப்பட்ட மிகப் பரந்த அரசியல் பொதுமைப்படுத்தல்கள் வேலைத்திட்ட ரீதியான புதுமைகளாக வேலைசெய்யப்பட்டது, அதன் திருத்தல்வாத உள்ளடக்கம் அணுவாயுத இறுதியுத்த ("போர்-புரட்சி" பற்றிய தத்துவம்) முறை மூலம் சோசலிசத்தின் வெற்றியுடன் பிணைப்பதற்கும் அப்பால் சென்றது. ஒன்றில் ஒரு பரந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர முன்முயற்சி அல்லது சுயாதீனமான பாட்டாளி வர்க்க கட்சிகள் மார்க்சிஸ்ட்டுக்களின் தலைமையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை நம்பியிருக்காத சோசலிசத்தை அடைவதற்கான பாதை அங்குள்ளது என்ற கருத்துரு பப்லோவாதிகளின் உறுதியான எண்ணம் (Idée Fixe) ஆயிற்று. இவ்வாறு, அதன் திருத்தல்வாதக் கருத்துக்களின் மைய அச்சு வெறுமனே ஸ்ராலினிசம் தொடர்பான அதன் மதிப்பீடு மட்டும் அல்ல, அதன் "சுய சீர்திருத்தத்திற்கான" சாத்தியபாடுகளுமாகும். பப்லோவாத திருத்தல்வாதத்தின் பல விகாரமான கூறுபாடுகளில் இதுவும் ஒன்று ஆகும்.

பப்லோவாதத்தின் திரிபின் முக்கியமானதும், ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் உதவிகரமாகவும் உள்ளது என்னவெனில், அது விஞ்ஞான சோசலிசத்தின் மிக அடிப்படையான கட்டுமானங்களின் மீது நடத்தும் தாக்குதல்தான். பாட்டாளி வர்க்கத்தை விடுதலை செய்தல் என்பது பாட்டாளி வர்க்கத்தின் பணிதான், மற்றும் சோசலிச கட்டமைப்பு பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துடன் தொடங்குகிறது என்னும் 1851லேயே மார்க்சினால் குறிப்பிடப்பட்ட விஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்ட நம்பிக்கை, பப்லோவாதத்தால் நேரடியாக சவாலுக்கு விடப்படுகிறது; அவர்களுடைய சோசலிச தத்துவம் இந்த முக்கிய வரலாற்றுப் பணியை குட்டி முதலாளித்துவத்திற்கு கொடுக்கிறது. அவ்வப்போது தொழிலாள வர்க்கத்திற்கு சம்பிரதாய மதிப்பை பப்லோவாதம் கொடுத்தாலும், முதலாளித்துவத்தை தூக்கிவீசுதல் அல்லது சோசலிசத்தை கட்டமைத்தல் ஆகியவற்றிற்கு, தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பகுதியில் ஒரு மார்க்சிச கட்சியை கட்டமைப்பதற்கு தேவையான பல ஆண்டுகள் போராட்டத்தின் மூலம் மிக உயர்ந்த அளவு தத்துவார்த்த நனவு இருத்தலோ தேவை இல்லை என வலியுறுத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

பப்லோவாதிகள் பயன்படுத்தும், அவர்களுடைய தந்திரோபாய முறைகளில் எப்பொழுதும் நிறைந்த கூறுபாடாக இருக்கும் தடையற்ற சந்தர்ப்பவாதம், சோசலிசத்தின் பாட்டாளி வர்க்க அஸ்திவாரங்களை நிராகரிப்பதில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளிப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் ஒரு அறிவார்ந்த முறையில் அதன் நீண்டகால வரலாற்றுப் பணிபற்றி பயிற்றுவிக்கப்படுவதற்கு ஒரு கோட்பாடு வகைப்பட்ட வழிவகை தேவை என்பதை ஒரு மார்க்சிச வாதி அறிந்துள்ளார். எனவே தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தெளிவு என்பதன் செலவில் அடையப்படும் குறுகிய கால வெற்றிக்கான தற்காலிக தனிமைப்படுத்தலை ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் பப்லோவாத அத்தகைய சிந்தனைப் போக்குகளால் "தடைக்கு உட்படுவது" இல்லை. அவருடைய தந்திரோபாயங்கள் வெகுஜன இயக்கத்தை தற்காலிகமாக ஆதிக்கத்திற்கு உட்படுத்த பாட்டாளி வர்க்கமற்ற சக்திகள் எவையாயினும் அவற்றிற்கு பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனத்தை தாழ்த்தி வைத்தல் என்ற திசையில் இயக்கப்படுகிறது.

சோவியத் அதிகாரத்துவத்திற்கு ஒரு புரட்சிகர பங்கை அளிப்பதற்கு பப்லோவாத திருத்தல்வாதங்கள் முதலில் பயன்படுத்தப்பட்டபோது, அவற்றின் பரந்த தாக்கங்கள் பிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் வெளிப்படுத்தப்பட்டன. இப்பொழுது சோசலிச தொழிலாளர் கட்சியினால் ஆதரவிற்கு உட்படும் பப்லோவாதிகள் கொண்டுள்ள முடிவுரைகள், காஸ்ட்ரோ எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளில் இருந்து, கியூபாவில் ஒரு தொழிலாளர் அரசு  நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். பப்லோவாதிகளை பொறுத்தவரை, பாட்டாளி வர்க்க தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்கும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியை கட்டுவதற்குமான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று முயற்சிகளிலிருந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை மேலோட்டமாக பிரித்தெடுத்தலை இந்த அபிவிருத்தியானது நியாயப்படுத்தி விடுகிறது.

ஒரு "புதிய உலக யதார்த்தம்" வந்துவிட்டதாக கூறப்படுகிறது; இதில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுதல் அல்லது வெகுஜன மார்க்சிச கட்சி இல்லாமல் முதலாளித்துவத்தை தூக்கியெறிதல் என்பது முடியும் என்று கூறப்படுகிறது. தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான உண்மையான வெகுஜன ஜனநாயக அமைப்புகள் இல்லாமலேயே தொழிலாளர் அரசுகள் நடைமுறைக்கு வரமுடியும் என்பதாகும். இந்த நவீன, ஒழுங்குபட காட்டப்படும் அணுகுமுறையின்படி, லெனின் அரசு பற்றியும்  சோவியத்துக்களின் உலக வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ள அனைத்தும் கைவிடப்பட வேண்டும். மாறாக, அரசு அதிகாரத்தின் தன்மையானது அதன் வரலாற்று மூலங்கள், சமூக அடித்தளங்கள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தேசியமயமாக்கல் என்பது அடிப்படையான, முடிவெடுக்கும் அளவுகோலாக நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்ளூர் தேசிய முகவர்களுக்கு எதிரான புரட்சிகர போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்தின் வழியாக ஒரு உறுதியான வர்க்க நிலைப்பாட்டிற்காக போராடுவதற்கு எந்தவித குறிப்பான தேவையும் இனி இல்லாமற் போனது. முன்பு பாட்டாளி வர்க்கத்திற்கு என்று ஒதுக்கியிருந்த வரலாற்றுப் பணிகள் இப்பொழுது ஒரு சில உறுதியான ஆயுதமேந்திய கொரில்லா குழுக்களால் செய்யப்பட்டுவிட முடியும் என்பதை காஸ்ட்ரோ "நிரூபணம்" செய்துவிட்டார் என்று பப்லோவாதிகள் கூறினர்.

மார்க்சிசம் பற்றிய இந்த நெறிபிறழ்வுக்கு எதிர்ப்பில், கியூபா பிரச்சினையில் SLL நடாத்திய போராட்டம் குறிப்பாக பின்தங்கிய நாடுகளில், பாட்டாளி வர்க்க கட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அஸ்திவாரங்களை பாதுகாப்பதற்கு முற்றிலும் இன்றியமையாததாக இருந்தது. அந்த சர்ச்சையில் ஏதேனும் ஒருவகையில், ஹான்சன் மற்றும் மண்டேலுடன் நின்றவர்கள் அனைவரும் பின்தங்கிய நாடுகளில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பணிகளை குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளிடம் ஒப்படைப்பதற்கு தயாராக இருந்தவர்கள் என்பதுதான் முக்கியம்; குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளின் வேலைத்திட்ட ரீதியான முன்முயற்சியின்றி பேசல் எவ்வளவு தீவிரமுடையதாயினும் சரி, அவர்களுடைய பணிகள் இறுதிப் பகுப்பாய்வில் சோசலிசப் புரட்சியின் பாதையில் ஏகாதிபத்தியத்தால் எறியப்படும் கடைசித் தடையாகவே சேவைசெய்யும்.

