கிரேக்க பள்ளி ஆக்கிரமிப்புகள் குறித்த OKDE-Spartakos கட்சியின் கடிதத்திற்கு ஒரு பதில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பிரான்சின் மத்தியதர வர்க்க புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) கிரேக்க கூட்டாளிக் கட்சியான OKDE-Spartakos இன் ஒரு உறுப்பினரிடமிருந்து பின்வரும் கடிதத்தைப் பெற்றது. COVID-19 க்கு எதிரான கிரேக்க இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து WSWS கட்டுரையானது Révolution Permanente (NPA) ஐ விமர்சிக்கிறது, இது பள்ளிக்கு மீண்டும் திரும்பும் கொலைகார கொள்கைக்கு எதிராக கிரேக்கத்தில் பாரிய மாணவர் போராட்டங்களை சர்வதேச ஊடகங்களில் இருட்டடிப்பு செய்வதில் Révolution Permanente வலைத் தளம் உடந்தையாக இருப்பதை அம்பலப்படுத்தியது. அலெக்ஸ் லான்டியரின் பதிலை கீழே காணலாம்.

*** ***

இது மனோஸ், கிரேக்கத்திலுள்ள OKDE-Spartacus இன் அரசியல் பணியகத்தின் ஒரு உறுப்பினர். கிரேக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் இளைஞர் இயக்கம் பற்றிய Revolution Permanente இன் மெளனம் பற்றிய உங்களுடைய ஒரு கட்டுரையைப் படித்தேன். இந்தக் கட்டுரையில், எங்கள் அமைப்பு பற்றி தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவலின் பல பகுதிகள் காணப்படுகின்றது.

a. எங்கள் அமைப்பு பிரெஞ்சு NPA உடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் துல்லியமானது அல்ல. நாங்கள் USFI [நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம்] இன் ஒரு பகுதியாக இருக்கிறோம், மேலும் பொதுவில் நிரந்தர போக்கு என அழைக்கப்படும், "ஒரு புரட்சிகர சர்வதேசத்திற்கான போக்கு" (“Tendency for a Revolutionary International) ஆகும், இது சர்வதேசத்தின் (International) நோக்குநிலையை எதிர்க்கிறது. NPA ஆனது பல்வேறு சர்வதேச மற்றும் போக்குகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியது, எனவே, அதற்கு எங்களுடன் உத்தியோகபூர்வ நேரடித் தொடர்பு இல்லை.

b. OKDE-Spartakoks சிரிசாவை ஆதரித்த NPA உடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று எழுதுவதன் மூலம், சிரிசாவையும் நாங்கள் ஆதரித்தோம் என்பதை நீங்கள் மறைமுகமாகக் கூறிவிட்டீர்கள் என்பது தெளிவு. இது முற்றிலும் தவறானது, எந்த விதமான தேர்தலிலும் இந்த சமூக-ஜனநாயக கட்சியை நாங்கள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. நாங்கள் பகிரங்கமாக அவ்வாறு செய்ததற்காக FI ஐ எதிர்த்தோம், இது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், அல்லது எங்கள் அமைப்பைப் பற்றி குறிப்பிடும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே பார்க்கவும்:

https://www.okde.org/index.php/en/announcements/87-announcements/128-letter-of-the-cc-of-okde-spartakos-to-the-bureau-of-the-fi-on-the-greek-situation

கட்டுரையில் சரியாக இல்லாத பிற விஷயங்கள் உள்ளன: எடுத்துக்காட்டாக, அன்டார்சியா (ANTARSYA) நிச்சயமாக ஒரு மத்தியதர வர்க்க கூட்டணி அல்ல. ஆனால் இது அரசியல் விளக்கத்தின் ஒரு விஷயமாக இருக்கலாம், அதில் நாம் உடன்பட முடியாது. மறுபுறம், மேலே குறிப்பிட்டுள்ள எனது கருத்துக்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மைகளுடன் தொடர்புடையவை. OKDE-Spartakos பற்றி உண்மையை சொல்வது ஒரு நேர்மையான விடயமாக இருக்கிறது.

