உக்ரேனும் நேட்டோவும் போருக்கு தயரரிக்கையில், ரஷ்யா தேசியளவிலான இராணுவ பயிற்சிகளை நடத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனுடனான பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளதன் பின்னணியில், ரஷ்ய அரசாங்கம் முன்னரே திட்டமிட்டிருந்த தேசியளவிலான இராணுவ பயிற்சிகளை தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) புதன்கிழமை அறிவித்தார். தரைப்படை மற்றும் கப்பற்படை இரண்டையும் ஈடுபடுத்தி, மற்றும் நாட்டின் மிக தொலைதூர பகுதிகள் உட்பட நாடெங்கிலுமாக நடத்தப்பட்ட 4,000 க்கும் மேற்பட்ட தனித்தனி நிகழ்வுகளும் உட்பட, நாட்டின் போர் திறனையும் தயார்நிலையையும் பரிசோதிப்பது ஏப்ரல் முழுவதும் நீளும்.

கருங்கடல் பிராந்தியத்தின் வரைபடம் (Wikimedia Commons/NormanEinstein)

இராணுவ பயிற்சிகளுக்கு சில காலமாக திட்டமிடப்பட்டிருந்தாலும், அதனைத் தொடர அவர்கள் தெளிவாக நோக்கம் கொண்டுள்ளது பற்றி மாஸ்கோ பொதுவாக உறுதிப்படுத்தியுள்ளமை, உக்ரேன் குறித்து ரஷ்யாவுக்கு எதிராக வளர்ந்து வரும் போர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதன் படைபலத்தை காட்டுவதாகவே உள்ளது. கடந்த பல வாரங்களாக, ரஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் ஆதரவைக் கொண்ட உக்ரேனுக்கும் இடையில் முழுமையான போர் உருவாவதற்கான அபாயத்துடன், இந்த அச்சுறுத்தல்கள் இன்னும் கடும் உச்சத்தை எட்டியுள்ளன.

கடந்த ஏழு நாட்களாக, உக்ரேனிய அரசாங்கம் வெளிநாட்டு இராணுவ கூட்டணிக்கு நாட்டை அனுமதிக்க நேட்டோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது, கருங்கடலில் படிப்படியாக நேட்டோ தலையிடவும் கோரியுள்ளது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உக்ரேனிய படைகள் நேட்டோவுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, 2014 இல் ரஷ்யாவுடன் மீண்டும் இணைந்த கருங்கடல் வரை பரவியிருக்கும் தீபகற்பமான கிரிமியாவை படைபலம் கொண்டு மீட்டெடுப்பதற்கான கியேவ் இன் நோக்கத்தை சுருக்கமாக கூறியுள்ளது. உக்ரேனில் ஒரு தீவிர வலதுசாரி ரஷ்ய எதிர்ப்பு அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்ததான, வாஷிங்டன் மற்றும் பேர்லினின் திட்டமிடப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டத்திற்குப் பின்னர் 2014 இல் உடைந்துபோன குடியரசுகள் தோன்றிய டொன்பாஸில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய கூட்டணி படைகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கி, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தலைவர்களை செவ்வாயன்று அழைத்துப் பேசி, அந்நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டார். இவர்கள், கியேவ் சார்பு, ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒழுங்கமைப்பாளரான அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையை பின்பற்றுகிறார்கள், இது, உக்ரேனிய இராணுவத்திற்கு நிதியளிப்பது, இராணுவ உபகரணங்களை வழங்குவது மற்றும் பயிற்சியளிப்பது ஆகியவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. “ரஷ்யா அதன் மோசமான நடத்தைக்கு பதிலடியாக கடுமையான மற்றும் உறுதியான நீண்ட கால மூலோபாய விலை கொடுப்புக்களை எதிர்கொள்ள வைப்பதை” தெளிவுபடுத்துவதற்காக உக்ரேனிய விமானப்படையை அமெரிக்கா மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஸ்டீபன் பிளாங்க் செவ்வாய்க்கிழமை அட்லாண்டிக் கவுன்சிலுக்கு எழுதுகையில் முறையிட்டார்.

