முதலாவது பொது முடக்கத்திற்குப் பின்னர், 10 பேர்களில் 9 COVID-19 வைரஸ் தொற்றாளர்களை பிரெஞ்சு பரிசோதனை அமைப்புமுறை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பர் 21 திகதியன்று, நேச்சர் (Nature) விஞ்ஞானப் பத்திரிக்கை ஒரு கூர்ந்து-மறுமதிப்பாய்வு செய்யப்பட்ட ஒரு விரைவான கட்டுரையை வெளியிட்டது, அதனுடைய தலைப்பாக "பிரான்சில் COVID-19 வைரஸ் தொற்றாளர்களை கண்டறியுதலின் கீழ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதை அச்சுறுத்துகிறது" என்று இருந்தது. ஆய்வறிக்கையில், கியுலியா புல்லானோ (Giulia Pullano) தலைமையிலான தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் மே 11 திகதியிருந்து ஜூன் 28 முடிவு வரை, பொது முடக்க நடவடிக்கைகளில் பிரான்சில் ஏழு வாரங்களில் வைரஸின் மதிப்பிடப்பட்ட பரவலை விளக்குவதற்கு கணித மாதிரியைப் பயன்படுத்துகின்றனர். இந்த வைரஸின் இந்த மதிப்பிடப்பட்ட பரவலின் அளவை, இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் பரிசோதனை மற்றும் தடய அமைப்புமுறையின் செயல்திறனை அளவிட பதிவு செய்யப்பட்ட தொற்றுக்குள்ளானவர்களுடன் அவர்கள் ஒப்பிடுகின்றனர்.

இந்த காலகட்டத்தில், Santé publique France (பிரான்சின் பொது சுகாதார அமைப்பு) ஒரு நாளைக்கு சில நூறு வைரஸ் தொற்றாளர்களை பதிவு செய்தது. இருப்பினும், பிரான்சின் பரிசோதனை அமைப்புமுறை 90,000 COVID-19 வைரஸ் அறிகுறியுடைய நோய்த் தொற்றாளர்களை தவறவிட்டதாக ஆய்வறிக்கை ஆசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். இது அறிகுறியுடைய தொற்றாளர்களில் 86 சதவீதமாகும். இருப்பினும், பல தொற்றாளர்கள் அறிகுறி வெளித்தெரியாதவர்கள் என்பதால், இந்தக் காலகட்டத்தில் உண்மையான நோய் கண்டறிதல் விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கலாம்.

A nurse holds a phone while a COVID-19 patient speaks with his family from the intensive care unit at the Joseph Imbert Hospital Center in Arles, southern France, Wednesday, Oct. 28, 2020. (AP Photo/Daniel Cole)

வைரஸை இந்த மிகப் பெரிய கண்டறிதலின் கீழ், ஒரு பரிசோதனையின் பற்றாக்குறையினால், முதல் அலைக்குப் பின்னர் தற்போது நாட்டைச் சுற்றியுள்ள பேரழிவுகரமான இரண்டாவது அலைகளை தடுப்பதற்கும் மற்றும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிர்கள் மரணிப்பதையும், பிரான்சில் வைரஸை முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கான உண்மையான சாத்தியத்தை நீக்கியுள்ளது. மே 11 அன்று முதலாவது பொது முடக்க முடிவின் பின்னர், 36,621 மக்கள் வைரஸால் இறந்துள்ளனர். பிரான்சில் மொத்தமாக COVID-19 வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 63,000 ஆக உள்ளன.

