பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

சில்வியா அகலோஃப் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை

பகுதி - 1

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 20, 1940 இல், லியோன் ட்ரொட்ஸ்கி மெக்சிகோ நகர புறநகர்ப் பகுதியான கொயோகானில் ஸ்ராலினிச முகவர் ரமோன் மெர்காடர் (Ramón Mercader) ஆல் படுகொலை செய்யப்பட்டார். சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) உறுப்பினரான சில்வியா அகலோஃப் (Sylvia Ageloff) உடனான தனது உறவின் மூலம் மெர்காடர் இந்த சிறந்த புரட்சியாளரை அணுகுவது சாத்தியமானது. படுகொலைக்குப் பின்னர், அகலோஃப் தன்னை மெர்காடெரின் போலித்தனத்தின் ஒரு அப்பாவி பலியாகக் காட்டிக் கொண்டார், இக்கூற்று SWP இனால் ஒருபோதும் சவால் செய்யப்படவில்லை. பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கியின் படுகொலை சூழ்நிலைகள் இரகசியமாகவே வைக்கப்படிருந்தன.

இந்த தொடர் கட்டுரைகள் ட்ரொட்ஸ்கி இயக்கத்தின் அகலோஃப் ன் பங்கு பற்றிய முதலாவது முறைப்படியான விசாரணையாகும். மேலும் இது, பாதுகாப்பும் நான்காம் அகிலத்தின் விசாரணையும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளையும் தொடர்கிறது. இது நான்கு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

முகவுரை

1940 ஆகஸ்ட் 20 பிற்பகலில், ஸ்ராலினிச முகவர் ரமோன் மெர்காடர் மெக்சிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியான கொயோகானில் லியோன் ட்ரொட்ஸ்கி மீது ஒரு கொலை முயற்சியை மேற்கொண்டார். மறுநாள் மாலை, தாக்குதலின் 26 மணி நேரம் கழித்து, 1917 அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவர் மெர்காடெரால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் இறந்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் கொலை 20 ஆம் நூற்றாண்டின் மிகுந்த தாக்கம் மிக்க அரசியல் படுகொலை ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மார்க்சிச தத்துவவாதியாகவும் மற்றும் புரட்சிகர தலைவராக லெனினுக்கு இணையாக மதிப்பிடப்பட்ட மனிதனை சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரித்தது. 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியின் மரணம், அதனை கடுமையாக பலவீனப்படுத்தியதுடன், மேலும் எதிர்வரவிருந்த பல தசாப்தங்களாக உலக சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியை பாதிப்பிற்கு உட்படுத்தியது.

சோவியத் ஸ்ராலினிச ஆட்சியின் பொய்யான மறுப்புகள் இருந்தபோதிலும்கூட, கொலையாளி சோவியத் ஒன்றியத்தின் இரகசிய பொலிஸ்துறையான GPU வின் முகவர் என்றே உலகம் முழுவதும் உடனடியாக கருதப்பட்டது. ஆனால் 35 ஆண்டுகளாக, சதித்திட்டத்தின் பரந்த அளவையும், ஸ்ராலினிச ஆட்சியால் படுகொலைகளைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட முகவர்களின் வலைப்பின்னல் பற்றி உலகம் மிகக் குறைவாகவே அறிந்திருந்தது. "ஜாக் மோர்னார்ட்" (Jacques Mornard) என்றும் "ஃபிராங்க் ஜாக்சன்" (Frank Jacson) என்றும் அழைக்கப்பட்ட அந்த மனிதனின் உண்மையான அடையாளம் 1950 வரை உறுதியாக நிறுவப்படவில்லை. ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்கு முக்கியமாக பொறுப்பான அரசியல் கட்சியும் அப்போது நான்காம் அகிலத்திற்கு ஆதரவாக இருந்த அமெரிக்க பிரிவான அமெரிக்க சோசலி தொழிலாளர் கட்சி (SWP), தாக்குதலுக்கு முந்தைய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை உலக அளவில் ஊடுருவியிருந்த GPU மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கணிசமான விசாரணையை மேற்கொள்ளத் தவறியது மட்டுமல்லாமல், அதன் சொந்த அமைப்பின் உயர் மட்டத்தினுள் GPU ஊடுருவலை ஏற்றுக்கொள்ள மறுத்த்துடன் அதற்கான ஆதாரங்களை நேரடியாக மூடிமறைத்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் GPU மற்றும் எஃப்.பி.ஐ உளவாளிகளின் ஊடுருவலை அம்பலப்படுத்துவதை விட்டாலும் அது பற்றிய எந்தவொரு குறிப்பும்கூட, SWP தலைவர்களால் "முகவர்-ஆத்திரமூட்டல்" என்று கண்டிக்கப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கி (1879-1940)

மே 1975 இல், ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) விசாரணையைத் தொடங்கியது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அதன் கண்டுபிடிப்புகள், படுகொலையில் ஈடுபட்ட GPU முகவர்களின் சர்வதேச வலையமைப்பையும் ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்குப் பின்னர் பல தசாப்தங்களாக SWP இனுள் தொடர்ந்தும் இருந்த முகவர்களையும் அடையாளம் கண்டது.

அனைத்துலகக் குழுவின் பணிகளை நாசமாக்குவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை தொடர்ந்ததுடன் மற்றும் அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

விசாரணையை ஆரம்பிப்பதற்கான முடிவைத் தொடர்ந்து, படுகொலை தொடர்பாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் வைப்பு செய்யப்பட்ட முக்கியமான வெளியிடப்படாத அமெரிக்க அரசாங்க ஆவணங்களை, Workers Press இன் (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் செய்தித்தாள்) ஆசிரியர் அலெக்ஸ் மிட்செல் கண்டுபிடித்தார். ஆகஸ்ட் 1975 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதி டேவிட் நோர்த், சான் பிரான்சிஸ்கோவில் இருந்த மார்க் ஸ்பொரோவ்ஸ்கியை (Zborowski) கண்டுபிடித்ததுடன் புகைப்படமும் எடுத்தார். 1941 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்பு 1930 களில், ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ், ட்ரொட்ஸ்கியின் இரண்டு அரசியல் செயலாளர்களான எர்வின் வொல்ஃப் மற்றும் ருடொல்ஃப் கிளெமென்ட் மற்றும் GPU இலிருந்து வெளியேறி நான்காம் அகிலத்திற்கு தனது ஆதரவை அறிவித்த இக்னாஸ் ரைஸ் ஆகியோரை ஸ்ராலினிச படுகொலைக்கு வழிவகுத்த தகவல்களை வழங்குவதில் ஸ்பொரோவ்ஸ்கி ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் சர்வதேச விசாரணையின் ஆரம்ப முடிவுகளை 1975 இன் பிற்பகுதியில், ஜி.பீ.யூ எவ்வாறு ட்ரொட்ஸ்கியை கொலை செய்தது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

டிசம்பர் 1976 இல், மிட்செல்லும் நோர்த்தும் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் படுகொலையைச் சுற்றியிருந்த நிகழ்வுகளுக்கு சாட்சிகளாக இருந்தவர்களை பேட்டி கண்டனர். அமெரிக்காவில் விசாரணைகளின் மேலதிக முன்னேற்றம், 1938 முதல் 1947 வரை SWP தலைவர் ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளரான இருந்த சில்வியா கால்ட்வெல் (née Callen) ஒரு GPU முகவர் என்பதை நிரூபித்தது. 1937 முதல் 1940 வரை மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராகவும், 1979 இல் இறக்கும் வரை SWP இன் முக்கிய தலைவராக இருந்த ஜோசப் ஹான்சன், ஒரு GPU முகவராகவும் பின்னர் FBI தகவலளிப்பவராகவும் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கண்டுபிடித்தது. ஒரு உளவாளியாகவும், அரசாங்க தகவலறிவிப்பவராகவும் இருந்த அவரது செயல்பாடு எதிர்பார்த்த மாதிரியே, ஜோசப் ஹான்சன் தான் SWP தலைமையில் பல தசாப்தங்களாக "முகவர்-ஆத்திரமூட்டல்" என்ற கருத்தின் மிகவும் உறுதியான எதிர்ப்பாளராக செயல்பட்டார். GPU (பின்னர் KGB என அழைக்கப்பட்டது) மற்றும் FBI ஆகியவற்றின் சீர்குலைக்கும் மற்றும் கொலைகார நடவடிக்கைகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாதுகாப்பைப் பாதுகாக்க முயன்றவர்களை "சித்தப்பிரமை" பிடித்தவர்கள் என்று முத்திரை குத்துவதும் அவரது முயற்சிகளில் அடங்கும்.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் இன் ஆரம்பகால கண்டுபிடிப்புகள் 1975 மற்றும் 1978 க்கு இடையில் வெளியிடப்பட்டன. பிற்கால நிகழ்வுகள் குறிப்பாக சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் அரசாங்க உளவு பார்ப்பதற்கு எதிராக ஆலன் கெல்ஃபாண்ட் ஆரம்பித்த வழக்கு மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் நான்காம் அகிலத்தின் விசாரணையின் மிக முக்கியமான கூறுகளை முழுமையாக உறுதிப்படுத்தின. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட GPU-KGB இரகசிய பொலிஸ் ஆவணங்கள் மூலம் கிடைத்தவற்றால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

மிக அண்மையில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் இன் கண்டுபிடிப்புகளையும், மெக்சிகோவில் உள்ள அரசு காப்பகங்களிலிருந்து வெளியிடப்பட்ட கூடுதல் ஆவணங்களையும் பயன்படுத்திய சுயாதீன ஆராய்ச்சியாளர்களின் பணிகள் முக்கியமான ஆதாரங்கள் ட்ரொட்ஸ்கியின் படுகொலை எவ்வாறு திட்டமிடப்பட்டு, மேற்கொள்ளப்பட்டது என்பதையும் மிகவிபரமாக விளங்கிக்கொள்வதை சாத்தியமாக்கியது.

இந்த புதிய தகவலை பகுப்பாய்வு செய்வது, சில்வியா அகலோஃப்பின் தனிப்பட்ட பின்னணி மற்றும் ஒரு SWP உறுப்பினராக இருந்தபோது அவரது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ரமோன் மெர்காடருடனான அவரது நெருங்கிய பணிரீதியான உறவு ஆகியவற்றுடன் இணைந்து அனைத்துலக் குழுவால் இப்போது ட்ரொட்ஸ்கியின் படுகொலையை ஒழுங்கமைப்பதில் அகலோஃப் வகித்த முக்கியமான பங்கைப் பற்றிய துல்லியமான விபரத்தை வழங்க முடிகிறது.

ட்ரொட்ஸ்கியை அணுகுவதற்காக மெர்காடரால் பயன்படுத்தப்பட்ட அகலோஃப் ஒரு அப்பாவி பலியாள் என்ற 80 ஆண்டுக்கு முந்திய சவால் செய்யப்படாத கதையை தொடர்ந்து வரும் அறிக்கை மறுக்கிறது. இந்த பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட சித்தரிப்பு படுகொலை செய்யப்பட்ட உடனேயே அகலோஃப் மற்றும் மெர்காடர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். "அப்பாவி சில்வியா" என்ற நம்பமுடியாத கதையால் மறைக்கப்பட்ட உண்மையான உண்மைகள் ஒருபோதும் தீவிரமாக ஆராயப்படவில்லை. இந்த விபரிப்பு ஒரு கட்டுக்கதையின் அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் இந்த கட்டுக்கதைக்கு உண்மையில் எந்த அடித்தளமும் இல்லை.

