பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி கத்தோலிக்கத்தை தழுவிக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ரவரி 18 அன்று, பிலிப்பின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) நீண்டகால முன்னணி உறுப்பினரும் கட்சியின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஜூலியேட்டா டு லிமா, முக்கிய கத்தோலிக்க திருச்சபைத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் உரையாற்றினார், அதில் நாட்டில் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தின் மரபையும் மற்றும் கத்தோலிக்க திருச்சபையையும் CPP ஆனது பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதை அவர் தெளிவுபடுத்தினார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோஸ் மரியா சிஸன் (AP Photo/Andrew Medichini, File)

"பிலிப்பைன்ஸில் 500 ஆண்டுகால கிறிஸ்துவத்தினை" நினைவுகூரும் வகையில் 9 வது சமாதான எகுமேனிக்கல் திருச்சபை தலைவர்கள் உச்சிமாநாட்டில் (Ecumenical Church Leaders’ Summit on Peace) கலந்து கொண்ட பேராயர்கள், ஆயர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வு பிலிப்பைன்ஸ் எகுமேனிக்கல் அமைதித் தளத்தினால் (Philippine Ecumenical Peace Platform - PEPP) ஆதரவளிக்கப்பட்டதில் பிலிப்பைன்ஸ் சக்திவாய்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம் (Catholic Bishops’ Conference of the Philippines - CBCP), தேவாலயங்களின் தேசிய சபை மற்றும் பிலிப்பைன்ஸ் முக்கிய மதத் தலைவர்கள் சங்கம் ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தது.

டு லிமா தயக்கமின்றி கிறிஸ்துவத்தின் மொழியையும் வரட்டுக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டார். சபையில் கூடியிருந்த ஆயர்களிடம் போப் பிரான்சிஸின் மேற்கோளை அவர் மேற்கோள் காட்டினார், "கர்த்தர் நம் அனைவரையும், நம் அனைவரையும், கிறிஸ்துவின் இரத்தத்தினால், நாம் அனைவரையும், கத்தோலிக்கரை மட்டுமல்ல, நம்மையும் மீட்டுக் கொண்டார்."

அவர் CPP ஐ "நியாயமான மற்றும் நீடித்த சமாதானத்திற்காக" போராடுவதாக சித்தரித்தார், அதன் பின்னர் தாமஸ் அ கெம்பிஸின் மத்தியகால திருமறை கொள்கையின் மத விதிவாத நம்பிக்கை நூலால் அதை அலங்கரித்துக் கொண்டார், இவ்வாறு அது அறிவிக்கிறது "என்னைப் பொறுத்தவரை இதன் பொருள் மனிதன் முன்மொழிகிறான் மற்றும் கடவுளுடைய விருப்பத்திற்கு குரல் கொடுக்க மட்டுமல்ல, கடவுள் பூமியில் அதை மக்களுக்கு நிறைவேற்றுகிறார்."

கத்தோலிக்க திருச்சபையானது அதனுடைய துன்ப மீட்பின் நிராகரிக்க முடியாத வறட்டுக் கோட்பாடு மற்றும் அதன் மூடநம்பிக்கை கருவிகளினால் இந்த கிரகத்தில் மிகச் சுரண்டும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. திருச்சபையின் செல்வமும், போப்பின் அதிகாரமுமானது திருட்டு, கொலை, வெற்றி, எதிர்ப்புரட்சி ஆகியவைகளின் இரண்டு ஆயிரமாண்டுகளின் உற்பத்தியின் விளைவாக இருப்பதாகும்.

