வலதுசாரி ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவால்னியின் பின்னால் பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிஸ்டுகள் அணிதிரண்டு நிற்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP), வலதுசாரி ரஷ்ய எதிர்க் கட்சி நபர் அலெக்ஸி நவால்னியையும் மற்றும் நவால்னி ரஷ்யாவுக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டதால் தூண்டப்பட்ட புட்டின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் உற்சாகமாக ஆதரித்துள்ளது.

அலெக்ஸி நவால்னி [ஆதாரம்: Wikimedia Commons]

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தகவல் அதிகாரி மார்க்கோ வல்புவேனா (Marco Valbuena) ஆல் வெளியிடப்பட்ட அறிக்கை, “புட்டினின் பாசிச ஆட்சிக்கு எதிராக, குறிப்பாக சர்வாதிகாரி தனது அதிகாரத்தை நாடுவதன் மூலம் தனது அதிகாரத்தை மூன்றாவது தவணை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு எதிராக, ரஷ்யாவில் வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிடுகின்றது.

இந்த அறிக்கை, புட்டின் மற்றும் அவரது "கொடுங்கோன்மை, ஊழல் மற்றும் குற்றவியல் ஆட்சி" ஆகியவற்றைக் கடுமையாக கண்டித்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஆதரிக்கப்படும் "விமர்சகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்" நவால்னியை முற்றிலும் விமர்சிக்கவில்லை. உண்மையில், பைடென் நிர்வாகத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று நவால்னியின் விடுதலையைக் கோருவதாக இருந்தது.

புட்டின் ஆட்சியின் குற்றவியல் தன்மை எதுவாக இருந்தாலும், நவால்னியைப் பற்றி முற்போக்கானது எதுவும் இல்லை. இறுதி ஆய்வில், அவர் அதே முதலாளித்துவ நலன்களை-ரஷ்ய முதலாளித்துவத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறார். "ஊழல்" மற்றும் "வஞ்சகர்கள் மற்றும் திருடர்கள்" ஆகியோருக்கு எதிரான அவரது வார்த்தையாடல்கள் வெறுமனே பொருளாதார சிக்கனத்தை சுமத்துவது, நிறுவனங்களுக்கு வரி வெட்டு மற்றும் அவற்றின் தேவைகளை பூர்த்திசெய்ய மற்றும் அரசுக்கு பகுதியளவில் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றின் இரக்கமற்ற, சந்தை சார்பு நிகழ்ச்சி நிரலை மறைப்பதற்கான முயற்சிகளாகும்.

புட்டினுடனான நவால்னியின் வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானதாகும். ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவிற்காக அவர் பேசுகிறார். மேலும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பைக் விரும்பும் அப்பிரிவின் பொருளாதார அபிலாஷைகள், புட்டின் மற்றும் அவரது கூட்டாளிகளால் தடுக்கப்படுகின்றன. கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா அளிக்கும் ஆதரவை அவர் எதிர்த்ததுடன், புட்டினின் சீன ஜனாதிபதியுடனான உறவை விமர்சித்தார்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான நவால்னியின் அவமதிப்பு ரஷ்யாவிற்குள் தீவிர வலதுசாரி சக்திகளுடனான அவரது தொடர்புகளினால் சுருக்கமாக எடுத்துக்காட்டப்படுகிறது. அங்கு அவர் பல சந்தர்ப்பங்களில் தீவிர வலதுசாரி அணிவகுப்புகளில் உரையாற்றினார். நாட்டின் பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த நிகழ்வான Russian March அமைப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

