COVID-19 தடுப்பூசிகளின் பின்னால் உள்ள விஞ்ஞானம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

SARS-CoV-2 வைரஸ் முதன்முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தில், அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து 2019 நவம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் தோன்றியதிலிருந்து ஒரு முழு ஆண்டு கடந்துவிட்டது என்று பல்கலைக்கழகத்தின் சமீபத்திய கூட்டு ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சமீபத்திய கூட்டு ஆய்வு இந்த வாரம் ஒரு முன்வெளியீட்டு சேவையகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலுக்கு பொது சுகாதார அமைப்பின் பிரதிபலிப்பானது, மக்களின் உயிர்களையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முதலாளித்துவ அமைப்புமுறையின் முழுமையான இலாயக்கற்ற தன்மையை காட்டியுள்ள நிலையில், இலாப நோக்கில் கவனம் செலுத்தப்பட்ட ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சி ஒப்பீட்டளவில் விரைவான பலன்களை கொடுத்துள்ளது.

பகுதியாக, புதிய வகை வைரஸின் மரபணு குறியீட்டை கண்டுபிடிப்பதற்கான விஞ்ஞானிகளின் ஆரம்ப வேலையின் முன்னோடியில்லாத வேகம் மற்றும் ஆற்றல் காரணமாக இது இருக்கிறது, இது மெசஞ்சர் RNA (mRNA) சம்பந்தப்பட்ட ஒரு உயிர்வேதியியல் (biochemical) செயல்முறையைப் பயன்படுத்தி ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்கான தேவையான முன்நிபந்தனையாகும்.

Messenger RNA (mRNA) என்பது உயிரணுக்களின் கருவிலுள்ள DNA இருந்து பிறப்புரிமைச் செய்திகளைப் பெற்று, புரதத்தொகுப்பு நடக்கும் இடமான குழியவுருவிலுள்ள இரைபோசோமிற்கு, அச்செய்திகளைக் கடத்தும் RNA வகையைச் சேர்ந்த மூலக்கூறாகும்.

டிசம்பர் இறுதியில், வூஹானின் சுகாதார அமைப்புமுறைகளானது வைரஸ் நிமோனியாவை ஒத்த நோய் தொடர்பு மாதிரியுடைய, ஒரு அறியப்படாத காரண விளக்கமுள்ள நிமோனியா குறித்து தொடர் நிகழ்வுகளை அடையாளம் காணத் தொடங்கின. டிசம்பர் 26, 2019 அன்று, அதிக காய்ச்சல் மற்றும் இருமல் கொண்ட ஒரு வயதான தம்பதியர் உள்ளூர் வூஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மார்பு தொண்டை ஸ்கேன் (CT ஸ்கேன்) ஆனது நிமோனியாவின் மற்ற வைரஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்டுபிடிப்புகளை நிரூபித்தது. அவர்களின் நோயறிகுறியற்ற மகனின் மார்பில் இதேபோன்ற கண்டுபிடிப்புகளை CT ஸ்கேன் கொண்டிருந்தது. இன்புளுயன்சா மற்றும் சின்சிடிரியல் வைரஸ் போன்ற பொதுவான வைரஸ் நோய்ககிருமிகள் பரிசோதனையைத் தொடர்ந்து விலக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட மற்றய நோயாளிகள் பற்றிய மருத்துவ மற்றும் கதிரியக்கத் தகவல்களுடன், ஒருங்கிணைந்த பாரம்பரிய சீன மற்றும் மேற்கத்திய மருத்துவத்தின் (Integrated Traditional Chinese and Western Medicine) ஹுபே மருத்துவமனையில் சுவாச மற்றும் சிக்கலான பராமரிப்பு (Respiratory and Critical Care Medicine) மருத்துவத்துறையின் இயக்குனர் டாக்டர் ஜாங் ஜிக்ஸியான், அவர்கள் இன்னும் அடையாளம் காணமுடியாத நோய்க்கிருமி தொற்று சாத்தியத்தை எதிர்கொள்கின்றனர் என்று சந்தேகித்தார். பாதிக்கப்பட்ட பலருடனான தொடர்பு காரணமாக, ஜனவரி 1 ஆம் திகதி கடல் உணவு சந்தை சுத்தம் செய்யவும் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காகவும் மூடப்பட்டது.