ஏகாதிபத்தியம் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு மத்தியதர வர்க்கத்தின் மூலம் மேற்கொள்ளும் அதன் முயற்சியில் அதனால் கொடுக்கப்படும் அழுத்தத்தை எப்பொழுதும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பணிகளை மீண்டும் வரையறுத்தல், மற்றும் எல்லா நேரங்களிலும் அதன் பகுதிகளின் சுயாதீனமான பங்கை காத்தல் ஆகியவற்றினாடாக எந்த அளவிற்கு எதிர்த்துப் போராடுகிறதோ அந்த அளவுக்குத்தான் அனைத்துலகக் குழு மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்ய முடியும். பப்லோவாதிகளின் "நவநாகரிக" சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்திற்கான இப்போராட்டத்தின் வரலாற்று உட்குறிப்புக்கள் அவர்களின் இலங்கைப் பகுதியான லங்கா சமசமாஜக் கட்சி திருமதி பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டரசாங்கத்தில் நுழைந்த பொழுது 1964 ஜூனில் தெளிவாகக் காட்டப்பட்டன. அவர்களின் காஸ்ட்ரோவிற்கும் பண்டாரநாயக்கவுக்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் பல இருந்த போதிலும், கொள்கைகளில் ஒரு அமைப்புரீதியான தொடர்பு இருந்தது; இது ஒரு கணத்தில் LSSP SWP உடன் சேர்ந்து காஸ்ட்ரோவின் கியூபாவை ஒரு தொழிலாளர் அரசு என பாராட்டுவதில் இணைத்தது; பின்னர் அதைத் தொடர்ந்து அதிக நாட்கள் பிடிக்காமல் ஒரு "தேசிய சமரச" முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழையவும் வைத்தது. இரு கொள்கைகளுமே தேசிய முதலாளித்துவத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாட்டாளி வர்க்கத்தின் முழு சுயாதீனத்தை நிறுவும் போராட்டத்தை கைவிட்டதின் அடிப்படையில்தான் இருந்தன.

சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) ஏற்பட்ட பிளவை அடுத்து வந்த ஆண்டுகளில், குறிப்பாக ஏப்ரல் 1966ல் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாம் உலக அகல்பேரவைக்கு பின், பிரிட்டிஷ் பகுதியின் தலைமைக்குள் 1963ல் பப்லோவாத மறு ஐக்கியத்திற்கு எதிராக நிறுவப்பட்ட வளைந்துகொடாத மற்றும் கோட்பாட்டு அடிப்படையிலான நிலைப்பாடுகளில் இருந்து ஒரு அரசியல் பின்வாங்குதலின் வளர்ந்துவரும் அடையாளங்கள் ஏற்பட்டிருந்தன (அப்பொழுது அது சோசலிச தொழிலாளர் கழகம் எனப்பட்டிருந்தது). இந்த வளர்ச்சியின் கீழ் இருந்த தன்மை ஐரோப்பாவில் எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியாகும்; அது குட்டிமுதலாளித்துவ கூறுபாடுகளை ஏராளமான வகையில் தீவிரப்போக்கு மற்றும் இடது அரசியலில் உட்புகுத்தியிருந்தது. வியட்நாமிய தேசிய விடுதலை முன்னணி (NLF) அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியதை பற்றிய அவர்களுடைய அரைகுறை உணர்வுபூர்வ பெருமைப்படுத்தல் மற்றும் பிற்போக்கு சியோனிசத்திற்கு எதிராக அரேபிய தேசியவாதத்தை பெருமைப்படுத்தல் மற்றும் சீனாவில் நடந்து வந்த கலாச்சாரப் புரட்சியின் மீது அவர்கள் கொண்டிருந்த இடையறா மோகம் ஆகியவை ஏகாதிபத்திய மையங்களில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறன் பற்றி தொடர்ந்த அவநம்பிக்கைத்தன்மையுடன் வெளிப்பட்டன; இந்த அவநம்பிக்கைத்தனம் கூடுதலான வகையில் பிரான்சில் மே-ஜூன் மாதங்களில் ஏற்பட்ட எழுச்சியை ஸ்ராலிஸ்ட்டுக்கள் காட்டிக் கொடுத்த வகையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சமூக சக்திகளின் செல்வாக்கு மற்றும் அவற்றின் உளப்பாங்கு பண்டாவின் எழுத்துக்களில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டன. மாவோயிசம் மற்றும் வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணியின் ஸ்ராலினிச தலைமை பற்றி அவர் சீரிய உயர் சிந்தனையை கொண்டிருந்தது, மேலும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை "இரண்டு கட்ட" தத்துவத்தால் பதிலீடு செய்வதற்கான அவருடைய முயற்சிகள் பண்டாவின் தற்போதைய நிலைப்பாடு செய்வதை தெளிவாக்கின; உண்மையில் நீண்டகாலமாக அபிவிருத்தி கண்ட வேலைத்திட்டரீதியான முரண்பாடுகளில் இருந்து வேலைசெய்வதை வெளிப்படுத்துகின்றது.

பண்டாவின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ளல் என்பது அவர் குட்டி முதலாளித்துவ அழுத்தங்களுக்கு பாதிக்கப்படும் அவரது பலவீனத்தை விளக்குகிறது. பண்டாவின் வளர்ச்சி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்று எந்த விதத்திலும் குறிக்காமல், பின்னோக்கி பார்க்கும்போது, 20வயது இளைஞராக 1950ல் அவர் பிரிட்டனுக்கு வருவதற்கு முன்பு போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியில் (இலங்கையில்) பெற்ற ஆரம்ப பயிற்சி இருந்த போதிலும், ஒருவேளை அதனாலேயே என்றும் கூறலாம், பண்டா "ஏகாதிபத்திய எதிர்ப்பு" தேசிய வாதத்தின் எஞ்சிய பகுதியுடன் முற்றிலும் முறித்துக் கொண்டிருக்கவில்லை. பண்டாவின் பல ஆண்டுகள் எழுத்துக்கள் மற்றும் உரைகளை ஆராய்வது காட்டுவது போல், அவருடைய வலிமைகள் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்திக் கண்டிக்கும்போது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன. ஆனால் பின்தங்கிய நாடுகளுக்குள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பணிகளை விரிவாக்கம் செய்யுமாறு அழைப்புவிடப்பட்டால், வர்க்க நிலைப்பாடுகளில் வேர்கொண்டுள்ள பண்டாவின் தத்துவார்த்த பலவீனம் முன்னணிக்கு வரும்

நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய அவருடைய ஆய்வுக் கட்டுரையான "நாம் காக்கும் மரபியம்" என்பதில், டேவிட் நோர்த் ஏற்கனவே பண்டாவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் SLL வளர்த்திருந்த அரசியல் நிலைப்பாடுகளை 1960 களின் கடைசியில் அது அரேபிய முதலாளித்துவம் மற்றும் சீன அதிகாரத்துவத்துடனான தொடர்புகளுடன் சித்தரித்து எழுதியுள்ளார். ஜூலை 8, 1967 இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் SLL ஏற்கனவே அரேபிய தொழிலாளர்களிடம் தங்களது சுயாதீனத்தை முதலாளித்துவத்திடம் பணிந்து கைவிட்டுவிட பின்வருமாறு கூறியிருந்தது:

"பாட்டாளி வர்க்கம் தலைமைக்கு ஆர்வத்துடன் விருப்பம்கொள்வதற்கு முன்பு, அது தொடர்ச்சியாக மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தேசிய புரட்சியின் கோரிக்கைகளை, குறிப்பாக, அரேபிய தேசத்தின் முழுச் சுதந்திரம் மற்றும் ஐக்கியத்திற்கான கோரிக்கைக்கு மிகத்தெளிவான ஆதரவு கொடுக்க வேண்டும்.

"அவ்வப்பொழுது நாசர் அல்லது அரெப் (Aref) அல்லது ஹுசைன் இக்கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதன் காரணமாக அதைச் செய்ய மறுப்பது, மார்க்சிச இயக்கத்தை குறுங்குழுவாத தனிமைப்படலில் சிறைப்பட வைப்பதாக இருக்கும்."