இந்தக் கட்டுக்கதையை ஏற்றுக்கொள்வதற்கு, அகலோஃப்-மெர்காடர் உறவின் மிகவும் சந்தேகத்திற்குரிய மற்றும் நம்பமுடியாத அம்சங்களை மிகவும் அப்பாவித்தனமான மற்றும் அரசியல் சாராத முறையில் விளக்கமளிப்பது அவசியமாக இருக்கிறது. அகலோஃப் "விதியின் பொம்மை" என்று காட்டப்பட வேண்டியிருந்தது. வழிகாட்டி இல்லாத ஒரு பெண், வாழ்க்கையில் கண்மூடித்தனமாக அலைந்து திரிகிறாள். அவள் மோசமான முட்டாள்த்தனமாக இருந்ததால், மர்மமான வாழ்க்கைக் கதையின் வெளிப்படையான மற்றும் வினோதமான முரண்பாடுகளை மற்றும் செயல்பாடுகளை கொண்டிருந்த, அவளுடன் இருந்த மனிதனுடன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள்.

ஆனால் இந்த கட்டுக்கதையை, உண்மையான வரலாற்றின் புறநிலைரீதியான மீளாய்வினால் பிரதியீடு செய்யப்பட்டவுடன், புரூக்ளினிலிருந்து வந்த இளம் பெண் முற்றிலும் மாறுபட்ட வெளிச்சத்தில் காட்சியளிக்கிறார். 1938 முதல் 1940 வரை, எந்தவொரு அப்பாவித்தனமான விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதளவிற்கு, ட்ரொட்ஸ்கியை சுற்றி வளைத்துக் கொல்லும் GPUவின் முயற்சிகளை, தொடர்ந்து முன்னெடுக்ககூடியவாறான முன்கூட்டி தயாரிக்கப்பட்ட நடத்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

படுகொலைக்கான தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும், மெர்காடரை ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடனும் இறுதியில், கொயோகானில் உள்ள பலமாக பாதுகாக்கப்பட்ட மாளிகைக்குள்ளும் உள்நுழைப்பதில் சில்வியா அகலோஃப் தவிர வேறு யாரும் தீர்க்கமான பங்கைக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய விசாரணையில் எட்டப்பட்ட முடிவு என்னவென்றால், அகலோஃப் ஒரு GPU முகவர் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ரமோன் மெர்காடரின் உடந்தையாளருமாவார்.

1940 ஆம் ஆண்டில், மெக்சிகன் காவல்துறை இந்த படுகொலை தொடர்பான சமகால ஒரேயொரு விசாரணையை நடத்தி மற்றும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் அகலோஃப் ஒரு உடந்தை என்பதை கண்டறிந்தது. மெக்சிகன் அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்து, கொலை குற்றச்சாட்டு சுமத்தி மற்றும் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்க அதிகாரிகளின் இராஜதந்திர தலையீட்டால் அகலோஃப் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், SWP அகலோஃப் பற்றிய மெக்சிகன் விசாரணையைப் பற்றிய அறிக்கைகளை கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை மற்றும் அது பற்றி தெரிவிக்காது இருளில் வைத்திருந்தது. ட்ரொட்ஸ்கியின் கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சங்கிலியில் அகலோஃப் இன் சுயவிளக்கத்தைப்பற்றி கேள்வி எழுப்ப SWP தவறிவிட்டது. எனவே தற்போதைய விசாரணையின் ஆரம்பத்தில் "அப்பாவி சில்வியா" என்ற கட்டுக்கதையை ஆராய்வதன் மூலம் தொடங்க வேண்டும்.

சில்வியா அகலோஃப்பின் கட்டுக்கதை

அகலோஃப் மற்றும் மெர்காடர்

நிகழ்வுகளின் வழக்கமான பதிப்பின் படி, சில்வியா அகலோஃப் புரூக்ளினிலிருந்து வந்த ஒரு அப்பாவி மற்றும் அமைதியான சமூக சேவகி ஆவார். பாசத்திற்காக வெளிப்படையாக ஏங்கிக்கொண்டிருந்த இளம் SWP உறுப்பினர், ஜாக் மோர்னார்ட் உடன் விரைவாக மோகமுற்றார். இது கொலையாளி பயன்படுத்திய பல மாற்றுப்பெயர்களில் ஒன்றும், மேலும் அவர்கள் சந்தித்தபோது அவர் பயன்படுத்திய பெயருமாகும். அவர் அகலோஃப்பின் உணர்ச்சி பாதிப்புகள் மற்றும் அனுபவமின்மையை கொடூரமாக தனக்கு சுரண்டினார், இறுதியில் ட்ரொட்ஸ்கியின் வீட்டுக்குள் தான் நுழைவதற்கு அவளை ஏமாற்றினார்.

அகலோஃப் கவனக்குறைவாக உருவாக்கிய பாதுகாப்பு துளை ஒன்றை துல்லியமாக மெர்காடர் படுகொலை செய்ய பயன்படுத்திக் கொண்டார். இந்த விவரிப்பின்படி, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்த மோர்னார்ட்டுடனான ஒரு நெருக்கமான உறவின் போது, அவர் விபரித்த ஆரம்பக்கதையில் இருந்த வெளிப்படையான முரண்பாடுகளை கவனிக்கவில்லை அல்லது நிராகரித்திருந்தார். அதில் பல பெயர்களின் பயன்பாடு, அவரது குடும்ப பின்னணி பற்றிய வெளிப்படையான பொய்கள், மர்மமான வணிக நடவடிக்கைகள் மற்றும் பெரிய அளவிலான பணம் எங்கிருந்து வந்தது என்பதை விவரிக்க முடியாததும் உள்ளடங்கியிருந்தது.

அனைவருக்கும் தெரிந்த மூன்று குரங்குகள் கதைபோலவே, அவை அனைத்தும் ஒரு நபரில் ஒன்றுதிரண்டிருந்தது, அகலோஃப் எந்த தீமையையும் காணவில்லை, எந்த தீமையையும் கேட்கவில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக எந்த தீமையும் செய்யவில்லை.

இந்தக் கதை, -அகலோஃப்பின் செயல்களின் விளைவுகளுக்கு எந்தவொரு குற்றவியல் பொறுப்பையும் அவளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது- முதலில் மெர்காடரால் கண்டுபிடிக்கப்பட்டது. "சில்வியாவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று மெர்ககாடர் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் விசாரணையாளர்களிடம் கூறினார். [1] மெர்ககாடர் 1978 இல் கியூபாவில் இறக்கும் வரை அவ்வாறு கூறியதை கைவிடவில்லை. அவரது சகோதரர் லூயிஸ் மெர்காடர் பின்னர் ரமோன் மெர்காடரைப் பற்றி கூறுவார்: "அவர் ஒருபோதும் தனக்கு துரோகமிழைக்கவில்லை." [2] அவரது வழக்கறிஞர் எட்வார்டோ செனிசெரோஸ், மெர்காடரின் மரணத்திற்குப் பின்னர் “அவர் எவ்வாறான கடுமையான நிலைமைகளை அனுபவித்தபோதும் எதையும் எவரிடமும் ஒப்புக் கொள்ளவில்லை” என்று ஒத்துக் கொண்டார். [3]

ஸ்ராலினிச இரகசிய பொலிசாருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மெர்காடர் மறுத்தபோதிலும், அகலோஃப்புக்கு கொலையாளி வழங்கிய போலிக்காரணம், "அப்பாவி சில்வியாவின்" பரிதாபகரமான பிம்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

மெர்காடரின் துரோகத்தால் அதிர்ச்சியடைந்த அகலோஃப் வெறித்தனமாகிவிட்டார், மேலும் தாக்குதலை விசாரிக்கும் மெக்சிகன் பொலிஸ் அல்லது அமெரிக்க கூட்டாட்சி முகவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என்று பலகாலமாக கூறப்பட்டு வந்தது. அகலோஃப் தான் ஒரு விசுவாசமான SWP உறுப்பினர் என்றும் அவர் புரிந்து கொள்ளத் தயாராக இல்லாத ஒரு நாடகத்தில் சிக்கிவிட்டதாக கூறிக்கொண்டு வந்தார். அதிர்ச்சிக்குள்ளானதாகத் தோன்றிய அகலோஃப், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை விட்டு வெளியேறினார், மீண்டும் ஒருபோதும் தீவிர அரசியலில் தோன்றவில்லை. படுகொலை செய்யப்பட்ட உடனேயே, மெக்சிகோ அரசாங்கத்தைத் தவிர, யாரும் மற்றும் குறைந்தது SWP கூட படுகொலையாளரால் அகலோஃப் இற்கு வழங்கிய போலிக்காரணத்தை விமர்சன ரீதியாக ஆராய்வதில் குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை.

இக்குற்றம் குறித்த இரண்டு முக்கிய திரைப்படங்களான ஜோசப் லூசியின் The Assassination of Trotsky (1972) மற்றும் அன்டோனியோ சவர்ரியாஸ் இன் The Chosen (2016) கொலை சதி பற்றிய அவர்களின் விளக்கத்தில் இக்கட்டுக்கதை முக்கிய இடத்தை பிடித்தன. அகலோஃப்பைப் பொறுத்தவரை, அவர் தனது வாழ்நாளின் மீதமுள்ள 55 ஆண்டுகளை வசதியாக அநாமதேய பெயரில் கழித்தார். இறுதியில் ஒரு வசதியான மன்ஹாட்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அகலோஃப் 1995 ஆம் ஆண்டில் தனது 86 வயதில் இறக்கும்போதும், 20 ஆம் நூற்றாண்டின் சோகத்தில் அவர் எப்படி இத்தகைய முக்கியமான பாத்திரத்தை வகிக்க வந்தார் என்பதற்கான விரிவான விளக்கத்தை விட்டுவைக்கவில்லை.

சில்வியா அகலோஃப் [Photo: Public domain]

ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தை கவனமாக மறுபுனரமைக்கையில் மறுக்கமுடியாத ஒரு உண்மை வெளிப்படுகிறது: நிகழ்வுகளின் சங்கிலியிலிருந்து அகலோஃபை அகற்றினால், ஆகஸ்ட் 20, 1940 இல் எந்த படுகொலையும் நடந்திருக்காது. சில்வியா அகலோஃப் உடனான அவரது உறவின் மூலம் கிடைத்த பாதுகாப்பு துளை இல்லாமல், மெர்காடரினால் ட்ரொட்ஸ்கியின் குடியிருப்பினுள் நுழைய முடிந்திருக்காது. படுகொலைக்கு முன்னதாக, “உண்மையில் சில்வியாவின் வருங்கால கணவன் யார்?” என்று கேட்கப்பட்டிருக்குமானால், மெர்காடர் மற்றும் அகலோஃப் இருவரையும் சுற்றியுள்ள ஒருதொகை கேள்விகளுக்கான கதவு திறக்கப்பட்டிருக்கும். மே 24, 1940 இல் ஸ்ராலினிச முகவர்களின் தோல்வியுற்ற ட்ரொட்ஸ்கியின் கொலை முயற்சிக்குப் பின்னர் நிச்சயமாக "ஜாக் மோர்னார்ட்-ஃபிராங்க் ஜாக்சனின்" பின்னணி பற்றிய மேலோட்டமான ஒரு விசாரணை கூட அவரை சந்தேகத்திற்கு இலக்காக்கி, ட்ரொட்ஸ்கியை அவர் அணுகுவதை துண்டித்திருக்கும். மற்றும் சில்வியா அகலோஃப் அவரை ஏன் அழைத்து வந்தார் என்ற கேள்வியை எழுப்பியிருக்கும்.

ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்கு ஆறு வாரங்களுக்குப் பின்னர், செப்டம்பர் 28, 1940 அன்று ஒரு SWP கூட்டத்தொடருக்கான ஒரு உரையில், SWP தலைவர் ஜேம்ஸ் பி. கனன் இதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒப்புக் கொண்டார்:

கடந்த காலத்திலிருந்து ஒரு நீடிப்பாக இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கவனக்குறைவு உள்ளது. முன்னணி பதவிகளில் கூட அதிலிருந்தவர்களின் கடந்த காலத்தைப் பற்றி நாம் ஆழமாக ஆராயவில்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், யாரை மணந்தார்கள் முதலியவற்றை விசாரிக்கவில்லை. கடந்த காலங்களில் ஒரு புரட்சிகர அமைப்புக்கான அடிப்படையான இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்ட போதெல்லாம், "கடவுளே, நீங்கள் தோழர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவுகின்றீர்கள்!" என குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு கூச்சலிட்டது. ஆமாம், அதுதான் நாங்கள் செய்துகொண்டிருந்தோம், அல்லது இன்னும் சரியாகச் செய்வோம் - செய்வதாக அச்சுறுத்துகிறோம் - கடந்த காலத்தில் எதுவும் வரவில்லை. இதுபோன்ற விஷயங்களை இன்னும் கொஞ்சம் கவனமாக சோதித்திருந்தால், கடந்த நாட்களில் சில மோசமான விஷயங்களை நாங்கள் தடுத்திருக்கலாம். [4]

விரிவாகக் கூறாத கனனின் கருத்துக்கள், கொயோகானில் ட்ரொட்ஸ்கியைச் சுற்றியுள்ள நபர்களையும் கட்சியில் "முன்னணி பதவிகளில்" இருப்பவர்களையும் விசாரிக்க SWP தவறிவிட்டது என்பதற்கான ஒப்புதலாகும்.

மேலும் கேள்விகளைக் கேட்பது அவசியம் என்றும் “விஷயங்களை இன்னும் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்” என்றும் கனன் கூறினார். இதை ஆகக்குறைந்தது ஒரு குறைமதிப்பீடாகும். கனன் அந்த வார்த்தைகளைப் பேசியபோது, சில்வியா அகலோஃப் படுகொலை குற்றச்சாட்டில் மெக்சிகன் பொலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால் கனனின் நடவடிக்கைகள் அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழத் தவறிவிட்டன. ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்குப் பின்னர் அகலோஃப் குறித்து SWP முழு மவுனத்தைக் காத்து, அவர் அநாமதேயமாக வாழ அனுமதித்தது. அதன் செய்தித்தாளான The Militant, படுகொலைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்ட்டதைப் பற்றி தெரிவிக்கவில்லை. 1950 ஆம் ஆண்டில் அமெரிக்கர் அல்லாதோரின் நடவடிக்கைக்கான காங்கிரஸ் விசாரணையின் முன் அகலோஃப் தோன்றியபோதும் அவரின் வாக்குமூலம் பற்றி அது கவனம் எடுக்கவில்லை.

கட்டுக்கதைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்: சில்வியா அகலோஃப் யார்?

இந்த விசாரணை சில்வியா அகலோஃப் தொடர்பான முக்கியமான கேள்விகளை ஆராய்கிறது: அவரது குடும்ப பின்னணி என்ன? அவரது அரசியல் வரலாறு என்ன? நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மூலமாக ஸ்ராலினிஸ்டுகளுடன் அவருக்கு தனிப்பட்ட தொடர்புகள் இருந்ததா? அவர் இயக்கத்திற்கு எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டார், ட்ரொட்ஸ்கிக்கு அவர் அருகாமையில் இருப்பதை நியாயப்படுத்துவதற்கு, அவ்வாறு ஏதாவது இருந்தால் அதற்காக காரணம் என்ன? மெக்சிகோவில் உள்ள அதிகாரிகள் அகலோஃப் குற்றத்திற்குரியவர் அல்லது குற்றமற்றவர் என்று நம்பியதா? அகலோஃப்பின் போலிக்காரணங்களுடன் உண்மை காரணிகள் எவ்வாறு ஒத்துப்போகின்றன?

இந்த கேள்விகளுக்கு இப்போது ஒரு உண்மை வரலாற்றுப் பதிவை வரைவதன் மூலம் பதிலளிக்க முடியும். இதில் அகலோஃப்பின் குறிப்பிடத்தக்க கல்விப் பயிற்சி, பத்திரிகை அறிக்கைகள், அகலோஃப் மற்றும் மெர்காடரை அறிந்தவர்களின் சமகால அவதானிப்புகள், அகலோஃப் மற்றும் மெர்காடரின் மெக்சிகன் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அகலோஃப் குடும்பத்தின் அறிக்கைகள், படுகொலை தொடர்பான வெளியீடுகள், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் இன் விசாரணையால் கண்டுபிடிக்கப்பட்ட FBI அறிக்கைகள் மற்றும் பிற மதிப்புமிக்க தகவல்கள் அடங்கும்.

மெக்சிகோவின் கூட்டாட்சி குற்றவியல் துறையால் வெளியிடப்பட்ட மற்றும் முக்கிய மெக்சிகன் குற்றவியல் நிபுணர் மார்ட்டின் கேப்ரியல் பாரன் க்ரூஸ் (National Institute of Penal Sciences of Mexico, 2018) இனால் எழுதப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியின் கொலை பற்றி அமைச்சரவை நடவடிக்கை பற்றிய ஸ்பானிய மொழியில் செய்யப்பட்ட ஆய்வுகளையும் இந்த ஆய்வு பயன்படுத்துகின்றது.

இந்த வேலையில் மெக்சிகன் வரலாற்றில் மிக முக்கியமான குற்றவியல் விசாரணையின் விரிவான பின்னோக்கிய பகுப்பாய்வு உள்ளது. மேலும் அகலோஃப் மற்றும் மெர்காடருக்கு எதிரான குற்றவியல் வழக்கில் முக்கியமான சட்ட வழக்குகளின் மறுஉருவாக்கமும் அடங்கும். அகலோஃப் மற்றும் மெர்காடர் உள்ளிட்ட முக்கிய சாட்சிகளின் விசாரணை படியெடுப்புகளின் பின் இணைப்பு இதில் உள்ளது.

இந்த கட்டுரை இரண்டு முக்கியமான ஸ்பானிய மொழி புத்தகங்களான: கிரிகோரியோ லூரி எழுதிய The Promised Sky: A Woman at the Service of Stalin (Editorial Ariel, 2016); எட்வார்ட் புய்க்வென்ட்ஸ் லோப்பேஸ் எழுதியது Ramón Mercader: The Man of the Piolet (Now Books, 2015) ஆகியவற்றிலிருந்தும் தகவல்களை குறிப்பிடுகின்றது.

இந்த தெளிவான பதிவின் அடிப்படையில், கட்டுக்கதை சில்வியா அகலோஃப்பை உண்மையான நபருடன் ஒப்பிடுவது சாத்தியமாகின்றது.

"அப்பாவி சில்வியா" என்ற கட்டுக்கதையின் நிலைக்கும்தன்மைக்கு இந்த ஆளுமையை விமர்சன ரீதியாக ஏற்றுக்கொள்வது தேவைப்படுகிறது. அதாவது இது ஒரு அப்பாவி, அனுபவமற்ற சமூக சேவகி. அதாவது, Miss Lonelyhearts இற்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் ஒரு வகை நபர், இது அவரை சோசலிச தொழிலாளர் கட்சியுடன் இணைத்தது மற்றும் பின்னர் கற்பனை சினிமா கதைகளில் பிரபலமானது என்பவற்றை நம்பவேண்டும். இந்த கட்டுக்கதையின் நிலைத்தன்மை ஒருபோதும் கேள்விக்குட்படுத்தப்படுவதைப் பொறுத்தது, ஏனென்றால் உருவாக்கப்பட்ட ஆளுமைக்கு அகலோஃப் உண்மையில் யார் என்பதோடு எந்த தொடர்பும் இல்லை.

இந்த விசாரணைக்கு அகலோஃப் குடும்பத்தினை பற்றி ஆராய்வதுடன் தொடங்வது அவசியமாகும்.

சில்வியா அகலோஃப்

1909 ஆம் ஆண்டில் பிறந்த சில்வியா அகலோஃப், சாமுவல் அகலோஃப் (1884-1972) மற்றும் வீட்டில் ரஷ்ய மொழியில் உரையாடும் குடியேறிய ரஷ்யரான அன்னா மாஸ்லோ (1881-1930) ஆகியோரின் மகளாவார். சாமுவல் பைலோருசியாவின் லெபோல்வில் பிறந்து, 1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, 1902 இல் அன்னாவை மணந்தார். அன்னாவின் மரணத்திற்குப் பின்னர், சாமுவல் மறுமணம் செய்து கொண்டார்.

சாமுவல் அகலோஃப் நியூயோர்க் நகரில் ஒரு பணக்கார நில-கட்டிட தொழிலதிபர் ஆனார். The Two Sisters of Coyoacán என்ற தலைப்பில் அகலோஃப் சகோதரிகளின் வாழ்க்கையைப் பற்றிய கற்பனையான கதையை எழுதிய ரொபேர்ட்டா சாடோவின் கூற்றுப்படி:

1917 வரை அவர் குடும்ப வீடுகளை மறுவடிவமைப்பதில் முக்கியமாக ஆர்வம் காட்டினார், ஆனால் பின்னர் பொது வாகனத்தரிப்பிடங்கள் கட்டுவதில் முன்னோடியாக இருந்தார். அவர் கோனி தீவு மற்றும் பென்சன்ஹர்ஸ்டில் குடியிருப்புகளையும் பிளாட்புஷ் அவென்யூவில் கடைகளையும் கட்டினார். பின்னர், அவர் வில்லியம்ஸ்பேர்க்கில் அடுக்குமாடி வீடுகளை கட்டினார் மற்றும் அலுவலக கட்டிடங்களை தொண்ணூற்றொன்பது ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்தார் மற்றும் Academy of Music இற்கு எதிரே ஒரு அலுவலக கட்டிடம் உட்பட அலுவலகங்களை வாடகைக்கு கொடுத்தார். [5]

சாடோவின் கதை கற்பனையானது என்றாலும், சாமுவல் அகலோஃப் பற்றி அவர் சேகரித்த பின்னணி தகவல்கள் உண்மையில் துல்லியமானவை. சாமுவல் அகலோஃப் கோனி தீவில் 48 வீடுகளையும், பென்சன்ஹர்ஸ்டில் 65 வீடுகளையும், புரூக்ளினில் உள்ள பிளாட்ப்புஷ் அவென்யூவில் பல கடைகளையும் கட்டியதாக அவரது ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில் கிழக்கு மூன்றாம் தெரு மற்றும் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு அகலோஃப் கோபுரங்களை அவர் கட்டினார். [6]

Brooklyn Daily Eagle பத்திரிகையில், 1923 இல் சாமுவேல் அகலோஃப்பின் விளம்பரம்

"இது மிகவும் பணக்கார குடும்பம்" என்று உலக சோசலிச வலைத் தளத்திற்கு சாட்டோவ் கூறியுள்ளார். [7] வெற்றிகரமான வணிகர் என்பதற்கு அப்பால், குடும்பத்தில் கலைஞர்கள் மற்றும் உளவியலாளர்கள் இருந்தனர். உலக சோசலிச வலைத் தளம் அகலோஃப்பின் உறவினரும், உளவியல் நிபுணருமான ஆமி ஃபெல்ட்டுடன் உரையாடியது. சகோதரிகள் பிராங்கோ-ரஷ்ய ஓவியர் மார்க் சகால் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவரும் “தேவைகளின் வரிசைமுறை” (“hierarchy of needs”) தத்துவத்தை உருவாக்கிய உளவியலாளர் ஆபிரகாம் மஸ்லோ ஆகியோருடன் தொடர்புடையவர்கள் என்று கூறினார்.