இந்த செய்தியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்கள் என புரட்சிகர நேர்மையின் பெயரால் நான் எதிர்பார்க்கிறேன்.

தோழமையுடன்

Manos

*** ***

கோவிட்-19 காரணமாக 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர், மேலும் உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்களும் தொழிற்சங்கங்களும் மாணவர்களை பள்ளிக்கு திருப்பி மீண்டும் அனுப்பியுள்ளன மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற, ஆபத்தான நிலையில் பணியாற்ற விடப்பட்டுள்ளனர். இந்த மறைக்கப்பட்ட உண்மையாகவுள்ள சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது முன்னெப்போதையும் விட இன்றியமையாததாக இருக்கிறது: OKDE-Spartakos இனால் எழுப்பப்பட்ட விமர்சனப் புள்ளிகளில் ஒன்று கூட தகுதியைக் கொண்டிருக்கவில்லை, மேலும் NPA, சிரிசா மற்றும் OKDE-Spartakos மீதான WSWS உடைய விமர்சனங்கள் சரியானதாகவும் இருக்கின்றன.

கிரேக்கத்தின் சிக்கன-சார்பு சிரிசா (“தீவிர இடது கூட்டணி”) அரசாங்கத்தை NPA ஆதரித்ததாகவும், இப்போது பிரான்சிற்குள் இயக்கம் விரிவடைவதைத் தடுப்பதற்காக, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைக்கு எதிரான கிரேக்க மாணவர் போராட்டங்களை மறைத்து வருவதாகவும் நாங்கள் கூறுகிறோம். குறிப்பிடத்தக்க வகையில், WSWS இன் பகுப்பாய்வை சவால் செய்யக்கூட OKDE-Spartakos முயற்சிக்கவில்லை. இந்த மோசமான குற்றச்சாட்டுகளை பற்றி அது எந்தக் கருத்தும் கூறாமல் ஏற்றுக்கொள்கிறது. NPA அல்லது சிரிசாவுடன் தான் இணைக்கப்பட்டுள்ளது என்று சொல்வது “முற்றிலும்” துல்லியமானது அல்ல என அது வலியுறுத்தி, NPA இலிருந்து தன்னைத் தூர விலக்கிவைக்க மட்டுமே முயற்சிக்கிறது.

இது ஒரு விகாரமான தந்திரம்: OKDE-Spartakos, “USFI இன் ஒரு பகுதி” என்று பின்னர் அது ஒப்புக்கொள்கிறது, ஐக்கிய செயலக போக்கு (United Secretariat tendency) என்பது மத்தியதர வர்க்க கட்சிகளின் ஒரு வலைப்பின்னல், இதில் NPA ஆனது பிரெஞ்சு பிரிவாக இருக்கிறது. இது NPA உடனான ஒரு "நேரடி இணைப்பை" குறிக்கிறது. உண்மையில், கிரேக்கம் தொடங்கி COP-21 சுற்றுச்சூழல் உச்சிமாநாடு வரையிலான பல்வேறு அம்சங்களின் தலைப்புகளில் NPA அறிக்கைகளை OKDE-Spartakos வலைத் தளம் கொண்டுள்ளது.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ‘மஞ்சள் சீருடை’ ஆர்ப்பாட்டங்களை நவ-பாசிசவாத போரட்டங்கள் என்று தாக்குவது, சிரிசாவை ஆதரிப்பது, மற்றும் சிஐஏ ஆதரவுடைய லிபிய மற்றும் சிரிய “கிளர்ச்சியாளர்களை” ஆயுதபாணியாக்க பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு முறையிடுவது போன்றவைகள் NPA இன் படுகேடான பதிவுகளாகும். இதனால்தான் OKDE-Spartakos போன்ற சக்திகள் இப்போது NPA இன் கூட்டாளிகளாக தோன்ற விரும்பவில்லை, ஆனால் ஐக்கிய செயலகத்தின் "இடது" பிரிவாக, "ஒரு புரட்சிகர சர்வதேசத்திற்கான போக்கு" (“Tendency for a Revolutionary International) என்ற முகநூல் பக்கத்தை சுற்றி தொகுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அவர்களின் "ஐரோப்பாவில் ஒரு புரட்சிகர சர்வதேச திட்டத்திற்கான கூட்டு பிரகடனம்", NPA இன் கொள்கையை பிரான்சில் "முதலாளித்துவ எதிர்ப்பு மாற்றாக" தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

