இந்திய விவசாயிகள் வேளாண் வணிக சார்பு “சீர்திருத்தத்திற்கு” எதிராக போராட்டத்தை முடுக்கிவிடும் நிலையில், பரந்தளவிலான அடக்குமுறைக்கு மோடி தயாராகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த செப்டம்பரில் பாராளுமன்றத்தில் விரைந்து நிறைவேற்றிய மூன்று வணிக சார்பு வேளாண் சட்டங்களை இரத்து செய்யப்போவதில்லை என்று பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து இந்திய விவசாயிகள் தங்கள் போராட்டங்களை விரிவுபடுத்தப்போவதாக அச்சுறுத்துகின்றனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள், அதில் பலர் தங்களின் மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு செல்லும் நான்கு வழிகளில் தற்போது முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பாஜக அரசாங்கத்தின் உத்தரவின் பெயரில் மிகப் பெரிய நகரமான இந்தியாவின் தலைநகருக்குள் அவர்களின் டெல்லி சாலோ (டெல்லிக்குச் செல்வோம்) எதிர்ப்பு போராட்டத்தை கொண்டு செல்லவிடாமல் காவல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுக்கப்பட்டு,ள்ளனர். பலர் நவம்பர் 27 முதல் அங்கேயே இருக்கிறார்கள்

செவ்வாய் கிழமையன்று, விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்த ஒரு பாரத் பந்த் (இந்தியா முழு அடைப்பு) இல் மில்லியன் கணக்கானவர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து கலந்துகொண்டனர். கிஷான் மோர்ச்சா (விவசாயிகளின் முன்னணி) ஒருங்கிணைப்பு குழுவின் கூற்றுப்படி இந்த நான்கு மணிநேர முழு அடைப்பில் இந்தியாவின் 28 மாநிலங்களில் குறைந்தபட்சம் 22 இல் 20,000 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருப்பதுடன் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

டிசம்பர் 8, 2020 செவ்வாய்க்கிழமை மும்பையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகளால் அழைக்கப்பட்ட ஒரு தேசியளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது விவசாயிகளின் ஆதரவாளர்கள் முழக்கமிடுகின்றனர். (AP Photo/Rajanish Kakade)

விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தின் மையப் பகுதியாக இருக்கும் பஞ்சாபில் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது. பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு இடையிலிருக்கும் ஹரியானா மாநிலம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சந்தைகள் மூடியிருந்தன மற்றும் பல தெருக்களும் நெடுஞ்சாலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. டெல்லிக்கு புறநகரில் ஹரியானாவில் இருக்கும் குர்கான்-மானேசர் தொழிற்துறைகள் அமைந்திருக்கும் பகுதியிலிருக்கும் மாருதி சுசூகி, ஹீரோ மோட்டார்சைக்கிள் மற்றும் பிற வாகன ஆலைகளிலிருந்து தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

செவ்வாய்க்கிழமை மாலை, மோடியின் கையாளும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா அவசரமாக ஏற்பாடு செய்த ஒரு அராசாங்க தூதுகுழுவிற்கு தலைமைதாங்கியதுடன், ஆர்ப்பாட்ட இயக்கத்தை தலைமை தாங்கும் வேளாண் சங்கங்கங்களின் சில டசின் கணக்கான பிரதிநிதிகளுடன் நான்கு மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த மூன்று சட்டங்களில் சிறிய திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் முன்பே ஒப்புக்கொண்டிருந்தது என்று ஷா மறுபடியும் கூறினார், அந்த சட்டங்கள் அரசாங்கம் நடத்தும் சந்தைகள் முறையை இரத்துசெய்வதன் மூலம் உள்நாட்டுக்குள்ளும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய விவசாயத்தை திறந்து விடும், மேலும் ஒப்பந்த விவசாய முறை மற்றும் நில உரிமை ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகளை குறைக்கும் அல்லது இல்லாமல் செய்யும் ஆனால் மூன்று சட்டங்களையும் இரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் குரலை அவர் நிராகரித்து விட்டார்.