இங்கு முதல் தடவையாக ஒரு சான்று வடிவத்தில் நாம் SLL தேசிய முதலாளித்துவத்தில் இருந்து "தனிமைப்படல்" பற்றிய தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியிருப்பதை காண்கிறோம். இது அரேபிய தேசத்தை பல்வேறு அரசுகளாக பிரித்துவைத்துள்ள, இவ்வாறு தொழிலாளர்கள், விவசாய வெகுஜனத்திற்கு இடையே ஐக்கியமின்மையை நீண்டகாலமாய் பேணிக்கொண்டு, மற்றைய பகுதிகளின் இழப்பில் ஒரு பகுதி ஏகாதிபத்தியத்துடன் பேரங்கள் செய்யும் வகையில், தங்கள் சலுகைகளை பாதுகாத்துக் கொள்கின்ற, அரேபிய முதலாளித்துவ வர்க்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் முழு சரணாகதி ஆகும்: அரேபிய தேசத்தின் "முழுச் சுதந்திரம்" பற்றி, எந்தவிதத்தில் அது ஏகாதிபத்தியத்துடன் பிணைந்திருக்கிறது என்பதை பற்றிக் கூறாமல் பேசுதல் என்பது, முதலாளித்துவ அரேபிய தலைவர்களின் போலி ஏகாதிபத்திய-எதிர்ப்பு வார்த்தை ஜாலத்திற்கு வாலாக இழுபடுவதை நியாயப்படுத்தும் நயமற்ற சொற்புரட்டுவாதத்தை கூட்டுகிறது.

பெப்ருவரி 1968 Fourth International இதழுக்காக "வியட்நாமிய புரட்சியும் நான்காம் அகிலமும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில், பண்டா பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு குட்டி முதலாளித்துவ கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வாதிடுகிறார்.

"இரு தசாப்தகால பெரும் வீரத் தியாகங்கள் மற்றும் ஈவிரக்கமற்ற போராட்டங்களுக்கு பின்னர், ஹோ சி மின்னினினால் வழிநடத்தப்படும் வியட்நாமிய மக்கள் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச புரட்சியின் மிகச்சிறப்பான முக்கிய வெற்றிகளில் ஒன்று என உறுதிமொழி கொடுக்கக்கூடிய நுழைவாயிலில் நிற்கின்றனர்.

"இது அக்டோபர் புரட்சியினால் உந்துதல் பெற்ற வறிய விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியினால் வழிநடத்தப்பட்ட, ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒரு மக்களின் நீடித்த போரின் வியக்கத்தக்க சக்தி மற்றும் மீளும் திறன் ஆகியவற்றை விளக்கிக் காட்டுகிறது. வியட்நாமிய அனுபவத்தின் அடிப்படையில், ஹோ சி மின் இன்னும் மற்ற தலைவர்கள் வியட்நாமிற்குள்ளும், வியட்நாமிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயும் இருக்கும் முதன்மை முரண்பாட்டையும் இரண்டாம்நிலை முரண்பாட்டையும் பகுப்பாய முடியாமல் போய், அந்த அடிப்படையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டாதிருந்தால், தனிப்பட்ட கெரில்லாக்களின் துணிவு மற்றும் துன்பங்களை தாங்கிக்கொள்ளும் தன்மையுடன் சேர்ந்து துப்பாக்கிகள் அர்த்தமற்றுப் போயிருந்திருக்கும். லெனின் ஒரு முறை எழுதியது போல், ஒரு புரட்சிகர தத்துவம் இல்லாவிட்டால், ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது.

"ஒரு புரட்சிகரக் கட்சி பற்றிய சிந்தனை ஹோ சி மின்னுடைய உருவாக்கம் அல்ல. லெனினுடைய போல்ஷிவிக் கட்சி ஸ்ராலினால் அச்சுமூட்டுகின்றவகையில் மிகவும் சிதைக்கப்பட்ட பின் காட்டிய உதாரணத்தில் இருந்து பெறப்பட்டதாகும். "நீடித்த போர்" என்ற தத்துவம் ஜெனரல் ஜியாப்பின் பிரத்தியேகமான பங்களிப்பு அல்ல. அதுவும் ஒரு சில மாறுதல்களுக்கு பின்னர், மாவோ சே துங்கின் படைப்பு மற்றும் சியாங் கேய் ஷேக் மற்றும் ஜப்பானியர்களுடன் சீன செஞ்சேனை போராடியதில் இருந்து பெற்ற அனுபவத்தில் இருந்து பெறப்பட்டதாகும்."

இந்த தலையங்கம் வெளியானபோது அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இன்னும் இல்லாவிடினும், SLL தலைவர்களிடம் மாவோவிசம் மற்றும் வியட்நாம் தலைமை பற்றிய அவர்களுடைய புகழுந்துரைத்தல் ஆசியாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தவறாக வழிநடத்தும் என்று தெரிவித்தது. "அதிகாரத்திற்கு வருவதற்கான மூலோபாயத்தை" அடையும்பொருட்டு "முதன்மை மற்றும் இரண்டாம் நிலை முரண்பாடுகளை" பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையின் படிப்பினையை பெற்றுக்கொண்ட முதலாவது ஆளாக பண்டா இருக்கவில்லை. இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைவராக இருந்த ரோஹண விஜேவீரா மற்றும் இந்தியாவின் நக்சல்பாரி எழுச்சியின் தலைவராக இருந்த சாரு மஜும்தார் ஆகியோரும் 1960 களின் கடைசிப் பகுதியில் இதே முடிவிற்குத்தான் வந்திருந்தனர்.

1964ல் LSSP யின் பெரும் காட்டிக் கொடுப்பிற்கு பின், இலங்கையில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சிக்கான அஸ்திவாரங்கள், பண்டாவால் முன்னெடுக்கப்பட்ட "தத்துவங்களுக்கு" எதிரான, குறிப்பாக ஆயுதமேந்திய போராட்டத்தை அவர் ஒரு மூலோபாயம் என்ற நிலைக்கு உயர்த்திய அவரது முயற்சிகள் மற்றும் ஜனரஞ்சகவாதம் பற்றிய அவரது புகழ்ச்சி இவற்றுக்கு எதிரான ஒரு நனவான போராட்டம் இல்லாமல் இடப்பட்டிருக்க முடியாது. 1964 காட்டிக் கொடுப்பிற்கு பின்னர் இலங்கையில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள், மக்கள் விடுதலை முன்னணி (JVP) என அழைக்கப்பட்ட ஒரு குட்டி முதலாளித்துவ போக்கிற்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியதாக இருந்தது. பண்டாவின் "தத்துவங்கள்" புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் ட்ரொட்ஸ்கிசத்திற்கான நியாயபூர்வமான பங்களிப்பு என்று ஏற்கப்பட்டிருந்தால், நீண்டகாலத்திற்கு முன்பே, ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்காக கரைந்து போயிருக்கும். பண்டா ஒரு மத்தியதர வர்க்க தீவிரப்போக்கிற்கு சரணடைய வாதிட்டுக் கொண்டிருக்கையில், மக்கள் விடுதலை முன்னணி பற்றிய பகுப்பாய்வில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாக பண்டா முன்னெடுத்துக் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு ஆணித்தரமாக எதிர்ப்பை அறிவித்தது:

"இந்த நாடுகளில் "ஆயுதமேந்திய போராட்டம்" அல்லது "சமாதானப் பாதையில்" என்று மிகவும் எளிதாக்கி காட்டப்படும் வடிவத்தில் புரட்சிகர தலைமைப் பிரச்சினையை எழுப்புவது உண்மையில் குட்டி முதலாளித்துவ திருத்தல்வாதிகள் அத்தகைய புரட்சிகரத் தலைமையை கட்டமைப்பதில் உள்ள உண்மையான பிரச்சினைகளை தவிர்க்க முற்படும் முயற்சிகளைத்தான் வெளிப்படுத்துகிறது.

"சீனப்புரட்சியினாலும், மாவோ சேதுங்கின் பணியினாலும் உந்தப்பெற்றுள்ளதாக கூறிக் கொள்ளுபவர்கள் புரட்சி பற்றிய முழுப் பிரச்சினையையும் "நீடித்த போர்" அல்லது வேறுவகையான ஆயுதமேந்திய போராட்டம் என்ற தன்மைக்கு குறைக்க முற்படுகின்றனர். ஆயினும்கூட இந்த முயற்சிகள் மார்க்சிசத்துடன் எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

"புரட்சி பற்றிய வினா வர்க்கங்களின் பங்கு மற்றும் அவற்றிற்கு இடையே இருக்கும் உறவுகள் பற்றிய உண்மையான புறநிலை மதிப்பீடு இல்லாமல் எழுப்பப்பட முடியாது. புரட்சியை ஒரு வெறும் ஆயுதமேந்திய போராட்டம் என்று குறைக்க முற்படுபவர்கள் மிக அடிப்படையான கோட்பாட்டுரீதியான பிரச்சினைகளை தவிர்க்க முற்படுகின்றனர்; அதாவது, எந்த வர்க்கம் தலைமைப் பங்கை ஆற்றும் திறனை அதிகமாகக் கொண்டுள்ளது? அது மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கத்துடன் எந்த விதமான கூட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்? இந்தக் கூட்டு எந்தக் கொள்கைகைளை அடிப்படையாக  கொண்டிருக்க வேண்டும்?