ஜனவரி 3ஆம் திகதியன்று, ஷாங்காய் பொது சுகாதார மருத்துவ மையத்திலுள்ள Fudan பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Zhang Yongzhen என்பவர் வூஹான் இல் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப்களின் (swabs) சோதனைக் குழாய்களைப் பெற்றார். 48 மணி நேரத்திற்குள், அவர் வைரஸின் முதல் முழுமையான மரபணுவை வரைபடமாக்கினார், இப்போது இது SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது. அடுத்த பல நாட்களில், சமீபத்திய சுவாச நோய்கள் ஒரு புதிய வகை கொரோனா வைரஸால் ஏற்பட்டன என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர், இது விஞ்ஞான சமூகம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளிலுள்ள சிறிய முக்கிய இடங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஜனவரி 11 ஆம் திகதியன்று SARS போன்ற ஒரு புதிய வகையான கொரோனா வைரஸிலிருந்து பொது சுகாதார நெருக்கடிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து, பேராசிரியர் யோங்ஸென் சிட்னி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் எட்வார்ட் ஹோம்ஸிற்கு, வெளி உலகிற்கு முழுமையான மரபணுக் குறியீட்டை அணுக அனுமதிக்கும் Virological.org வலைத் தளத்திற்கு இந்த நிரலொழுங்கை பதிவேற்றுமாறு அறிவுறுத்தினார். சுவாரஸ்யமாக, டைம்ஸ் இல் தெரிவிக்கப்பட்டதைப் போல, ஒரு மறைப்பு பற்றி அவரது விமர்சகர்களுக்கு பதிலளிக்கையில், கொரோனா வைரஸ் வரைபடமாக்கப்பட்ட பின்னர் ஜனவரி 5 ஆம் திகதியன்று அமெரிக்க தேசிய உயிரியல்தொழில்நுட்பத் தகவல் மையத்தில் மரபணு நிரலொழுங்கை பதிவேற்றியதாக அவர் விளக்கினார்.

COVID-19 நோயாளிக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது (Source: WSWS)

வூஹானின் திடீர் வெடிப்பு பற்றிய செய்தி பரவத் தொடங்கிய அடுத்த சில வாரங்களில், ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டி அவசர அவசரமாக நடந்தது. தேசிய சுகாதார நிறுவனமானது (NIH) பின்னர் ஒப்பீட்டளவில் அறியப்படாத உயிரியல்தொழில்நுட்ப நிறுவனமான மொடெர்னாவுடன் (Moderna) இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் செயல்பாட்டில் உள்ளது என்ற இந்த ஆரம்ப அறிக்கையை டாக்டர் அந்தோனி ஃபாசி ஜனவரி 20 திகதியன்று CNN க்கு தெரிவித்தார். விரைவிலேயே உலகம் முழுவதும் பல பெரிய உயிரியல்தொழில்நுட்ப நிறுவனங்களும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கொரோனா வைரஸிற்கு எதிரான ஒரு தடுப்பூசி தயாரிப்பதில் கவனம் செலுத்தின. இந்தக் கட்டுரையின்படி, மூன்றாம் கட்டத்தில் 13 தடுப்பூசிகளும், இரண்டாம் கட்டத்தில் 17 தடுப்பூசிகளும், மற்றும் முதலாம் கட்டத்தில் 1 மனித சோதனைகளில் 40 தடுப்பூசிகளும் உள்ளன. ஏராளமானவைகள் பிற மருத்துவ முன் கட்டங்களில் உள்ளன.

Moderna, Pfizer மற்றும் mRNA தடுப்பூசிகள்

மாசசூசெட்ஸிலுள்ள கேம்ப்ரிட்ஜை தளமாகக் கொண்ட ஒரு அமெரிக்க உயிரியல்நிறுவனமான மொடெர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபான் போன்செல், சீனாவின் தொற்று நோய் பற்றி தான் கேள்விப்பட்டபோது சுவிட்சர்லாந்தில் ஒரு வணிகப் பயணத்தில் இருந்ததாகநியூ யோர்க் டைம்ஸிற்கு தெரிவித்தார். தேசிய சுகாதார நிறுவனங்களில் (NIH) தனது தொடர்புகளை நோக்கி அவர் திரும்பினார், அவரது நிறுவனம் பல ஆண்டுகளாக தடுப்பூசி வடிவமைப்புகளில் ஒரு புதிய வகை அணுகுமுறையை உருவாக்க செயற்பட்டுக் கொண்டிருந்தது.

பெருந்தொற்று நோய் ஏற்பட்ட மனித அனுபவங்களின் நூற்றாண்டு கால வரலாறானது அடிக்கடி பேரழிவை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்த நோய்க் கிருமிகளின் மிக நுண்ணிய தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பின் எதிர்வினை ஆகியவைகளை உள்ளடக்கிய இயற்கை உலகின் புரிதல் மூலமும், பல துயரங்கள் குறித்த ஆய்விலிருந்தும் பல உயிர்காக்கும் தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு வந்திருக்கின்றன.