நவால்னியை ஆதரிப்பதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உக்ரேனில் 2014 வலதுசாரி மற்றும் வெளிப்படையான பாசிச அடுக்குகளை நம்பியிருந்த சதித்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முயல்கின்றன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஏகாதிபத்திய ஆதரவுடைய “வண்ணப் புரட்சிகளின்” மற்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் 2010 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த World Fellowship திட்டத்தில் நவால்னி பங்கேற்றார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் இவை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது தற்செயலானது அல்ல. இது நவால்னியை துல்லியமாக ஆதரிக்கிறது, ஏனெனில் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுடன் அணிவகுத்து நிற்கிறது. இப்பிரிவு துணை ஜனாதிபதி லெனி ரோப்ரெடோ (Leni Robredo) மற்றும் அவரது தாராளவாத கட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் நோக்கங்களை சற்றும் இரகசியமாக வைத்திருக்கவில்லை. ரஷ்ய ஆர்ப்பாட்டங்களை பின்பற்ற "ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களுக்கும்" வேண்டுகோள் விடுக்கிறது. "பிலிப்பைன்ஸ் மக்கள் அனைத்து வகையான அடக்குமுறைகளுக்கும், 'சா-சா' (cha-cha) போன்ற வெவ்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அல்லது 2022 ஆம் ஆண்டில் அவரது இலட்சிய மகள் சராவை (Sara) அரியணையில் அமரவைப்பதற்கும் பெரும் எண்ணிக்கையில் செயல்பட வேண்டும்," என்று அது அறிவிக்கிறது. "சா-சா" என்பது 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிற்க உதவும் வகையில் அரசியலமைப்பை மாற்ற டுரேற்ற மேற்கொண்ட முயற்சியைக் குறிக்கிறது.

டுரேற்ற மீதான பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டனங்கள் முற்றிலும் இழிந்தவை. ஸ்ராலினிஸ்டுகள் 2016 இல் அவரது தேர்தலை ஆதரித்தனர் மற்றும் அவரது நிர்வாகத்துடன் ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்க முயன்றனர். மேலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது கொலைகார "போதைப்பொருட்களுக்கு எதிரான போரை" ஆதரித்தனர். இராணுவத்தின் அழுத்தத்தின் கீழ் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அல்ல, டுரேற்றவே அதனுடனான உறவுகளை முறித்துக் கொண்டு, பின்னர் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் கிராமப்புற கெரில்லாக்களுக்கு எதிராக ஆயுதப்படைகளைத் திருப்பினார்.

ஒரு சந்தர்ப்பவாதத்தைப் பற்றி, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி இப்போது டுரேற்றவுக்கு எதிராக லெனி ரோப்ரெடோ மற்றும் தாராளவாத கட்சி தலைமையிலான முதலாளித்துவ அரசியல் எதிர்ப்பு பிரிவோடு அணிதிரண்டுள்ளது. டுரேற்றவின் ஆதரவைத் திரும்பப் பெறவும், ரோப்ரெடோவை பதவியில் இருத்தவும் இராணுவத்தின் அதிருப்தி அடைந்த அமெரிக்க சார்பு பிரிவுகளுக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரஷ்யாவில் நவால்னியைப் போலவே, பிலிப்பைன்ஸில் உள்ள தாராளவாத கட்சியும் தற்போதைய ஆட்சியுடன் முதன்மையாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாக தந்திரோபாய வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இது பெய்ஜிங்குடனான உறவுக்காக டுரேற்றவை பலமுறை விமர்சித்து, அவரை சீனாவின் கைப்பாவை என்று முத்திரை குத்தியது.

ஜனாதிபதியாக டுரேற்றவின் முன்னோடியும், தாராளவாத கட்சியைச் சேர்ந்த பெனிக்னோ ‘நொய்னோய்’ அக்கினோ (Benigno ‘Noynoy’ Aquino), தென்கிழக்கு ஆசியாவில் சீனாவிற்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான “ஆசியாவில் முன்னிலை” கொள்கையின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். அவர் அமெரிக்காவுடன் ஒரு நீண்டகால இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதன் இராணுவப் படைகள் பிலிப்பைன்ஸ் இராணுவ தளங்களை கிட்டத்தட்ட தடையின்றி அணுக அனுமதித்தார்.