பிலிப்பைன்ஸைப் போல இந்த வரலாற்றின் விளைவாக சில நாடுகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியானது இந்த மரபை கொண்டாடுவதான ஒரு கொண்டாட்டத்தில் கூடியிருந்த மதத் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டது. "நாட்டில் 500 ஆண்டுக் கிறித்துவத்தை நாம் கொண்டாடும் போது, மனித மாண்பை நிலைநாட்ட நாம் மேலும் கடுமையாக உழைப்போம்" என்று டு லிமா அறிவித்தார். "பிலிப்பினோ மக்கள் அதை ஒரு மீட்பர் மற்றும் விடுதலையளிக்கும் நீதிக்குரிய சக்தியாக (கிறித்துவத்தை) ஏற்றுக்கொண்டுள்ளனர், அதே முறையில் சமூகத்தின் ஒரு வகையின் பின்னர் வேறொரு நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு ஒரு முற்போக்கான காரணியாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

1521 இல் பெர்டினண்ட் மெகெல்லன் வருகையானது பிலிப்பைன்ஸ் ஸ்பானியக் காலனியாக மாறியது. காலனித்துவ ஆட்சியின் தொடக்கத்தைக் கொண்டாடுவதில் CPP ஆனது கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துகொள்கிறது. பிலிப்பைன்ஸில் ஸ்பானிய காலனித்துவ ஆட்சியானது திருச்சபையின் நிறுவனங்கள் மற்றும் மத ஒழுங்கமைப்புக்களின் மூலம் நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐந்நூறு ஆண்டுகாலமானது கிறிஸ்தவ காட்டுமிராண்டித்தனத்தின் ஐந்நூறு ஆண்டுகாலமாக இருந்திருக்கிறது.

திருச்சபையானது திட்டமிட்டு, ஏற்கனவே இருந்த பூர்வீக எழுத்து வடிவங்களை அழித்தது, அவர்கள் "சாத்தான்" என்று கண்டுபிடிக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை எரித்தனர். இரண்டு தலைமுறைகளுக்குள் அவர்கள் அதை ஒழித்துக்கட்டி, கல்வியறிவு பெற்ற மக்களை கல்வியறிவற்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர். மதகுருமார்கள் வேண்டுமென்றே மக்களை அறியாமை நிலையில் வைத்து, தங்கள் இரட்சிப்பின் முத்திரையை பரப்பவும், காலனியாதிக்கத்தின் கீழ்ப்படிவதை வற்புறுத்தி பயிற்றுவதை ஏற்படுத்தவும் செய்தனர்.

திருச்சபையானது மக்கள் தொகையில் பெரும் பகுதியை இடம்பெயர வைத்து, கட்டாயப்படுத்தப்பட்ட பூர்வீக தொழிலாளர்களினால் கட்டப்பட்ட புதிய தேவாலய கட்டிடங்களுக்கு அருகில் அவர்களைக் கட்டாயப்படுத்தி குடியேற்றினார்கள். மேலும் அவர்கள் மக்களுக்கு புதிய பெயர்களை வைத்து, அதாவது "கிறிஸ்தவ" குடும்பப் பெயர்களை வைத்துக் கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தினார்கள். மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் நரகத்தில் நெருப்பிற்கும் இவற்றில் ஒன்று பாதிரியாரின் சவுக்கடிக்கும் அஞ்சும்படி அவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பல ஆண்டுகளாக கட்டாய உழைப்பைச் செய்ய மக்களில் ஆண்களை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள்.

கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களான டொமினிகன்கள், பிரான்சிஸ்கன்கள் மற்றும் இயேசு சபைகளானது நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை பரந்த தோட்டங்களாக ஒருங்கிணைத்ததுடன், நாட்டின் மிகப் பெரிய நில உடைமையாளர்களாக மாறி, அவர்களிடமிருந்து திருடப்பட்ட நிலத்தையே பயன்படுத்துவதற்கு வாடகை கொடுக்க தங்களுடைய திருச்சபைக் குடியாளர்களை கட்டாயப்படுத்தினார்கள்.

