பிரான்சில் COVID-19 வைரஸ் எழுச்சியடைகையில் கடுமையான பொதுமுடக்கத்திற்கான அழைப்புகளை மக்ரோன் நிராகரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்றிரவு தேசிய அளவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், நாடு முழுவதும் பெருந்தொற்று நோய் கட்டுப்பாட்டை இழந்து வரும் நிலையில், ஒரு கடுமையான பொதுமுடக்கத்திற்கான மருத்துவ அதிகாரிகளின் துணிச்சலான அழைப்புக்களை நிராகரித்தார். மாறாக, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் COVID-19 திரிபு வகைகளால் இயக்கப்படும் ஒரு தொற்றுக்கு முற்றிலும் போதாத சிறிய சமூக-இடைவெளி நடவடிக்கைகளை மக்ரோன் அறிவித்தார்.

அடுத்த வாரம் விடுமுறை இடைவேளைக்கு முன்னதாக, அடுத்த திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும். இரண்டு வார விடுமுறைக்குப் பின்னர், பாலர் மற்றும் ஆரம்பப் பள்ளி வயதான குழந்தைகள் மீண்டும் நேரில் வகுப்புகளுக்குத் திரும்புவார்கள், அதே நேரத்தில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் மேலதிக ஒரு வாரம் இனையவழியில் நடக்கும். வகுப்புகள் இனையவழியில் இருக்கும் 1 அல்லது 2 வாரங்கள், வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் போது ஊதிய உதவியைப் பெறுவார்கள்.

French President Emmanuel Macron [Sebastien Nogier, Pool via AP]

பாரிஸ் உட்பட 20 பிராந்தியங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திணிக்கப்பட்ட நடவடிக்கைகள் பிரான்ஸ் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவது, வேலை அல்லது பள்ளிக்குப் போகாவிட்டால் மக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு வீடுகளைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில்தான் நடமாட்டம் இருக்கும் ஆகியவைகள் இதில் அடங்கும்.

மனித வாழ்க்கை மீது அப்பட்டமான அலட்சியத்துடன் செயற்பட்ட மக்ரோன், முழுப் பொதுமுடக்கத்திற்கும் குறைவான எதுவும், பாரிஸ் மற்றும் பிரான்ஸ் முழுவதிலுமுள்ள பிற முக்கிய நகரங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வெள்ளமென நிரம்பிவழிவார்கள் என்ற மருத்துவ அதிகாரிகளின் அவசர எச்சரிக்கைகளை புறக்கணித்தார். இடவசதி இல்லாததால், யாருக்கு சிகிச்சையளிப்பார்கள், யாருக்கு சிகிச்சையளிக்க மாட்டார்கள் என்று தேர்ந்தெடுக்கும் காட்டுமிராண்டித்தனமான சூழ்நிலைக்கு மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோகும்.

பிரான்சில் தினசரி புதிய தொற்றுக்கள் 34,000 முதல் 45,000 வரை உள்ளன — இது அமெரிக்கா அளவிலான ஒரு நாட்டில் தினசரி 200,000 தொற்றுக்களுக்கு இணையாகும். பிரெஞ்சு மக்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

மக்ரோன் பேசுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மருத்துவர்கள் அமைப்பின் தேசிய கவுன்சிலின் தலைவரான பாட்ரிக் பூவே, கொள்கை மாற்றத்தைக் கோரி லிபரேஷன் நாளேட்டில் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டார். அதாவது "இந்த பயங்கரமான மோசமான சூழ்நிலையில், கடுமையான நடவடிக்கைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன, அதாவது எல்லா இடங்களிலும் ஒரு உண்மையான பொதுமுடக்கம் தேவைப்படுகிறது." அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் தொற்று நோய்க் கட்டுப்பாட்டை இழந்து விட்டோம். நோயாளிகள் எப்போதையை காட்டிலும் இளமையானவர்களாக உள்ளனர், பள்ளிகளில் நோய்த் தொற்றுகள் கடந்த வாரங்களில் நிலைமை தொடர்ந்து சீரழிவின் பல அறிகுறிகளாக உள்ளன."