அகலோஃப்க்கு, லிலியன் (1902-1986), ஹில்டா (1906-1997), சில்வியா (1909-1995), ரூத் (1913-2009) என்று நான்கு மகள்களும், ஆலன் (1903-1997) மற்றும் மொன்டே (1907-1965) என்று இரண்டு மகன்களும் இருந்தனர். சில்வியா ஒரு அரசியல்மயமான குடும்பத்திலிருந்து வந்தவரும், மூன்று சகோதரிகளும் தங்கள் இளமை பருவத்தில் சோசலிச அரசியலில் நுழைந்தனர்.

ஹில்டா அகலோஃப்

Brooklyn Daily Eagle பத்திரிகை, செப்டம்பர் 2, 1931 அன்று, ஹில்டா அகலோஃப் சோவியத் ஒன்றியத்திற்குப் பயணம் செய்ததாகவும், சோவியத் ஒன்றியத்தின் பொதுக் கல்வி ஆணையத்தில் உறுப்பினராக இருந்த லெனினின் விதவை மனைவியான நடேஷ்டா குருப்ஸ்காயாவை பேட்டி கண்டதாகவும் எழுதியது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியால் அவரது ஆதரவாளர்கள் துன்புறுத்தப்படுகையிலும், ட்ரொட்ஸ்கி துருக்கிக்கு நாடுகடத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த பயணம் நடந்தது. ட்ரொட்ஸ்கியிடம் அனுதாபம் கொண்டிருந்த குருப்ஸ்காயா, நீண்ட காலத்திற்கு முன்பே இடது எதிர்ப்பாளர்களை கண்டிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தார்.

Brookyln Daily Eagle, செப்டம்பர் 2, 1931

 

Brooklyn Daily Eagle பின்வருமாறு எழுதியது:

198 வெஸ்ட்மின்ஸ்டர் சாலையில் வாழ்ந்த அகலோஃப் இன்று அவரது மூன்றரை மாத ரஷ்ய பயணத்தின் உயர் கட்டமாக இருந்த திருமதி லெனினுடனான தனது நேர்காணலைப் பற்றிக் கூறினார்.

மழலையர் பள்ளி மற்றும் நகரங்களில் உள்ள குழந்தைகளைப் பராமரிக்கும் மழலையர் பள்ளி மற்றும் பாலர் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் முற்போக்கான கல்வியின் புதிய முறைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளும் செல்வி. அகலோஃப் திருமதி லெனினிடம் பல கேள்விகளை கேட்க விரும்பினார்.…

ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்வது எளிதல்ல. வெளிநாட்டு செய்தித்தாள்களின் பல நிருபர்கள் மறுக்கப்பட்டனர்… ஆனால் சிரமங்கள் நீங்கி, ஒரு நாள் செல்வி. அகலோஃப் தனது இரட்சகராக ரஷ்யா மதிக்கும் மனிதனின் மனைவியின் முன்னிலையில் தன்னைக் கண்டார்.

ஹில்டா அகலோஃப் பின்வருமாறு மேற்கோளிட்டுள்ளார்: "புரட்சிக்குப் பின்னர் அவர்கள் இந்த வேலையைத் தொடங்கும்போது அது சாத்தியமில்லாததாக இருந்தது. ஆனால் கம்யூனிசத்தின் கொள்கைகளுக்கு மக்கள் வென்றிருக்கிறார்கள் என்று திருமதி லெனின் நம்புகிறார்."

கட்டுரை பின்வருமாறு முடிந்தது: "செல்வி.அகலோஃப் திருமதி லெனினின் சில உற்சாகத்தை பகிர்ந்து கொள்கிறார். மேலும் முற்போக்கான கல்வி இயக்கத்துடன் மேலும் பணியாற்ற ரஷ்யாவுக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறினார்."

டிசம்பர் 27, 1931 இல், நியூ யோர்க் டைம்ஸ் ஹில்டா அகலோஃப்பின் இன் பெயரில் “சோவியத் முன்பள்ளி வேலைகளில் முன்னேறியுள்ளது: பெரும் முன்னேற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்த விடயம் ஞாயிற்றுக்கிழமை தொடரின் "நவீன கல்வி உலகின் போக்குகள் மற்றும் அலைகள்" என்ற தலைப்பில் முதன்மைக் கட்டுரையாக இருந்தது.

அவரது கட்டுரை நாட்டின் கல்வி முறையின் ஸ்ராலினிச சார்பு நிலைப்பாடு மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினை பெருமைப்படுத்தல் ஆகும். இக்கட்டுரை ஒரு ஸ்ராலினிச அல்லது ஒரு ஸ்ராலினிச ஆதரவாளரால் மட்டுமே எழுதப்படக்கூடிய ஒன்றாகும்.

"லுனாச்சார்ஸ்கி பொதுக் கல்வி ஆணையர் என்பதில் இருந்து பதவி நீக்கம் செய்ததிலிருந்து" சோவியத் ஒன்றியத்தில் "அதிகாரிகள்" மேற்கொண்ட முன்னேற்றங்களை அகலோஃப் அறிக்கை குறிப்பாக பாராட்டியது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ட்ரொட்ஸ்கியுடன் தொடர்புடைய எவரையும் ஒதுக்கி வைக்கும் அதிகாரத்துவத்தின் முயற்சியில் அனட்டோலி லுனாச்சார்ஸ்கி 1929 இல் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஹில்டா அகலோஃப்பின் கட்டுரை, "அதிகாரிகள் இப்போது தலைமை தொழில்துறை மையங்கள் மற்றும் கூட்டு பண்ணைப் பகுதிகளில் ஒரு உறுதியான கட்டிடத் திட்டத்தைத் தொடங்கினர்" என்ற உண்மையை பாராட்டினர். ஸ்ராலினிச கட்டுக்கதைகளை விமர்சனமின்றி முன்னேற்றி, அவர் பின்வருமாறு எழுதினார்: "அதிகாரிகள் கடுமையாக போராடுகிறார்கள்" மற்றும் "ஒரு பெரிய, மனிதாபிமான பணியை" செய்து வருகின்றனர். பிராவ்தா பாணியில், "அடுத்த ஐந்தாண்டு திட்டத்தின்" வெற்றி "இளம் கம்யூனிஸ்டுகள், எதிர்கால பெற்றோர்களைப் பொறுத்தது" என்று ஹில்டா எழுதினார்.

தொழில்முறை மற்றும் கலாச்சார பரிமாற்ற நோக்கங்களுக்காக சில அமெரிக்கர்கள் இந்த காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு பயணிக்க முடிந்தாலும், சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கியமான நபர்களிடையே லெனினின் விதவையுடன் அரச கல்வி கொள்கையைப் பற்றி விவாதிக்க ஒரு சந்திப்பை அமைப்பது, Brooklyn Daily Eagle குறிப்பிட்டதுபோல் "ஏற்பாடு செய்வது எளிதல்ல." சோவியத் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில், அதாவது ஸ்ராலினாலேயே ஒப்புதல் வழங்கப்படாமல் ஹில்டா அகலோஃப் லெனினின் விதவை மனைவியை சந்திக்க முடியாது. அகலோஃப் குடும்பத்தை, சோவியத் அதிகாரிகள் நம்பியதாலேயே அவரது பயணம் சாத்தியமானது.

ஐரோப்பாவுக்கான தனது பயணத்தில், ஹில்டா தனது சகோதரிகளுடன் வந்திருந்தார், இருப்பினும் அவர்கள் அவருடன் ரஷ்யாவுக்குச் சென்றார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிரிகோரியோ லூரி தனது சுயசரிதையில் மெர்காடர் குடும்பத்தை பற்றி பின்வருமாறு எழுதினார்: “மூன்று சகோதரிகளும் ஆகஸ்ட் 1931 இன் இறுதியில் அமெரிக்காவுக்குத் திரும்பினர். மனிதகுலத்தின் எதிர்காலம் சோவியத் ஒன்றியம் வழியாகச் சென்றது என்பதை நம்பினர்.” [8] அந்த நேரத்தில், சில்வியாவுக்கு 22 வயதும், ரூத் வெறும் 18 வயதும் இருந்திருக்கும்.

ரூத் அகலோஃப்

சில்வியாவின் தங்கை ரூத் அகலோஃப் ஒரு அரசியல் வாழ்க்கையை வாழ்ந்து மற்றொரு சிக்கலான அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.

Young Sidney Hook: Marxist and Pragmatist என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிறிஸ்தோபர் பெல்ப்ஸின் கூற்றுப்படி, ரூத் மற்றும் சில்வியா தீவிர பிரச்சாரகர் ஏ.ஜே. முஸ்ட தலைமையிலான இடதுசாரிக் கட்சியான அமெரிக்க தொழிலாளர் கட்சியில் (AWP) சேர ஜேம்ஸ் பேர்ண்ஹாம் மற்றும் ஹூக்கினால் தூண்டப்பட்டனர். ரூத் மற்றும் சில்வியா அங்கு மாணவிகளாக இருந்தபோது நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் (NYU) இவர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். [9] குறிப்பிடத்தக்க வகையில், ஃபெல்ப்ஸ் ஒரு வாழ்க்கை வரலாற்று அடிக்குறிப்பில் அகலோஃப் சகோதரிகள் “பின்னர் அனைத்து நேர்காணல்களையும் மறுத்துவிட்டனர் மற்றும் இந்த வாழ்க்கை வரலாறு பற்றிய நேர்காணலுக்கும் மறுத்துவிட்டனர். [10]

ரூத் அகலோஃப் 23 வயதாக இருக்கையிலேயே 1937 ஆம் ஆண்டு தொடங்கி மெக்சிகோ நகரத்தில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராக இருந்தார். அவர் இந்த நிலையை எவ்வாறு பெற்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தனது சேவைகளை தன்னார்வமாக செய்ய முன்வந்திருக்கலாம். அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பராமரிக்கும் தளர்வான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்கையில், மெக்சிகோவுக்கு அனுப்பப்படுவதற்கு ரஷ்ய மொழியில் அவர் சரளமாக பேசுவது போதுமானதாக இருந்தது. இது SWP இன் சிறியளவிலான ஊழியர்களுக்குள் முகவர்களை ஊடுருவுவதற்கு ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்திய ஒரு முறையாகும். ஒரு வருடம் கழித்து, 1938 இல், சிகாகோவிலிருந்து ஒரு ஸ்ராலினிஸ்டான சில்வியா காலன் நியூயோர்க்கிற்குச் சென்று SWP இன் தேசிய அலுவலகத்தில் பணியாற்ற முன்வந்தார். சில மாதங்களுக்குள், அவர் SWP தலைவர் ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளரானார்.