விவசாய "சீர்திருத்த" சட்டங்களையும் மற்றும் அதனுடன் கூடவே பெரும்பாலான வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கும் மற்றும் "தொழிலாளர் சந்தை நெகிழ்வுத்தன்மையை" ஊக்குவிக்கும் தொழிலாளர் "சீர்திருத்தத்தை" பாராட்டும் பெருவணிகம், பாஜக அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. முதலாவதாக, சிறு விவசாயிகளின் இழப்பில் இந்திய விவசாயத்தை "நவீனமயமாக்குவதை" அவர்கள் சீனாவுடன் முதலீட்டிற்கான போட்டியில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுகிறார்கள்; இரண்டாவதாக, விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முகங்கொடுக்கும் அரசாங்கம் அதிலிருந்து பின்வாங்குவது சமூக எதிர்ப்பை அதிகரிக்கும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நவம்பர் 26 அன்று, டெல்லி சலோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முதல் நாளன்று, அரசாங்கத்தின் “முதலீட்டு சார்பாளர்” பொருளாதார கொள்கைளுக்கு எதிரான ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலிமிருந்து பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் பேரழிவுகரமான பொருளாதார வீழ்ச்சியால் இந்தியா திணறியிருக்கின்ற நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தங்களை தாங்களே தற்காத்துகொள்ள விடப்பட்டவர்களான நூறு மில்லியன் கணக்கானவர்களுக்கு அவசர உதவியை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

புதன்கிழமையன்று காலையில், பாஜக ஆதிக்கம் செலுத்தும் மத்திய அமைச்சரவை கூடியது மேலும் விவசாயிகளுக்கு ஒரு 9 அம்ச “சலுகையை” பெயரளவில் அங்கீகரித்தது, மூன்று சட்டங்களில் இரண்டில் மிகவும் ஆத்திரமூட்டும் உட்பிரிவுகளின் ஒரு சிலதை நீக்கிவிட்டது. அரசு நடத்தும் மண்டிகளைப் போலல்லாமல் தனியார் சந்தைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் மற்றும் “நல்லெண்ண அடிப்படையில்” அரசாங்க அதிகாரிகள் அல்லது பெரு நிறுவன பிரதிநிதிகள் செயல்பட்டிருந்தால், விவசாய “சீர்திருத்த” சட்டங்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட எந்தவொரு விடயத்திற்காக நீதிமன்றங்களிலில் நிவாரணம் பெறுவதிலிருந்து விவசாயிகளுக்கு தடை விதிப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.

“ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price – MSP) முறை தொடர்ந்து இருக்கும் என்று ஒரு எழுத்துபூர்வ உத்தரவாதத்தை வழங்குவதற்கு” தயாராக இருப்பதாக தற்போது அரசாங்கம் கூறுகிறது. எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலை, சட்டத்தில் பொறிக்கப்படவேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். ஏனெனில் அரசாங்கம் அதன் வார்த்தையில் நேர்மையாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. பாஜக மற்றும் அதன் கூட்டணிகளால் வழிநடத்தப்பட்டு மற்றும் வெளிப்படையான “வேளாண் சார்பு” எதிர்கட்சிகளின் தலைமையிலான ஆகிய இரண்டு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பின்தொடரப்படும் “சந்தை சார்பு” கொள்கைகள் காரணமாக குறைந்தபட்ச ஆதவு விலை முறை ஏற்கனவே பெரியளவில் தகர்ந்திருக்கிறது.