நேச்சர் பத்திரிகையுடன் இணைந்து வெளியிடப்பட்ட ஒரு கருத்துரையில், கொலம்பியா பல்கலைக்கழக வைராலஜிஸ்ட் ஜெஃப்ரி ஷாமன் கூறினார்: "ஒட்டுமொத்த பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறையின் சரியான ஏற்பாடு 65 மில்லியன் மக்களை சுற்றி இந்த நாட்டில் வெற்றிகரமாக வைரஸினைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன." "பல நாடுகள், தலைமைத் தோல்விகள், கலாச்சார அல்லது நிறுவன தடைகள் அல்லது எளிய சோர்வு ஆகியவற்றின் விளைவாக, வைரஸின் கட்டுப்பாட்டை அடைவதற்கான அல்லது பராமரிப்பதற்கான அவற்றின் முயற்சிகளில் தோல்வியடைந்துள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஏழு வார காலத்தில், COVID-19 வைரஸ் போன்ற அறிகுறிகள் கொண்டவர்களில் 31 சதவீதத்தினர் மட்டுமே ஒரு மருத்துவரை கலந்தாலோசித்தனர் என்று அந்த ஆய்வறிக்கை கண்டறிந்தது. பிரெஞ்சு மக்களில் பெரும்பான்மையினருக்கு, இந்தக் காலகட்டத்தில் ஒரு பரிசோதனையை பெறுவதற்கு முன் ஒரு மருத்துவச் சீட்டுக்காக ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த பைசாண்டிய (பொறுப்பற்ற) செயல்முறை "சுகாதார பராமரிப்புக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் கொண்ட சமூகங்களுக்கு பாதகமாக இருக்கலாம், மற்றும் பரிசோதனை விகிதங்களைக் குறைத்திருக்கலாம்" என்று ஷாமன் முடிவு செய்தார்.

1 சதவிகித பரிசோதனைகள் மட்டுமே தொற்றிருப்பதாக உறுதிப்படுத்தும் முடிவு என்பது பெருந்தொற்று நோயைப் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்று இது அறிவுறுத்துகிறது. ஏழு வார காலம் முழுவதும், தொற்றுப் பரிசோதனைகளின் விகிதம் 1 சதவீதத்தை தாண்டவில்லை. எப்படியிருந்தாலும் வைரஸ் பரவி வருவதால், பரிசோதனை செய்வதில் பாரிய அதிகரிப்பு-அத்தியாவசியமற்ற உற்பத்தி, சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுத்தப்படுவதோடு-வைரஸைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் முக்கியமானது என்பதைக் காட்டுகின்றன. ஒரு தடுப்பூசி உற்பத்தியுடன் கூட, வரப்போகின்ற ஆண்டில் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற இது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

பெருந்தொற்று நோய்க்கு பதிலளிக்கும் விதமாக, பிரெஞ்சு அரசாங்கத்தின் மோசமான புறக்கணிப்பு குற்றவியல் கொள்கைக்கான ஒரு கடுங்குற்றச்சாட்டு இந்த ஆய்வறிக்கையின் கண்டுபிடிப்புகளாகும், அதாவது, மக்கள்தொகை முழுவதும் வைரஸ் பரவும்போது இலாபங்களை அது பாதுகாக்கிறது. ஆரம்ப பொது முடக்க நடவடிக்கைகளின் முன்கூட்டியே முடிவிற்கு கொண்டுவந்தமை, பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறப்பது, மற்றும் கீழான நிதியளிப்பு மற்றும் தகுதிகுன்றிய பரிசோதனை முறை ஆகியவைகள் வைரஸின் கொடிய மீளெழுச்சியை தவிர்க்க முடியாததாக ஆக்கியது.

திடீர் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவிய பின்னர், ஜனாதிபதி மக்ரோன் மார்ச் 16 திகதியன்று பொது முடக்கம் செய்வதாக அறிவித்தார். பெருவணிகத்தின் இலாபக் கோரிக்கைகளால் இயக்கப்பட்ட பிரெஞ்சு அரசாங்கமானது மே 11 அன்று பொது முடக்கத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு, தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்பத் தள்ளியது. இந்த பொறுப்பற்ற கொள்கையானது அப்போது விஞ்ஞானிகளால் விமர்சிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பிரான்சில் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" எட்டப்பட்டிருக்கலாம் என்று பல ஊடகங்கள் ஆதாரமற்ற முறையில் ஊகம் செய்தன. பாஸ்டர் நிறுவனம் (Pasteur Institute) இந்த கூற்றுக்களை மறுத்து, மக்கள்தொகையில் 4.4 சதவிகிதத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற மதிப்பீட்டை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தனர்: “எங்கள் முடிவுகள் ஒரு தடுப்பூசி இல்லாமல், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதை பொது முடக்கத்தை முடிவிற்கு கொண்டுவந்தது காட்டுகிறது. மே 11 திகதிக்குப் பின்னர் திறமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.”