இன்னும், பெரியம்மை போன்ற வைரஸ்களை பலவீனப்படுத்த அல்லது செயலிழக்க செய்யும் ஊசிக்கு தேவைப்படும் செயல்முறைகள், ஒரு சாத்தியமான தேர்வைச் செய்ய பல ஆண்டுகள் எடுக்கின்ற ஆய்வுகளும் மற்றும் ஆராய்ச்சிகளும் செயலுருவாக்கிக் காட்டுவதற்கு அயராத உழைப்பு வழிப்படுத்துகின்றன. இருப்பினும், ஒரு தொற்று நோய்க்கு முகம் கொடுக்கும் போது, நோய் குணப்படுத்தும் நேர-உணர்திறன் அத்தியாவசியமாகிறது, மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் போன்ற மருந்து அல்லாத தலையீடுகள் இந்த சுகாதார நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதில் முக்கியமான ஆதாரமாக உள்ளன.

ஆனால் மிக சமீப காலத்தில், மரபியல் (genetics) மற்றும் உயிரியல்பொறியியல் (bioengineering) முன்னேற்றங்களுடன், தடுப்பூசி வளர்ச்சிக்கான அணுகுமுறையானது இது சரியான நேரத்தில் அத்தகைய சிகிச்சைகளை சாத்தியமாக வழங்க முடியும் என்பது கூட ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. நியூ யோர்க் டைம்ஸில் விவரிக்கப்பட்டுள்ளபடி, “மொடெர்னா மற்றும் பிற நிறுவனங்கள் ஒரு கணினியின் இயக்கு முறை (operating system) போல செயல்படும் தளங்களை உருவாக்கியது, ஆராய்ச்சியாளர்கள் ஒரு வைரஸிலிருந்து ஒரு புதிய மரபணுக் குறியீட்டை (genetic code) விரைவாகச் செருக அனுமதிக்கிறது —அதாவது ஒரு பயன்பாட்டு மென்பொருளை (application) சேர்ப்பது போன்று— மேலும் இது ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்குகின்றது.” இதன் பொருள், ஒரு நபருக்கு பொருத்தமான முறையில் உருவாக்கப்பட்ட மரபணு பொருளை வழங்குவதன் மூலம், அவர்களின் செல்கள் இந்த “செயற்கை மரபணு குறியீடுகளை” எடுத்து அவற்றை பாதிப்பில்லாத ஒத்த வைரஸ் புரதங்களாக (mimic viral proteins) மொழிபெயர்ப்பு செய்து, அவைகள் அவற்றின் நோயெதிர்ப்பு சக்தி அமைப்புமுறையைத் தூண்டும் மற்றும் உண்மையான நோய்க் கிருமிகளுக்கு எதிராக அவைகளை பாதுகாக்க நோய் எதிர்ப்பொருள்களை (antibodies) உருவாக்கின்றன.

அவர்களின் தடுப்பூசி இலக்குக்கான கொரோனா வைரஸின் முளை புரதத்தை (spike protein) பூஜ்ஜியமாக்கிய பின்னர், மொடெர்னாவானது அவர்களின் கணினி செய்நிரல்களில் தேவையான மரபணு நிரலொழுங்குகளை உள்ளீடு செய்ய வேண்டியிருந்தது. இரண்டு நாட்களுக்குள், அது ஒரு மெசஞ்சர் RNA (mRNA) தடுப்பூசி தேர்வை வடிவமைத்தது. 25 நாட்களில், தடுப்பூசியின் முன்மாதிரி தயாரிக்கப்பட்டது, வெறும் 42 நாட்களில், பிப்ரவரி 24 திகதியன்று, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Moderna company (Source: Moderna)

அதுவரை, மொடெர்னாவானது ஒருபோதும் அங்கீகரிக்கப்பட்ட மருந்து அல்லது தடுப்பூசியை தயாரிக்கவில்லை. இந்த சிகிச்சைகளை உருவாக்க அதனுடைய மரபணுத் தளத்திற்கான திறன் மீது மட்டுமே அதனுடைய நிதியானது நம்பியிருந்தது. SARS, MERS, மற்றும் Zika திடீர் வெடிப்புகள் ஏற்பட்டபோது புதிய தடுப்பூசிகளை பரிசோதிப்பதற்கான முந்தைய முயற்சிகள் தடைப்படுத்தப்பட்டன, ஏனெனில் பெரிய மனித மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டிய அச்சுறுத்தல் மிக விரைவாக பின்நோக்கிவிட்டது. உலகின் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த பகுதிகளில் பரவி வரும் COVID-19 தொற்று நோயின் அளவு மற்றும் கால அளவு, இந்த கருத்துக்கள் நடைமுறை அடிப்படையில் பயன்படுத்தப்படலாம் என்பதை நிரூபிக்க முக்கியமானது. ஆனால், அதன் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பொறுத்தவரை, இடைப்பட்ட மாதங்களில் மொடெர்னாவின் வெற்றிகள் NIH ஆய்வாளர்களுடனான முக்கியமான ஒத்துழைப்பு மற்றும் தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியின் (Coalition for Epidemic Preparedness Innovations) நிதியுதவி ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்திருந்தன.