"புரட்சிகர நேர்மையைப்" பற்றி WSWS க்கு கற்பிப்பதற்கான OKDE-Spartakos இன் இந்த மோசடியான வார்த்தை-ஏமாற்று வித்தைகளும் முயற்சிகளும் அவர்களின் திவாலான அரசியலை மறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வலியுறுத்தியுள்ளவாறு, இந்த உலகளாவிய பெருந்தொற்று நோய், சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாபெரும் அரசியல் பணிகளை முன்வைத்துள்ளது. தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான பாதுகாப்புக் குழுக்கள் அவர்களுக்கு அவசியமாகும், மற்றும் திட்டமிட்ட வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு அரசியல் அடித்தளத்தை அமைப்பதற்கும், COVID-19 க்கு எதிரான ஒரு விஞ்ஞானபூர்வமான, மனிதாபிமான மற்றும் சோசலிச போராட்டத்திற்கு தேவையான ஆதார வளங்களை பறிமுதல் செய்வதற்கும், சர்வதேச அளவில் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கும் ஒரு புரட்சிகர தலைமையின் கீழ் அணிதிரட்டப்படவேண்டும். இளைஞர்களும் அத்தியாவசியமற்ற பணித் தொழிலாளர்களும் முழு நிதி உதவியுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கான விலை, இறப்புகளின் எண்ணிக்கையில் பயங்கரமான அதிகரிப்பு ஆக இருக்கும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் ஸ்தாபகங்களிடமிருந்து தொழிலாளர்கள் முறித்துக் கொள்ள தேவையில்லை என்ற ஒரு எதிர்வாதத்தை OKDE-Spartakoks முன்வைத்துக்கொண்டிருக்கிறது. டிரில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றிய பெருந்தொற்று நோய் பிணையெடுப்புகளில் இருந்து வரும் நிதிகளானது வங்கி பிணையெடுப்புகள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் சபைகள் (works councils) மூலம் அவர்களுடைய பங்கு முதலீடுகள் மற்றும் தொழிற்சங்க கஜானாக்களுக்குள்ளும் பாயும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதால், தொழிற்சங்கங்களும் மத்தியதர வர்க்க கட்சிகளும் பள்ளிக்கு மீண்டும் திரும்புதல் கொள்கையை செயற்படுத்துகின்றன என்ற WSWS கட்டுரையின் பகுப்பாய்வை அது விவாதிக்கவில்லை. மாறாக, இந்த இலஞ்சம் பெற்ற அமைப்புக்களின் "புரட்சிகர" பிரிவானது மேலெழுந்து எப்படியாவது இடது கொள்கையை செயற்படுத்தும் என்று OKDE-Spartakos குறிப்பிடுகிறது.

இந்த அடிப்படையில், இந்த அமைப்புகளை ஒரு "இடது" வழிக்கு கொண்டு வரும் அழிவுகரமான முயற்சிகளின் பின்னால் இளைஞர்களின் சமூக கோபத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது.