ஹில்டா மற்றும் ரூத் அகலோஃப் ட்ரொட்ஸ்கியை சந்திக்கிறார்கள் (புகைப்படம்: டைம்ஸ் இதழ்)

பிப்ரவரி 4, 2009 அன்று வெளியிடப்பட்ட ரூத் அகலோஃப் (திருமணமான பெயர், பவுலோஸ்) இற்கான நியூ யோர்க் டைம்ஸ் இரங்கல் உரை பின்வருமாறு குறிப்பிட்டது:

பவுலோஸ் — ரூத் ஜி. நவம்பர் 13, 1913 - ஜனவரி 31, 2009. ரஷ்யாவிலிருந்து குடியேறிய அன்னா மாஸ்லோ மற்றும் சாமுவல் அகலோஃப் ஆகியோரின் மகள் மற்றும் அகலோஃப் சகோதரர்களின் கடைசி சகோதரியும் ஜோன் ஜி. பவுலோஸின் விதவையுமாவர். அவர் நியூ யோர்க் பல்கலைக்கழக கலை இளமானி (B.A.) மற்றும் பின்னர் கொலம்பியா முதுமானி (M.A) பட்டம் பெற்று, உளவியல் பகுப்பாய்வுக்கான தேசிய உளவியல் சங்கத்தின் பட்டதாரியானார். 1936, 37 ஆம் ஆண்டில் அவர் மெக்சிகோ நகரில் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ஜோன் டுவி ஆணைக்குழுவின் செயலாளராக இருந்தார். தனது 50 களில், அவர் ஒரு மனநல மருத்துவராகி தனது 80 ஆவது வயதுவரை ஒரு சொந்த சிகிச்சை நிலையத்தைப் பராமரித்து வந்தார். [11]

ஜனவரி 1937 வரை ட்ரொட்ஸ்கி மெக்சிகோவுக்கு வரவில்லை. ரூத் மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கிக்கு பணிபுரிந்தார். சில்வியாவின் கூற்றுப்படி, அவரை ஜேம்ஸ் பி. கனன் பரிந்துரைத்திருந்தார். படுகொலைக்குப் பின்னர் மெக்சிகோ குற்றவியல் நிபுணர் மார்ட்டின் காப்ரியல் பாரன் க்ரூஸ், மெக்சிகன் அதிகாரிகள் “ரூத்தை ட்ரொட்ஸ்கிக்கு யார் பரிந்துரைத்தார்கள் என்பது குறித்து சில்வியாவிடம் கேள்வி எழுப்பினர். அது கனன் என்று அவர் ஒப்புக்கொண்டார்”. ‘அமெரிக்காவில் எந்தவொரு நபரும் ட்ரொட்ஸ்கியிடம் தொடர்பு கொள்ள விரும்பும்போது, இது சோசலிச தொழிலாளர் கட்சி [12] மூலமாக செய்யப்பட்டது. இந்த வழியில் அவரது சகோதரியும் ட்ரொட்ஸ்கிக்கு வழங்க ஒரு அறிமுக அட்டையைப் பெற்றார்.'”[13]

மெக்சிகோவில் பணிபுரிந்த பின்னரும் ரூத்தின் அரசியல் வாழ்க்கை தொடர்ந்தது. ஜூன் 1940 இல், மெக்சிகோ நகரத்திலிருந்து திரும்பிய பின்னர், ஜோன் பவுலோஸை (1911-1980) ரூத் திருமணம் செய்து கொண்டார். பவுலோஸ் 1930 களின் வேலைநிறுத்த இயக்கத்தின் போது முக்கியத்துவம் பெற்ற ஒரு தொழிற்சங்கவாதியும் மற்றும் 1938 இல் தொழில்துறை அமைப்புகளின் காங்கிரஸின் ஸ்தாபக மாநாட்டிற்கான பிரதிநிதியாகவும், சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய குழுவின் உறுப்பினருமாக இருந்தார். பவுலோஸ் பின்னர் SWP ஐ விட்டு மக்ஸ் சாக்ட்மன் தலைமையிலான தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அவர் இறக்கும் வரை சாக்ட்மனிசவாத இயக்கத்தில் தீவிரமாக இருந்தார் மற்றும் அதன் வெளியீடான Labor Action இல் வழக்கமான எழுத்தாளராகவும் இருந்தார்.

பவுலோஸின் சகோதரரும் நெருங்கிய, வாழ்நாள் ஒத்துழைப்பாளருமான கான்ஸ்டன்டைன் பவுலோஸ், இரண்டாம் உலகப் போரின்போது Overseas News Agency நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டார். இது பிரிட்டிஷ் உளவுத்துறையால் நிதியளிக்கப்பட்டது மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையினருக்கு பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது. [14] அவரும் ஒரு சிக்கலான அரசியல் வரலாற்றை கொண்டிருந்ததுடன், வெளிப்படையாக ஒரு ஸ்ராலினிஸ்ட் ஆவார்.

கிரேக்க உள்நாட்டுப் போரின்போது, கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் EAM-ELAS போராளிகளுடன் இணைந்த முதல் அமெரிக்க பத்திரிகையாளர் கான்ஸ்டன்டைன் பவுலோஸ் ஆவார். உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களை ஸ்ராலினிச EAM-ELAS தலைமையுடன் இணைப்பதற்கு இடையில் அவர் தரகராக பணியாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது உறவுகளுக்காக கான்ஸ்டன்டைன், முடியாட்சி அரசாங்கத்தால் கிரேக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 1950களில், ஜான் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தில் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். [15]

ஜான் பவுலோஸ் மற்றும் ரூத் அகலோஃப் 1980 இல் பவுலோஸ் இறக்கும் வரை குடும்பமாக வாழ்ந்தனர். முன்னர் அவரது தாயார் மற்றும் அத்தைகளைப் பற்றி நேர்காணல்களை வழங்கிய அவர்களின் மகன் எரிக் பவுலோஸ் இனை இதன் ஆசிரியர் தொடர்பு கொண்டார், ஆனால் இது பற்றி கருத்து தெரிவிக்காது இருந்தார்.

சில்வியா அகலோஃப்

சில்வியா அகலோஃப் 1938 வசந்த காலத்தில் ஐரோப்பா செல்ல முடிவு செய்தபோது அவருக்கு 29 வயது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகோதரி ஹில்டாவின் சோவியத் ஒன்றியத்துக்கான பயணத்திலிருந்து, சில்வியா அகலோஃப் பரவலாகப் பயணம் செய்தார். அவர் ஒரு மேற்படிப்பு பட்டம் பெற்றதுடன் மற்றும் சோசலிச அரசியலில் ஆழமாக ஈடுபட்டார்.

ஆங்கிலத்தை தவிர, சில்வியா அகலோஃப் குறைந்தபட்சம் பிரெஞ்சு, ரஷ்ய மற்றும் அநேகமாக பிற மொழிகளில் சரளமாக இருந்தார். அவர் நாடகத்திலும் ஒரு சிறப்பு உயர்நிலைப் பள்ளி முடித்திருந்தார். ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர் அவர் தனது நடிப்பு திறன்களைப் பயன்படுத்தினார். சில்வியா அகலோஃப் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றபின்னும் தனது கல்வியைத் தொடர்ந்தார். பெண்கள் ஒரு கல்லூரிக் கல்வியைத் தொடர்வது அரிதாக இருந்த ஒரு சகாப்தத்தில், உயர்கல்வி பட்டங்கள் மட்டுமல்ல, நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளமானி பட்டமும் பெற்றார். சில்வியா அகலோஃப் பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1934 இல் சிறுவர் உளவியலில் ஒரு முதுமானி பட்டமும் பெற்றார்.

ஜோர்ஜ் ஜே. ஸ்டார் என்ற முகவரால் தயாரிக்கப்பட்ட செப்டம்பர் 3, 1940 தேதியிட்ட ஒரு FBI அறிக்கை, தகவலறிந்தவர்களுடனான நேர்காணல்கள் மூலம் தொகுக்கப்பட்ட அகலோஃப்பின் அரசியல் வரலாறு குறித்த விரிவான விவரத்தை வழங்குகிறது.

முற்போக்கு தொழிலாளர் நடவடிக்கைக்கான காங்கிரசிலும் (CPLA) மற்றும் 1933 இல் நிறுவப்பட்ட அமெரிக்க தொழிலாளர் கட்சியிலும் (AWP) தீவிரவாத பிரச்சாரகரான ஏ.ஜே. மஸ்டவின் ஆதரவாளராக சில்வியா அகலோஃப் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அவர் 1934 டிசம்பரில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச கம்யூனிஸ்ட் லீக் (CLA) உடன் AWP இன் இணைப்பிலிருந்து வெளிவந்த தொழிலாளர் கட்சியில் (US) சேர்ந்தார்.

அகலோஃப் முதலில் தனது சகோதரிகளுடன் AWP இல் சேர்ந்ததாக FBI அறிக்கை விளக்கியது.

தொழிலாளர் கட்சி (US) என்பது பெரும் மந்தநிலையும் வேலைநிறுத்த அலையும் பரந்த பிரிவு தொழிலாளர்களையும் மத்தியதர வர்க்கத்தினரையும் தீவிரமயமாக்கியதால் உருவாக்கப்பட்ட ஒரு பரந்த, பன்முக அரசியல் உருவாக்கம் ஆகும். AWP உடனான இணைப்பு அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு பரந்த பிரிவினரை அணுகுவதற்கான சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. அதில் அது தீவிரமான அடுக்குகளை உண்மையான மார்க்சிசத்திற்கு கல்வி கற்பிக்கவும் வெல்லவும் முடியும்.