பாரிஸ் மருத்துவமனைகளின் பொதுச் சங்கத்திடமிருந்து (AP-HP) மோசமான எச்சரிக்கைகளை பூவே மேற்கோள் காட்டியுள்ளார். 1,484 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 90 சதவீத தீவிர சிகிச்சை படுக்கைகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், ஏப்ரல் 1 ம் தேதி முதல் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தத் தவறினால், மூன்று வாரங்களில் Ile-de-France பரந்த பாரிஸ் பிராந்தியத்திற்குள் 3,400 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சை பெறக்கூடும் என்று AP-HP எச்சரித்துள்ளது. இன்னும் ஒரு வாரம் தாமதித்தால், இந்த மாத இறுதிக்குள் மேலும் 1,000 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

"இன்று எந்தவொரு நடுநிலையும், தயக்கமும், பந்தயமும் இல்லை என்பதை சகித்துக்கொள்ள முடியாது" என்று பூவே எழுதினார்: "எங்கள் சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்தவும், தெளிவாகவும், மாற்றுப்பாதையுமின்றி உடனடியாக வலுப்படுத்தும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பிரதேசத்திலுள்ள அனைவரையும் உள்ளடக்கிய வைரஸை அவர்கள் இன்னும் தவிர்க்கலாம். திரு ஜனாதிபதி, நாங்கள் பெருமளவில் தடுப்பூசி போடுவதற்கு முன்பு, எல்லா இடங்களிலும் நிலைமை தீவிரமாக உள்ளது, நீங்கள் எங்களை பொதுமுடக்கம் செய்ய வேண்டும்.”

விஞ்ஞான மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாறாக, மக்ரோன் வைரஸ் மக்கள் தொகை முழுவதும் தொடர்ந்து பரவ அனுமதிக்கப்படும் என்று சமிக்ஞை செய்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு, மார்ச் 17, 2020 அன்று, இத்தாலி மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் வெளிநடப்பு வேலைநிறுத்தங்களின் அலைக்கு பின்னர், பிரெஞ்சு அதிகாரிகள் இரண்டு மாத முழு பொதுமுடக்கத்திற்கு உடன்பட்டனர். அந்த நேரத்தில், 8,000 க்கும் குறைவான உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் மற்றும் COVID-19 இருந்து 175 இறப்புக்கள்தான் இருந்தன. இன்று, 4.2 மில்லியன் வீரியமுள்ள தொற்றுக்கள் உள்ளன மற்றும் பிரான்சில் COVID-19 வைரஸினால் 95,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆயினும்கூட, மக்ரோன் ஒரு முழுமையற்ற, பகுதியளவு பொதுமுடக்கத்திற்கு முன்மொழிந்தார் —அத்தியாவசியமற்ற தொழிற்துறை உற்பத்தி, அல்லது பள்ளிகளை முழுமையாக மூடாமல்- மற்றும் பாதிகாலத்திற்கும் குறைவான காலத்திற்கு மூடியுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் எடுக்குமாறு கெஞ்சும் நடவடிக்கைகளை அது மறுக்கையில், மக்ரோன் அரசாங்கம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவலான மரண அலைகளை எதிர்பார்க்கிறது. பிரான்சில் அவசர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000 ஆக இரட்டிப்பாக்கவும், புதிய தீவிர சிகிச்சை செவிலியர்களுக்கு பயிற்சியளிக்கவும் அது திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், அரசாங்க அதிகாரிகள், கடுமையான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளில் ஆக்ஸிஜன் சிலின்டர்களை விநியோகிக்கும் திட்டங்களை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் — அதாவது அவர்களுடைய தலையெழுத்தை அவர்களிடமே விட்டுவிடுகின்றனர், ஆனால் அவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மிகையாக வேலை பார்க்கும், சென்று பராமரிக்கும் செவிலியர்களால் சிகிச்சையளிக்கப்பட முடியும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தொற்றுநோய்களால் மூடப்பட வேண்டிய வகுப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, கல்வி அமைச்சகம் 3,256 வகுப்பறைகள் மூடப்பட்டதாக அறிவித்தது, இது ஒரு வாரத்திற்கு முன்பு 1,238 ஆக இருந்தது. பாரிஸில், சோசலிஸ்ட் கட்சி மேயர் ஆன் இடால்கோ 15-18 வயதுடையவர்களிடையே வைரஸ் பாதிப்பு விகிதம் 100,000 க்கு 800 என்று தெரிவித்தார், இது பரந்த மக்கள்தொகையை விட கணிசமாக அதிகமாகும்.