1930 களில், புரட்சிக்கும் பிற்போக்குக்கும் இடையிலான கோடுகளை மழுங்கடிப்பதன் மூலம் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதைத் தடுத்த பிரான்சில் மார்சோ பிவேர் போன்ற மத்தியவாதிகளை ட்ரொட்ஸ்கி இரக்கமற்ற விமர்சனத்திற்கு உட்படுத்தினார். ட்ரொட்ஸ்கியின் கூற்றுப்படி, “அடிப்படை கேள்விகளை முன்வைக்கும் ஒரு இரக்கமற்ற முறையும், ஏற்ற இறக்கங்களுக்கு எதிரான ஒரு கடுமையான விவாதமும் மட்டுமே நம் காலத்தின் வர்க்கப் போராட்டத்தின் அசைக்க முடியாத மற்றும் கொடூரமான தன்மையின் அவசியமான கருத்தியல் மற்றும் கற்பித்தல் வழிகாட்டி என்று பிவேர் புரிந்து கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை இது 'குறுங்குழுவாதம்', மற்றவர்களின் ஆளுமைக்கு மரியாதை இல்லாதது போன்றவை. அதாவது அவர் முற்றிலும் குட்டி முதலாளித்துவ ஒழுக்கநெறியின் மட்டத்தில்தான் இருக்கிறார்” என்று ட்ரொட்ஸ்கி கூறினார்.

இதில் சேர்க்க வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், NPA போன்ற தற்போதைய ஏகாதிபத்திய-சார்பு குட்டி முதலாளித்துவ கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பிவேர் போன்ற நபர்கள் வர்க்கப் போராட்டத்தின் பலவான்களாக இருந்தார்கள்.

NPA மற்றும் சிரிசாவுடன் அதனை தொடர்புபடுத்துவது அதனுடைய நிலைச்சான்றிற்கு ஒரு மரியாதை இன்மையை நிரூபிக்கிறது என்று வலியுறுத்தி OKDE-Spartakos ஆனது WSWS ஐ தாக்குகிறது. “இது முற்றிலும் தவறானது, எந்தவொரு தேர்தலிலும் இந்த சமூக ஜனநாயகக் கட்சியை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை, நாங்கள் சிரிசாவை ஆதரித்தோம் என்று மறைமுகமாக கூற” முயற்சிப்பதாக WSWS ஐ அது குற்றஞ்சாட்டுகிறது. OKDE-Spartakos ஆனது அதனுடைய வலைத் தள இணைப்பிலுள்ள கட்டுரைகளில் ஒன்று 2012 ஆண்டுத் தேர்தல்களில் சிரிசாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக USFI இன் மத்திய தலைமையை கண்டிக்கிறது.

WSWS க்கு எதையும் "மறைமுகமாக குறிப்பிட" வேண்டிய அவசியம் இல்லை: OKDE-Spartakos சிரிசாவுக்கு அளித்த ஆதரவானது ஒரு பொதுவாக அறிந்த விடயமாக இருக்கிறது. 2012 ஆண்டு சர்ச்சை தொடர்பாக WSWS விரிவாக எழுதியது. உண்மை, OKDE-Spartakos ஆனது சிரிசாவை "எந்தவொரு தேர்தலிலும்" நேரடியாக ஆதரிக்கவில்லை, ஏனெனில் அது ஒரு சட்டபூர்வமான தவிர்ப்பிற்காக அப்படிக் கூறுகிறது. எவ்வாறாயினும், சிரிசாவின் இடதுகளான அன்டார்சியா கூட்டணியில் (Antarsya coalition) இருப்பதாகக் கூறும் சக்திகளுடன் சேர்ந்தும், ஊக்குவிப்பதன் மூலமும் சிரிசாவை ஆதரித்தது, இது சிரிசாவை அதன் முதலாளித்துவ-சார்பு அரசியலில் அவநம்பிக்கை கொண்டதாகக் கூறினாலும் அவர்களுக்கு ஆதரவளித்தது.