1934 ஆம் ஆண்டின் Toledo Auto-Lite வேலைநிறுத்தத்திலும், கட்சி வேலையற்றோருக்கான குழுக்களை உருவாக்குவதன் மூலமும், பெரும்பாலும் தொழில்துறை மத்திய மேற்கு மற்றும் வறிய Appalachian பிராந்தியங்களில் முக்கியத்துவம் பெற்ற தீவிரவாத மற்றும் தொழிலாளர் தலைவர்களை AWP கொண்டிருந்தது. AWP சமூக உள்ளடக்கத்தில் தனித்துவமற்றதாகவும் மற்றும் சோசலிச அரசியலை முன்னெடுப்பதில் பல்வேறு சிந்தனையை கொண்டதாகவும் இருந்தது. ஆனால் அது ஸ்ராலினிசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது மற்றும் தொழிலாளர்கள் மற்றும் வேலையற்றோர் மத்தியில் ஒரு முக்கியமான ஆதரவாளர்களையும் வென்றது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் இணைந்திருப்பது AWP வலதுசாரி பிரிவினரை தொந்தரவு செய்தது. இதனால் லூயிஸ் புடென்ஸ் மற்றும் ஹாரி ஹோவ் போன்ற AWP தலைவர்கள் அமெரிக்க தொழிலாளர் கட்சி உடன் முறித்துக் கொண்டு ஸ்ராலினிச இயக்கத்தில் இணைந்தனர். இந்த இணைப்பு வேலையற்றவர்களுக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் வரை மஸ்ட மற்றும் அமெரிக்க தொழிலாளர் கட்சி ஆகியோருக்கு நிதிரீதியாக ஆதரவளித்த பணக்கார முற்போக்கான கிறிஸ்தவர்களின் பிரிவையும் கோபப்படுத்தியது. மஸ்டவும் அவரது இயக்கமும் புரட்சிகர அரசியலுடன் விருப்பம்கொண்டிருந்ததால் இந்த நிதி ஆதரவாளர்கள் விலகிச் சென்றனர்.

1934 ஆம் ஆண்டில் உருவான சில மாதங்களுக்குள், தொழிலாளர் கட்சி (US) சோசலிஸ்ட் கட்சிக்குள் (SP) நுழைவதற்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முன்மொழிவு தொடர்பாக தொடர்ச்சியான மோதல்களுக்குள் தள்ளப்பட்டது, இது உறுப்பினர்களின் அதிகரிப்பிற்கும் அதன் அரசியல் நிலைப்பாடு தீவிரமயமாக்கலுக்கும் இட்டுச்சென்றது. தொழிலாளர் கட்சியின் (US) ட்ரொட்ஸ்கிச உறுப்பினர்கள் 1936 இல் சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழைந்தபோது, தொழிலாளர் கட்சி (US) இல்லாமல் போனது.

அகலோஃப் முதலில் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும், பின்னர் SWP இனுள்ளும், முன்னாள் உலக தொழிற்துறை தொழிலாளர்கள் அமைப்பின் (IWW) உறுப்பினரும் 1920 களில் கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கத்தின் தலைவருமான மார்ட்டின் ஆபெர்னைச் சுற்றியுள்ள நியூ யோர்க் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் குழுவிற்கு நெருக்கமாக இருந்தார். ட்ரொட்ஸ்கிக்கு ஆதரவளித்ததற்காக ஆபெர்ன் 1928 இல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கனன் மற்றும் சாக்ட்மன் ஆகியோருடன் அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக்கின் நிறுவன உறுப்பினரானார். அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக்கை ஸ்தாபிப்பதில் ஆபெர்ன் ஒரு தைரியமான பங்கைக் கொண்டிருந்தாலும், குழுக்கூட்டும் அவரது போக்கு அவரை குட்டி முதலாளித்துவக் கூறுகளுக்கு, குறிப்பாக கட்சியின் நியூ யோர்க் கிளையில் ஈர்க்கும் ஒரு துருவமாக மாற்றியது.

அகலோஃப் SWP1938 ஜனவரியில் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் உறுப்பினரானார். ஆனால் 1939-40 குழுவாதப் போராட்டத்தின் போது சாக்ட்மன் மற்றும் ஆபெர்ன் தலைமையிலான சிறுபான்மை எதிர்ப்புப் போக்கை ஆதரித்தார். ஏப்ரல் 1940 இல், அவர் SWP ஐ விட்டு வெளியேறி, SWP ஐ விட்டு வெளியேறிய பின்னர் சிறுபான்மையினரால் நிறுவப்பட்ட தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.

ஜேம்ஸ் கனன், மார்ட்டின் அபெர்ன், மக்ஸ் சாக்ட்மன்

ஒரு உளவியல் நிபுணராக அகலோஃப்பின் பயிற்சி

அவரது தொழில் வாழ்க்கையில், அகலோஃப் ஒரு தகுதிவாய்ந்த உளவியல் நிபுணராக இருந்தார். அவர் மக்களை நெருக்கமாகக் கவனிக்கவும் அவர்கள் சொல்வதைக் கேட்கவும் பயிற்சி பெற்றிருந்தார். அவரது முதுமானி ஆய்வறிக்கையான, “இன மற்றும் பாலியல் வேறுபாடுகளின் ஒரு ஒப்பீட்டில் பரிந்துரைக்கக்கூடிய ‘மதிப்பு’ மற்றும் ‘புறநிலை’ காரணிகளின் ஆய்வு,” (“A Study of ‘Prestige’ and ‘Objective’ Factors in Suggestibility in a Comparison of Racial and Sexual Differences,”) கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தில் கோப்பில் உள்ளது.

மரியாதைக்குரியவர்களால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பே அகலோஃப்பின் பணிக்கு உட்பட்டது. அவர் "பரிந்துரைத்தல்" என்ற தலைப்பில் விரிவான ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டார். தனிநபர்கள் அவர்கள் மதிக்கும் மனிதர்களால் அழுத்தம் கொடுக்கப்படும்போது பொது அறிவை கைவிடுவதற்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்ற முடிவுக்கு அவரது ஆராய்ச்சி வழிவகுத்தது. அதே பெண் பின்னர் மெர்காடரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறுவது நிபுணத்துவத்தின் விசித்திரமான பகுதியாகும்.

சில்வியா அகலோஃப்பின் முதுநிலை 1934 ஆய்வறிக்கை [Photo: Columbia University]

அமெரிக்க உளவியல் சங்கம் (APA) "பரிந்துரைத்தல்" (suggestibility) என்பதை "மற்றவர்களின் கருத்துக்கள், நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது செயல்களை உடனடியாகவும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதற்கான விருப்பம்" என்று வரையறுக்கிறது. அகலோஃப்பின் ஆய்வறிக்கையின் குறிப்பிட்ட மையமாக இருந்த "மதிப்பு ஆலோசனையை" அமெரிக்க உளவியல் சங்கம் பின்வருமாறு வரையறுக்கிறது. இது, "ஒரு மதிப்புக்குரிய அந்தஸ்தை கொண்ட நபருக்கு வழங்கப்படும் அங்கீகரிப்பு அல்லது அதனால் வழங்கப்படும் தூண்டுதலில் இருந்து பெறப்படும் செய்தியாகும்."

அவர்கள் மதிக்கும் ஒரு நபரின் அதாவது அவர்களின் ஆசிரியரின் அறிக்கைகளுக்கு அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதைத் தீர்மானிக்க அகலோஃப்பின் ஆய்வுக் கட்டுரை கறுப்பு மற்றும் வெள்ளை பள்ளி மாணவர்களிடம் பரிசோதிக்கப்பட்டபோது பெருகிய முறையில் சந்தேகத்திற்குரியவையாகவும் பொருத்தமற்றவையாகவும் மாறின. அகலோஃப் தனது அணுகுமுறையை பின்வருமாறு கோடிட்டுக் காட்டினார்: “ஒரே இனக்குழுக்களான வெள்ளை மற்றும் நீக்ரோ இடையேயான வேறுபாடுகளைப் படிக்க நாங்கள் இங்கு முன்மொழிகிறோம். ஆனால் “பரிசோதனையாளரின் தனிப்பட்ட செல்வாக்கை” அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொடர் பரிசோதனைகளுடன்”. மதிப்பிற்குரிய நபரால் ஒரு குழந்தை செல்வாக்குப் பெறுகையில், ஒரு அந்நியரின் அறிவுறுத்தல்கள் குழந்தைக்கு வெறுமனே எழுதப்பட்ட பரிந்துரைகள் அல்லது வாய்வழி மூலம் பெறுவதற்கு மாறாக "விடயங்கள் தவறான தீர்ப்புகளை உருவாக்கும் போக்கைக் காட்டக்கூடும்" அல்லது "அதனை தழுவிக்கொள்ளவோ அல்லது மற்றொருவரின் செல்வாக்கின் கீழ் செயல்படலாம்" என்று அவர் எதிர்பார்த்தார். [16]

அகலோஃப் சகோதரிகளின் உறவினரும், Hypocrite Reader இல் வெளியிடப்பட்ட 2015 ஆம் ஆண்டின் “Thinking with Sylvia Ageloff” கட்டுரையின் ஆசிரியருமான எரிக் எம். குரேவிட்ச், கொலம்பியாவின் நூலகத்திலிருந்து அகலோஃப்பின் ஆய்வறிக்கையை முதன்முதலில் பார்த்தவராவார். இக்கட்டுரையின் எழுத்தாளருக்கு அளித்த நேர்காணலில் குரேவிட்ச், “சில சமயங்களில் அவர் ஏமாற்றப்பட்ட முட்டாள் என்றும், சில சமயங்களில் அவர் பாலியல் விரக்தியடைந்த மற்றும் அசிங்கமான யூதப் பெண், அல்லது அவை அனைத்தும் உள்ளவராகவும் வர்ணிக்கப்படுகிறார். ஆனால் இவை வெறும் தற்செயலான மற்றும் தவறான எடுத்துக்காட்டலாகும்”. பின்னர் அவர் மேலும் கூறினார், "என்ன நடந்திருந்தாலும், அவள் ஒரு முட்டாள் அல்ல." [17]

குரேவிட்ச் விளக்கினார், “ஆய்வுக் கட்டுரை, அவரது முதுமானி ஆய்வறிக்கை, உண்மையில் அதிநவீன சமூக உளவியலாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒன்று. சமூக உளவியலின் இந்த புதிய, வளர்ந்து வரும் துறையில் உண்மையான உணர்வு அவளுக்கு உள்ளது.”

“அவளது ஆராய்ச்சி, ‘யார் அப்பாவியாக இருக்கிறார்’ என்ற கருத்தைப் பற்றியது” என்று குரேவிட்ச் கூறினார். “இவை அனைத்திலும் வேடிக்கையான பகுதி என்னவென்றால், மற்றவர்கள் உங்களை நிர்ப்பந்திக்கும் விஷயங்களுக்கு நீங்கள் எவ்வாறு இணங்குகிறீர்கள் என்பதுதான் கதை. இது ஒன்றுதான் அவள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்த ஒன்று என்பது விந்தையானது.”

தொழில்முறை உளவியலாளரான Two Sisters of Coyoacán ன் ஆசிரியரான ரோபேர்ட்டா சாடோவ் விளக்கினார், “நீங்கள் விரும்பினால், பரிந்துரை என்பது மயக்கும் ஒரு வகை வடிவமாகும். அவள் மயக்கமடைந்தாள், எனவே இது அவளுடைய ஆய்வறிக்கையின் பொருள் என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தான்.” [18]

அகலோஃப் "ஏமாற்றப்பட்டார்" என்ற கதை, அவர் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியத்தை ஒருபோதும் கருதவில்லை என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே நம்பத்தகுந்ததாக இருக்கும். ஆனால், அவரது ஆய்வறிக்கை காண்பிப்பதன்படி, அகலோஃப் சில வருடங்களுக்குப் பின்னர்தான், ஒரு பாதிக்கப்பட்டவராய் இருந்ததாக கூறப்படும் அதே நிகழ்வுப்போக்கினை பற்றி ஆழமாகப் படித்திருந்தார்.