" 'ஆயுதமேந்திய போராட்டம் ஒரு மூலோபாயமாக' அல்லது 'நாட்டுப் புறத்தில் இருந்து நகரத்திற்கு புரட்சியை பரப்புதல்' என்ற கோட்பாடுகள் 1871 பாரிஸ் கம்யூன் காலத்தில் இருந்து தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் அனுபவங்களை ஆய்வு செய்வதற்கு அல்லது உள்வாங்குவதற்கு திராணியற்றவை ஆகும். தொழிலாள வர்க்கம் அமைதியான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற மார்க்சிச வலியுறுத்தல் ஆயுதங்களால் மட்டும் தான் வெற்றி உறுதிப்படுத்தப்படுகிறது என்ற கருத்தாய்வுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. பல நேரங்களிலும் ஆயுதங்களை ஏந்தியும்கூட தோல்வியை எதிர் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் பற்றி சிறிதேனும் அனுபவம் உடைவர்கள் எவரும் அத்தகைய தத்துவங்களை முன்வைக்க மாட்டார்கள்.

"1936-39 உள்நாட்டுப் போரின்போது ஸ்பானிய பாட்டாளி வர்க்கம் ஆயுதப் போராட்ட பாதையில் நுழைந்த பின்னரும் கூட பிராங்கோவின் பாசிசப் படைகளின் கைகளில் தோல்வியை காணவில்லையா? 1927ல் சீனத் தொழிலாளர்கள் தோல்வியுற்றது அது ஆயுதம் ஏந்தாததன் காரணத்தால்தான் என்று கூறமுடியுமா? அதேபோல், ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் போருக்கு பிந்தைய புரட்சிகர அலை ஏற்பட்டபோது தொழிலாளர்கள், முதலாளித்துவ விரோதியை கைகளில் ஆயுதங்களுடன் சந்திக்கவில்லையா? மத்திய கிழக்கில் ஆயுதமில்லாததுதான் முழு கெரில்லா இயக்கத்தையும் இன்று பேரழிவால் அச்சுறுத்துகிறதா? தொழிலாளர்களின் பகுதிகள் ஆயுதமேந்திய போதிலும்கூட, தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையினர் முதலாளித்துவத்திடம் இருந்து முற்றிலும் சுயாதீனம் அடையத்தவறியதுதான் முதலாளித்துவம் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்ததற்குக் காரணம் ஆகும்.

"ஸ்ராலினிச, வர்க்க சமரச மற்றும் சீர்திருத்தவாத தலைமைகள் கிரேக்கத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் அல்லது மத்திய கிழக்கில் இன்று ஆயுதமேந்திய இயக்கங்களின் முழுத் தலைமையையும் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சென்றாலும் கூட அது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணியச்செய்வதற்குத்தான் ஆகும், அத்தலைமைகளில் இருந்து முழு சுதந்திரத்தை வெல்வதற்கான தங்களின் போராட்டத்தில் தொழிலாளர்களின் முழுத்தலைமுறையினது கஷ்டங்களையும் புறக்கணிப்பவர்கள் மகத்தான தியாகத்தின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களை பற்றி தங்களது அவமதிப்பை வெளிப்படுத்துகின்றனர்.....

"மேற்கூறிய விதத்தில் வினாவை எழுப்பியவர்களின் வழிவகையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டில், தலைமைப் பிரச்சினை மற்றும் புரட்சியின் வேலைத்திட்டம் என்பவை பற்றி இந்த எழுத்தில் எழுப்பப்படுகிறது. இந்த தற்போதைய எழுத்தில் மேற்கூறிய பிரச்சினைகளை போராட்டங்களில் பிணைந்துள்ள வர்க்கங்களின் புறநிலை பங்கு மற்றும் அவற்றின் இடைத் தொடர்புகளில்  பற்றிய பகுப்பாய்வின் மூலம் அணுகுகிறது. பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் பணி முதலாளித்துவ வர்க்கத்தின் முற்போக்கு பகுதி என்று கூறப்படுவதுடன் கூட்டிற்கு மாறாக விவசாயிகளுடன் ஒரு புரட்சிகரக் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டு என்பது தொழிலாள வர்க்கம், விவசாயிகளுடன் இணைந்துவிடுவது என்ற பொருளைத் தராது என்பதும் இங்கும் சுட்டிக் காட்டப்பட வேண்டும்." (Keerthi Balasuriya, The Politics and Class Nature of the JVP December 1970, Preface)

இக்காலக்கட்டத்தில், ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமையினால் நிரந்தரப் புரட்சி தத்துவம் பற்றிய ஒப்பீட்டளவிலான தத்துவார்த்த பாதுகாப்பு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. வியட்நாம் மற்றும் சீனா பற்றி பண்டாவின் ஆபத்து நிறைந்த திருத்தங்கள், ஹீலியால் அவை தனிப்பட்ட பழக்கவழக்கம் தொடர்பான குணாம்சங்களுக்கு சற்று அதிகமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஹீலி அதிகரித்த வகையில் 1960களின் பிற்பகுதியில் கட்சியின் வளர்ச்சியால் எழுந்த அமைப்புரீதியான பிரச்சினைகளில் ஆழ்ந்திருந்தார். திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமே அமைப்புரீதியான முன்னேற்றங்களுக்கு மூலகாரணமான கருத்தியல் உந்துதளம் என்று ஒருகாலத்தில் கருதியிருந்த ஹீலி, இத்தகைய தத்துவார்த்தப் போராட்டங்கள் நடைமுறைவேலையை திசை திருப்புபவை மற்றும் ஆபத்தில் ஆழ்த்துபவை என்று மேலும் மேலும் கண்டார். ஹீலியை பொறுத்த வரையில், அதை ஒரு பிரச்சனைக்குரிய விடயமாக்காதவரையிலும் மற்றும் கட்சியின் அன்றாட நடவடிக்கையை சீர்குலைக்காதவரையிலும் மாவோவை பற்றி பண்டா என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் என்று கருதினார்.

இத்தகைய திருத்தல்வாதத்துடனான மோசமான (Faustian) பேரம் இறுதியில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுத்தது. சிறிது காலத்திற்கு அடிப்படை வேலைத்திட்ட பிரச்சினைகள் மீதான SLLன் பலவீனம் 1968ல் மே-ஜூன் காலத்தில் பிரான்சில் நடந்த நிகழ்வுகளுக்கு பின்னர் அது கண்ட அமைப்புரீதியான முன்னேற்றத்தில் ஓரளவு மறைக்கப்பட்டுவிட்டது; குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்களின் ஏராளமான பிரிவினர் அந்நிகழ்வுகளினால் தீவிரமயப்படுத்தப்பட்டு பிரிட்டிஷ் பகுதிக்கு பல புதிய ஆட்சேர்ப்புக்களுக்கு வழிவகுத்தன. ஆனால் கட்சிக்குள் குட்டி முதலாளித்துவ கூறுபாடுகள் நிறைய வந்த சூழ்நிலையில், SLL வர்க்க நிலைப்பாட்டில் ஏற்பட்ட சரிவு, OCI உடன் அது கொண்ட திடீரென்ற உடைவினால் பெருகியதுடன், இந்த பிளவின் அரசியல், தத்துவார்த்த படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதில் அது தோல்வியுற்றதால் அதன் தலைமையை இன்னும் கூடுதலான வகையில் விரோதப் போக்குடைய சமூக சக்திகளின் வர்க்க அழுத்தத்திற்கு உட்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் தாக்கம் 1971-72ல் பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தின்போது அதனது ஆட்சி நேரடியாக தொழிலாளர் மற்றும் விவசாயிகளால் நேரடியாக சவால் செய்யப்பட்ட ஒரு நிலைமையில் இந்திய துணைக் கண்டத்தில் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு முக்கிய தூணாக இருந்த இந்திய முதலாளித்துவத்திற்கு முற்றிலும் சரணடைந்ததில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது.

பங்களாதேஷ் போர் பற்றி புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் அறிக்கையில் விளக்கப்பட்டவாறு, (பக்கங்கள் 37-41ஐ பார்க்கவும்), இந்த விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியும், வெகுஜனங்களை மத-வகுப்புவாத வழிகளில் பிளவுபடுத்தி வைக்கும் பொருட்டு இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றிற்கு இடையிலான ஒரு சதித் திட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய அரசின் உடைவும் பாக்கிஸ்தானிய ஆளும் வர்க்கத்திற்கு மட்டும் ஒரு சவாலாக அமையவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஏகாதிபத்தியம் தூண்டிவிட்ட பிரிவினையை ஆதரவு கொடுத்து தக்க வைத்துக் கொண்ட இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஒரு நேரடிச் சவால் ஆகும்.