உண்மையில், இது WSWS க்கு அனுப்பிய இணையத் தள இணைப்பில், OKDE-Spartakos ஆனது “அன்டார்சியாவின் ஒருமைப்பட்ட முதலாளித்துவ-எதிர்ப்பு இடது திட்டத்தில் பங்கேற்க அரசியல் முடிவை எடுத்துள்ளது” என்றும், “அன்டார்சியா சிரிசாவைச் சந்தித்து ஒத்துழைக்கவும் போராட்டங்களில் ஒன்றுசேர்ந்து அணிவகுத்துச் செல்லவும் உடன்பட்டது" என்று கூறியது. சிரிசா தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்ற கேள்வியை அது எழுப்பவில்லை.

OKDE-Spartakos ஆனது சிரிசாவுடன் ஒரு "ஐக்கிய முன்னணிக்கு" அழைப்பு விடுத்தது. அதனுடைய 2012 ஆண்டு ஆவணத்தில், “கிரேக்க முதலாளித்துவ-எதிர்ப்பு இடது மற்றும் குறிப்பாக அன்டார்சியாவானது ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்துடன் செல்வது மிக முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம், ஆனால் அதே நேரத்தில் அது அதன் அரசியல் சுயாதீனத்தையும், முதலாளித்துவ-எதிர்ப்பு இடைநிலை திட்டமானது தொழிற்சங்கங்கள், பணியிடங்கள் மற்றும் இளைஞர்களிடத்திலும் கடினமான போராட்டங்களை நடத்தி வருவதையும் பாதுகாக்க வேண்டும்” என்று அதில் எழுதியது.

புதிய ஜனநாயகம் (New Democracy) மற்றும் தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (Independent Greeks) உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளுடன் சிரிசாவானது தனது 2012 ஆண்டு தளத்தை வரைவு செய்ததாக OKDE-Spartakos தெரிவித்துள்ளது. "சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு சாத்தியமான சிரிசா அரசாங்கம் ஒரு வலதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு திறந்த களத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறி நிலைகுலையும்" என்று அது ஊகித்தது. ஆயினும்கூட, சிரிசாவின் இடது விமர்சகராக காட்டக்கூடிய மற்றொரு சக்தியை உருவாக்குவது, ஆனால் அதனுடன் கூட்டணி வைப்பது "ஒரே நம்பிக்கை" என்று அது வலியுறுத்தியது. அது "அதனுடைய அரசியல் சுயாதீனத்திற்காக" போராடுவதாகக் கூறினாலும், அது உண்மையில் ஒரு முதலாளித்துவக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது.

உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு துரோகம் மற்றும் காட்டிக் கொடுப்புடன் ஒத்ததாக மாறியுள்ள சிரிசா அரசாங்கத்தின் சின்னாபின்னமான அனுபவமானது இந்த பிற்போக்கு மூலோபாயத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் 2015 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிசாவானது வாக்கெடுப்பில் சிக்கன நடவடிக்கைகளுக்கு 61 சதவீத “இல்லை” என்பதற்கான வாக்குகளைப் பெற்றது, ஆனால் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளையும் கிரேக்கத் தீவுகளில் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் தடுப்பு முகாம்களை அமைப்பதை மட்டுமே நடைமுறைப்படுத்தியது.

இந்த அனுபவம் WSWS இன் எச்சரிக்கைகளை நிரூபித்தது மற்றும் OKDE-Spartakos அனேகமாக ஒவ்வொரு அளவிலும் தவறு என்பதை நிரூபித்தது. சிரிசாவானது தீவிர வலதுசாரிகளுடன் கூட்டணி வைத்ததே மெய்யானது என்று நிரூபிக்கப்பட்ட ஒரே புள்ளியாக இருந்தது: சிரிசாவானது சுதந்திர கிரேக்கர்களுடன் (Independent Greeks) ஒரு அரசாங்க கூட்டணியை அமைத்தது. இருப்பினும், சிரிசா சில மாதங்கள் அல்ல, நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது, அது சிக்கன நடவடிக்கை மற்றும் அடக்குமுறையின் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளை இடைவிடாமல் திணித்தது. OKDE-Spartakos மற்றும் அன்டார்சியாவைப் பொறுத்தவரை, சிரிசா வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை பாதுகாத்து, அவர்கள் வசதியமைத்துக் கொடுத்தனர்.