வாஷிங்டனுடனான கூட்டில், அக்கினோவின் கீழ் அரச வழக்குத்தொடுனரான ஃப்ளோரின் ஹில்பே, தென் சீனக் கடலில் சீன பிராந்திய உரிமைகோரல்களுக்கு எதிரான பிலிப்பைன்ஸ் வழக்கை, ஹேக்கில் உள்ள நிரந்தர நீதிமன்ற நடுவர் முன் கொண்டுவருவதற்கு பொறுப்பாக இருந்தார். அவர் இப்போது தாராளவாத கட்சி செனட்டராக உள்ளார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து இப்போது தாராளவாத கட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் அக்பயன் (Akbayan), ஒரு மூர்க்கமான சீன எதிர்ப்புவாத அமைப்பாகும். தாராளவாத கட்சி செனட்டரான அக்பயனின் பிரதிநிதி ரிசா ஹொன்டிவெரோஸ், சீன கடலோர காவல்படையினரால் ஒரு பிலிப்பைன்ஸ் மீனவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து “சீனாவின் கொடுமைப்படுத்துதலை” கண்டிக்க இந்த வாரம் டுரேற்றக்கு அழைப்புவிட்டார். "இது, தன்னை ஒரு மத்தியகால இராச்சியம் மற்றும் ஒரு பேரரசு என்று இன்னும் கருதும் ஒரு நாட்டின் ஆணவமாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மோதல்” என்று அவர் அறிவித்தார்.

எந்தவொரு புதிய தாராளவாத கட்சி ஆட்சியும், ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தை மிதிப்பதில் டுரேற்றவைப் போலவே இரக்கமற்றதாக இருக்கும். கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக ஒட்டுமொத்தமாக பிலிப்பைன்ஸ் முதலாளித்துவம் ஒரு ஆழமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொள்கிறது. அங்கு 500,000 க்கும் அதிகமான தொற்றுக்கள் மற்றும் 10,000 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன. இது இந்தோனேசியாவுக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது.

1998 ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக 2020 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 9.5 சதவிகிதம் சுருங்கியுள்ளது. இது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் மீது புதிய சகிக்க முடியாத சுமைகளை சுமத்தியது. வெகுஜன எதிர்ப்பின் எந்தவொரு வெடிப்பையும் அடக்குவதற்கான அவர்களின் தீர்மானத்தில் ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றுபட்டுள்ளன.

எந்தவொரு எதிர்ப்பு இயக்கத்தையும் லெனி ரோப்ரெடோ மற்றும் தாராளவாத கட்சியின் கைகளில் திசைதிருப்ப முதலாளித்துவத்தின் ஒரு முக்கிய அரசியல் கருவியாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை நிலைநிறுத்துகிறது. இதுவும் டுரேற்ற ஆட்சியைப் போலவே உழைக்கும் மக்களுக்கு பேரழிவுகளை விளைவிக்கும்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுகிய சந்தர்ப்பவாத சூழ்ச்சிகள் வெறுமனே "தவறுகள்" அல்ல. அவை பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச இரண்டு கட்டப் புரட்சி தத்துவத்திலிருந்து நேரடியாக உருவெடுக்கின்றன. இது தொழிலாள வர்க்கத்தையும் பரந்துபட்ட விவசாய மக்களையும் முதலாளித்துவத்தின் இல்லாத "முற்போக்கான" பிரிவுக்கு அடிபணியச் செய்கிறது மற்றும் சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டத்தையும் நீண்ட எதிர்காலத்துக்கு தள்ளுகிறது.

ஸ்ராலினிசத்திற்கு ஒரே முற்போக்கான மாற்றீடு ட்ரொட்ஸ்கிசம் ஆகும். அதாவது, இன்று நான்காம் அகிலத்தின் அனைத்து குழு (ICFI) போராடும் உண்மையான மார்க்சிசம் ஆகும்.

நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி, பிலிப்பைன்ஸ் போன்ற முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள முதலாளி வர்க்கம் வெகுஜனங்களின் எந்த ஜனநாயக அபிலாஷைகளையும் சமூகத் தேவைகளையும் பூர்த்திசெய்ய இயல்பாக இலாயக்கற்றது என்று வலியுறுத்தினார். உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக சமூகத்தின் சோசலிச மாற்றத்தைத் தொடங்கும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில் அந்த பணிகள் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகின்றன.

இந்த முன்னோக்குக்காக போராட, பிலிப்பைன்ஸில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை உருவாக்குவது அவசியம். இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க எங்களை தொடர்பு கொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Loading