1938 ஆம் ஆண்டின் கோடைகாலம்: நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டிற்காக அகலோஃப் ஐரோப்பாவுக்குச் சென்றார்

1938 ஆம் ஆண்டு கோடையில் அகலோஃப் ஐரோப்பாவிற்குச் சென்றார், அந்த சமயத்தில் அவர் மெர்காடரைச் சந்தித்தார் (அவர் தன்னை "ஜாக் மோர்னார்ட்" என்று அழைத்தார்), அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அனுபவமாம். அவரது பயணம், அவர் பின்னர் கூறியதுபோல் ஒரு விடுமுறை பயணம் அல்ல. மாறாக, ஐரோப்பாவில் அவரது செயல்பாட்டை ஆராய்ந்தபோது, செப்டம்பர் 1938 இல் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டைத் தயாரிப்பது தொடர்பான அரசியல் பணிகளில் அகலோஃப் ஈடுபட்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது. This is My Story என்ற தனது புத்தகத்தில், 1938 இல் SWP க்குள் ஊடுருவுவதற்கான GPU இன் முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் லூயிஸ் புடென்ஸ், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கான "தகவல் கொண்டு செல்பவர்" என அகலோஃப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவிற்கான அகலோஃப் பயணம் ஸ்ராலினின் பெரும் பயங்கரத்தின் பின்னணியிலும் மற்றும் ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் உறுப்பினர்களை அழிக்க GPU இன் ஒரு கொலைகார பிரச்சாரத்தின் மத்தியிலும் நடந்தது. ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கு தனிப்பட்ட விடுமுறை எடுப்பதற்கான நேரமும் இடமுமாக இருக்கவில்லை. இந்தச் சூழலில் அவரது பயணப் பங்காளியாக ஸ்ராலினிச ரூபி வையில் (Ruby Weil) இன் தேர்வை இன்னும் விவரிக்க முடியாததாக ஆக்குகிறது.

1938 பிப்ரவரியில், அகலோஃப் ஐரோப்பாவுக்குச் செல்ல முடிவு செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு, GPU வலைப்பின்னல் ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவை பாரிஸில் உள்ள மீராபோ மருத்துவமனை (Clinique Mirabeau) இல் கொலை செய்தது. GPU முகவர் மார்க் ஸ்போரோவ்ஸ்கி (பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் கட்சியின் பெயர் எத்தியான்) GPU க்கு முக்கியமான தகவல்களை வழங்கியமை படுகொலை செய்ய உதவியது. ஸ்போரோவ்ஸ்கி பின்வரும் மூவரை கொலை செய்வதற்கு உதவியிருந்தார். 1) ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலாளரான எர்வின் வொல்வ், ஜூலை 1937 இல் ஸ்பெயினுக்குள் நுழைந்த பின்னர் GPU ஆல் கொலை செய்யப்பட்டார்; 2) GPU இலிருந்து விலகி, செப்டம்பர் 1937 இல் சுவிட்சர்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இக்னேஸ் ரெய்ஸ்; மற்றும் 3) ஜூலை 1938 இல் பாரிஸில் கொலை செய்யப்பட்ட நான்காம் அகிலத்தின் செயலாளரான ருடோல்ப் கிளெமென்ட்.

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிஸ்டுகளால் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த படுகொலைகளுக்கு மத்தியில், ஒரு தீவிர ஸ்ராலினிசவாதி என தனக்கு தெரிந்த ஒருவருடன் சில்வியா அகலோஃப் பாரிஸுக்கு பயணம் செய்தார்: அவர்தான் GPU முகவர் ரூபி வையில். [19]

சில்வியா அகலோஃப் தனது பயணகூட்டாளியான GPU முகவர் ரூபி வையில் பற்றி 1938 இல் என்ன அறிந்திருந்தார்?

வையில் ஒரு ஸ்ராலினிச முகவர் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர்கள் நண்பிகள் என்பதால் அவருடன் ஐரோப்பாவுக்குச் சென்றதாகவும் அக்லோஃப் பின்னர் கூறினார். இந்த நட்பு, ட்ரொட்ஸ்கிச சூழலுக்குள் மெர்காடர் / மோர்னார்ட்டை அறிமுகப்படுத்தும் ஸ்ராலினிச சதி வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாக மாறியது. அவர் இயக்கத்துடன் எவ்வாறு தொடர்பு கொண்டார் என்று அவரிடம் எப்போதாவது கேட்கப்பட்டால், அவரது அறிமுகமான ரூபி வையில் அவரை தனது நண்பர் என சில்வியாவுக்கு அறிமுகப்படுத்தினார் என்ற அப்பாவி விளக்கத்தை அவர் எப்போதும் மேற்கோள் காட்டமுடியும்.

ரூபி வெயில், எவன்ஸ்வில், இந்தியானாவின் ஆண்டு புத்தக புகைப்படம் [Photo: Yearbooks.com]

ரூபி வையில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதை சில்வியா அகலோஃப் அறிந்திருந்தால், குறிப்பாக ஸ்ராலினிச பெரும் பயங்கரத்தின் போதும் மற்றும் பாரிஸிலும் ஐரோப்பா முழுவதும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை GPU படுகொலை செய்த சூழ்நிலையிலும் நான்காம் அகிலத்தின் இரகசிய ஸ்தாபக மாநாட்டைத் தயாரிக்க உதவப் போகும்போது அவர் ஏன் வையிலுடன் பயணிக்கவேண்டும்?

சில்வியா அகலோஃப் மற்றும் அவரது சகோதரிகள் ஐரோப்பாவுக்கு ஒன்றாகப் பயணிக்க முடிவு செய்த நேரத்தில் வையிலைப் பற்றி என்ன அறிந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளை மறுஆய்வு செய்வது அவசியம்.

ட்ரொட்ஸ்கியின் படுகொலை மற்றும் அதில் GPU வின் பங்கு பற்றி தங்களுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ் முன் சாட்சியமளிக்க சில்வியா மற்றும் ஹில்டா அகலோஃப் ஆகியோர் டிசம்பர் 1950 இல் அழைக்கப்பட்டனர். வையில் ஸ்ராலினிச இயக்கத்தில் தீவிரமாக செயல்படுவதை அவர்கள் அறிந்திருந்ததாக இரு சகோதரிகளும் சாட்சியமளித்தனர்: "அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவார் என வதந்திகள் வந்தன," சில்வியா அகலோஃப் சத்தியப்பிரமாணத்தின் கீழ் கூறினார். [20]

தனது சாட்சியத்தில், ஹில்டா அகலோஃப், “நாங்கள் 1936 இல் அல்லது அக்காலகட்டத்தில் தாம் சேர்ந்திருந்த அமெரிக்க தொழிலாளர் கட்சியில் ரூபி வையிலை சந்தித்தார் என்று விளக்கினார். [அமெரிக்க தொழிலாளர் கட்சி டிசம்பர் 1934 இல் ட்ரொட்ஸ்கிச அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக் உடன் இணைந்த பின் ஒரு சுயாதீன அமைப்பாக இருக்கவில்லை] ரூபி வையில் தனது மைத்துனரான ஹாரி ஹோவ் உடன் செய்தித்தாளில் பணிபுரிந்தார். அப்படித்தான் நான் அவளைத் தெரிந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து, அவள் கட்சியை விட்டு வெளியேறி, பத்திரிகைக்கு வேலை செய்வதை நிறுத்தினாள். ஹாரி ஹோவ்வும் பத்திரிகையிலிருந்து வெளியேறிவிட்டார் என நான் நம்புகிறேன்" என்றார். [21]

1940 ஆம் ஆண்டில், ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர் சில்வியா அகலோஃப் மெக்சிகன் பொலீசாரிடம் ரூபி வையிலுடன் பயணம் செய்ய ஒப்புக்கொண்ட நேரத்தில், வையிலின் ஸ்ராலினிச தொடர்புகளைப் பற்றி அறிந்திருந்தார் என்று கூறினார். ஒரு பொலிஸ் நேர்காணலின் குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: “வையில் சகோதரிகளில் ஒருவரின் கணவரான ஹாரி ஹோவ் அமெரிக்க தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் என்பதையும், அவர் பின்னர் ஸ்ராலினிஸ்டுகளுடன் இணைந்தவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஹோவ் தற்போது நியூ யோர்க்கில் வசிக்கிறார், ஆனால் அவரது முகவரி அவருக்குத் தெரியாது.” [22]

ஹாரி ஹோவ் வெறுமனே ஏ.ஜே.மஸ்டேயின் சாமானிய ஆதரவாளராக இருக்கவில்லை. 1935 ஆம் ஆண்டில், ஹோவ் தொழிலாளர் கட்சியின் (US) செய்தித்தாளான New Militant ன் இணை ஆசிரியராக இருந்தார். இது, மஸ்டிசவாத அமெரிக்க தொழிலாளர் கட்சி மற்றும் ட்ரொட்ஸ்கிச அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் பின்னர் உருவாக்கப்பட்டது. பத்திரிகையின் ஆசிரியர்களின் பட்டியலில் கனனுக்கு அடுத்ததாக ஹோவின் பெயர் இருக்கும். [23] ஹோவ், நியூ யோர்க் தொழிலாளர் பள்ளியில் (New York Labor School) ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். இது முஸ்ட தலைமையிலான, முற்போக்கு தொழிலாளர் நடவடிக்கைக்கான காங்கிரஸால் (Congress for Progressive Labor Action) நடத்தப்பட்டது. தொழிலாளர் தகவல்துறை தொடர்பான 1932 பாடநெறிக்கான விரிவுரையாளராகவும் அவர் பட்டியலிடப்பட்டிருந்தார். [24]

ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் இணைவதற்கு ஹோவ் மிகவும் விரோதமாக இருந்தார் என்பதை தனியார் கடிதங்கள் காட்டுகின்றன. 1934 ஆம் ஆண்டில் ஹோவ் ஒரு சக அமெரிக்க தொழிலாளர் கட்சி உறுப்பினருக்கு எழுதிய கடிதம் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அவரது விரோதத்தை தெளிவுபடுத்துகிறது: "நாங்கள் மிகவும் தீவிரமாக மறுத்த அந்த குறுங்குழுவாதத்தின் திசையில் நாங்கள் நகர்கிறோம்." கட்சி "மிக வேகமாக இடதுபுறம் செல்கிறது ... புரட்சிகர தூய்மைக்காக மற்ற அனைத்து சிறிய குழுக்களுடனும் போட்டியிடும் இந்த நடவடிக்கையால் நான் மிகவும் சோர்ந்து போகிறேன்." என்று அதில் எழுதியிருந்தார். [25]

மஸ்டவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் லைலா டானியல்சன், அமெரிக்க தொழிலாளர் கட்சியின் "மிக முக்கியமான தேசியத் தலைவர்களில்" ஹோவ் ஒருவர் என்று கூறினார். அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக் உடன் இணைந்த பின்னர், ஹோவ், புடென்ஸின் தலைமையைப் பின்பற்றி 1935 இல் தொழிலாளர் கட்சியிலிருந்து (US) இராஜினாமா செய்தார். [26]