ரஷ்யாவிற்கு எதிரான போர் தயாரிப்புக்களுடன் நேட்டோ முன்னேறி வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த நிகழ்வுகள் கட்டவிழ்கின்றன. இது தற்போது ஐரோப்பிய கண்டம் முழுவதுமாக பரந்து விரிந்த ஒரு பாரிய இராணுவ பயிற்சியை நடத்தி வருகிறது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா பிரிவின் படி, 27 நாடுகளும், 30,000 துருப்புக்களும் ஈடுபடுகின்றதான மற்றும் 12 நாடுகளில் விரிவடைந்துள்ளதான DEFENDER-Europe 2021 கூட்டு இராணுவ பயிற்சி, “வடக்கு ஐரோப்பா, காகசஸ், உக்ரேன் மற்றும் ஆபிரிக்காவில் எங்களது திறனை தக்கவைத்துக் கொண்டு, மேற்கு பால்கன் மற்றும் கருங்கடல் பிராந்தியங்களில் ஒரு மூலோபாய பாதுகாப்பு பங்காளராக பணியாற்றுவது குறித்த எங்களது திறனை” “நிரூபித்துள்ளது”.

ரஷ்யாவின் மேற்கு எல்லைகள் மற்றும் மாஸ்கோவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு மையமாகவுள்ள பகுதிகள் வரை முழுவதுமாக விரிவடையும் தரை, கடல் மற்றும் வான்வழி பயிற்சிகளை உள்ளடக்கியதான DEFENDER-Europe 2021 கூட்டு இராணுவ பயிற்சி மூன்றாம் உலகப் போரைத் தொடுக்க நேட்டோவை முடுக்கி வருகிறது. இத்தகைய மோதலின் விளைவுகள், குறைந்தபட்சம், ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு வழிவகுக்கும், மேலும் அமெரிக்க நலன்களை பாதுகாக்க அணுவாயுதங்களை பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க இராணுவம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பெரும்பாலும் உலகின் அணுசக்தி நிர்மூலமாக்கப்படும்.

இந்த விடயத்தில் உக்ரேனிலுள்ள, அல்லது வேறெங்குமுள்ள எவர் ஒருவரும், இந்த சூழ்நிலையில் “ரஷ்ய ஆக்கிரமிப்பில்” இருந்து “விடுதலை” அடைய மாட்டார். மாறாக, அவர்கள் அனைவரும் இறந்துபோவார்கள்.

ஆயினும் கூட, ஜனாதிபதி செலென்ஸ்கியின் உக்ரேனிய அரசாங்கம் முன்னோக்கிச் செல்கிறது. சுதந்திர உக்ரேனின் முதல் ஜனாதிபதியும், உக்ரேனின் டொன்பாஸ் மோதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய முன்னைய சமாதான உடன்படிக்கைகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான லியோனிட் கிராவ்சுக் (Leonid Kravchuk), உடைந்துபோன குடியரசுகளில் ஒன்றின் முன்னணி பிரதிநிதியுடன் அவர் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று இப்போது அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவுடன் கூட்டணி வைத்துள்ள பெலாரூஸின் தலைநகர் மின்ஸ்கில் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஏற்பாடு செய்வார்களானால், அதில் அவர் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கட்டாய (இராணுவ) சேவைகளுக்கு விரைந்து அழைக்க உக்ரேனை அனுமதிக்கும் நடவடிக்கைகளை உக்ரேனிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. மக்களிடையே பரவலாக காணப்படும் எந்தவொரு போர் எதிர்ப்பு உணர்வையும் துடைத்தெறியும் தெளிவான நோக்கத்துடன், “தவறான தகவல்களை,” எதிர்த்துப் போராடக்கூடிய இரண்டு புதிய கூட்டாட்சி அமைப்புக்களை செலென்ஸ்கி உருவாக்குகிறார்.