1947ல் இருந்து இந்தியாவில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் மூலோபாய படிப்பினைகளை மறுத்தும், பிரிவினைக் காலத்தில் நான்காம் அகிலத்தால் முன்மொழியப்பட்ட முன்னோக்கையும் நிராகரித்தும், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் இந்தியாவை தொடர்ச்சியாக பிளவுபடுத்தி வைத்திருப்பதற்காக ஒருவரை ஒருவர் பரஸ்பர குற்றம்சாட்டிக்கொள்ளும் இந்து மற்றும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயக புரட்சியை நிறைவேற்ற மக்கள் மாபெரும் நீண்ட அடிவைக்க முற்பட்ட நிலையில் திவாலாகிவிட்ட பிற்போக்கு இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு இந்திய தேசிய ஐக்கியத்தை அடையும் தகமையை வழங்கினர். SLL தலைவர்கள் அந்தப் பிரிவினையை பேணுவதற்காக இந்திரா காந்தி நடத்திய போரை இந்தியாவை ஜனநாயகமாக்கும் ஒரு துணிவுமிக்க முயற்சி என ஆதரிக்கும் அளவிற்கும் சென்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெயரில் (எவரையும் கலந்தாலோசிக்காமல்) வெளியிடப்பட்ட SLLன் முதல் அறிக்கை (பக்கங்கள் 36-37 காணவும்), இரு ஆளும் வர்க்கங்களின் இராணுவ நடவடிக்கைகளையும் எதிர்த்து, சுயாதீனமாக தாமே அணிதிரள்வதன் மூலம் வங்க தேசத்தின் சுயநிர்ணயத்திற்கு ஆதரவு தருமாறு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் தொழிலாள வர்க்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இந்து முதலாளித்துவ வர்க்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவையும் கொடுத்தது.

புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தால் எதிர்க்கப்பட்ட நிலையில், ஏகாதிபத்தியத்தின் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல்களை சுட்டிக் காட்டியதன் மூலம், பண்டா இந்தியாவில் இருக்கும் தேசிய முதலாளித்துவத்தின் "முற்போக்கு", மற்றும் "புரட்சிகர" பாத்திரத்தைப் பற்றி வெளிப்படையாக புகழ்ந்து அறிவித்தார். (பார்க்க; பக்கம் 48-51). முக்தி பாஹினியை ஆயுதம் களைய வைக்கவும் பாக்கிஸ்தானுக்கு எதிராக போருக்குச் செல்வதற்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் பங்களாதேஷ் மீது படையெடுக்க பண்டாவால் வழங்கப்பட்ட அற்பமான சாக்குப்போக்குகள், முன்னேறிய தொழிலாளர்களின் அறிவுஜீவிதத்தன்மைக்கு ஒரு அவமதிப்பு ஆகும். இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய தூணாக இருக்கும் டாட்டாக்கள் மற்றும் பிர்லாக்களின் பேராசைகளை திருப்திப்படுத்த அவசரமாக காட்டிய அவரது பாசாங்கு புகழுரையில், மைக்கல் பண்டா இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்காளான அப்பாவி பலிக்கடா என்று மாற்றினார்.

இந்த வாதம் கட்டி எழுப்பப்பட்ட முழு தத்துவார்த்த கருத்துப்பாடும் முற்றிலும் உள்ளார்ந்து அழுகிப்போயிருந்தது மட்டும் இல்லாமல், இந்திய உபகண்டத்தில் இருக்கும் வர்க்க சக்திகளின் உறவுகள் பற்றிய பண்டாவின் முன்வைப்பும் முற்றிலும் தவறானவை ஆகும். முதலில் ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் வர்க்க முரண்பாடுகளையும் மீறி நிற்கிறது என்று கூறுவது மார்க்சிசத்தை கேலிக்கூத்தாக்குவது ஆகும். 1927ல் சீனாவில் ஏகாதிபத்திய ஆதிக்கம் பற்றி ட்ரொட்ஸ்கி கூறியுள்ளது இந்தியாவில் இருக்கும் நிலைமைக்கு இன்னும் கூடுதலான வகையில் பொருந்தும்:

"சீனாவில் இருக்கும் வர்க்கங்கள் அனைத்தையும் வெளியில் இருந்து ஏகாதிபத்தியம் இயந்திரமுறையில் இணைக்கிறது என்று நினைப்பது மிகப் பெரிய தவறு ஆகும். அதுதான் சீன காடேட், டை சி டாவோவின் நிலைப்பாடு ஆகும், ஆனால் எந்தவிதத்திலும் எமது கருத்து அல்ல. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் அரசியல் வேறுபாட்டை வலுப்படுத்துகிறதே அன்றி, வலுவிழக்கச் செய்வதில்லை. ஏகாதிபத்தியம் சீனாவில் இருக்கும் உள் உறவுகளில் மிகவும் ஆற்றல் படைத்த சக்தி ஆகும். இந்தச் சக்தியின் முக்கிய ஆதாரம் யாங்சி கியாங் நதியில் உள்ள போர்க்கப்பல்கள் அல்ல; அவை துணைக் கருவிகள்தாம்; இந்த முக்கிய ஆதாரம் வெளிநாட்டு மூலதனம் மற்றும் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே இருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் பிணைப்புக்களில் உள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது துல்லியமாக அதன் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியின் காரணமாக அது சீன மக்களின் அடிஆழத்தில் இருந்து சக்திகளின் பலமான கடும் முயற்சியை கோருகிறது. உண்மையில் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுப்புதல் என்பது அவர்களுடைய அடிப்படை மற்றும் ஆழ்ந்த வாழ்க்கை நலன்களை நாட்டின் விடுதலையோடு இணைப்பதின் மூலம்தான் முடியும்." (Leon Trotsky on China, Pathfvinder, p.161)

இரண்டாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் ஏகாதிபத்தியத்தின் ஒரே கருவி பாக்கிஸ்தான் என்ற பண்டாவின் தன்னிச்சையான, அறிவற்ற கூற்று, பிரிவினை காலத்தில் இருந்து வளர்ச்சியுற்ற வர்க்க உறவுகளை முற்றிலும் திரித்தல் ஆகும். வரலாற்றின் அடிப்படை அறிவின் அடிப்படையில் பண்டாவின் கூற்றை மறுப்பது ஒன்றும் கடினம் இல்லை என்றாலும், பிரிவினைக்கு பின்னர், அப்போது இந்தியாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக இருந்த போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வு பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகும்; SLL எந்த அளவிற்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாரம்பரிய கண்ணோட்டத்தில் இருந்து பின்வாங்கியிருந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அது போதுமானது.

"இந்திய பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் என்று எளிதாக கூறப்பட்டுவிடுவது  அடிப்படையில் லீக் அரசியலால் மட்டும் விளைந்தது அல்ல, காங்கிரசின் அரசியலாலும் வந்தது ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியம் தொடர்பான காங்கிரசின் அரசியல், போராட்ட அரசியலாக இல்லாமல் உடன்பாட்டு அரசியலாக இருந்தது. உடன்பாட்டு அரசியல், தவிர்க்கவியலாதவாறு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் முன்முயற்சிக்கு இடம் கொடுத்த காரணத்தினாலும், பிரிவினை அரசியலுக்கு துணைநின்றது.

"இந்தியாவின் பிரிவினை என்பது, கிளர்ந்தெழுந்த மக்களின் தலைகளுக்கு மேல் மற்றும் அவர்களுக்கு எதிராக இந்திய முதலாளித்துவ வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கொண்ட சரணாகதி உடன்பாட்டின் விளைவு ஆகும். பாக்கிஸ்தான் என்பது வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ கருச்சிதைவு செய்ததன் விளைவு ஆகும்.

"பிரிவினையின் பெரும் துன்பியல் குறிப்பாக அதைத் தோற்றுவித்தவர்களின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து ஊற்றெடுக்கிறது. ஒரு புறத்தில் இந்தியா என்னும் உயிருள்ள உடம்பையும் மற்றும் இரண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் "தேசிய இனங்களை" (பஞ்சாப், வங்க தேசிய இனங்கள்) அச்சமூட்டும் வகையில் வெட்டியது, இது ஒரு புறத்தில் வகுப்புவாத பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவும் மறுபுறத்தில் சுதந்திரத்திற்கு பாதை திறந்துவிடும் வழியாகவும் முன்வைக்கப்பட்டது. இரண்டு வாதங்களுமே தவறு என்று நிரூபணம் ஆயின.

