ஆம்பன் சூறாவளி 90 க்கும் மேற்பட்டோரை கொன்றதுடன் கிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷின் பரந்த பகுதிகளில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிழக்கு இந்திய மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புதன்கிழமை பிற்பகலிலும், அண்டை நாடான பங்களாதேஷில் வியாழக்கிழமை காலையிலும் ஆம்பன் சூறாவளி மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது. "சூப்பர் சூறாவளி புயல்" என்று வர்ணிக்கப்படும் ஆம்பன், மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வேகத்தை எட்டியது, மின்சார இணைப்புகளை துண்டித்தது, தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் 90 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்தது - இந்தியா மற்றும் பங்களாதேஷில் முறையே 76 மற்றும் 15 பேர்.

நான்கு மில்லியன் மக்கள் வசிக்கும் சுந்தரவனசதுப்புநில வனப்பகுதி 140 ஹெக்டேர் யுனெஸ்கோவின் ஒரு உலக பாரம்பரிய பகுதி, புதன்கிழமை பிற்பகலில் சூறாவளியின் மிகப் பெரும் தாக்கத்திற்கு ஆளானது. இப்பகுதி வங்க விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் மேக்னா நதிகளின் கழிமுக வடிநிலத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து ஆம்பன் சூறாவளி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவையும், பின்னர் பங்களாதேஷையும் வியாழக்கிழமை தாக்கியது.

கிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷில் உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் இந்த பேரழிவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், இது கொரோனா வைரஸின் கொடிய தாக்கத்தின் மத்தியில் வந்துள்ளது, அதற்கு ஏற்கனவே இரு நாடுகளிலும் 3,800 க்கும் மேற்பட்டோர் பலியாகியள்ளனர்.

இரு நாடுகளிலும் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து மொத்தம் மூன்று மில்லியனுக்கும் அதிகமானதாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டாலும், அவர்கள் நெரிசலான தங்குமிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால், அவர்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்று வைரஸால் பாதிக்கப்படுவதற்கான உண்மையான ஆபத்தில் உள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம்பன் சூறாவளியால் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அற்ப இழப்பீட்டுத் தொகுப்பாக 250,000 ரூபாய் (3,300 அமெரிக்க டாலர்) அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகியவை அடங்கும். 15 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவும் புயலால் சேதப்படுத்தப்பட்டது.

ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், மேற்கு வங்க அதிகாரிகள் “சேதத்தை உடனடியாக மதிப்பீடு செய்வது சாத்தியமில்லை” என்று அறிவித்தனர், ஆனால் மேலும் கூறியதாவது: “ஆம்பன் தொலைதொடர்பு அமைப்புகள், மரங்கள் மற்றும் மின் கம்பங்களை பிடுங்கியுள்ளது, ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை அழித்துள்ளது, மற்றும் சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகளை நாசம் செய்துள்ளது, மேலும் வடக்கு மற்றும் தெற்கு 24-பர்கானாக்கள் மற்றும் கிழக்கு மிட்னாபூரின் சில பகுதிகளிலும் உள்ள கட்டுக்கரை மற்றும் படகு துறைமுகங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

“குறைந்தது 15 கட்டுகள் மீறப்பட்டன. தொலைபேசி இணைப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது… மினாக்காவில் மட்டும் 5,200 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. டஜன் கணக்கான இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன அல்லது மோசமாக உள்ளன… கொல்கத்தா மற்றும் டயமண்ட் ஹார்பர் இடையே மரங்கள் விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலை 117 கிட்டத்தட்ட அணுக முடியாததாகிவிட்டது.”

கொல்கத்தா குடியிருப்பாளர்கள் பிபிசியிடம் தாங்கள் பல தசாப்தங்களாக கண்டிராத மிக மோசமான புயல் என்றும் வெள்ளம் சூழ்ந்த வீடுகள், மின்சார மின்மாற்றிகள் வெடிப்பது மற்றும் விரிவான மின் தடைகள் குறித்து விவரித்தனர்.

கிருஷ்ணச்சந்திரபூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தன் மைட்டி டெலிகிராப்இந்தியாவிடம் கூறியதாவது, ஆம்பன் "வாழும் நினைவில் மிக மோசமான சூறாவளி", ஆபத்தான அதி வேகமான காற்று வீசியதால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல விடாமல் தடுக்கப்பட்டனர். சுந்தரவன பிராந்தியத்தில் 50,000 க்கும் மேற்பட்ட மண் மற்றும் செங்கல் வீடுகள் கடுமையாக அல்லது நிரந்தரமாக சேதமடைந்துள்ளதாக பேரழிவு மேலாண்மை அதிகாரி ஒருவர் வெளியிட்டார். "கிட்டத்தட்ட அனைத்து தகர கூரைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன" மற்றும் பெரும்பாலான செல்போன் நெட்வொர்க்குகள் செயலிழந்தன, என்றும் அவர் கூறினார்.