சமூக எழுச்சிக் காலங்களில், திருச்சபையானது சீன மக்களுக்கு எதிராக காலனியில் வெடிக்கும் வர்க்க பதட்டங்களை இயக்கியது, அவர்களை "புறமதத்தினர்" என்று பலிகடாக்களாக்கியது. பல்லாயிரக்கணக்கான நீண்ட கால சீன மக்கள் படுகொலை செய்யப்பட்ட தொடர்ச்சியான படுகொலைகளை திருச்சபை நேரடியாகத் தூண்டிவிட்டது. கத்தோலிக்க திருச்சபையானது முஸ்லிம் மக்களை ஒடுக்குவதையும் மற்றும் வெளியேற்றுவதையும் மேற்பார்வையிட்டது.

கிறிஸ்துவின் இரத்தத்தைப் பற்றிய அதன் சொல்லாட்சிகள் அனைத்திற்கும், காலனித்துவ மக்களின் இரத்தத்தினால் தான் திருச்சபையால் மறைக்கப்பட்டுள்ளது.

1890 களில், ஒரு காலனித்துவ-எதிர்ப்புப் புரட்சியானது பிலிப்பைன்ஸின் மீது ஸ்பெயினின் பிடியை குலுக்கியபோது, இந்த எழுச்சியின் மாபெரும் சிந்தனையாளர்களும் தலைவர்களும் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் ஆற்றலைப் பார்த்தனர். ஜோஸ் ரிசால், ஆன்ட்ரஸ், போனிபாஷியோ, அப்போலினாரியோ மாபினி, அவர்களின் உண்மையான அரசியல் வரம்புகள் எதுவாக இருந்தாலும், அவர்கள் தைரியமானவர்கள் மற்றும் தொலைநோக்குடையவர்களாக இருந்தார்கள். ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம், பிரிந்த திருச்சபை மற்றும் அரசு ஆகியவற்றை நிறுவ அவர்கள் முயன்றனர். மதத்தை பரப்புவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றவும் திருச்சபை நிலத்தைக் கைப்பற்றவும் கோரினர். புரட்சியாளர்களை சித்திரவதை செய்வது, சிறைதண்டனை மற்றும் மரணதண்டனை அளிப்பது ஆகியவற்றை மேற்பார்வையிடுவதன் மூலம் திருச்சபையானது அதற்கு விடையிறுப்பை வழங்கியது.

இந்தப் புரட்சி பிலிப்பைன்ஸ் உயரடுக்கினால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொடூரமாக நசுக்கப்பட்டது. அமெரிக்காவால் தொடர்ந்து வெற்றி பெற்ற போரின் போது, பிலிப்பினோ படைகள் ஒரு சுயாதீனமான தேசிய தேவாலயத்தை உருவாக்கின. அதன் ஸ்தாபக ஆவணங்கள் கன்னிப் பிறப்பையும், தேவதூதர்களையும் நரகத்தையும் மறுத்தன. பூமி பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும், உயிர்களானது பரிணாமத்தின் விளைபொருள் என்றும் வலியுறுத்தியது. மூன்று மில்லியன் பிலிப்பினோ விவசாயிகளும் தொழிலாளர்களும் புதிய திருச்சபையில் சேர்ந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் கத்தோலிக்க திருச்சபையை மீண்டும் அந்த நாட்டில் மீண்டும் கொண்டு வந்தது மற்றும் எந்த ஆழமான பிலிப்பினோ நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை. ஒழுங்கைப் பராமரிப்பதில் அதன் பயனை உணர்ந்த அமெரிக்கா, திருச்சபையின் நிலங்களையும், நாட்டின் மீது மத நிறுவனங்களின் அதிகாரத்தையும் மீட்டது.

கத்தோலிக்க திருச்சபை இன்றுவரை காட்டுமிராண்டித்தனத்தின் மரபைத் தொடர்கிறது. மதச்சார்பற்ற அரசு என்று கூறப்படுவதை விட அது ஆழமான ஆட்சி நடத்துகிறது. நாட்டில் கருக்கலைப்பு தடை மட்டுமல்ல, விவாகரத்து சட்டவிரோதமானது. அரசு மருத்துவ கிளினிக்குகளில் கருத்தடை வசதி இல்லை; பள்ளிகளில் ஒரு பாலியல் கல்வி கட்டாயப் பாடமல்ல.