"ஒருவிதத்தில் பிரிவினை என்பது மக்களை ஏகாதிபத்திய முறையில் அடிமைப்படுத்தும் சங்கிலிகளை காய்ச்சி அடித்து மீள ஒன்றிணைக்கும் வழிமுறை மட்டுமே என்பது நிரூபணம் ஆயிற்று. மற்றொரு விதத்தில், இது இரண்டு நாடுகளையும் உள்நாட்டு கொந்தளிப்புக்களிலிருந்து திசைதிருப்பி உள்நாட்டு வகுப்புவாத உணர்வில் வழிப்படுத்தும் ஒரே வழிமுறையாக பரஸ்பர யுத்தத்தை சிந்திப்பதற்கு இரு அரசுகளையும் வசியப்படுத்தும் வழிவகை என நிரூபணம் ஆயிற்று. இப்போர் இற்கிடையில், இன்னும் வரவிருக்கிறது (உண்மையில் இது காஷ்மீரில் இருந்தும் ஜுனாகாத்தில் இருந்தும் ஏற்கனவே வரவில்லை என்றாலும்) ஆனால் சாதாரண மக்களுடைய கொந்தளிப்புக்கள் இதற்கிடையில் பேரழிவு தரக்கூடிய வகையில் வந்துள்ளது. ஆம், அந்த நடவடிக்கை இல்லாமல் முற்றிலும் கரைந்திருக்க கூடிய வகையில் இருந்த வகுப்புவாதத்தை இந்தியப் பிரிவினை இன்னும் தீவிரமாக்கவே வழிவகுத்தது. வகுப்புவாதத்தை இரு தனித்தனி அரசுகளாக கட்டமைப்பது என்ற முயற்சி ஒவ்வொரு அரசிலும் வகுப்புவாதத்தை வலிமைப்படுத்தவே செய்திருக்கிறது. ஒற்றை வகுப்புவாத அரசு என்பது இப்பொழுது வகுப்புவாதப் பிரிவினையின் பைத்தியக்காரத்தனமான தர்க்கத்தின் தேசிய முடிவு என்ற பார்வையாக இருக்கிறது...

"இந்திய யூனியனுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே இருக்கும் உறவுகள் மேற்கு வங்காளிகள் மற்றும் கிழக்கு வங்காளிகள் இடையிலான உறவுகளின் நிலையைவிட அதிகமான வகையில் மேற்கு வங்கத்திற்கும் கிழக்கு வங்கத்திற்கும் இடையே இருக்கும் உறவுகளை ஆளுமைசெய்யும் என்பது வெளிப்படை. ஆனால் வங்க ஐக்கியத்துக்கான விழைவு ஆழமானது, வரலாற்றளவில் பழமையானது, ஒரு நீண்ட காலத்தில் கனியாமல் போகாது. ஏனெனில் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு பிரிவினையை எதிர்த்துப் போரிட்டவர்கள், வெறும் வகுப்புவாத உணர்விலிருந்து மற்றொரு பிரிவினையை நிரந்தரமாக செய்ய நூற்றாண்டின் நடுப்பகுதியில் அனுமதிப்பார்களா என்பது கேள்விக்கு உரியதுதான். எனவே நீண்டகால அடிப்படையில் தேசிய ஐக்கியத்துக்கான விழைவானது தற்போதைய வகுப்புவாத  பிளவுகளை விட விஞ்சி நிற்கும்.

''உண்மையான பணி, பாக்கிஸ்தானை வெற்றி மூலம் இந¢திய யூனியனுக்குள் மீள உள்ளிளுத்துக் கொள்வதனூடாக சோவினிச இயக்கத்திற்கு ஊக்கமளிபதனூடாக ''தேசிய'' இயக்கம் பிரிவினையை வெற்றிகொள்வதை தடுப்பதுமாகும். (பாக்கிஸ்தான் அவ்வாறு செய்தலும் தடுக்கப்பட வேண்டும்.) பிரிவினைக் கோட்டிற்கு இரு புறத்திலும் உள்ள உண்மையான, அதாவது, சுயவிருப்பத்துடன் ஒன்றிணைதலுக்கு இயங்குபவர்கள், இந்திய யூனியன் மற்றும் பாக்கிஸ்தானை சிக்கலுக்கு உட்படுத்தாமல் முன்னேற்றத்திற்கான ஒரு பாதையை கண்டாக வேண்டும்.

"இது எவ்வாறு செய்யப்பட வேண்டும்? தெளிவாகவே எல்லையில் இரு மருங்கிலும் உள்ள பிற்போக்கு விரிவாக்கவாதிகளுடன் கூட்டுச்சேர்வதன் மூலம் அல்ல. மாறாக, இவர்கள் உறுதியாக எதிர்த்துப் போராடப்பட வேண்டியவர்கள். பணி என்பது வங்கம் (மாநிலம்) இந்திய யூனியன் அல்லது பாக்கிஸ்தானுடன் கட்டயமாக மறுஒன்றிணைப்பு செய்வதல்ல, மாறாக வங்காளி "தேசிய இனம்" சுயநிர்ணயத்திற்கான அதன் உரிமையின் அடிப்படையில் தானாக முன்வந்து ஐக்கியப்படுவதாகும்.

"இதுதொடர்பாக மற்றொரு உண்மையை உள்ளீர்த்துக் கொள்ளுவதும் அவசியமாகும். சுயநிர்ணயத்திற்கான அதன்  உரிமையின் அடிப்படையில் வங்காளி தேசிய இனத்தின் மறுஐக்கியம் என்பது, இந்திய யூனியன் மற்றும் பாக்கிஸ்தான் இரண்டிலும் சமூகப் புரட்சி மூலம்தான் அடையப்பட முடியும். வேறு எந்த சூழ்நிலைகளிலும் வங்காளி "தேசம்" அந்த உரிமையை நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை பெற முடியாது. ஆனால் இந்திய யூனியனிலும் பாக்கிஸ்தானிலும் சமூகப் புரட்சி என்பது ஒரு சோசலிச அடிப்படையில் இந்திய மறுஐக்கியம் என்பதையே அர்த்தப்படுத்தும் எனவே முன்னோக்கு என்பது: சோவியத் இந்தியாவில், ஒரு சோவியத் வங்கம்! இந்த விதத்தில்தான் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர வேலைத்திட்டம் முற்போக்கான அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட வங்கம் (பஞ்சாப்பும்) ஒன்றுபட்ட இந்தியாவும் நிறைவேறுவதற்கு இட்டுச்செல்லும். முதலாளித்துவ வர்க்கம் பிற்போக்கான முறையில் நசுக்கி வைத்துள்ள அவற்றை, தொழிலாள வர்க்கம்தான் முற்போக்கான முறையில் ஐக்கியப்படுத்த முடியும். இதுதான் இக்காலகட்டத்தின் இயங்கியலாகும்." (Colvin R. de Silva, The Present Political Situation in India, 1948)

BLPI தலைவர்கள் தேசிய முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான சமரசத்தை ஒரு ஜனநாயக உடன்பாடு என்று ஏற்றுக்கொள்வதற்காக, பின்னர் இந்த முன்னோக்கை கைவிட்டனர், பண்டாவும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகப் புரட்சி மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு விட்டுக் கொடுக்கும் வகையில் பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்னோக்கை கைவிட்டார். ஜனவரி 27, 1972 அன்று பாலசூரியாவிற்கு எழுதிய கடிதத்தில், பண்டா ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் இருப்பினை எதிர்ப்பது குறித்து கேள்விக்குள்ளாக்கினார்:

"பிற்போக்கு இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்தியாவை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை (கிழக்கு பாக்கிஸ்தானை இணைத்தல் கூட), ஏகாதிபத்தியம் இந்தியாவை பாக்கிஸ்தான் போன்ற பிளவுண்டாக்கும் இயக்க கருவியினூடாக துண்டாடும் முயற்சியுடன் நாம் சமன்படுத்துகிறோமா?

இவ்வாறு SLL, சுயநிர்ணயத்திற்கான வங்காளிகளின் உரிமையை காட்டிக் கொடுப்பதின் மூலம் துணைக் கண்டத்தில் இந்து முதலாளித்துவ வர்க்கம் மற்றும் புதிய ஏகாதிபத்திய-உள்ளூர் முதலாளித்துவ வர்க்கம் கொண்டுவந்த ஒழுங்கின் அரசியல் முண்டுகோல்களாயிற்று. புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் கடிதங்களில் கொடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டன.