ஒப்பிட்டுபார்க்கையில், பெஹிமோத் மருந்து உற்பத்தியாளரான ஃபைசர் (Pfizer) நிறுவனமானது தடுப்பூசி போட்டியில் தாமதமாக ஆரம்பிப்பவராக இருந்தது. மார்ச் 1 ம் திகதி, அவர்களது கூட்டு பங்காளிகளான டாக்டர் உகூர் சாஹின் (Ugur Sahin) மற்றும் டாக்டர் ஓஸ்லெம் துரேசி (Özlem Türeci) ஆகியோரால் அவர்கள் அணுகப்பட்டனர். இந்த ஜோடியானது ஜேர்மன் உயிரியல்தொழில்நுட்ப நிறுவனமான பயோஎன்டெக் (BioNTech) நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர், தனிப் பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் வழிமுறை மூலமாக இது நோயெதிர்ப்பு சக்தி சிகிச்சைகள் மற்றும் மெசஞ்சர் RNA சிகிச்சை முறைகளை தயாரிக்கிறது. இருப்பினும், தொற்றுநோய்க்கு சாத்தியமான நோய்க் கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் அதனுடைய மகத்தான ஆற்றலை டாக்டர் சாஹின் அங்கீகரித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேர்லினில் நடந்த ஒரு தொற்று நோய் மாநாட்டில், உலகளாவிய தொற்றுநோய் ஏற்பட்டால், மெசஞ்சர் RNA தொழில்நுட்பமானது விரைவாக புதிய தடுப்பூசிகளை உருவாக்க முடியும் என்று அவர் கணித்திருந்தார்.

வூஹான் வெடிப்பு கொடுத்த சாத்தியமான வாய்ப்பை ஸ்டீபன் பான்செல் அங்கீகரித்த அதே நேரத்தில், ஹூபே மாகாணம் முழுவதும் வெடிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் சாஹின் நம்பினார். அவர் டைம்ஸிடம் கூறினார், “நாம் செய்யக்கூடிய அளவுக்கு அதை விரைவாகச் செய்வதற்கான திறனும் திறமையும் உள்ள ஏராளமான நிறுவனங்கள் இந்தக் கிரகத்தில் இல்லை. எனவே, இது ஒரு வாய்ப்பாக அல்ல, ஆனால் அதைச் செய்ய வேண்டிய கடமையாக உணர்ந்தேன், ஏனென்றால் முதலில் தடுப்பூசியை கொண்டுவருவதில் நாங்கள் ஒருவராக இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.”

மெசஞ்சர் RNA திருப்புமுனை

மொடெர்னா மற்றும் ஃபைசர் இரண்டும் ஒரு மரபணு தொழில்நுட்பத்தில் சேமிப்பகத்தைக் கொண்டிருக்கின்றன, இது ஒரு நபரின் செல்லுக்குள் ஒரு தடுப்பு மருந்து உற்பத்தி இயந்திரமாக ஒத்த புரதங்களை செயற்கை மெசஞ்சர் RNA உருவாக்குகிறது. உண்மையான நோய்க்கிருமியின் எதிர்கால வெளிப்பாட்டிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அடையாளம் கண்டு கொண்டு, நோய் எதிர்பொருள்களை நோயெதிர்ப்பு அமைப்புமுறை உருவாக்க முடியும்.