திருச்சபை அன்றாட வாழ்வில் ஒரு மத்தியகால மிருகத்தனத்தை தொடர்கிறது. கத்தோலிக்க திருச்சபையால் தான், மக்கள், குறிப்பாக விவசாயிகள், மந்திர தாயத்துகள், Sto Ni–o பொம்மைகள் நடனம், மற்றும் கன்னி மேரி கம்யூனிச எதிர்ப்பு வழிபாடு ஆகியவைகளை நம்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புனித வாரத்தின் போது கசையடிகளால் தங்களை இரத்தக் களரியாக அடித்துக்கொள்ளுகிறார்கள். புனித வெள்ளிக்கிமையன்று ஏராளமான மக்கள் தங்களை உண்மையில் சிலுவையில் அறைந்து கொள்கிறார்கள், மற்றும் உள்ளூர் பாதிரிமார்கள் நிராதரவான ஏழைகளின் மணிக்கட்டுகளில் அவர்கள் அறையப்படுவதற்கு முன் ஆணிகளை நோக்கி ஜெபிக்கிறார்கள், அவர்கள் தாங்கள் துன்பத்திற்குள்ளாவது அமைதியாக சொர்க்கத்திலிருந்து உதவி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சியானது அடிப்படை ஜனநாயக நடவடிக்கைகளை இன்னும் செயற்படுத்தப்படவில்லை என்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நிரூபணத்திற்கான உண்மையாகும். நாடு இன்னும் மதச்சார்பற்ற ஆட்சியையோ, திருச்சபை மற்றும் அரசு பிரிப்போ அல்லது விவசாய பிரச்சினைக்கு தீர்வு காணவோ இல்லை. 1896 ஆம் ஆண்டின் பிலிப்பைன்ஸ் புரட்சியின் தோல்வியானது இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிவித்தது.

நிரந்தரப் புரட்சி என்ற தனது முன்னோக்கில் லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவத்தின் பூகோள அபிவிருத்தி என்பது புரட்சியின் தேசிய மற்றும் ஜனநாயகப் பணிகள் முதலாளித்துவ வர்க்கத்தால் பூர்த்தி செய்யப்படமாட்டாது, மாறாக தொழிலாள வர்க்கத்தால்தான் பூர்த்தி செய்யப்படும் என்பதை நிரூபித்தார். இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதில், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சொத்துறவுகளின் வரம்பை மீறுவதற்கு நிர்பந்திக்கப்படும், இதனால் சோசலிச நடவடிக்கைகளையும் கூட அது செயற்படுத்தும். தேசிய அரசின் எல்லைக்குள் புரட்சி நீடிக்க முடியாது; அதன் உயிர் பிழைப்புக்கு சர்வதேச அளவில் சோசலிசப் புரட்சி விரிவடைவது அவசியமாக இருக்கிறது. 1917 ஏப்ரலில் லெனினால் ஏற்றக்கொள்ளப்பட்ட இந்த நிரந்தரப் புரட்சி முன்னோக்குத் தான் அக்டோபர் புரட்சியை ஒழுங்கமைப்பதற்கான வேலைத்திட்டமாக சேவையாற்றியது.

ஸ்ராலினிசமானது அக்டோபர் புரட்சியின் காட்டிக்கொடுப்பே தவிர அதன் தொடர்ச்சி அல்ல. தங்களுடைய வளர்ந்து வரும் சலுகை பெற்ற நலன்களைப் பாதுகாக்கும் வகையில், ஸ்ராலினால் தலைமை தாங்கப் பெற்ற அதிகாரத்துவத்தின் பிரிவுகள் "ஒரு நாட்டில் சோசலிசத்தை" கட்டமைக்கும் தேசியவாத முன்னோக்கை முன்வைத்தனர். இந்த முன்னோக்கின் தொடர்ச்சியாக அவர்கள், தாமதமாக முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த நாடுகளில் புரட்சியின் பணிகள் பிரத்தியேகமாக தேசிய மற்றும் ஜனநாயக குணாம்சமுடையவையாக இருந்தன, ஆனால் இன்னும் சோசலிசமாக இல்லை என்ற லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் நிராகரிக்கப்பட்ட பழைய மென்ஷிவிக் முன்னோக்கை புனருத்தாரணம் செய்தனர். எனவே, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினர் முற்போக்கான பங்கை வகிப்பார்கள், அவர்களை கூட்டாளிகளாக காணப்பட வேண்டும். இவ்விதத்தில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் உலகெங்கிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுடன் உடன்பாடுகளை செய்வதற்கு பயன்படுத்தியது.