தொழிலாள வர்க்கம் மற்றும் அனைத்துலகக் குழுவின் பல பகுதிகளுக்கும் எதிராக தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான SLL மற்றும் பண்டாவின் தலையீடானது, 1970 களின் கடைசிப்பகுதி மற்றும் 1980 களின் முதல் பகுதிகளில் WRP தலைமையால் செய்யப்பட்ட காட்டிக் கொடுப்புக்களில்  பண்டாவால் முன்னெடுக்கப்பட்ட "பொது தத்துவங்கள்" மற்றும் ஸ்ராலினிசத்திற்கு அவருடைய அதிகரித்த ஆதரவு ஆகியவற்றை மிகத்தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன. 1972ல் பண்டாவின் தலையீடு எந்த விதத்திலும் ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடு என்று எடுத்துக் கொள்ள முடியாததாகும். அக்காலக்கட்டத்தில் பண்டா ஏற்கனவே சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் சாத்தியத்தை கைவிட்டு தேசிய முதலாளித்துவம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தழுவியிருந்தார்.

தன்னுடைய 1972ம் ஆண்டுக் கடிதத்தில், நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத்திட்டம் (Transitional Program) மாவோவாத அரசியலின் துரோக நிலைப்பாட்டை உட்சேர்த்துக் கொள்ளும் வகையில் திருத்தப்பட வேண்டும் என்றும் பண்டா முன்மொழிந்தார். அவர் பின்தங்கிய நாடுகளில் புரட்சிகரக் கட்சியின் புறப்பாட்டு புள்ளி, வர்க்கப் போராட்டம் என்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் ஏகாதிபத்தியத்திற்கும் காலனித்துவ முதலாளித்துவத்திற்கும் இடையே இருக்கும் புறநிலை முரண்பாடுகள் என்று வெளிப்படையாக முன்மொழிந்தார். இதன் பின்னர் இதுதான் சீனப் புரட்சியின் முக்கிய படிப்பினை என அறிவித்தார்.

சீனப் புரட்சி பற்றி தான் ஒரு வல்லுனர் என்று கூறிக்கொள்ளும் பண்டாவின் பாசாங்குத்தன கூற்றிற்கு விடையிறுப்பதற்கு கணிசமான இடம் தேவை; அதை நாம் பின்னர் கவனத்திற் கொள்ளுவோம். ஆனால் இங்கு மாவோவின் நிலைப்பாட்டிற்கான அஸ்திவாரம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை பாத்திரத்தை வெளிப்படையாக நிராகரித்தலாகும் என்பதை கூறினால் போதுமானது. 1927ல் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வியை மாவோ எதிர்கொண்ட விதம் பாட்டாளி வர்க்கத்திற்கு இவர் முதுகைக் காட்டி, நகர்புற பாட்டாளி வர்க்கத்தை திரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற புரட்சிகர மூலோபாயத்தை ஒரு நம்பிக்கையற்றது என நிராகரித்த, அவரே ஆதரவு கொடுத்திருந்த சந்தர்ப்பவாதக் கொள்கைகளினால் தோன்றியது ஆகும், (அதாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவ கோமின்டாங் நலன்களுக்கு அடிபணிய வைப்பதில் இருந்து வந்ததாகும்.) இத்தகைய தொழிலாள வர்க்கத்தின் மீது சோர்வுற்ற வகையிலான இகழ்வுணர்வும், அத்துடன் தொடர்ப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் எவ்விதமான சுயாதீன செயற்பாட்டை நிராகரித்தலும்தான், குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் எப்பொழுதும் மாவோவிசத்தின்பால் கொண்டுள்ள நீடித்த ஈர்ப்பின் இரகசியம் ஆகும்.

இந்த நிலைப்பாடுகள் SLL-WRP க்குள் சவாலுக்கு உட்படாமல் போயின என்ற உண்மை, புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் விமர்சனங்கள் அனைத்துலகக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற உண்மை 1971-72ல் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் தலைமை ஏற்கனவே ஒரு அழுகிய தன்னலக் குழுவாக மாறிவிட்டிருந்தது என்பதை நிரூபிப்பதுடன் அது "சோதனைக்கள அரசியல்" பாதையில் இறங்கி இருந்தது என்பதையும் காட்டுகிறது. ஜனவரி 1972ல் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், பிரிட்டிஷ் பகுதியின் செயல்பாடு "1961-63 காலத்தில் SWP க்கு எதிரான போராட்டத்தில் SLL தலைமையால் பெறப்பட்ட முக்கிய வெற்றிகள் அனைத்தையும் திருத்தும் திசையில் நகர விருப்பம் கொண்டிருக்கிறது" என்று வெளிப்படையாகக் கூறியது. (See Balasuriya's letter of January 11, 1972)

ஆனால் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் இந்த அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி அனைத்துலகக் குழுவில் ஒரு விவாதத்தை கட்டாயப்படுத்த முடியவில்லை. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் கொடுத்திருந்த ஆவணங்கள் அனைத்துலகக் குழுவின் பல பகுதிகளிடையே சுற்றறிக்கைக்கு விடப்படவில்லை என்பது மட்டும் இல்லை. பிரிட்டிஷ் தலைமையானது, வேலைத்திட்ட ரீதியிலான உறுதிப்பாடு என்பது ஒன்றும் மார்க்சிசத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தாது என்ற நிலைப்பாட்டையும் முன்னெடுத்தது. ஹீலி மற்றும் பண்டாவுடன் அவரை இருத்தி வைத்ததில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அவருக்கு பெரும் அநீதியை இழைத்துவிட்டதாக கிளீவ் சுலோட்டர் எதிர்ப்புக்களை கூறினாலும், சுலோட்டரின் தலையீடுகள்தாம் பண்டாவின் வெளிப்படையான அரசியல் திருத்தல்களுக்கு தேவையான "தத்துவார்த்த" மறைப்பைக் கொடுத்தன.

1972ம் ஆண்டு OCI யில் இருக்கும் திருத்தல்வாதிகளுக்கு விடையிறுப்பதாக காட்டும் வகையில் சுலோட்டர் எழுதினார்:

"இப்பொழுது இருக்கும் ட்ரொட்ஸ்கிச சக்திகள், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை, நெருக்கடியினால் விளைவிக்கப்பட்டிருக்கும் அரசியல் அபிவிருத்திக் காட்சிக்குள் சாதாரணமாக கொண்டுவருவதின் மூலம் புரட்சிகர கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர முடியுமா அல்லது சோசலிசம் கட்டமைக்கப்பட முடியமா? அல்லது வர்க்கப் போராட்டத்தின் மாறிவிட்ட யதார்த்தத்திற்குள் தத்துவத்திற்கான ஒரு நனவான போராட்டத்தை நடத்துவது தேவையில்லையா? (Trotskyism versus Revisionism, Vol.6, New Park Publications, p.226)

இவ்விதத்தில் பப்லோ-மண்டேலின் "புதிய உலக யதார்த்தம்" என்பதின் நிழலில், அரசியலில் சந்தேகத்திற்கு இடமான வகையிலான "வர்க்கப் போராட்டத்தின் மாற்றப்பட்டுவிட்ட யதார்த்தம்" என்பதின் ஆதரவுடன், ட்ரொட்ஸ்கிசத்தின் "வேலைத்திட்டத்திற்கு"  "தத்துவத்தை" எதிரிடையாக கொள்ளுவது, SLL-WRP ஆகியவற்றை எந்தவித வரலாற்று வேலைத்திட்ட (நடைமுறை) வழிகாட்டியும் இல்லாத நிலையில் தெரியாத நிலத்தில் அலைவதற்குரியதாய் சுலோட்டரின் போலி அரசியல் அனுமதி (பாஸ்போர்ட்) ஆக்கியுள்ளது. இதே எழுத்தில், மிகவும் தன்னிச்சைத்தனமாக சுலோட்டர், "இயங்கியல் சடவாதத்தை  அபிவிருத்தி செய்ய நனவாகப் போராடுவதன் மூலம் அனைத்துலகக் குழுவானது நான்காம் அகிலம் மற்றும் மார்க்சிசத்தின் உண்மையான தொடர்ச்சிக்காகப் போராடுகிறது" என்று கூறுகிறார். எனவே சுலோட்டரின் கருத்துப்படி, "ஒரு உண்மையான தொடர்ச்சியும்", "ஒரு போலியான தொடர்ச்சியும்" இருந்தன. புரட்சிகர இயக்கத்தின் முழு நடைமுறை அஸ்திவாரங்களை பற்றிக் கவலைப்படாத அளவிற்கு மட்டுமே, தொடர்ச்சியானது "உண்மையாக" மாறியது. இவ்வாறு சுலோட்டர் வலியுறுத்தும் இயங்கியலுக்கான போராட்டம் மட்டுமே நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை உள்ளடக்கியிருக்கின்றது என்பது ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அஸ்திவாரங்களில் இருந்து விளக்க முடியாத உடைவுக்கான மத்தியதர வர்க்க புத்திஜீவியின் நவீன நியாயப்படுத்தலாகும்.