வைரஸ் இனி அச்சுறுத்தலாக இல்லை என்று தொழிலாளர்களுக்கு பொய்யாக உறுதியளிக்கும் வகையில் பரிசோதனை மற்றும் தடமறிதலின் விரைவான விரிவாக்கத்தை அரசாங்கம் அறிவித்தது. சீனா மற்றும் தென் கொரியா போன்ற கூர்மையான ஆரம்ப வெடிப்புகள் இருந்த நாடுகளில் கடுமையான பொது முடக்கங்களுடன் இணைந்த பரிசோதனை மற்றும் தடமறிதல் நடவடிக்கைகளின் வெற்றியானது வைரஸை திறம்பட கட்டுப்படுத்துவதைக் காட்டியது.

மக்ரோன் கூறினார், "மே 11-ந் திகதி தொடங்கிய இந்த நடவடிக்கையை (பொது முடக்கத்தை முடிவிற்குள்ளாக்குதல்) ஒரு வெற்றியாக மாற்றுவதற்கான ஒரு புதிய முறையை நாம் கொண்டுள்ளோம்." அப்போதைய பிரதமர் எட்வார்ட் பிலிப் அவரது அரசாங்கத்தின் மூலோபாயமாக "பாதுகாத்தல், பரிசோதித்தல், தனிமைப்படுத்தல்" என்று விவரித்தார். ஆனால் இந்த முறையானது புதிய நோயாளிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளைத்தான் கண்டறிந்தது.

தொழிலாளர்கள் நோய்ப் பரிசோதனைக்கு அணுகுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் தடைகள், மக்ரோனும் அவரது அமைச்சர்களும் பரிசோதனை திறன் குறைவாக இருப்பதை அறிந்திருப்பதாகக் கூறுகின்றன. மே 11 திகதி முதல், பெரும்பாலான பிரெஞ்சுக்காரர்கள் ஒரு பரிசோதனையைப் பெறுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரிடமிருந்து ஒரு மருத்துவச் சீட்டு பெற வேண்டியிருந்தது. சுகாதார அமைப்பு சேவையை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க இது அவசியம் என்று அரசாங்கம் கூறியது; உண்மையில், இது வேண்டுமென்றே நடத்தப்பட வேண்டிய பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஒரு தடையை விதித்தது.

ஆகஸ்ட் 23 திகதி வரை வாராந்திர 700,000 பரிசோதனைகளின் இலக்கை எட்டவில்லை. அதற்குள், வைரஸ் கட்டுப்பாட்டை மீறி, இரண்டாவது அலையானது நன்றாக பரவிக் கொண்டிருந்தது. செப்டம்பர் 11 ம் திகதி, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ், பரிசோதனை திறன் அதன் எல்லைக்கு நீட்டிக்கப்பட்டதால் மருத்துவ ஊழியர்களுக்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவித்தார். செப்டம்பர் 16 திகதியன்று, பிரான்சின் தெற்கிலுள்ள 20 பரிசோதனை நிலையங்களின் ஊழியர்கள் மோசமான ஊதியம் மற்றும் மிகக் கடுமையான பணி நிலைமைகள் குறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 17 க்குள், பிரான்சின் தொற்றுக்குள்ளாகியிருப்பதை உறுதி செய்த பரிசோதனை சதவீதம் 5 சதவீதத்தை தாண்டியது: WHO வழிகாட்டுதல்களின்படி, 1 சதவீத தொற்றுக்குள்ளாகியிருப்பதை உறுதி செய்யும் பரிசோதனை அளவுகோளின் அடிப்படையில், வைரஸ் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. செப்டம்பர் மாதத்தில், பரிசோதனை முடிவுகளைப் பெற 12 நாள் தாமதத்திற்கு சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரனை மக்ரோன் கண்டித்தார். அந்த நேரத்தில், பல மக்கள் பரிசோதனை முடிவுகளைப் பெறவில்லை என்று கூறினார்கள்.