சிரிசாவுடனான அதனுடைய உடன்பாட்டிற்கு இணங்க, OKDE-Spartakos ஆனது ஜனவரி 26, 2015 அன்று சிரிசாவின் தேர்தல் வெற்றியை கிரேக்க முதலாளித்துவத்திற்கு ஒரு “பெரும் தோல்வி” என்று இழிந்த முறையில் பாராட்டியது. “பொருத்தமான சூழ்நிலையில், நம்மை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் ஒரு புதிய சுற்று அமைப்புமுறையின் அரசியல் நெருக்கடியை” திறக்கலாம் என்ற வகையில் இது ஒரு நிகழ்வு என்று சிக்கன நடவடிக்கை குறித்த சிரிசாவின் ஜூலை வாக்கெடுப்பையும் ஊக்குவித்தது ஆனால் அதன் பின்னர் சிரிசா கடுமையான சமூக வெட்டுக்களை நடைமுறைப்படுத்தியது. இந்த துரோகம் சிரிசாவுடன் மட்டுமல்லாமல், அதனுடன் ஒரு "ஐக்கிய முன்னணியை" உருவாக்கிய அன்டார்சியா மற்றும் OKDE-Spartakos ஆகியவைகளுடனும் தொழிலாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

OKDE-Spartakos அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக இருந்தால், அவர்கள் பங்கேற்ற பல தோல்விகள் மற்றும் காட்டிக் கொடுப்புகளிலிருந்து என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் விவாதிப்பார்கள். இந்த போக்கு எப்போதும் ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது? எவ்வாறாயினும், OKDE-Spartakos அதனுடைய நெருக்கமான கூட்டாளிகளின் அரசியல் துரோகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று நேர்மையற்ற, போர்வையான மறுப்புடன் பதிலளிக்கிறது. USFI இன் அரசியல்-கலைப்புவாத முன்னோக்கும் மற்றும் நோக்குநிலையும் இதற்கு அடிப்படையாக இருக்கிறது.

1953ல் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) பிளவுற்ற மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு போக்குத்தான் USFI ஆகும். இது ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்குள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கலைப்பதற்கு அழைப்பு விடுத்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமையை வழங்க முடியாது என்றும், முதலாளித்துவ-சார்பு சக்திகளுடன் கூட்டணிகளை தேட வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இந்த சக்திகள், ஸ்ராலினிசத்தை அடையாள அரசியலுடன் இணைத்த ஒரு மத்தியதர வர்க்க நோக்குநிலையை அபிவிருத்தி செய்தனர். 1968 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிரேக்க ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிகள் மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டணியான சிரிசாவை நோக்கிய NPA நோக்குநிலைக்கு இது அடிப்படையாக இருந்தது, மேலும் OKDE-Spartakos ஆனது அன்டார்சியாவை நோக்கி, இதேபோன்ற பசுமைக் கட்சிக் கூட்டணி மற்றும் பிரெஞ்சு ஸ்ராலினிச தத்துவவாதி லூயி அல்தூஸ்ஸரின் கிரேக்க மாவோயிச ஆதரவாளர்களுடன் பப்லோவாத குழுக்களின் கூட்டுக்கள் சேர்ந்துள்ளன.

முதலாளித்துவத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும் கொள்கைக்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்திற்கு, இந்த நோக்குநிலையுடன் இரக்கமற்ற உடைவும், மேலும் சர்வதேச புரட்சிகர முன்னோக்குகளை நோக்கிய ஒரு திரும்பலும், பப்லோவாதத்திற்கு எதிராக ICFI பாதுகாத்த தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமும் தேவைப்படுகிறது.

Loading