COVID-19 நோய்த்தொற்றுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்திய அதிகாரிகள் தவறியதால் மக்களின் கோபம் அதிகரித்து நிலையில் மற்றும் சூறாவளியின் பேரழிவு தாக்கத்தின் அரசியல் விளைவுகள் குறித்து அச்சமடைந்த முதலமைச்சர் பானர்ஜி, கொரோனா வைரஸை விட சூறாவளி "மிகவும் கவலைக்குரியது" என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"இதை எவ்வாறு கையாள்வது என்று எங்களுக்குத் தெரியாது," என்று பானர்ஜி கூறினார். "மாநிலத்தின் கடலோர கிராமங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன ... பகுதிகள் ஒன்றன் பின்னர் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் தகவல்தொடர்புகள் முறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு சூறாவளியை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை."

பங்களாதேஷில், ஜஷோர், போலா, பர்குனா, படுகாலி மற்றும் பிரோஜ்பூர் உள்ளிட்ட நாட்டின் தென்மேற்கில் தாழ்வான ஏழு பகுதிகளை சூறாவளி உயர்ந்த காற்று அலைகள் மற்றும் அடை மழையுடன் தாக்கியது. சில 12 அடி (3.7 மீட்டர்) உயரமான சக்திவாய்ந்த கடல் அலைகள் கட்டுகளை (levees- தடுப்பு சுவர்களை), அழித்தன, கிராமங்களையும் நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்தன மற்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

19 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2.4 மில்லியன் மக்கள் 14,600 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் தற்காலிக புயல் பாதிப்பு தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பிற கட்டிடங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பங்களாதேஷின் சூறாவளி தயாரிப்புத் திட்டத்தின் இயக்குனர் அஹ்மதுல் கபீர் தெரிவித்தார். காக்ஸ் பஜாரில் நெரிசலான மற்றும் தரமற்ற இடங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காக்ஸ் பஜார் மாவட்டத்தில் 34 முகாம்களில் சுமார் ஒரு மில்லியன் அகதிகள் வாழ்கின்றனர்.

பார்குனா மற்றும் பிற மாவட்டங்களில் பல கட்டுகள் அல்லது தடுப்பு சுவர்கள் உடைந்தன, இதன் விளைவாக பயிர்கள் மற்றும் மீன் பண்ணைகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. சுந்தரவனத்திலுள்ள கோரமாரா தீவில் வசிக்கும் சஞ்சிப் சாகர், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். சுந்தரவனத்தின் விளிம்பில் வாழ்ந்த மற்றொரு கிராமவாசி பாபுல் மொண்டால், 35, வீடுகள் "புல்டோசரால் மிதித்து செல்லப்பட்டதை போலவே இருக்கின்றன" என்று கூறினார்.

பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை அமைச்சர் எனமூர் ரஹ்மான் புதிய தேசத்திடம் கர்வத்துடன் கூறினார்: “பேரழிவு மேலாண்மைக்கு வரும்போது பங்களாதேஷ் ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது” மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் கடலோரப் பகுதிகளில் 12,000 க்கும் மேற்பட்ட சூறாவளி முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்படியான கூற்றுக்கள் இருந்தபோதிலும்கூட, பங்களாதேஷ் அரசாங்கத்தின் நெரிசலான தற்காலிக சூறாவளி முகாம்கள், உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் COVID-19 நோய் தொற்று பரவுவதற்கான உண்மையான ஆபத்தில் வைத்துள்ளது.

சூறாவளி ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றாலும், இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் அதன் தாக்கம் உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் வழங்க ஆளும் உயரடுக்கு அலட்சியமாக மறுப்பதால் கடுமையான மோசமடைந்துள்ளது.

தெற்காசியா முழுவதும் சூறாவளிகள், அடை மழை மற்றும் வெள்ளம் ஆகியவை வழக்கமான நிகழ்வுகளாகும். இருந்தபோதிலும், இப்பிராந்தியத்தில் ஒவ்வொரு அரசியல் வண்ணத்தையும் கொண்ட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் சாமானிய மக்கள் மீதான சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் COVID-19 போன்ற சுகாதார பேரழிவுகளின் தாக்கத்தைத் தணிக்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்க மிகவும் அவசியமான வளங்களை ஒதுக்க மறுத்துவிட்டன,

சூறாவளி ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றாலும், இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் அதன் தாக்கமானது உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் வழங்க ஆளும் உயரடுக்கு கடுமையாக மறுப்பதால் மோசமடைந்துள்ளது.

Loading