சுருக்கமாக, ஒரு செல்லின் உட்கருவில் இருக்கும் DNA இன் முதன்மை செயல்பாடுகளில் ஒன்று புரதங்களை உற்பத்தி செய்வது. DNA இன் பொருத்தமான பகுதி முறுக்கவிழ்க்கப்படுகிறது, மற்றும் மெசஞ்சர் RNA இன் ஒரு ஒற்றை இழையானது படியெடுப்பு செய்யப்படுகிறது. இது அதன் முதிர்ந்த வடிவத்தில் மேலும் செயலாக்கத்திற்கு உட்படுகிறது, அதன் பின்னர் செல்லின் சைட்டோபிளாசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வாசிக்கப்பட காத்திருக்கிறது. ரிபோசோம்கள் என்ற புரதங்கள் இது mRNA யிலுள்ள "செய்தியை" குறிநீக்கம் செய்ய முடியும், இடமாற்ற RNA (tRNA) மூலம் கொண்டு செல்லப்பட அமினோ அமிலங்களை பயன்படுத்துகிறது, பின்னர் விவரக்குறிப்புப்படி புரதத்தை உருவாக்கி அமைக்கிறது, பின்னர் அவைகள் நோயெதிர்ப்பு அமைப்புமுறைக்கு வழங்கப்படுகிறது. முளைப் புரதங்கள் (spike proteins) முழு வைரஸின் ஒரு சிறிய கூறு மட்டுமே என்பதால், இந்த ஒத்த (mimics) கூறுகள் தீங்கற்றவையாக இருக்கின்றன.

mRNA Vaccine (Source: Wikipedia)

முந்தைய தடுப்பூசிகளானது வலுக்குன்றிய அல்லது உயிராற்றல் நீக்கப்பட்ட வைரஸ்கள் அல்லது குறிப்பிட்ட புரதத்தூண்டிகளையும் (peptides) புரதங்களையும் இந்த நோய்க் கிருமிகளிலிருந்து தடுப்பூசிகளை உருவாக்க பயன்படுத்தியிருக்கிறது. இதற்கு மாறாக, mRNA தடுப்பூசிகளானது ஒரு நபரின் செல்களை உற்பத்தி செய்யும் தளமாக பயன்படுத்துகிறது. தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான அளவு மற்றும் நேரத்தைக் குறைப்பதில் இது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

mRNA சிகிச்சைக்கான சாத்தியம் தடுப்பூசிகளுக்கு அப்பால் செல்கிறது. பல தசாப்தங்களாக, சேதமடைந்த இதயங்களை சரிசெய்தல், அரிதான நோய்கள் அல்லது புற்றுநோய் ஏற்படுத்தும் குறைபாடுடைய நொதிகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் செயற்கை mRNA தொழில்நுட்பத்தின் சாத்தியமான பாத்திரத்தைப் பற்றி விஞ்ஞானிகள் சிந்தித்திருக்கிறார்கள். அது மீண்டும் 1990 ஆண்டு, முதல் முறையாக, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள், RNA மற்றும் DNA "நுண்ம கடத்தி வெளிப்பாடு" (“expression vectors”) களை புதிய புரத வெளிப்பாடுகளை ஏற்படுத்த எலிகளின் எலும்பு தசைக்குள் செலுத்தி ஆராய்ந்தனர்.

கத்தலின் கரிக்கோ (Katalin Karikó) என்ற ஒரு ஹங்கேரிய உயிர்வேதியியலாளர் இந்தத் துறையில் சூழ் உறைகளைத் தள்ள முடிவு செய்தார். செயற்கை RNA ஆனது ஒரு மனிதனின் இயற்கையான பாதுகாப்பிற்கு உடனடியாக பாதிக்கப்படக்கூடியது மற்றும் சிகிச்சையை ஒரு சுகாதார தீங்கு விளைவிக்கும் ஒரு பெரிய நோயெதிர்ப்பு சக்தி பதிலை வெளியிடச் செய்ய முடியும். பல சோதனைகள் மற்றும் பிழைகள் கொண்ட ஒரு தசாப்த கால ஆராய்ச்சிக்குப் பின்னர், அவரும் பென்னிலுள்ள அவரது ஒத்துழைப்பாளருமான நோயெதிர்ப்பு சக்தி நிபுணர் ட்ரூ வெய்ஸ்மேனும், mRNA இன் கட்டுமானத் தொகுதிகளை மாற்றியமைப்பதன் மூலம், இந்த ஊடுருவிகளுக்கும் அவைகளைத் தாக்குவதற்கும் நோயெதிர்ப்பு சக்தி அமைப்புமுறை எச்சரிக்கையடையச் செய்யாமல் செல்களிற்குள் அவர்கள் அதை வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களின் ஆய்வுகளானது 2005 ஆம் ஆண்டில் பெருமளவில் விஞ்ஞான சமூகத்தால் அங்கீகரிக்கப்படாமல் போயிருந்தாலும், அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன, இதுவரையில் எந்த சிகிச்சையும் இல்லாத நோய்களுக்கான புதிய வகை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பதற்கான நடைமுறை தீர்வை வழங்கும். இருப்பினும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தனர், அவர்கள் உயிரியல்தொழில்நுட்ப நிறுவனங்களான மொடெர்னா மற்றும் பயோஎன்டெக் (BioNTech) ஆகியவைகளை நிறுவ முயற்சி செய்தார்கள்.