அக்டோபர் 12 க்குள், தொற்றை உறுதி செய்த பரிசோதனை விகிதம் 10 சதவீதத்தை தாண்டியது: அதாவது தினசரி பல்லாயிரக்கணக்கான தொற்றை உறுதி செய்த பரிசோதனைகள் திருப்பி வருகின்றன. இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் கூர்மையான உயர்வுக்கு முன்னதாக இருந்தது, அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தினசரி மரணங்கள் நிகழ்ந்தன. இந்த அளவுப்படி புதிய தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் இருப்பதால், தொடர்பு கண்டறிதல் சாத்தியமற்றதாக இருந்தது.

செப்டம்பர் இறுதியில், COVID-19 வைரஸின் தொடர்ச்சியான மீளெழுச்சிக்கு மத்தியில், அரசாங்கம் அதனுடைய 2021 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது. இதில் 9.8 பில்லியன் யூரோக்கள் மட்டுமே அவசர சுகாதார செலவினங்களுக்காகச் சென்றது, அதே நேரத்தில் இன்னும் 42 பில்லியன் யூரோக்கள் மற்றும் ஒரு வரிவெட்டு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

பள்ளிகளும் தொழிற்சாலைகளும் திறந்த நிலையில் இருந்த நவம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதியான பொது முடக்க நடவடிக்கைகள் வைரஸ் பரவுவதைத் தடுக்கவில்லை. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அவர்கள் மேலும் தளர்த்துவது புதிய ஆண்டில் மேலும் இறப்புக்கள் அதிகரிப்பதற்கான காட்சியைத்தான் அமைக்கிறது.

மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கையானது முதலாவது பொது முடக்கத்தின் கீழே பெற்றுக்கொண்ட ஆதாயங்களை குறைத்துவிட்டது என்று நேச்சர் பத்திரிகை காட்டுகிறது. மே மாதம், ஒரு ஐரோப்பா தழுவிய அடிப்படையில் பரிசோதனையின் போதுமான விரிவாக்கமானது பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் வைரஸை ஒழித்துக்கட்ட முடியும். மாறாக, பில்லியன் கணக்கான யூரோக்கள் வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டது, பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, மற்றும் போதுமானதாக இல்லாத பரிசோதனை மற்றும் கண்காணிப்பு வைரஸினைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள அதனுடைய சகாக்களைப் போலவே, மக்ரோன் அரசாங்கமும் பெருந்தொற்று நோய்க்கு பதிலிறுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் இலாபங்களை உயிர்களுக்கு முன்னால் வைத்தது. COVID-19 வைரஸ் இறப்புகளின் குளிர்கால எழுச்சி மட்டுமே நடந்து வருகிறது, ஆனால் நூறாயிரக்கணக்கான காப்பாற்றக்கூடிய மரணங்களானது இந்த மோசமான புறக்கணிப்பு கொள்கையால் ஏற்கனவே மரணங்களுக்கு வழிவகுத்துவிட்டது.

ஆளும் வர்க்கத்தின் விஞ்ஞான-விரோத விடையிறுப்புக்கு எதிராக, முதலாளித்துவ உயரடுக்கின் இலாபத்திற்கான அக்கறைகளால் தடையற்ற பெருந்தொற்று நோய்க்கு விடையிறுக்கும் வகையில் கிடைக்கக்கூடிய சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை பயன்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டம் இருக்க வேண்டும்.

Loading