CPP இன் முன்னோடியான Partido Komunista ng Pilipinas (PKP) ஆனது 1930 இல் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தில் நிறுவப்பட்டது; CPP ஆனது அதன் மரபைத் தொடர்ந்தது. PKP மற்றும் CPP இரண்டும் பிலிப்பினோ வெகுஜனங்களின் போராட்டங்களை முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்துவிட்டது. ஆனால் 1896 புரட்சியிலிருந்து, பிலிப்பினோ முதலாளித்துவ வர்க்கம் தனது ஜனநாயகப் பணிகளை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. பிலிப்பைன்ஸில் முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்து நலன்களானது பெரிய நிலஉடைமைகள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதாகத்தான் இருக்கிறது. PKP மற்றும் CPP இன் இந்த நோக்குநிலையானது இறுதி முடிவுக்கு வந்துவிட்டது. இவ்வாறு, ஆண்ட்ரஸ் போனிபாசியோவின் (Andres Boonifacio) "முடிவில்லாத புரட்சியை" முன்னெடுத்துச் செல்லுவதாக CPP கூறிக்கொண்ட போதிலும், உண்மையில் அவர்கள் 1896 புரட்சியின் போர்க்குணமிக்க மதகுருமார்-விரோத வாதத்தை கைவிட்டு கத்தோலிக்க திருச்சபையை தழுவியுள்ளனர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் எந்த நாட்டிலும் புரட்சிகரக் கட்சியைச் சுற்றி வரும்போது அவர்களின் பிரமைகள், தப்பெண்ணங்கள் மற்றும் தவறான கருத்துக்களான மூடநம்பிக்கைகள், இனவாதம் மற்றும் மத நம்பிக்கைகள் உட்பட, இவைகளைக் கொண்டு வருகிறார்கள். இந்தப் பிற்போக்குக் கருத்தாக்கங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது கட்சியின் பணியல்ல, மாறாக உலகத்தைப் பற்றிய விஞ்ஞானபூர்வ, சடவாத புரிதலைப் பொறுமையாக வெகுஜனங்களுக்கு விளக்கவேண்டும்.

எவ்வாறாயினும் ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடவில்லை, மாறாக முதலாளித்துவத்தின் நலன்களுக்காக போராடுகிறார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் மத நம்பிக்கைகளை வலுப்படுத்தவும், திருச்சபையை சமூகத்தில் ஒரு விடுதலை சக்தியாக சித்தரிக்கவும் அதன் வழியில் இவ்வாறு சென்றுவிட்டது. அது கத்தோலிக்க திருச்சபையின் தேவைகளுக்கு தொழிலாளர்களின் நலன்களை அடிபணியச் செய்துள்ளது.

இது கட்சிப் பணியின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துள்ளது. பல தசாப்தங்களாக, திருச்சபைக்குள் ஆதரவைத் தக்க வைக்கும் ஒரு முயற்சியாக கட்சியானது திருமணத்திற்கு முன்னான பாலுறவில் ஈடுபட்டது என்று குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் காரியாளர்களை, கட்சியின் தலைமையானது ஒரு "முதலாளித்துவ பிறழ்ச்சி" என்று அவர்களை தண்டித்தது. CPP ஆனது அதன் "புரட்சிகர சுகாதார மருத்துவமையங்களில்" கருத்தடை சாதனங்களை விநியோகிக்க மறுத்துவிட்டது.