கோவிட்-19 பெருந்தொற்று, மற்றும் மேற்கத்திய சக்திகளின் உத்தரவின் பேரில் கியேவ் அரசாங்கம் செயல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் தொடர்புபட்ட நாட்டின் பேரழிவுகர சூழ்நிலையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தீவிர முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த போர் முனைப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கொள்கைகளின் ஒருங்கிணைந்த விளைவுகளால் உக்ரேனின் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். புதன்கிழமை, நாட்டில் மேலும் 15,415 கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகின, இது முன்னைய நாள் எண்ணிக்கை 13,276 இலிருந்து இவ்வளவு அதிகரித்திருந்தது. வைரஸின் காரணமான இறப்புக்களும் புதிய உச்சங்களை எட்டின. மருத்துவமனைகள் அவற்றின் திறனைத் தாண்டி பாதிப்புக்குள்ளாகின. மொத்த மக்கள்தொகையில் 0.005 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இது ருவாண்டா அல்லது மங்கோலியா போன்ற மிக வறிய நாடுகளை விட குறைவானதாகும்.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து அனைத்து சேவைகளின் பயன்பாட்டு விகிதங்களும் அதிகரிக்கப்பட்ட நிலையில், அங்கு வீதி ஆர்ப்பாட்டங்களும் சாலை மறியல்களும் உட்பட பரவலான ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, “எரிபொருள் பற்றாக்குறை” ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது, ஏனென்றால் வீடுகளில் இனிமேல் உணவு கூட சமைக்க முடியாது போகும். அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, உக்ரேனின் ஓய்வூதியதாரர்களில் 11 மில்லியன் பேர், அதாவது 70 சதவீதம் பேர், உத்தியோகபூர்வ வாழ்க்கை செலவினத்திற்கு குறைவான வருமானத்தையே கொண்டுள்ளனர்.

உக்ரேனைப் போல, ரஷ்யாவும் உள்நாட்டு நெருக்கடிகளின் பிடியில் உள்ளது. 4.4 மில்லியன் நோய்தொற்றுக்களும் மற்றும் அண்ணளவாக 100,000 இறப்புக்களும் ஏற்பட்டுள்ளது என்ற கோவிட்-19 பாதிப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளைத் தாண்டி, இந்த வைரஸ் தொழிலாள வர்க்கத்தை பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பரவலான வேலை இழப்புக்களும் ஊதிய வெட்டுக்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. வீட்டுக் கடனைப் போல, அடிப்படை உணவுப் பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்து வருகின்றன.

புட்டின் அரசாங்கத்தின் மீது ஏமாற்றம் அதிகரித்து வருகிறது என்பதுடன், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள டுமா தேர்தல்களுக்கு (Duma elections) முன்னதாக, தேசியவாத உணர்வு குறித்தும், மற்றும் மேற்கு நாடுகள் நரகத்தையொத்த அளவிற்கு அழிவது கண்டு மக்களிடையே பரவலாக காணப்படும் அச்சம் குறித்தும் முறையிடுவதன் மூலம் தனது நிலையை உயர்த்த, உக்ரேனுடனான மோதலை பயன்படுத்திக் கொள்ள கிரெம்ளின் முனைகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரேனின் தொழிலாள வர்க்கம், வாஷிங்டன், பேர்லின் மற்றும் பிற இடங்களிலுள்ள போர் வெறி கொண்ட சக்திகளை நோக்கி, அல்லது கிரெம்ளினை நோக்கி திரும்புவதன் மூலம் இந்த சூழ்நிலையில் இருந்து அவர்களால் வெளியேற முடியாது. சிதைந்து போன பொருளாதாரத்தின் மேல் அமர்ந்துள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம், அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும், மற்றும் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கும் அது மேற்கொண்டுள்ள முயற்சியால் 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சமூகம் மாறி அடுத்ததாக சமூகத்தை சீரழித்து வருகிறது.

பல தசாப்தங்களாக சோவியத் தொழிலாள வர்க்கம் பெரும் விலை கொடுப்பில் வென்றெடுத்த சாதனைகள் அனைத்தையும் அழித்து வந்துள்ள, ரஷ்ய ஆளும் வர்க்கம், யுரேசிய மக்கள் மற்றும் வளங்கள் மீது அதன் பிடியை தக்கவைத்துக்கொள்வதற்கான அதன் முயற்சிகளில் மீண்டும் இறங்க சற்று அதிகளவு பாரிய எண்ணெய் இருப்புக்களையும் மற்றும் பெரும் அணுவாயுத உபகரணங்களையும் கொண்டுள்ளது. இது, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையை பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை, அவர்களை பாதுகாக்கவும் முடியவில்லை. உக்ரேன் மற்றும் ரஷ்ய மக்களின் எதிர்காலம் என்பது, ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மற்றும் அவர்களது இரத்தக்களரியான போர்களுக்கு எதிரான, மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தங்கியுள்ளது.

Loading