விவசாயிகளின் சங்கங்கள் பாஜக அரசாங்கத்தின் வேண்டுகோளை நிராகரித்து விட்டன. மேலும் டிசம்பர் 12 சனிக்கிழமைக்குப் பின்னர் ஆரம்பித்து ஒன்றன் பின் ஒன்றாக ஜெய்பூர்-டெல்லி மற்றும் ஆக்ரா-டெல்லி நெடுச்சாலைகள் மற்றும் டெல்லிக்கு செல்லும் மற்ற சாலைகளையும் தடுக்கப்போவதாக தற்போது எச்சரிக்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கைள் பற்றிய விடயத்தில் மோடி அரசாங்கம் நேர்மையற்றும் திமிர்பிடித்துக்கொண்டும் இருக்கிறது. அனைத்து விவசாயிகளும் பழைய பிரேரணைகளை புதியதாக அலங்கரித்திருப்பதை சரியான முறையில் நிராகரிக்கிறார்கள் என்று அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட (Kisan Sangharsh) ஒருங்கிணைப்பு குழு கூறியதாக ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

டிசம்பர் 14 அன்று வேளாண் சங்கங்கள் போக்குவரத்து பாதைகளை மறித்து ஒரு தேசியளவிலான ஆர்ப்பாட்டம் அல்லது உள்ளிருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. ஆனால் அவர்கள் அரசாங்கத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகளை மீண்டும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

மோடி மற்றும் அவருடைய அரசாங்கத்தை போர்க்குணமிக்க விவசாயிகள் திணறடித்துக்கிறார்கள் என்பது தெளிவானது.

குறைந்தபட்ச சலுகைகளை வழங்கு முன்வருவதன் மூலமும் மற்றும் அரசியல் ஸ்தாபதனத்தின் பல்வேறு பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அதிகமான சலுகை படைத்த விவசாயிகளை பெரும் எண்ணிக்கையில் தலைவர்களைக் கொண்ட விவசாயிகளின் குழுக்களுக்குள் உள்ள பிரிவுகளைப் பயன்படுத்தியும் அவர்களின் நெருக்கடியை தீர்ப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள். சமூக கோபத்தின் ஒரு பெரும் வெடிப்பு குறிப்பாக அது தொழிலாள வர்க்கத்திடமிருந்தது வருவதற்கான ஒரு பெரும் தூண்டுதலாக இருக்கும் என்று கருதுகின்றனர், அதனால் விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை தடுப்பதற்கு பாஜக பெரும்பாலும் மோசமான மதவெறியுடன் எதிர்கட்சிகளை வசைபாடினாலும், அவர்களுடையை உதவியை நாட எண்ணுகிறது.

கடந்த வாரம், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் அமித் ஷா ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் முடிவில், “தேசிய பாதுகாப்புக்கு” ஆபத்தில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சமரசத்தை நாடுவதற்கு அரசாங்கம் மற்றும் விவசாயிகள் இருவரையும் அந்த காங்கிரஸ் தலைவர் கேட்டிருந்தார்.

விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை வன்முறையாக நசுக்குவதற்காக அரசியல்ரீதியாவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் தயாரிப்புகளை அரசாங்கம் செய்துவருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. விவசாயிகள் போராட்டங்களுக்கு அரசாங்கத்தின் பதிலிறுப்புக்காக கலந்துரையாடுவதற்கு பெரும்பாலான மூத்த பாஜக அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவனத்தை கவர்கிற வகையில் ஆஜராகிவிடுகிறார்.

அரசாங்கத்தின் ஆரம்பகட்ட பதிலிறுப்பு அபார அடக்குமுறையாக இருந்துள்ளது. இது அவசியம் நினைவுகூரப்பட வேண்டும். நவம்பர் 26-27 களில் மத்திய அரசாங்கமும் மற்றும் ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் பாஜக மாநில அரசாங்கங்களும் டெல்லிக்கு அருகில் விவசாயிகள் வருவதைத் தடுப்பதற்கு ஒரு மிகப்பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தது. துணை இராணுவப் படைகள், கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களை பயன்படுத்தினாலும், ஹரியானவில் குற்றவியில் விதி 144 பிரிவை அமுல்படுத்தியிருந்தது அதன்படி நான்கு பேருக்கு மேல் கூடும் அனைத்து கூட்டங்களும் சட்டவிரோதமானது என்றதுடன் மேலும் நூற்றுக்கணக்கானவர்களையும் கைது செய்தது, டெல்லியின் எல்லைக்கு பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் சேர்ந்துவருவதைத் தடுப்பதில் அதிகாரிகள் தோல்வி கண்டனர். அங்கே, அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய பட்டாளத்தை சந்தித்தனர்.