2010 ஆம் ஆண்டில், mRNA தொழில்நுட்ப தொடக்கத்தின் பின்னணியில் இருந்த யோசனையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு மரபியல் செல் உயிரியலாளரான டெரிக் ரோஸிக்கும், MIT லிருந்து தொழிலதிபராக மாறிய நன்கு திறமை வாய்ந்த உயிரியல்மருத்துவ பெறியியலாளரான ராபர்ட் லாங்கருக்கும் மற்றும் ஒரு துணிகர முதலாளித்துவ நிறுவனமான Noubar Afeya இற்கும் இடையே நடந்த ஒரு கூட்டத்தில், மொடெர்னா நிறுவனத்தை உருவாக்குவதற்கு சில மாதங்களில் வழிவகுத்தது. நிறுவனம் அதனுடைய முதலீட்டாளர்கள் மற்றும் நிதியங்களின் அணிகளை உருவாக்க உதவுவதற்கு ஸ்டெப்ஃபானே போன்செல் என்பவரை 2011 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக கொண்டு வரப்பட்டார். ரோஸி இந்த புதிய தொழில்நுட்பத்தின் தொலைதூர தாக்கங்களை யார் கருத்து கொண்டிருந்தனர் என்பது பற்றிய ஒரு கடுமையான சர்ச்சையின் காரணமாக 2014 இல் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

இதேபோன்ற ஒரு சிறப்பியல்பில், கணவன்-மனைவி குழுவான டாக்டர் சாஹின் மற்றும் டாக்டர் துரெசி ஆகியோரின் புற்றுநோய்களின் உயிரணுக்களை எதிர்த்துப் போராட ஒரு நபரின் ஒரு நோயெதிர்ப்பு சக்தி செல்லை உருவாக்கக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட நோயெதிர்ப்பு சிகிச்சைகள் என்ற கருத்தினால் கவரப்பட்டிருந்தார்கள். ஜேர்மன் ஆதாரங்களின் நிதி உதவியுடன், பயோன்டெக் இன் தலைமையகத்தை மாசசூசெட்ஸிலுள்ள கேம்பிரிட்ஜில், மொடெர்னாவிலிருந்து சில மைல் தொலைவில் உருவாக்கப்பட்டது.

இரு நிறுவனங்களும் mRNA தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன என்றாலும், தடுப்பூசிகளின் இரசாயன கட்டமைப்புகள், அவைகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, அவைகள் எவ்வாறு செல்களிற்குள் வழங்கப்படுகின்றன என்பது வேறுபடுகின்றன. சிதைவுக்கான உணர்திறன் காரணமாக இரண்டிற்கும் நுட்பமான வழுவாத வெப்பநிலை தேவைகள் தேவைப்படுகின்றன. ஃபைசருடையது மைனஸ் 94 டிகிரி பாரன்ஹீட்டில் சேமிக்க வேண்டும், இது தடுப்பூசியை எடுத்துச் செல்வது, சேமித்து வைப்பது மற்றும் ஒரு கடினமான பணியை நிர்வகிப்பது போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது.

இது மொடெர்னாவின் தடுப்பூசிக்கு ஒரு மதிக்கூர்மையைக் கொடுக்கிறது, இது ஒரு சாதாரண மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட்டில் மட்டுமே நீண்ட கால சேமிப்பு தேவைப்படுகிறது மற்றும் ஒரு மாதத்திற்கு 36 டிகிரி முதல் 46 டிகிரி பாரன்ஹீட் வரை நிலையானதாக இருக்கும். மொடெர்னா தடுப்பூசியின் ஸ்திரத்தன்மையானது அதனுடைய சிறப்பு சவ்வு லிப்பிட் நானோ துகள்களால் (சிறிய எண்ணெய் கோளங்கள்) சுற்றியுள்ளதும் மற்றும் mRNA ஐ அதிக வெப்பநிலையின் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் சிகிச்சை தொடரை முழுமையாக முடிக்க இரண்டு ஊசிகள் தேவைப்படுகிறது, ஃபைசருக்கு 21 நாட்கள் இடைவெளியும் மற்றும் மொடெர்னாவுக்கு 28 நாட்களும் தேவைப்படுகின்றது.