ஹோவ் இன் மனைவி, ரூபி வையிலின் சகோதரி மரியோன் வையில் ஆவார். பின்னர், செப்டம்பர் 25, 1940 அன்று, மெக்சிகன் துணைத் தூதரகத்திலிருந்து அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய தகவல்தொடர்புகளில், ஜோசப் ஹேன்சன் அமெரிக்க அரசாங்கத்திடம் சில்வியா அகலோஃப் ரூபி வையிலுடன் பயணம் செய்ய முடிவு செய்தபோது ரூபியின் சகோதரி மரியோனும் ஒரு ஸ்ராலினிஸ்ட் என்று அறிந்திருந்தார் என்று தெரியவந்தது. மூன்றாவது வையில் சகோதரி கெர்ட்ரூட் (Gertrude) சில்வியா அகலோஃப் இற்கும் மெர்காடருக்கும் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்பதையும் அறிந்திருந்தார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் மூலம் வெளியிடப்பட்ட இந்த தகவல் தொடர்பு பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

திரு. ஹான்சன் மதிப்புமிக்க தகவல்களை பின்வரும் முறையில் பெறலாம் என்று சுட்டிக்காட்டினார்: ரூபி வையிலின் இந்த அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட முந்தைய குறிப்புகளை [ஆசிரியர் குறிப்பு] திணைக்களம் நினைவில் வைத்திருக்கும்.[27] ஹான்சனின் கூற்றுப்படி, அவர் மூன்று சகோதரிகளில் ஒருவர். மற்ற இருவரும் கெர்ட்ரூட் மற்றும் மரியோன் என்று அழைக்கப்படுகிறார்கள். முன்னாள் ஒரு யூத மதகுருவை மணந்து நியூ மெக்சிகோவின் அல்புகர்கியில் வசிக்கிறார்; 1938 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள சில்வியா அகலோஃப் எழுதிய ஒரு கடிதத்தில் சில்வியா ஜாக்சனை சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதாக மரியோன் குறிப்பிட்டுள்ள போதிலும், மரியோன் எந்தவொரு வகையான அரசியலிலும் ஈடுபடவில்லை. இந்த தொடர்பில் கெர்ட்ரூட்டின் பெயரைப் பயன்படுத்துவது குறித்து ஹான்சனின் விளக்கம் என்னவென்றால், மரியோன் நீண்ட காலமாக ஒரு வெறித்தனமான மற்றும் பக்தியுள்ள ஸ்ராலினிசவாதியாக இருந்து வருகிறார், மேலும் ஜாக்சனுக்கும் சில்வியாவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆர்வமுள்ளதாக அவர் தன்னைக் காட்டிக் கொண்டால், சில்வியாவுக்கு [ஆசிரியர் குறிப்பு] அவளுடைய நோக்கங்களை சந்தேகிக்கவும் காரணம் இருக்கலாம். கெர்ட்ரூடிடம் இருந்து பெறுமதிமிக்க சில தகவல்களைத் திணைக்களம் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல்களை சில்வியா தனது சகோதரர் மான்டேவிடம் தெரிவித்ததாக ஹான்சன் கூறினார்.

சில்வியா அகலோஃப், ரூபி வையிலுடன் பயணம் செய்த நேரத்தில் அகலோஃப் சகோதரிகள் மரியோன் வையிலை அறிந்திருந்ததாக ஹில்டா அகலோஃப் பின்னர் சாட்சியமளித்தார்: “நான் ஒருமுறை மரியோன், அவளுடைய [ரூபியின்] சகோதரியுடன் தொலைபேசியில் கதைத்தேன். அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டேன். அவள் நன்றாக இருக்கிறாள் என்று சொன்னாள்.” [28]

கோயோகானில் உள்ள ட்ரொஸ்கியின் அலுவலகத்திற்கான பாதை (நன்றி:டேவிட் நோர்த்) [Photo by David North]

1938 யூலை: அகலோஃப் உம் “ஜாக் மோர்னார்ட்” உம் பாரிஸில் சந்தித்தனர்

பாரிஸில் ஜூலை தொடக்கத்தில், கதையின் மறுக்கமுடியாத பதிப்பின் படி, ரூபி வையில் சில்வியா அகலோஃப்பை "ஜாக் மோர்னார்ட்" க்கு அறிமுகப்படுத்தினாள். அவன் அகலோஃப்பை ஆடம்பரமாக நடாத்தி, மேலும் அவனை காதலிக்க தூண்டினான். மோர்னார்ட் ஒரு விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் என்று கூறினான். La Nation Belge, Le Soir, Les Dernieres Nouvelles, Auto மற்றும் Les Sports போன்ற செய்தித்தாள்களுக்கு எழுதுகிறார். [29] அவர் 1926 இல் இறந்த ஒரு பெல்ஜிய தூதரின் குழந்தை என்பதால் அவரிடம் செலவழிக்க ஏராளமான பணம் இருந்தது என்று அவர் கூறினார்.

தாக்குதலுக்குப் பின்னர் மெக்சிகோ காவல்துறையினர் எடுத்த அறிக்கையில், அகலோஃப் அவர் ஒருபோதும் வேலை பார்த்ததையோ அல்லது வெளியிடப்பட்ட கட்டுரைகளைப் படித்ததையோ கண்டதில்லை என விளக்கினார். 1939 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவிற்கு வந்தபின் அவர் பயன்படுத்திய "ஜாக்சன்" என்ற பெயரைப் பயன்படுத்தி "ஜாக்சன் சொன்னவற்றை அவள் உண்மையாக ஏற்றுக்கொண்டாள்." அவர் "எப்போதும் நிறைய பணம் வைத்திருந்தார், சிறந்த இடங்களுக்கு அடிக்கடி சென்றுவந்தார்," என்று அகலோஃப் தொடர்ந்தாள். [30]

உடனடியாக எழும் கேள்வி என்னவென்றால், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உயர் மட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட உயர் கல்வி கற்ற அறிவார்ந்த மற்றும் உறுதியான புரட்சிகர சோசலிஸ்ட் அகலோஃப், எப்படி பிற்போக்குத்தனமான பெல்ஜிய அரசுடன் —மோர்னார்ட்டை நம்பமுடியுமென்றால்— நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் பணக்கார விளையாட்டு பையனுடன், சிந்தனையின்றி உறவில் விரைந்து செல்வார்?

எந்தவொரு நிகழ்விலும், மோர்னார்ட்டுடனான அகலோஃப் உறவின் ஆரம்ப கட்டங்களிலிருந்து, அவரது புதிய காதலன் மிகவும் சந்தேகத்திற்குரிய தனிநபர் என்பது மிகத்தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் ஆரம்ப சந்திப்பின் சூழ்நிலைகள் சாத்தியமற்றது மற்றும் அவரது தனிப்பட்ட கதைகளில் வெளிப்படையான முரண்பாடுகள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் மாஸ்கோ விசாரணைகள் மற்றும் ஸ்ராலினிச பயங்கரம் மற்றும் ஸ்பெயினில் (எர்வின் வொல்ஃப்), சுவிட்சர்லாந்து (இக்னாஸ் ரைய்ஸ்) மற்றும் பிரான்ஸ் (லியோன் செடோவ் மற்றும் ருடோல்ப் கிளெமென்ட்) ஆகியோரின் GPU படுகொலைகள் போன்ற அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், மோர்னார்ட் ஒரு ஸ்ராலினிச முகவராக இருப்பதற்கான வாய்ப்பை அகலோஃப் ஒருபோதும் கருதிப்பார்க்கவில்லை என்பதை நம்பமுடியாது.

தொடரும்….

Notes:

[1] Martín Gabriel Barrón Cruz, “Actuaciones Ministeriales en el Homicidio de León Trotsky,” Instituto Nacional de Sciencias Penales, Mexico D.F., 2018, p. 39.

[2] Excerpted from Asaltar los Cielos, (Storm the Skies), 1996 documentary film directed by Javier Rioyo and José Luis López Linares.

[3] Ibid.

[4] James P. Cannon, The Socialist Party in World War II: Writings and Speeches, 1940 – 43 (Pathfinder Press, 1975), pp. 81–82.

[5] See Satow’s website, available at: https://www.twosistersofCoyoacán.com/about

[6] Aisha Carter, “Sunny East Village Pad in Ageloff Towers Is the Perfect Starter Apartment,” 6 Sq Ft, April 16, 2015.

[7] Interview with Roberta Satow by Eric London, August 18, 2020.

[8] Gregorio Luri, El Cielo Prometido: Una Mujer al Servicio de Stalin (Barcelona: Editorial Planeta, 2016), p. 214.

[9] The Trotskyist movement in the US would merge with the AWP in 1934.

[10] Christopher Phelps, Young Sidney Hook: Marxist and Pragmatist (Ann Arbor: University of Michigan Press, 2005), p. 111 n. 32. First published by Cornell University Press in 1997. Phelps indicates that he conducted his research when all three sisters were alive.

[11] Available here.

[12] The Trotskyist movement in the US formed the Socialist Workers Party (SWP) in January 1938.

[13] Barrón Cruz, pp. 54–55.

[14] P.J. Grisar, “Sharks Defending Britain from Nazis? How ‘Fake News’ Helped Foil Hitler,” Forward, October 22, 2018. (“the publication provided press credentials to British spies.”)

[15] Dan Georgakas, “The Greeks in America,” Journal of the Hellenic Diaspora, NY, Spring-Summer 1987, Vol. 14 Nos. 1 and 2, pp. 29–31.

[16] Sylvia Ageloff, “A Study of ‘Prestige’ and ‘Objective’ Factors in Suggestibility In A Comparison of Racial and Sex Differences,” May 1934, available at Butler Library, Columbia University.

[17] Interview with Eric M. Gurevitch by Eric London, August 17, 2020.

[18] Interview with Roberta Satow by Eric London, August 18, 2020.

[19] The $200 cost of a standard stateroom berth on a transatlantic ocean liner was also prohibitively expensive for most people in 1938. For archived brochures showing prices from 1938, see here). In 2020 dollars, a standard ticket would cost roughly $3,700 today.

[20] American Aspects of the Assassination of Leon Trotsky, US House of Representatives Committee on Un-American Activities, 1950, p. 3,402.

[21] Ibid., p. 3,407.

[22] Barrón Cruz, p. 163.

[23] See for example, here.

[24] See for example, Labor Age of November, 1932, p. 2.

[25] Leilah Danielson, “Howe to Hardman, June 21, 1934,” American Gandhi: AJ Muste and the History of Radicalism in the Twentieth Century (Philadelphia: Penn Press, 2014), p. 188.

[26] Ibid., p. 404 n. 57.

[27] Most references spell Ruby Weil’s sister’s name as “Marion,” not “Marian.”

[28] American Aspects of the Assassination of Leon Trotsky, p. 3,409.

[29] Eduard Puigventós López, Ramón Mercader, el Hombre del Piolet: Bi ografía del asesino de Trotsky (Barcelona: Now Books, 2015), e-book at location 2,424.

[30] Ibid. at location 2,415.

Loading