செவ்வாய் அன்று நடந்த பாரத் பந்த் சமயத்தில் என்ன தயாரிப்புகளை மேற்கொண்டிருந்ததோ அதே பாணியில் அரசாங்கம் செயல்பட்டது. பிரிவு 144 டெல்லி முழுவதும் மற்றும் ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்திலும் அமுல்படுத்தியது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருக்கும் டெல்லி காவல்துறை டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் அரவிந்த கேஜ்ரிவாலை நகரின் சிங்கு எல்லை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அவர் சந்தித்த காரணத்திற்காக பின்னர் அவரை வீட்டுக் காவலில் வைத்தது.

உத்திரப் பிரதேசத்தில் (உ.பி) பாஜக முதலமைச்சரும் இந்து மேலாதிக்கவாதியுமான யோகி அதியானந், அவருடையை அரசியல் எதிர்கட்சியான சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பிற சமஜ்வாடி கட்சியின் தலைவர்களை பாரத் பந்த் பேரணியில் கலந்துகொள்வதற்காக சென்றதால் தற்காலிக தடுப்புக் காவலில் வைத்தார். தலித் உரிமைகளுக்காக இருக்கும் அமைப்பான பீம் ஆர்மி யின் தலைவர் சந்திரசேகர் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து தடுப்பதற்காக அவரையும் உ.பி. காவல்துறை காவலில் வைத்தது.

நேற்று, வேளாண் “சீர்திருத்த” சட்டங்களுக்கு மிகவும் நேரடி பொறுப்பாக இருக்கும் பாஜக அமைச்சர்களான மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரோசாஹேப் டான்வே ஆகியோர் விவசாயிகள் எதிர்ப்பு போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்குவதற்கு தயார் செய்வதற்கான வெளிப்படையான முயற்சியில் ஒரு சாக்குபோக்கு சொல்லி தேசத்துரோகத்தனமாக அதனைக் அவதூறு செய்ய முயன்றனர்.

“இந்த எதிர்ப்பு போராட்டத்தை நடத்துபவர்கள் விவசாயிகள் அல்ல” என்று மகாராஷ்டிராவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் டான்வே கூறியுள்ளார். “இதற்குப் பின்னால் சீனாவும் பாகிஸ்தானும் செயல்படுகிறது…. இது மற்ற நாடுகளின் சதியாக இருக்கிறது”. பின்னர் மத்திய வேளாண் அமைச்சர் தோமர் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் யார் எல்லாம் செயற்படுகிறார்கள் என்பதை விசாரணை செய்யுமாறு ஊடகங்களை கேட்டுக்கொண்டார்.

“ஊடகங்களின் கண்கள் கூர்மையானவை அதனால் நாங்கள் அதைக் கண்டுபிடிப்பதற்கு அவர்களிடம் விட்டுவிடுகிறோம்”

தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போன்ற தொழிலாள வர்க்கத்தின் பெயரில் பேசுவதாகக் கூறும் அமைப்புகளின் துரோகத்தனமான பங்குதான் மோடி அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்கிறது.

மோடி அரசாங்கத்திற்கும் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தின் பின்னால் விவசாயிகளையும் அனைத்து கிராம மக்களையும் அனைத்துக்கும் மேலாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளை - ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அரசியல் நெருக்கடிகளில் தலையிடுவதிலிருந்து தொழிலாள வர்க்கத்தை தடுப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்,

சிபிஎம் இன் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் சிபிஐ-உடன் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகிய ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் மற்றும் இணைந்த தொழிற்சங்கங்கள் செவ்வாய்கிழமை நடந்த பாரத் பந்த் சமயத்தில் தொழிலாளர்களை வேலையில் பணியாற்றுமாறும் அறிவித்ததிருந்ததுடன் மேலும் அவர்கள் விவசாயிகளுக்கான போராட்ட பேரணியில் பங்குபற்றி ஒரு ஆதரவு தெரிவிப்பதற்கும் தடுத்து வைத்திருந்தது