வரம்பிட்டு குறிப்பிடமுடியாத கட்டம் மூன்று மருத்துவ பரிசோதனைகளில் வைரஸுக்கு எதிராக ஒரு வியத்தகு 90 சதவிகித செயல்திறனைக் காட்டிய முதலாவது தடுப்பூசி தேர்வாக ஃபைசர் வெளிவந்த ஒரு வாரத்திற்குப் பின்னர், நவம்பர் 16 திகதியன்று, மொடெர்னா நிறுவனத்தின் இடைக்கால பகுப்பாய்வின் முடிவுகள் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பானது mRNA தொழில்நுட்பத்தை ஒரு சக்திவாய்ந்த கருவியாக உறுதிப்படுத்தியது. திருத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட முடிவுகள் இரண்டு தடுப்பூசிகள் செயல்திறனில் கிட்டத்தட்ட சமமாகக் காண்பிக்கும் வரை, மொடெர்னா ஆரம்பத்தில் ஃபைசரை விட 94.5 சதவிகிதத்திற்கு சிறந்ததாக காட்டியது.

அவர்களின் தரவுகளில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் போன்ற உயர் ஆபத்துள்ள குழுக்களில் உள்ளவர்கள் அடங்குவதாக மொடெர்னா வெளிப்படுத்தியது. தடுப்பூசி போடாத குழுவில் 90 கோவிட்-19 நோயாளிகள் இருந்தனர், அவர்களின் இடைக்கால பகுப்பாய்வில் பதினொரு கடுமையான நோயாளிகள் உள்ளனர். தடுப்பூசி பெற்றவர்களில் ஐந்து நோயாளிகள், கடுமையான நோய் அறிகுறிகள் எதுவும் உருவாகவில்லை. ஃபைசரின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட பகுப்பாய்வில், 170 COVID-19 நோய்த்தொற்றுகளில், எட்டு பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. கூடுதலாக, 8,000 ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் மதிப்பாய்வு செய்ததில், கடுமையான பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை; 3.8 சதவீதம் பேர் கடுமையான சோர்வு மற்றும் 2 சதவீதம் தலைவலி என அறிவித்தனர். மொடெர்னாவின் தடுப்பூசிக்கான நிலையற்ற பாதகமான விளைவுகளாக 9.7 சதவிகிதம் சோர்வு, 8.9 சதவிகித தசை வலி, 5.2 சதவிகித மூட்டு வலி மற்றும் 4.5 சதவிகித தலைவலி ஆகியவைகள் அடங்கும்.

மிச்சிகன் பல்கலைக்கழக பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோயியல் நிபுணர் அர்னால்ட் மொன்டோ விளக்கினார், “இது பொதுவாக பெரும்பாலான புளு காய்ச்சல் தடுப்பூசிகளுடன் காணப்படுவதை விட அதிக எதிர்விளைவுத்தன்மை கொண்டது, ஒரு தரம் கொடுக்க வேண்டிய மருந்தின் அளவு கூட அதிக அளவாகும்.” தடுப்பூசி வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள், இந்த சிகிச்சைகள் மக்களால் எவ்வாறு பெறப்படப்போகின்றன என்பதில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவம்பர் 20 அன்று, ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் புர்லா அவர்களின் தடுப்பூசியில் போதுமான பாதுகாப்புத் தரவு இருப்பதாகவும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை (emergency use authorization - EUA) தாக்கல் செய்ததாகவும் அறிவித்தார். மொடெர்னா பத்து நாட்களுக்குப் பின்னர் தனது சொந்த EUA க்காக தாக்கல் செய்தது.

வளர்ச்சி முதல் பாரியளவிலான தடுப்பூசி வரை

ஃபைசர் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய FDA இன் தடுப்பூசிகள் மற்றும் தொடர்புடைய உயிரியல் தயாரிப்புகள் ஆலோசனைக் குழு (Vaccines and Related Biological Products Advisory Committee) டிசம்பர் 8 முதல் 10 திகதி வரை ஒன்றுகூடுவார்கள், அதன் ஒரு வாரத்திற்குப் பின்னர் மொடெர்னாவுக்காக ஒன்றுகூடுவார்கள். முடிவுகள் உடனடியாக வெளிவரக்கூடும். எல்லா கணக்குகளாலும், இரு தடுப்பூசிகளும் பெரும்பாலும் mRNA நுண்மங் கடத்தியைப் பயன்படுத்துவதால் ஒப்புதல் வழங்கப்படும், அவை ஒத்த பாதுகாப்பு மற்றும் செயல்திறன் முடிவுகளைக் கொண்டுள்ளன.

