பெங்களூரு துப்புரவுத் தொழிலாளர்கள் PPE (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) கோருகின்றனர்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: பெங்களூரு துப்புரவுத் தொழிலாளர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு போராட்டம் நடத்துகின்றனர்

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூராகார்மிகாக்கள் என பிரபலமாக அறியப்படும் துப்புரவுத் தொழிலாள, முன்னணி ஊழியர்கள், COVID-19 மற்றும் அதன் வகைகளில் இருந்து ஏற்படக்கூடிய தொற்றுநோய்களுக்கு தினமும் பாதிக்கப்படகூடியவர்களாக இருக்கின்றனர்..

ஆபத்தான மற்றும் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை தங்கள் கைகளால் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும், பல வீடுகள் தங்கள் கழிவுகளை பிரிக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். மிகவும் சுரண்டப்படுகின்ற, முக்கியமாக பெண் ஊழியர்கள் தங்களுக்கு கழிப்பறைகள், சானிடைசர்கள் அல்லது உணவுகள் வேலை நேரத்தில் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர்.

தேசிய சுகாதார பணி (NHM) தொழிலாளர்கள் நிரந்தர வேலைகளுக்காக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

தேசிய சுகாதார பணி (NHM) தொழிலாளர்கள் செவ்வாயன்று பஞ்சாப் மாநிலத்தில் வேலைநிறுத்தம் செய்து, நிரந்தர வேலைகள் மற்றும் அதிக ஊதியம் கோரி டார்ன் தரனில் உள்ள சிவில் அறுவை சிகிச்சை அலுவலகத்திற்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் செவிலிய ஊழியர்கள், மருத்துவ அதிகாரிகள், ஹோமியோபதி ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் மந்திரி ஊழியர்கள் அடங்குவர்.

முன்னர் தேசிய ஊரக சுகாதார பணி என்று அழைக்கப்பட்ட NHM 18 இந்திய மாநிலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதை சேவைக்குறைவான மற்றும் பலவீனமான பொது சுகாதார குறிக்காட்டியாக வரையறுக்கப்பட்டது.

சகதொழிலாளர்கள் கொலை தொடர்பாக தமிழ் நாடு செங்கல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னையில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறை என்ற சிறு நகரத்தில் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து குறைந்தது 2,500 தொழிலாளர்கள் ஏப்ரல் 16 முதல் சகதொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனிவாசன் என்று அழைக்கப்படும் அந்த நபர் தொழிற்சாலை உரிமையாளரால் கொல்லப்பட்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறியதையடுத்து இந்த வேலைநிறுத்தம் திருப்பி அழைக்கப்பட்டது.

தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்யக் கோரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனிவாசன் ஒரு தலித், தீண்டத்தகாத சாதி என்று அழைக்கப்படுபவர்களில் ஒரு உறுப்பினர் ஆவர். இந்தியாவில் 200 மில்லியன் தலித்துகள் உள்ளனர்.

பொது முடக்க காலத்தின்போது தமிழ் நாடு முடிதிருத்தம் செய்பவர்கள் நிதிநிவாரணம் கோருகின்றனர்

இந்தியாவின் தற்போதைய வரம்புக்கு உட்பட்ட கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தின்போது நிதி நிவாரணம் கோரி தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள முடிதிருத்தம் செய்பவர்கள் ஏப்ரல் 26 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள நிலையங்களை மேலதிகஅறிவிப்பு வரும் வரை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு குடும்பத்திற்கு வெறும் 2,000 ரூபாய் (6 6.8 அமெரிக்க டாலர்) அரசாங்க நிவாரணம் வழங்கப்பட்டது அது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக உள்ளது மேலும் மிகவும் பற்றாக்குறையானதாகவும் உள்ளது.

போராட்டக்காரர்கள் ஒவ்வொரு முடிதிருத்தம் செய்பவரின் குடும்பத்திற்கும் 15,000 ரூபாய் நிவாரணம் கோரினர் அல்லது கடுமையான COVID-19 வழிகாட்டுதல்களின்படி தங்கள் முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.

இறால் பண்ணை ஆக்கிரமிப்பதை எதிர்த்து தமிழ் நாடு மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்

ஏப்ரல் 21 ம் தேதி சென்னையில் உள்ள மீன்வளத் துறை மற்றும் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் அலுவலகங்களில் தமிழ்நாடு கடலோர மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரைக்கு அருகிலும், உயர் அலைக் கோட்டிற்கு அருகிலும் இறால் வளர்ப்பு தொழிற்சாலைகள் நிறுவப்படுவதை அரசாங்கம் நிறுத்துமாறு அவர்கள் கோரினர்.

மீன்பிடி கிராமங்கள் பயன்படுத்தக் கூடிய பொதுவான நிலத்தின் பரந்த பகுதிகள் இறால் விவசாயத் தொழிற்சாலையால் அபகரிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை மீனவர் அமைப்புகளின் குடை சங்கமான தமிழ்நாடு மீனவர் ஐக்கியங்களின் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த்து.

விசாகப்பட்டினம் எஃகு தொழிலாளர்கள் தனியார்மயமாக்கல்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்

விசாகப்பட்டினம் எஃகுத் தொழிலாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (VSP) தனியார்மயமாக்க மோடி அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் கிட்டத்தட்ட 18,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர், தற்போது ஆண்டுக்கு 7.3 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

மோடியின் இந்து-அடிப்படைவாத அரசாங்கம், ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட், VSP-யின் கார்ப்பரேட் நிறுவனம், மற்றும் எஃகு ஆலையின் தனியார் நிர்வாகம் ஆகியவற்றில் 100 சதவீத பங்குகளை விற்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது உண்ணாவிரத போராட்டத்தை உள்ளடக்கிய ஆர்ப்பாட்டங்கள் பிப்ரவரி 1 முதல் நடந்து வருகின்றன.

Loading