தொழிலாள வர்க்க பாரிஸ் பகுதி மாவட்டமான Seine-Saint Denis இல், தனிப்பட்ட ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் ஆதரவு இல்லாதவர்கள், தங்கள் அரசியலமைப்பு உரிமையை, உயிருக்கு ஆபத்தான நிலைமைகளில் வேலை செய்ய வேண்டாம் என்று, வேலையிலிருந்து விலகி, பள்ளிகளை மூடவேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மூடப்பட்ட Eugène Délacroix உயர்நிலைப் பள்ளியும் இதில் அடங்கும், அங்கு குறைந்தது 20 மாணவர்களின் பெற்றோர்கள் COVID-19 இல் இறந்துள்ளனர்.

இந்த வைரஸ் பரவலுக்கு எதிராக பள்ளி மூடல்கள் பயனற்றவை என்ற அவரது அரசாங்கத்தின் தொடர்ச்சியான கூற்றுக்களுடன், பள்ளிகளை குறுகிய காலத்தில் மூடுவதற்கான அவரது முடிவை மக்ரோன் சரிசெய்ய முயற்சிக்கவில்லை. கடந்த வெள்ளியன்றுதான் கல்வி மந்திரி Jean-Michel Blanquer கூறினார், "விடுமுறைக் காலம் பள்ளிக் காலத்தை விட குறைவான தொற்றுக்கு வழிவகுக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை."

மாறாக, ரோம் எரிந்து கொண்டிருக்கும்போது, ஃபிடில் வாசித்த ரோமப் பேரரசரான நீரோவைப் போலவே, மக்ரோன் தனது உரையின் பெரும்பகுதியை COVID-19-ஐ பேரழிவுகரமான முறையில் கையாண்டதற்காக தன்னை வாழ்த்திக் கொண்டார். "இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து நாங்கள் ஒரு பதிலைத் தேர்ந்தெடுத்துள்ளோம், இது பொதுமுடக்கம் செய்யாமல் தொற்றுநோயைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார். "நமது குழந்தைகள் மீது, அவர்களின் கல்வி, பொருளாதாரம், சமூகம், மனநலம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டதற்கு" அவர் தனது அரசாங்கத்தைப் பாராட்டினார்.

உண்மையில், மக்ரோனும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்ட கொள்கை, அழிவுகரமான விளைவுகளுடன், உயிர்களின் மீது இலாபங்களை வைத்துள்ளது. ஜனவரி மாதம், பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நோய் பரவுவதைத் தடுக்க ஒரு பொதுமுடக்கத்திற்கு ஆதரவு கொடுத்தனர் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டின, மற்றும் மருத்துவர்கள் மக்ரோனுக்கு கடுமையான சமூக இடைவெளித் தடுப்புகளை செயற்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆயினும்கூட மக்ரோன் ஒரு பொதுமுடக்கம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்குப் பின்னர் நிகழ்வுகள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இலாபங்கள் தொடர்ந்து பாய்வதற்கு குழந்தைகளை பள்ளியில் வைத்திருப்பதற்கானதும் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென்ற மக்ரோனின் பகுத்தறிவை தவறென நிலைநாட்டியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அரசாங்கங்கள் ஆதரிக்கும் இந்தக் கொள்கையானது தொற்று நோயை "மெதுவாக்கச்" செய்யவில்லை. மாறாக, பிரான்சில் தினசரி புதிய தொற்றுக்கள் டிசம்பர் இறுதியில் சுமார் 10,000 முதல் இன்று வரை மூன்று மடங்கு அல்லது அதற்கு மேல் கடந்து செல்ல வழிவகுத்தன.