தற்போதுவரை இந்திய முதலாளித்துவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியும் மற்றும் முதலாளித்துவ சார்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட காலமாக முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பல்வேறு வலதுசாரி பிராந்தியவாத மற்றும் சாதிய கட்சிகளுக்கும் பின்னால் மோடிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளை திசைதிருப்புவதற்கு சிபிஎம் மற்றும் சிபிஐயின் நீண்டகால முயற்சிகளுடன் இது சேர்ந்து செயல்பட்டுவருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஸ்ராலினிச கட்சிகள் காங்கிரஸுடனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுகவுடனும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் (Nationalist Congress Party - NCP) மற்றும் பிற வலதுசாரிக் கட்சிளுடனும் சேர்ந்து புதன்கிழமை விவசாயிகள் போராட்டத்திற்க்கு பாசாங்குத்தனமாக ஆதரவை அறிவிக்கும் ஒரு அறிக்கையை அளித்திருக்கிறது. புதன்கிழமை மாலையில், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ தலைவர் டி.ராஜா இருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஒரு சில எதிர்கட்சி தலைவர்களுடன் இணைந்து வேளாண் மசோதாக்கள் பற்றிய அவர்களுடைய குறைகளை பாஜகவின் ஒரு சவாரி குதிரையாக இருக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இடம் அளித்திருக்கின்றனர்.

வெறுக்கப்பட்ட மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு ஒரு வெகுஜன இயக்கம் மற்றும் அரசியல் பொது வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றின் எழுச்சிக்கு சிபிஎம் யெச்சூரியும் சிபிஐ ராஜாவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு, விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை “அரசியலாக்குவதற்கு” தாங்கள் விரும்பவில்லை என அவர்கள் இருவரும் அறிவித்துள்ளனர்.

“போராட்டக் களங்களிலிருந்து விலகி நிற்பது என்பது எங்களுடைய ஒரு நனவுபூர்வமான தீர்மானம்” என்று யெச்சூரி கூறியுள்ளார். “விவசாயிகளின் குழுக்கள் இந்த வழியில் நாங்கள் இருப்பதைத் தான் அவர்கள் விரும்புவதாக அவர்களாகவே எங்களிடம் கூறினார்கள். எனவே போராட்ட களத்தில் கட்சி பதாகைகளை நாங்கள் வைத்திருக்கவில்லை. சிபிஐ ராஜா இன்னும் மேலே போய் வெளிப்படையாக கூறினார் “நாங்கள் இதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை (விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை)” என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், சமூக எதிர்ப்பின் எழுச்சியால் அச்சமடைந்துள்ள ஒரு ஆளும் வர்க்கத்திற்குள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெடிக்கும் தன்மை கொண்ட தலையீட்டிற்கான சாத்தியம் இருக்கும் நிலையில் அரசு அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு அதரவு அதிகரித்துவருகிறது. என்ஐடிஐ ஆயோக் (NITI Aayog) என்ற இந்திய அரசாங்கத்தின் சிந்தனைக் குழுமத்தின் தலைவர் அமிதாப் காந்த், செவ்வாய்கிழமையன்று நடந்த இணையவழி நிகழ்ச்சியொன்றில், “தயாரிப்பு உற்பத்தி செய்யும் தேசமாக” சீனாவுக்கு எதிராக இந்தியா போட்டியிட வேண்டுமென்றால், “இன்னும் பல சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும்” எனக் கூறினார். “கடுமையான” சீர்திருத்தங்கள் “இந்திய சூழலில் மிகவும் கடினம்”, ஏனெனில் “நாங்கள் மிக அதிகமான ஒரு ஜனநாயகமாக இருக்கிறோம்” என்று பின்னர் புகாரும் கூறியுள்ளார்.

Loading