CDC நோய்த்தடுப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் குழுவின் (Advisory Committee on Immunization Practices) ஒரு மதிப்பாய்வைப் பின்தொடர்கிறது, இது தடுப்பூசியை யார் பெறலாம், எந்தக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும். பொது சுகாதார நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து என்னவென்றால், சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடுவதற்கு ஆரம்பத்தில் நிறைய தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பிற குழுக்களில் முதியவர்கள் மற்றும் அத்தியாவசியத் தொழிலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், முதல் பணியாளர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.

எவ்வாறாயினும், இந்த உயிர் பாதுகாக்கும் சிகிச்சைகள் உருவாக்கப்பட்டுள்ள அதே வேகத்தில் முழு கிரகத்திற்கும் உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் நோய்த்தடுப்பு சக்தியை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் முன்னோடியில்லாத வகையில் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், எந்த தடுப்பூசியை யார் பெற்றுக்கொள்ளுகிறார்கள், பக்க விளைவுகள் மற்றும் எதிர்வினைகள் எவ்வாறு பதிவாகின்றன என்பதைக் கண்டறிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இல்லை. இயற்கையின் மிக முக்கியமான உந்துதலுடைய இரகசியங்களுக்குள் விஞ்ஞானம் ஊடுருவ முடிந்தது, ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையானது —காலாவதியான தேசிய அரசுகளின் அமைப்புமுறை— மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய தடைகளாக அமைகின்றன.

மொடெர்னா, ஃபைசர், பயோஎன்டெக் மற்றும் பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி செல்வந்தர்களாக வளர்ச்சியடைவார்கள் —மற்றும் இலாபகர அமைப்பின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், அதுதான் ஒரே பாதிப்பாகவிருக்கிறது— ஆனால், மனித குலம் இயல்பான வாழ்க்கை நிலைமைகளுக்கு திரும்புவது என்பது கணிசமான சந்தேகத்தில் தான் உள்ளது.

மே 15 அன்று, ட்ரம்ப் நிர்வாகமானது "COVID-19 தடுப்பூசிகள், சிகிச்சைமுறைகள் மற்றும் நோயறிதல்களின் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்கவும் முடுக்கிவிடவும்" ஒரு பொது-தனியார் கூட்டாண்மையாக ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் (Operation Warp Speed) நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் விளைவாக, மருந்து நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி மற்றும் உற்பத்தியின் இலாபத்தை உறுதிப்படுத்த பொது நிதியைப் பயன்படுத்துகின்றன; உற்பத்தியாளர்களிடமிருந்து பல்வேறு மாநிலங்களுக்கான மொத்த விநியோகப் பணி அமெரிக்க இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் தடுப்பூசி யாருக்கு, எப்போது கிடைக்கும் என்பதை தீர்மானிப்பது உட்பட, சில்லறை விநியோகம் மற்றும் பாரியளவிலான தடுப்பூசி ஆகியவற்றை மாநில அரசுகள் மேற்பார்வையிடும். இந்த ஏற்பாட்டை, ஒரு ரூபே கோல்ட்பேர்க் சாதனம் (Rube Goldberg device) என்று அழைப்பது அதிக கௌரவம் கொடுப்பதாகும். இது ஒரு பேரழிவு நடக்க காத்திருக்கிறது.

இதன் பின்னர், பூகோளரீதியான விநியோகத்தின் முக்கியமான கேள்வி உள்ளது, குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படும் குழந்தைப் பருவ தடுப்பூசிகளை விநியோகிக்க கூட சுகாதார உள்கட்டமைப்பு ஏழை நாடுகளில் இல்லாத நிலையில், இரண்டு டோசுகளை, வார இடைவெளியில், நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்குவதைப் பற்றி சொல்லவும் தேவையில்லை.

ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உலக மக்கள்தொகையில் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வந்த நாடுகள், எதிர்கால COVID-19 தடுப்பூசிகளின் டோஸ்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஏகபோக உரிமையை பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளது. முதல் ஐந்து தடுப்பூசிகள் (தற்போது மூன்றாம் கட்டத்தில் 12 உள்ளன) பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தாலும், உலக மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் 2022 வரை ஒரு தடுப்பூசியைக் கூட பார்க்க மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளது. தற்போது, இந்த தடுப்பூசிகளை உலகளாவிய மக்களுக்கு சமமாக விநியோகிக்க உலக சுகாதார அமைப்பு கோவிட் தடுப்பூசி உலகளாவிய முன்முயற்சி என்பதற்கு தேவையான நிதி திரட்ட போராடி வருகிறது.

Loading