"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகள் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதாக கூறப்படுவது மோசடிகளாக வெடித்துள்ளன. சீனா, தைவான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள், இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமுடக்கங்கள் மற்றும் கடுமையான பரிசோதனை-மற்றும் தடமறிதல் நடைமுறைகள் போன்ற விஞ்ஞான நடைமுறைகளைப் பயன்படுத்தின. 96 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், வியட்நாம் 35 இறப்புக்களைத்தான் கண்டுள்ளது, அதன் பொருளாதாரம் 2020ல் 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

பிரான்ஸ் 67 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், கிட்டத்தட்ட 100,000 இறப்புக்களை கண்டுள்ளதுடன், ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளோடு சேர்ந்து, 1930களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் அதன் ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியம் இந்த பெருந்தொற்று நோயைப் பயன்படுத்தி வங்கிகளுக்கு 1.25 டிரில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பை வழங்கவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதியில் 750 பில்லியன் யூரோக்களை பிரதான பெருநிறுவனங்களுக்கு அரச கடன்களில் வழங்கப் பயன்படுத்துகிறது. ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியத் தன்னலக்குழு, பொது நிதிகளின் முன்கண்டிராத வகையில் பொது நிதிகளின் கையளிப்புகளுக்காக கொண்டாடும்போது, ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க விடப்படுகின்றனர்.

பிரான்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பேரழிவு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது. இதில் வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் மட்டுமில்லாமல், மத்தியதர வர்க்கத்திலுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளான போலி-இடது கட்சிகள், பிரான்சில் பள்ளிகள் திறப்பிற்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மக்ரோனின் அத்தியாவசிய கூட்டாளிகளாக பணியாற்றியுள்ளனர். மக்ரோனுடன் அவர்களது பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகளுக்கு ஒப்புதல் கொடுத்த பின்னர், கடந்த இலையுதிர் காலத்தில் ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் கற்றலை எதிர்த்து நடத்திய வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்திய தொழிற்சங்கங்கள், கலகப் பிரிவு போலீசாருடன் வேலைநிறுத்தக்காரர்களை நசுக்க மக்ரோனை அனுமதித்தன.

மக்ரோனின் உரை ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது: ஐரோப்பா முழுவதும் போலவே பிரான்சிலும் உண்மையிலேயே கொடூரமான மரணங்களை தவிர்க்க ஒரே வழி, போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவது தான். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்திகள் மூடப்பட வேண்டும், மற்றும் தொழிலாளர்கள் ஒரு தடுப்பூசி முழு மக்களுக்கும் அளிக்கப்படும் வரை பெருந்தொற்று நோய் காலம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க தேவையான வாழ்க்கை ஊதியமாக வழங்க வேண்டும். மாணவர்களுக்கு இணையவழி கற்றலுக்கு ஒரு பயனுள்ள கல்வித் திட்டம் வழங்க பாரிய வளங்கள் முதலீடு செய்யப்பட வேண்டும்.

நிதியத் தன்னலக்குழுவின் வளங்களை கைப்பற்றுவதற்கும், சுகாதாரக் கொள்கையின் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட அரசு அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கும் எவ்வாறாயினும், இத்தகைய கொள்கைகளுக்கான போராட்டமானது தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக ஒரு சர்வதேச அரசியல் இயக்கத்தினால் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட முடியும்.

Loading