கட்சியின் முன்னணி அமைப்புகள் வாடிக்கையாக கிறிஸ்துவின் ஆர்வத்தின் அடிப்படையில் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வெகுஜன கலந்து கொள்ளலில் தொழிலாளர்களை அவர்கள் வாடிக்கையாக வழிநடத்தி வருகின்றனர். அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மத ஊர்வலங்களை நடத்துகின்றனர்.

CPP இன் தேசிய ஜனநாயக முன்னணியின் (National Democratic Front) ஒரு முக்கிய உறுப்பினர் அமைப்பு தேசிய விடுதலைக்கான கிறிஸ்தவர்கள் (Christians for National Liberation - CNL) ஆகும். கட்சியின் புதிய மக்கள் இராணுவத்தில் (New People’s Army - NPA) CNL இன் பிரிவுகள் உள்ளன, அவைகள் வழக்கமான அறிக்கைகளை வெளியிடுகின்றன. 2018 ஆண்டு டிசம்பர் மாதத்தில், CNL இன் NPA அலகு ஒரு அறிக்கையை வெளியிட்டது, "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அவதாரத்தின் ஆண்டு நிறைவையொட்டி," CPP ஸ்தாபிக்கப்பட்ட தன்னுடைய 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

இந்த மதவாத சந்தர்ப்பவாதம் கட்சியை அதன் மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது. CPP நிறுவனர் மற்றும் சித்தாந்த தலைவர் ஜோஸ் மரியா சிஸனின் இளைய குழந்தையானது கத்தோலிக்க திருச்சபையில் நாட்டின் நீண்டகாலத் தலைவரான கார்டினல் சின்னினால் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டது. ஒரு செனட்டர் மற்றும் எதிர்கால துணை ஜனாதிபதி உட்பட உயரடுக்கின் முக்கிய உறுப்பினர்கள் ஞானஸ்தானப் பெற்றோர்களாக உள்ளனர்.

CPP ஆனது முற்றிலும் சடவாதத்தைக் கைவிட்டு, கத்தோலிக்க திருச்சபையை அரவணைத்துக் கொண்டமையானது ஆளும் உயரடுக்கின் ஒரு பகுதியுடனான அதன் கூட்டுகளின் ஒரு ஒருங்கிணைந்த கூறுபாடாகும். கட்சி இறங்காத ஆழம் இல்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது.

டு லிமாவின் உரையின் இறுதி பத்தியில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கூடியிருந்த மதத் தலைவர்களிடம் அவர் கூறினார், "டமாஸ்கஸ் செல்லும் தனது வழியில் சவுல் போன்ற மின்னல்களால் டூடெர்டே தாக்கப்படுவதற்கான வாய்ப்பை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கவில்லை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொள்ளுகிறோம், ஏனெனில் மேலும் மக்களால் அமைதிக்கான பரிந்துரைப்பு மற்றும் பிரார்த்தனையின் அற்புதமான இணைப்பின் காரணமாகும் அத்தோடு ஆளும் அமைப்புமுறையின் மிக வேகமாக மோசமடைந்து வரும் நெருக்கடியின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுமாகும்."

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்ற அதிகாரத்திற்கு வந்த போது CPP உற்சாகத்தோடு ஆதரவு அளித்தது. ஆயிரக்கணக்கான ஏழை பிலிப்பினோக்களை கொன்ற போதைவஸ்த்துக்களின் மீதான போரை அவர் மேற்பார்வையிடுகையில், அவர்கள் தங்களை அவரது நிர்வாகத்துடன் இணைத்துக் கொள்ள முயன்றனர். பேச்சுவார்த்தைகள் இறுதியில் முறிந்தபோது, கட்சி அவரை ஒரு "பாசிசவாதி" என்று கண்டனம் செய்தது. டுரேற்ற நிர்வாகத்துடன் கட்சி இப்போது "பின்வழியாக பேச்சுவார்த்தைகளை" மீண்டும் கொண்டு வருகிறது என்று டு லிமா பகிரங்கமாக மத கூட்டத்தில் ஒப்புக் கொண்டார், மேலும் டுரேற்ற ஒரு மாற்றம் செய்யக்கூடும் என்று "பிரார்த்தனையின்" "அதிசயமான" சக்தியை நம்பிக் கொண்டிருந்தார்.