இவ்விதத்தில், ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு WRP தலைவர்களின் போலி இயங்கியல் பகுப்பாய்வின் பாசாங்குத்தன முகமூடியைக் கிழித்து எறிவதும், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் என்ற ஓடுகாலி குழுவுடன் கொண்ட சமரசத்திற்கு இடங்கொடாத வேலைத்திட்ட மற்றும் அரசியல் வேறுபாடுகளை வெளிக் கொணர்தல் அவசியமாகிறது. வேலைத்திட்ட ரீதியான திருத்தல்களுக்கும் WRP தலைமையின் முற்றிலும் மார்க்சிச எதிர்ப்பு வழிமுறைக்கும் இடையே இருந்த தொடர்பை சுட்டிக் காட்டுவதில் 1982ல் வேர்க்கர்ஸ் லீக்கால் செய்யப்பட்ட தலையீட்டின் உறுதியான முக்கியத்துவம் அது தான்.

பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்ட மரபியத்தில் தங்களை உறுதியாக அடித்தளமிட்டுக் கொண்ட அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மைப் பகுதிகள், உலகக் கட்சியின் மீது WRP தலைமை சுமத்த முற்பட்ட ஸ்ராலினிச சார்பு நிலைப்பாட்டினால் தடம் புரண்டுவிடவில்லை. பெருகிய முறையில், இன்னும் கூடுதலாக WRP இன் அரசியல் நிலைப்பாட்டிற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை அமைத்த கொள்கைகளுக்கும் இடையே வளர்ந்து வந்த மற்றும் என்றுமில்லாது அதிகரித்த அளவில் வெளிப்படையான முரண்பாடு தவிர்க்க முடியாமல் 1982ல் ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமைக்கு எதிரான ஒரு கோட்பாடு அடிப்படையிலான அரசியல் போராட்டம் வெடிப்பதற்கு வழிவகுத்தது. சிறிது காலத்திற்கு WRP தலைவர்கள் முன்பு புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை செய்தது போல், தங்கள் அமைப்புரீதியான ''பலத்தை'' பயன்படுத்தி தற்காலிகமாக வேர்க்கர்ஸ் லீக்கை தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டாலும்கூட, அதன் விமர்சனங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளுக்குள்ளே சக்தி வாய்ந்த எதிர்வினையை விரைவில் வெளிப்படுத்தின. இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தனிமைப்படுத்தியது உறுதியாக முடிவிற்கு வந்தது; அவர்கள் WRP ன் திருத்தல்வாதத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். இலங்கை RCL, ஆஸ்திரேலிய SLL, ஜேர்மனிய BSA, மற்றும் WRP க்குள்ளே இருந்த அதற்கு எதிரான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் (மார்ச் 1986ல் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி என்று மறுசீரமைக்கப்பட்டது) அனைத்தும் வேர்க்கர்ஸ் லீக்கின் சகோதரத்துவ ஆதரவுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நடைமுறை வேலைத்திட்டங்களின் ஒரே மாதிரியான தன்மையை மீட்டன.

WRP உடன் பிளவு ஏற்பட்டு ஓராண்டு கடக்கப்பட்டுவிட்ட காலத்தில், அனைத்துலகக் குழு பிளவின் அனைத்து அரசியல் படிப்பினைகளையும் தத்துவார்த்த ரீதியாக உள்வாங்கும் போராட்டத்தை இடைவிடாமல் தொடர்ந்தது; அதுபோல் அதன் பகுதிகளுக்கும் அனைத்து வகையான மத்தியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதம் இவற்றிற்கு இடையே உள்ள பிளவை ஆழப்படுத்தியது. இந்தப் பணி பிளவிற்கு பின்னர் அக்டோபர் 1986ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையில் ஆதிக்கத்தை கொண்டிருந்தது. கூட்டத்தின் முதற் செயற்பாடே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் உடைத்துக் கொண்ட சக்திகள் அனைத்தின் வளர்ச்சியையும் ஆய்வு செய்வதாக இருந்தது. எனவே இந்த தொகுப்பு "அனைத்துலகக் குழுவிற்குள் பிளவு ஏற்பட்டு ஒரு ஆண்டு" என்ற கூற்றுடன் ஆரம்பிக்கிறது; அதுதான் இரண்டாம் நிறை பேரவையின் போது தயாரிக்கப்பட்ட முக்கிய ஆவணமாகும்.

அனைத்துக் கன்னைகளின் ஓடுகாலிகளின் வலதுபுற இயக்கம் எந்தத் தடையும் இல்லாமல் இந்தப் பகுப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின்னர் தங்கள் போக்கில் சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையில் இருந்த மை உலர்வதற்குள்ளாகவே, உதாரணமாக, கிரேக்க WRP ஐ சேர்ந்த சவாஸ் மைக்கேல் Papandreou வின் PASOK உடன் வெளிப்படையான தேர்தல் கூட்டுக்குள் நுழைந்து விட்டார் என்பதை நாங்கள் அறிந்தோம். WRP வேட்பாளர்கள் சில பகுதிகளில் முதலாளித்துவ வர்க்க வேட்பாளர்களுடன் இணைந்து போட்டியிட்டனர். மேலும் PASOK உடன் தன்னுடைய மக்கள் முன்னணியை வலுப்படுத்திக் கொள்ளும் நலன்களை கருத்திற்கொண்டு, கிரேக்க WRP தன்னுடைய தேர்தல் வேலைத்திட்டத்தில் கிரேக்கத்தில் இருந்து அமெரிக்கத் தளங்களை அகற்ற வேண்டும் என்ற அழைப்பை கைவிடுவதற்கும் உடன்பட்டது!

அந்த நிறை பேரவையில் இருந்து ஏனைய பல ஆவணங்களும் இந்தத் தொகுப்பில் மீளவெளியிடப்படுகின்றன; குறிப்பாக, இலங்கையில் அதன் பணிகள் மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை. (பார்க்க pp.20-23): தற்போதைய பாட்டாளி வர்க்கத்தின் தற்போதைய பணிகளுடன் நிரந்தர புரட்சி தத்துவத்தை செழுமைப்படுத்தியிருக்கும் தத்துவார்த்த முன்னெடுப்புக்களை வெளிப்படுத்துகிறது.

இந்த தொகுப்பில் இருக்கும் மற்ற ஆவணங்களை படிக்க வாசகர் செல்லுமுன் ஒரு இறுதிக் கருத்து. அனைத்துலகக் குழு, உடைவிற்கு பின்னர் வெளியிட்ட Fourth Internaitonal இதழின் முதல் பதிப்பில் "WRP ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்தது எப்படி 1973-85) என்ற ஒரு 120 பக்கப் பகுப்பாய்வை வெளியிட்டு கிட்டத்தட்ட மூன்று காலாண்டு கடந்துவிட்டது. இந்தப் பகுப்பாய்வை சவாலுக்கு உட்படுத்த அல்லது மறுக்க எந்தவித முயற்சியும் WRP யின் அழுகிப்போன ஓடுகாலிக் கன்னைகளால் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு "விடை" என்னும் விதத்தில் நாங்கள் பெறப்பட்டது தான் பதில்கூறத் தயாராக இல்லை என்று சுலோட்டர் கூறிய கீழ்க்கண்ட உறுதிப்பாடுதான்:

"நோர்த்தின் அறிக்கையில் அடங்கியுள்ள டஜன்கணக்கான பொய்கள், சிதைவுகள் ஆகியவை பற்றி நாங்கள் ஏதும் கூறத்தயாராக இல்லை; அவருடைய அகநிலை சீற்ற வெளிப்பாடுகள் அல்லது ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமை பற்றிய அவரது சிறுபிள்ளைத்தனமான இடைவிடாக் குறிப்புக்கள் பற்றியும் ஏதும் கூறத்தயாராக இல்லை- இந்தக் கூட்டுச் சொற்றொடரே வசதியான கலவையாக உள்ளது."

இந்த அறிக்கை அரசியல் கொள்கைகளில் முற்றிலும் எவ்வித அக்கறையும் இல்லாத, அவருடைய புதிய திருத்தல்வாத நண்பர்களுக்கு ஐயத்திற்கு இடமின்றி திருப்தியைக் கொடுக்கும். ஆனால் மார்க்சிச இயக்கத்திற்குள், அரசியல் விமர்சனத்திற்கு விடையிறுப்பதில் மறுப்பு என்பது எப்பொழுதும் உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டதாகத்தான் கருதப்படும்; சுலோட்டரின் நழுவும் முறையிலான தவிர்த்தல் என்பது ஒவ்வொரு புரட்சிகர போராளியாலும் அவரின் அரசியல் கோழைத்தனம் மற்றும் திவால்தன்மை பற்றிய ஒரு நேரடியான ஒப்புக் கொள்ளலாகத்தான் வாசிக்கப்படும்.

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்