ஜோஸ் மரியா சிஸன் மனைவிதான் டு லிமா. சிஸன் தனது மனைவியின் உரையை மீண்டும் மீண்டும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார், அதில் டுரேற்றயின் மாற்றத்திற்காக பிரார்த்தனை செய்வது பற்றிய அவருடைய மேற்கோளும் அடங்கும்.

மார்க்ஸ் பாதுகாத்து போராடியவைகளும் மற்றும் மார்க்சிசத்தின் முழு வரலாற்றினதும் காட்டிக்கொடுப்பே ஸ்ராலினிசமாகும். கிறிஸ்துவத்தையும் காலனித்துவத்தையும் கட்சியானது வெளிப்படையாக தழுவுவது குமட்டல் தரும் பெருங்கதையாகவுள்ளது. மார்க்ஸ் எழுதியதை நினைவில் கொள்ளுவது மதிப்புடையதாக இருக்கிறது.

1847 இல், ரைனிசர் பீபாச்டரின்"கிறிஸ்தவ சோஷலிஸ்டுகளுக்கு" விடையிறுக்கும் வகையில், "கிறித்துவத்தின் சமூகக் கோட்பாடுகளை மெய்ப்படுத்துவது கம்யூனிசம்" என்று மார்க்ஸ் எழுதினார்.

"கிறிஸ்துவத்தின் சமூகக் கோட்பாடுகள் இப்போது பதினெட்டு நூறு ஆண்டுகள் வளர்ந்திருக்கின்றன ...

"கிறித்துவத்தின் சமூகக் கோட்பாடுகள் புராதன அடிமைமுறையை நியாயப்படுத்தியது, மத்தியகாலத்தின் பண்ணையடிமைமுறையை மகிமைப்படுத்தின, தேவை ஏற்பட்டால், ஓரளவுக்கு துன்பகரமான ஏளனமான பழிப்பு இருந்தாலும் கூட பாட்டாளி வர்க்கத்தின் ஒடுக்குமுறையை பாதுகாப்பதில் திறன் கொண்டது. கிறித்துவத்தின் சமூகக் கோட்பாடுகள் ஆளும் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அவசியத்தைப் போதிக்கிறது. பிந்தையவர்களுக்கு அவர்கள் வழங்க வேண்டியது எல்லாம், முன்னாள் தருமம் செய்ய வேண்டும் என்ற புண்ணிய விருப்பத்தையே. ...

"கிறிஸ்துவத்தின் சமூகக் கோட்பாடுகள் கோழைத்தனம், சுய அவமதிப்பு, சிறுமை, கீழ்ப்படிதல், தாழ்மை ஆகியவற்றை போதிக்கிறது. சுருங்கச் சொன்னால், அனைத்து மந்தைக் குணங்களும், மற்றும் பாட்டாளி வர்க்கம் அதனை ஒரு மந்தைதனமாக நடத்த அனுமதிக்காது, அதன் தைரியம், அதன் தன்னம்பிக்கை, அதன் பெருமை, அதன் சுயாதீன உணர்வானது அதனுடைய ரொட்டியை (bread) விட இன்னும் மேலான இன்றியமையாத நிலையாகும்.

"கிறித்தவத்தின் சமூகக் கோட்பாடுகளானது நயவஞ்சகமாகவும் பாசாங்குத்தனமாகவும் இருக்கின்றன, பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமானது. கிறிஸ்தவத்தின் சமூகக் கோட்பாடுகள் இவ்வளவுதான்."

கத்தோலிக்க திருச்சபையின் காட்டுமிராண்டித்தனமான பாரம்பரியத்திற்கு தழுவிக்கொள்ளும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் இவ்வளவுதான்.

Loading